விசித்திரமானது மனித மனம், மனம் பற்றி அறிவியல் ஆன்மிகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருவே இதுவரை எழுதவில்லை.
ஒரு நாளைக்கு மனித மனத்தில் தோன்று எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.
மனதில் ஏற்படுத்தும் எண்ணங்களில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல எண்ணங்கள், மற்றது கெட்ட எண்ணங்கள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை எண்ணங்கள் உண்டு அவை தேவையற்ற எண்ணங்கள் என்ற வகையில் வரும்.
எண்ணங்கள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான், தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது நடப்பது போன்றது தான் மனதில் தோன்றும் எண்ணங்கள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது ஓடிக் கொண்டே இருக்கும், குழந்தைகளுக்கு பேச்சுவரும் வரை எண்ணங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் எண்ணங்கள் ஏற்பட்டு அறிவு வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் எண்ணங்கள் பிறகு அதனுடன் ஒப்பீட்டிற்காக தோன்று எண்ணங்கள் சேர்ந்துவிடும்.
தன்னால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் தான் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற THAT IS POSSITIVE / NEGATIVE OR BAD / WASTE THOUGHTS) எண்ணங்கள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே நமக்கு வந்து செல்லும் எண்ணங்கள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் மன ஓட்டத்தை மட்டுமே கவனியுங்கள் உங்கள் சிந்தனைகள் எங்கெல்லாம் சென்றுவருகிறது என்பதைப் பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய எண்ணங்களில் 90 விழுக்காடு தேவையற்ற எண்ணங்களாகவே இருக்கும்.
உடல் சார்ந்த அயற்சியைவிட மனம் சார்ந்த அயற்சியே சோர்வை மிகுதியாக தரும். இந்த மனச்சோர்வின் மூல காரணிகளே எண்ணங்கள் தான். நல்ல எண்ணங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், கெட்ட எண்ணங்களும் தேவையற்ற எண்ணங்களும் மனச்சோர்வை ஏற்படுத்தும். நம் எண்ணங்களில் 10 விழுக்காடு கெட்ட எண்ணங்கள், 80 விழுக்காடு வீனான எண்ணங்கள் என 90 விழுக்காடு இருக்கிறது. மூளையில் இருந்துதான் எண்ணங்களுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற எண்ணங்களினால் மூளையின் சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது, உடல் நலம் மனநலத்துடல் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வையும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற எண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றியாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற எண்ணங்களை குறைத்துக் கொண்டவர்கள் தானே.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Posts (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...

-
இன்று காலை,டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் ...
-
1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை. 2. அ...
-
ஆழந்து மூச்சு விடுங்கள் – கே.எஸ்.சுப்ரமணி ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்...