July 18, 2015

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி!

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?
வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதை கச்சிதமாக செய்ய,  முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும்.

செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள், நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

காலையில் 10 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்த செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும். கோடை காலம் என்றால் அடிக்கடி தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதால் தண்ணீர் குடிக்க மறக்க மாட்டோம். ஆனால் மற்ற காலங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த செயலியை ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் அது உற்ற நண்பன் போல சரியான நேரங்களில் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். தண்ணீர் குடிப்பது இயல்பான தேவையாக இருந்தாலும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு பிரச்னையாகவே இருக்கிறது. சீரான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தும் நிலையில்,  இதற்காக என்றே ஒரு செயலி இருப்பது நல்ல விஷயம்தான். தண்ணீர் குடிப்பதை மறக்காமல் இருக்க உதவுவதோடு அதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது இந்த செயலி. 

அத்துடன் தண்ணீர் அளவு பற்றிய விவரங்களையும் வரைபட அறிக்கையாக தந்து அசத்துகிறது. எனவே பிட்ன்ஸ் செயலிகள் பட்டியலில் இந்த செயலியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள்.

மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.         போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.         நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.         உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.         பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

5.         பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

6.         சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.         அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.         இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.         கஷ்டம் தான் … ஆன முடியும்.

10.       நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.

11.       இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.       விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.       விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14.       ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.

15.       இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.       இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.       இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.       இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

19.       முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

20.       கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

21.       அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22.       விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.       திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24.       சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

25.       ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

26.       உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.       ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.       கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.       எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.       அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

31.       அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

32.       நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

வீழ்வது கேவலமல்ல,
வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்

ஒன்பது முறை விழுந்தவனுக்கு
இன்னொரு பெயர் உண்டு-

எட்டு முறை எழுந்தவன்

எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

சருமத்தை பாதுகாக்கும் கேரட்

பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலும் அழகுடன் மின்னும். அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந் தது. கேரட் சாப்பிட்டால் கண்களுக்கும், சருமத்திற்கும் மிக நல்லது. கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைசாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண் டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான ரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும் புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட தள்ளி போட வாய்ப்பு உள்ளது. கேரட் ஆப்கானிஸ் தானை பிறப்பிடமாகக் கொண்டது. கேரட் செடி யின் வேர்ப்பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக்கூட சாப்பிடக்கூடியது.
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லை இருக்காது. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும்போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இவை இரத் தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலு மிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்றுநோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா வில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப்புற்று நோயிலிருந்து ஆரம்பநிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்பநிலையிலேயே அழித்துவிடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத்தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொடுகுக்கான வீட்டு சிகிச்சை

கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக கிடைக்கிற கற்றாழை ஜெல்லைவிட, வீட்டில் வளர்க்கும் கற்றாழைச் செடியில் இருந்து அதன் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து நான்கைந்து முறை அலசி வைத்துக் கொள்ளவும். அதைத் தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, மைல்டான ஷாம்பு போட்டு அலசவும்.

அரை கப் வினிகரை, ஒன்றரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். ஒவ்வொரு முறை ஷாம்பு குளியல் எடுத்து முடித்ததும், இந்தக் கரைசலை கடைசியாக தலையில் விட்டு அலசி, நன்கு காய விடவும். பொடுகு குறையும்.

வெள்ளை மிளகுப் பொடியை சிறிதளவு தயிரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். சிறிதளவு பாதாம் எண்ணெயில் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு விட்டுக் கலந்து தலையில் தடவி, விரல் நுனிகளால் மிதமாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி ஊற வைத்தும் குளிக்கலாம். கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். வேப்பிலையை அரைத்து, தலையில் தடவி, ஊற வைத்தும் அலசலாம். இரண்டு சிகிச்சைகளுமே பொடுகை விரட்டும்.

வெயிலே படாமல் வாழ்வது சருமத்தை அழகாக வைக்கலாம். ஆனால், பொடுகுப் பிரச்னைக்கு சூரிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயில் சிறிதாவது நம் மேல் படும்படி இருப்பதுகூட பொடுகை விரட்ட உதவும்.

டீ ட்ரீ ஆயில் என ஒன்று கிடைக்கும். ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் டீ ட்ரீ ஆயில் கலந்து மூடி போட்ட ஸ்பிரே பாட்டிலில் விட்டுக் குலுக்கவும். தலைக்குக் குளித்து முடித்ததும், இந்தக் கலவையை தலையில் ஸ்பிரே செய்து கொள்ளவும். லேசாக மசாஜ் செய்து, அப்படியே விட்டு விடவும்.

மறுபடி கூந்தலை அலச வேண்டாம்.டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பு கொண்டு அலசவும். ஆரஞ்சு பழத்தோலை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சைச்சாறு சோ்த்து கலக்கவும். அதைத் தலையில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினாலும் பொடுகு மறையும்.

இரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்!

எந்தெந்த காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது. எந்த நேரத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் போன்றவற்றை எல்லாம், சொல்லிக் கொடுக்க, பெற்றோருக்கு நேரமில்லை, தாத்தா, பாட்டி உடனில்லை. ஆகையால் தான் குறிகிய காலக்கட்டதில் நமது வாழ்வியல் முறையில் பல வேறுபாடுகளும். உடல்நலத்தில் குறைபாடுகளும் கண்டு வருகிறோம்.

நீங்கள் இரவு வேளையில் செய்யும் சில வேலைகள், மறுநாள் காலை உங்களை சுறுசுறுப்பாகவும், உடல் இலகுவாகவும் இருக்க உதவும்….

ஏழு மணிக்கு காபிக்கு “நோ” இரவு ஏழு மணிக்கு மேல், காபி குடிக்கும் பழக்கத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தையும், தூக்கத்தையும், பாதிக்கும்.

திட்டமிடுதல் நாளை நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை திட்டமிட்டு வையுங்கள்.

குளிக்க வேண்டியது அவசியம் இரவு தூங்க செல்லும் முன்பு குளிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இது, உங்கள் உடலை இலகவாக்குவது மட்டுமின்றி, நல்ல உறக்கம் வரவும் உதுவும். இது உங்களை அடுத்த நாளும் சுறுசுறுப்பாக இயங்க உதவும் பழக்கமாகும்.

திருமணம் ஆனவர்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும், அவர்களது வேலைகள் என்னென்ன எல்லாம் மிச்சம் இருக்கிறது என்று ஒருமுறை சோதித்து பார்த்துக்கொள்வது வேண்டும். தேவையில்லாமல் மறுநாள் காலை அடித்துப்பிடித்து வேலை செய்வதை தவிர்க்க இது உதவும்

துணிகளை இஸ்திரி செய்து வையுங்கள் காலை அவசரமாக நீங்கள் கிளம்புவது மட்டுமின்றி மற்றவர்களையும், அவசரப்படுத்தாமல் நீங்களே, நாளை நீங்கள் உடுத்தும் உடைகளை இஸ்திரி செய்து வைத்துக்கொள்வது ஓர் நல்ல பழக்கம் ஆகும்.

மின்னணு உபகரணங்கள் டிவி, கணினி, விளக்குகள் போன்ற மின்னணு உபகரணங்களை ஒரு மணிநேரத்திற்கு முன்பே அனைத்து வைத்துவிடுங்கள்.

புத்தகம் படிக்கும் பழக்கம் இரவு தூங்குவதற்கு முன்பு புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது, உங்கள் நினைவாற்றல், நல்ல உறக்கம் மற்றும், சுறுசுறுப்பான காலை பொழுதுக்கு வழிவகுக்கும்.

அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் இரவு தூங்கும் முன்னரே, அறையை சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டியது அவசியம். இது, சுவாச பிரச்சனைகள் ஏற்படாது இருக்க உதவும், நல்ல உறக்கத்தை கொடுக்கும். பெரும்பாலும் அனைவரும் இதை பின்பற்ற வேண்டுடிய பழக்கம் இதுவாகும்

விளக்கை அணைக்காமல் தூங்க வேண்டாம் சிலர் தூங்கும் அறையில் விளக்கை அணைக்காமலே உறங்குவார்கள். இது, உங்கள் உடலில் சுரக்கும் சுரப்பியின் அளவை குறைத்துவிடுமாம். எனவே, இரவு தூங்கும் போது, அந்த அறையில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.

நடைப்பயிற்சி முடிந்தவரை குறைந்தது 5-10 நிமிடங்களாவது இரவு உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது, செரிமானத்தை சீராக்குவதற்கு உதவும்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...