August 10, 2013

திறமை இருந்தும் ஏன் வெற்றி பெற முடிவது இல்லை?


நிறைய பேருக்கு திறமை இருக்கின்றது.
ஆனால் திறமை இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடிவது
இல்லை.காரணம் அவர்கள் திறமை மீது அவர்களுக்கே
நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான்.

உங்களுடைய திறமையை வைத்து நிச்சயமாக
வெற்றி அடையலாம் என்று நீங்கள் நினைத்தால்
நிச்சயமாக உங்களால் வெற்றியடைய முடியும்.

நம்பிக்கையை உங்களுக்குள் வளர செய்வதிற்கு
பெரும் பங்கு உங்கள் மனதுதான்.

விரக்திகள் சில நேரத்தில் உங்கள் வெற்றி இலக்கை
அடைய தடை செய்யும். அவற்றை பொருட் படுத்தவே கூடாது.

தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தின் மூலமாக மிக சுலபமாக
விரக்தியை விரட்டி விடலாம். நம்மாலும் நம் திறமையினாலும்
வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும் என தீவிரமாக
நினைக்க வேண்டும்.

எந்த துறையில் திறமை அதிகம் உள்ளது என்றது
நீங்கள் என்று நினைக்கிறீர்களோ அந்த துறையில்
நிச்சயமாக உங்களால் வெற்றி அடைய முடியும்.
எல்லா துறைக்குமே இந்த உலகில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு.

உங்களையும் உங்கள் மனதையும் தயார் படுத்தி கொண்டால்
நிச்சயமாக உங்கள் திறமையை வைத்து உங்களால்
வெற்றி அடைய முடியும்.

தன்னம்பிக்கை ஒருவரது மனதில் தழைக்க தியானம்
பெரிதும் உதவும். தியானம் பழகும்போது மனதில் உள்ள
எதிர் மறையான சிந்தனைகள்(Negative  thinkings)  களையப்பட்டு
ஆக்க பூர்வமான (Positive thinkings) சிந்தனைகள் விதைக்க படுகின்றன.

நம்மாலும் வெற்றியடைய முடியும் நம்மால் வெற்றி
அடைய முடிய வில்லை என்றால் வேறு யாரால் வெற்றி பெற
முடியும் என்ற ஆக்க பூர்வமான சிந்தனைகளை (Positive thinkings)
தியானம் விதைக்கின்றது.
 
உங்களையும் உங்கள் மனதையும் தயார் படுத்த
தியானம் நிச்சயமாக உதவும்.

வேலைக்குப் போகும் பெண்கள் அவசியம் கருத்தில் கொள்ளவேண்டியது !!


1. நேரத்தை நிர்வகிக்கும் திறமை

2. பிள்ளைகளோடு தினமும் நேரம் செலவழிப்பது

3. நம் டென்ஷனை பிள்ளைகளிடம் காட்டாமல் இருப்பது

4. அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்ப்பது.

5. அலுவலக நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாமல் இருப்பது.

6. சம்பாதிக்கின்ற காரணத்தால் அளவுக்கு மீறிய பொருளாதார சுதந்திரம் கொடுப்பது.

7. கணவருடன் கலந்தாலோசித்து வேலைகளை பங்கிட்டுகொள்வது

8. வாரத்தில் ஒருநாள் உங்களுக்கென்று சிறப்பு நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை செய்வது

9. அண்டை வீட்டுக்காரர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வது

10. பிள்ளைகள் ஏதாவது சாதிக்கும்போது தட்டிக்கொடுத்து பாராட்டுவது

11. தங்கள் வாழ்க்கை முறையும் நம் வரலாற்றையும் கற்றுத்தருவது .

12.தான் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களிடம் நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுவது

தொடக்க பள்ளிக்கு முந்தைய காலகட்டத்தில் – 75 சதவீதம் தாயாகவும், 25 சதவீதம் ஆசானாகவும்.
தொடக்க பள்ளிக்கு காலகட்டத்தில் – 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் ஆசானாகவும்.

தொடக்க பள்ளிக்கு பிந்தைய காலகட்டத்தில் – 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் தோழியாகவும்.

மேலே சொன்னதுபோல நமது பங்கு, பிள்ளைகள் வளர்ப்பில் இருந்தால் நாமும் சவால்களை சமாளித்து நம் பிள்ளைகளை சாதனையாளனாக உருவாக்க முடியும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !


சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன. வெற்றியை விரும்பும் இளைஞர்கள் எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இலக்கு இல்லாமல் யாரும் பயணிப்பதில்லை. ஆனால் பள்ளங்களை கடக்காமல் யாரும் மேட்டுக்கு செல்லமுடியாது. உயரம் எவ்வளவு அதிகமோ அதே அளவு பள்ளம் உயரத்தின் இருபுறமும் இருக்கிறது. உயரத்துக்குசெல்லவும் சவால்களைச் சந்திக்க வேண்டும். அதே உயரத்தை நிலைநிறுத்தவும் சோதனைகளை எதிர்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உயரத்தில் இருந்து அதலபாதாளத்தில் விழ நேரிடும். எனவே எப்போதும்சவால்களுடன் போராடுவதே வாழ்க்கை.

இங்கு ஒரு கதை மூலம் விளக்குவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறன் சிலருக்கு

விவசாயி ஒருவர் வான்கோழி வளர்த்து வந்தார். அவரது மகளும் வான்கோழியிடம் பாசமாயிருந்தார்.தானியங்கள் மற்றும் உணவை அளித்து செல்லமாக கவனித்துக் கொண்டனர்.

மூன்று ஆண்டுகளில் அந்த வான்கோழி கொழுகொழுவென வளர்ந்துவிட்டது. இதனால் வான் கோழியின் மனதில் இருந்து பயம் போய்விட்டது. நமது எதிர்காலம் முதலாளியால் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்என்று வான்கோழி நினைத்தது. உண்மையிலேயே அவ்வளவு செல்லமாகவே வான்கோழியை விவசாயியின்குடும்பத்தினர் பராமரித்து வந்தனர்.

அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு விசித்திர வழக்கம். அதாவது ஏதாவது ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள்மற்ற அனைத்து குடும்பத்தினருக்கும் விருந்து அளிக்க வேண்டும் என்பதுதான் அது. இந்தமுறை வான்கோழியைவளர்த்த விவசாயி குடும்பத்தார், பிறருக்கு விருந்தளிக்க வேண்டிய நிலை. வேறு வழியின்றி விவசாயி தான்வளர்த்த வான்கோழியை விருந்தாக்க முடிவு செய்தார்.

கதையில் வரும் வான்கோழியின் எண்ணத்தில் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். வாழ்க்கையின் சிக்கல்களைஎப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தங்களை யாராவது பாதுகாப்பார்கள் என்று கருதி இருந்தால் முடிவுஎதிர்மறையாகவே அமைந்துவிடும்.

மாணவர்களாக இருக்கும்போதும் சரி, வேலை உலகில் காலடி எடுத்து வைக்கும்போதும் சரி ஒவ்வொருவரும் சவால்களை எதிர்கொள்ள தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சவால்கள் குறித்த பாடங்களை ஆசிரியர்கள் கருத்தாக கூறுவதோடு மட்டுமல்லாமல் அனுபவ ரீதியாகவும் அறிந்து கொள்ளச் செய்யவேண்டும்.

சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்ட சிலரைப் பற்றி கூறுவது நிச்சயமாக இளைஞர்களுக்கு நம்பிக்கைஊட்டுவதாக அமையும். வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததாக ஆகும்போது சவால்களே வாழ்க்கை ஆகிவிடுவதை காணலாம். பிரச்சினைகள் தான் சிலரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இவ்வாறு சிறப்பாகசெயல்படுபவர்கள் தங்களது தனித்திறமையாலோ, உடல் வலிமையாலோ இத்தகைய சிறப்பை வெளிப்படுத்தமுடியாது. அவர்களது மனோபாவமும், அணுகு முறையுமே இத்தகைய தயார் நிலையை உருவாக்குகிறது.

நேருவின் வாழ்க்கையில்…

நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கைப் பயணத்தில் சில…

நேரு சுதந்திர போராட்ட காலத்தில் சுமார் பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசம் செய்தார். பல்வேறு குற்றங்கள்புரிந்து சிறைவாசம் இருந்தவர்களுடன் அவர் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விஷ ஜந்துக்களானதேள், பாம்பு போன்றவையும் அந்தச் சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை சிறைக்கூடம் நிரம்பிவழிந்தபோது கால்நடைகளை பராமரிக்கும் கூடம் சிறையாக பயன்படுத்தப்பட்டது. அதிலும் நேரு தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

வசதியான குடும்பச் சூழலில் வளர்ந்த நேரு இவற்றையெல்லாம் பெரிதாக கருதவில்லை. அதற்கு மாறாகசிறைவாசத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி புத்தகங்களை எழுதினார். அவரது மனோபாவமும்,எதிர்காலத்தை எதிர்கொண்ட திறனுமே அவருக்கு ஏற்பட்ட பல்வேறு இடர்களை சமாளிக்கும் ஆற்றலைஅளித்தது. இத்தகைய தலைமைப் பண்பு என்பது அவரவருக்குள் இருந்தே வெளிப்பட வேண்டும்.

வறுமை வார்த்த தொழில் அதிபர்

இதேபோல் ஜப்பானைச் சேர்ந்தவர் கொனசுகே மட்சுசிதா. மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். 8பேருடன் பிறந்த அவர் உடல் ஆரோக்கியம் குன்றியவராகவும் இருந்தார். அவருடன் பிறந்தவர்களில் ஐந்துபேர்பரிதாபமாக இறந்துபோனார்கள். குடும்பச்சூழல் காரணமாக மட்சுசிதா தனது ஒன்பதாவது வயதில் படிப்பைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மரத்துண்டுகளை சேகரித்து விற்பனை செய்தார். பின்னர் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும்கடையில் பணியாற்றினார். நாளடைவில் அங்கிருந்து வெளியேறி எலக்ட்ரீசியன் பணி மேற்கொண்டார். தனதுஓயாத உழைப்பின் காரணமாக தனது வீட்டிலேயே எலக்ட்ரிக் ஜாக்கெட்டை உருவாக்கினார். தனது மனைவிக்குசொந்தமான பொருட்களை அடகு வைத்து இந்த தொழிலை அபிவிருத்தி செய்தார்.

பின்னாளில் சுமார் 30 மணி நேரம் செயல்படும் வகையிலான இருசக்கர வாகன விளக்கை கண்டுபிடித்தார்.மட்சுசிதா என்ற பெயரில் இவர் நடத்தி வந்த எலக்ட்ரிக் தொழில் நிறுவனம் பின்னர் உலகளவில் புகழ்பெற்றநிறுவனமாக வளர்ந்தது. ஆசியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட அவர் பானாசோனிக், நேஷனல் போன்றநிறுவனங்களின் உற்பத்தியிலும், வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் சிறந்த நாவலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் பள்ளியில் சேர்ந்து ஒரு சில ஆண்டுகள்தான் பயின்றார். அவரது அப்பா கடன் தொல்லை காரணமாக சிறை செல்ல நேர்ந்ததால், குடும்ப பொறுப்புஅவரது தலையில் விழுந்ததே இதற்கு காரணம். இதனால் பாட்டில்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையைச்செய்தார்.

பின்னர் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக சேர்ந்தார். ஆர்வம் காரணமாக தானாகவே சுருக்கெழுத்து பயின்றார்.இது அவருக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தந்தது. அப்போது அவர் சந்தித்த மனிதர்களைகதாபாத்திரங்களாக சித்தரித்து நாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

தனது அதீத தன்னம்பிக்கையால் இருபத்து நான்காவது வயதில் துணிச்சலாக முடிவெடுத்து முழுநேரஎழுத்தாளராக மாறினார். பின்னர் அவர் உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியராக புகழ்பெற்றார். இடர்பாடுகளையும்,வறுமையையும் சவாலாக எடுத்துக் கொண்டு துணிச்சலாக செயல்பட்டதே அவரது இந்த வெற்றிக்கு காரணம்.முதன்முதலில் பத்திரிகைகளில் தொடர்கதையை எழுதும் பழக்கத்தை அறிமுகம் செய்தவரும் இவர்தான்.அவரது நாவல்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை இன்றும் விரும்பி வாசிக்கப்பட்டு வருகிறது.

துவண்டு விடாத மனமே துணை

பால் விட்ஜென்ஸ்டெய்ன் என்பவர் பியானோ வாசிப்பதில் ஆர்வம் உடையவர். முதல் உலகப்போரில் தனதுவலது கையை இழந்தார். சாதாரணமாக ஒருவிரலில் காயம் ஏற்பட்டால் கூட இசைக்கருவியை கையாளுவதுகடினம். ஆனால் அவர் வலது கையை இழந்த பின்பும் மனம் தளராமல், எஞ்சி உள்ள இடது கையால் எவ்வாறுஇசைப்பது என்பதை கற்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பிரபலமான பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் இதுதொடர்பாக கேட்டார். அப்போதைய பிரபல இசைஅமைப்பாளரான ரோவெல் அவருக்கு உதவினார். அவர் இசை ஆர்வம் கொண்ட பால் விட்ஜென்ஸ்டெய்னுக்குஏற்றவாறு இசை அமைத்துக் கொடுத்தார். பின்னாட்களில் பிறர் தனது குறையை அறியா வண்ணம் இசைத்துகச்சேரிகளிலும் கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார் பால் விட்ஜென்ஸ்டெய்ன். இது அவரது மனஉறுதியையும், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் நமக்கு உணர்த்துகிறது.

பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்பவரும் பல சவால்களை எதிர்கொண்டவர்தான்.பேசுவது, நடப்பது, சுவாசிப்பது என அனைத்திற்கும் அவர் எந்திரங்களின் உதவியையே நாடவேண்டியஅளவிற்கு உடல்திறன் குன்றி இருந்தார். இதை அவர் தனது சாதனைக்கு தடையாக ஒருபோதும் கருதியதுஇல்லை. அவரது அறிவியல் கொள்கைகள் இன்று விஞ்ஞான உலகில் அனைவரின் கவனத்தையும்கவர்ந்துள்ளது.

பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்து அவர் எழுதிய “காலத்தை பற்றிய வரலாறு” என்ற நூல் மிகவும் பிரசித்திபெற்ற புத்தகம் ஆகும். பல்வேறு விருதுகளை பெற்ற அவர் கூறும்போது, “ஒவ்வொருவரும் எந்தச்சூழ்நிலையிலும் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவே வெற்றிப்பாதைக்குஅவர்களை அழைத்துச் செல்லும்” என்கிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சூழ்நிலைகளையும் இடர்பாடுகளையும் குறை கூறுவதில்லை. தங்களதுசுயமுயற்சியால் எவ்வாறு தடைகளை எதிர்கொள்வது என்ற சிந்தனையிலேயே செயல்படுவார்கள். தங்கள்மேல் நம்பிக்கை இல்லாதவர்களே வெவ்வேறு காரணங்களை கூறி தங்களது தோல்விக்கு நியாயம் கற்பிக்கமுயல்வார்கள். ஆகவே இளைஞர்களே, எப்போதும் சவால்களை எதிர் கொள்ள தயாராக இருங்கள். சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். சாதனைகள் எல்லாமே உங்கள் தோள்களைத் தழுவி நிற்கும்.


நெல்லிக்காயின் மகத்துவம்..!



ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். கருநெல்லி (கிடைப்பது அரிது), அருநெல்லி (எளிதில் கிடைக்கும்) என இரு வகைப்படும்.

நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர்.

இதனை நெல்லி வற்றல் என்றும் அழைப்பர். நெல்லி முச்சுவை உடையது; முதல் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். நெல்லியை சுவைத்த பின்னர் தண்ணீர் அருந்தியவுடன், இனிப்புச் சுவையான நீர்போல் சுவைப்பதன் காரணம் இதுதான்.

* நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

* நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

* நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

* நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

* நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

* நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

* நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

* நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து…. சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.

* நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.
நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.

5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.

7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.

8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...