February 15, 2010

கற்பனை பொய் அல்ல…

வாழ்க்கையில் தலையாய நோக்கம் ஆனந்தமாக வாழ்தல். உலக உயிர்கள் அனைத்துமே இந்த ஆனந்தத்தை பெறவேண்டியே எல்லா நேரங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இறையருளின் பெருங்கருணையும் இந்த நோக்கத்திற்கு இசைவாக ஐம்புலன்களையும் அதற்கும் மேலாக இந்த உலகை துய்ப்பதற்காக அறிவையும் தந்து உலகத்தில் அதற்கு தேவையான பொருட்களையும் உருவாக்கி உவந்தளித்திருக்கிறது.
உலக உயிர்கள் எல்லாம் உவகை பெறுவது என்பது உள்ளத்து ஆசைகளை, உடலின் தேவைகளை விருப்பங்களை எண்ணங்களை அடைகிறபோது உண்டாகிறது.
விரும்பியதை அடைவதே வெற்றி. வெற்றியே மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஆகிறது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அறிவியல் பாடத்திலும், கணக்குப் பாடத்திலும் விடைகளைக் கண்டுபிடிக்க சூத்திரங்களைப் பயன்படுத்தி விரைவாகவும், எளிதாகவும் விடையை காணுதல் போல் வெற்றிக்கும் அதோடு இணைந்த ஆனந்தத்திற்கும் ஒரு சூத்திரம் (ஊர்ழ்ம்ன்ப்ஹ) இருந்தால் அல்லது கண்டுபிடித்தால் நமக்கெல்லாம் நலம் விளையும் அல்லவா?
அந்த வெற்றிக்கான உபாயம் தான் Formula என்கிற ஆங்கில இணைச்சொல்லின் எழுத்துக்களை முதலெழுத்தாக கொண்ட சொற்களின் பொருளை வாழ்க்கையில் உருவாக்கி, கற்று கடைபிடித்தல் வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்.
S - SELF - CONFIDENCE = தன்னம்பிக்கை
U - UNDERSTANIDNG INTER =
மனித உறவுகளை புரிந்து கொண்டு
PERSONAL RELATIONSHIPS
மேம்படுத்திக் கொள்ளுதல்
C - COMMUNICATION SKILLS =
கருத்துத் தொடர்பு ஆற்றல்
C - CREATIVITY =
புதியன படைக்கும் கற்பனைத்திறன்
E - ENERGETIC ATTITUDE = உற்சாகமான, ஊக்கமான
சுறு சுறுப்பான இயக்க நிலை
S - SUPERB MEMORY = சிறந்த நினைவாற்றல்
S - SELF MOTIVATION =
தன்னைத் தானே செயலூக்கப் படுத்திக்
கொள்ளும் முனைப்பு
இதுகாரும் வெற்றிச் சூத்திரத்தின் முதல் மூன்று உபாயங்களை முந்தைய இதழ்களில் கட்டுரைகளாக கண்டோம்.
நான்காவது நிலையாக Creativity என்கிற கற்பனை ஆற்றல், புதியன படைக்கும் படைப்பாற்றல் வெற்றிக்கு மிக இன்றியமையாததல்லவா?
நன்றாக ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இந்த கற்பனைத்திறன்தான் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாக வாழ்வின் எல்லா நிலைகளிலும் பயன்படுகிறது.
சொல்லப்போனால் கற்பனையே உலகை ஆட்சி செய்கிறது.
கற்பனை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது - கற்பனை என்பது நிஜமல்ல - நிழல் போன்றது. கற்பனை என்பது உண்மையல்ல - பொய் - என எண்ணுவதால் உலகியலார் கற்பனையை ஒரு பொருட்டாக கருத மாட்டாமல் எனையோர்க்கும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறாமல் ஏளன மனோநிலையில் புறக்கணிக்கின்றனர்.
அவன் பகல் கனவு காண்கிறான், கற்பனை உலகில் சஞ்சரிக்கின்றான். இதெல்லாம் வேலைக்காகாதுஎன்று எதிர்மறை விமர்சனங்களை நம் வாழ்க்கை நடைமுறையில் காணவும் கேட்கவும் அனுபவித்திருக்கிறோம்.
நிழல் என்பது நிஜமில்லைதான் ஆனாலும் நிஜமில்லாத நிழல் உருவாக நிஜமாக வெளிச்சம் அவசியமாகிறது. நிழல் என்கிற பொய்த் தோற்றத்திற்கு வெளிச்சம் என்கிற நிஜம் அடிப்படையாகிறது. நிழல் என்கிற பொய் இருப்பதனால் வெளிச்சம் என்கிற நிஜம் நிச்சயமாக இருக்கிறது.
கற்பனை என்பது பொய் தோற்றமாக தோன்றினாலும் நிதர்சனத்தின் வெளிப் பாடுகளே அவைகள்.
கற்பனையின் மூலமாக உண்மைகளை உருவாக்குவதும் அடைவதும் எளிது.
இன்றைக்கு நாமிருக்கும் இந்த உலகம் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணமே கற்பனைதான். கற்பனை வளம் பற்றி குறிப்பிடுகின்றபோது அதனை கற்பனை ஆற்றல் என்றும் கற்பனா சக்தி என்றும் அழைக்கின்றோம்.
கற்பனையைத்தான் படைப்பாற்றல் என்கிறோம். கற்பனையில்லாமல் புதியன இல்லை.
இந்த உலகில் வெற்றிபெற்ற எல்லா மனிதர்களின் வெற்றி வழியை பாருங்கள். கற்பனையை பயன்படுத்ததிய மனிதர்களே மாபெரும் வெற்றியை செல்வத்தை, வளமான வாழ்க்கையை அடைந்திருக் கிறார்கள்.
கதை புனைகிற கதாசிரியர்களும், நாவலாசிரியர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதும், புகழ் சேர்த்ததும் கற்பனையினாலன்றோ!
உலகமகா கவிஞர்களும் மக்கள் உள்ளங்களில் இடம் பிடித்ததும் இந்த கற்பனையினால் தானே.
புதிய புதிய இயந்திரங்களையும் கருவிகளையும் உருவாக்கிய அறிவியல் அறிஞர்களுக்கும் கற்பனைதான் அடித்தளம்.
இன்றைக்கு பாமர மக்களின் வாழ்க்கையில் பாங்காக இடம் பிடித்திருக் கின்ற திரைப்படத் துறையில் இயக்குனர் களாகட்டும், திரைக்கதை வடிவமைப்பவர் களாகட்டும், பாடலாசிரியர்களாகட்டும், காட்சி அரங்குகளை அமைப்பவர்களா கட்டும் கற்பனையில் வல்லவர்களே
திறம் மிக்கவர்களே இடம் பிடிக்கிறார்கள், பாராட்டப்படுகிறார்கள், வளமாக வாழ்கிறார்கள்.
கற்பனையாற்றலை அலட்சியம் செய்யக் கூடாது. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளிலும் கற்பனையும் புதிய உத்திகளையும் பயன்படுத்துகிறபோது தானே இன்பமும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.
உடுத்துகிற ஆடையின் வண்ணங்களிலும் -வடிவமைப்பிலும் புதியன புகுத்துகிறவர்கள் வணிக வெற்றியை பெரிய அளவில் ஈட்டுகிறார்கள்.
இதனால்தான் “You can win”என்கிற வெற்றி விளக்க புத்தகத்தின் ஆசிரியர் ஷிவ் கெராஇப்படி சொன்னார் போலும்.
“Winners Don’t Do Different Things
They Do Things Diffrently”
என்று.
வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து வெற்றியாளர்களாகிறார்கள்.
வேறுபட்டு வித்தியாசமாக செய்வதற்குத் தான் கற்பனையாற்றல் தேவைப்படுகிறது. இந்தக் கற்பனையாற்றல் இயல்பிலேயே பிறப்போடு அமைந்த ஒன்று. இருந்தாலும் பயிற்சியின் மூலம் இதை வளர்த்துக் கொள்ள இயலுமா? வழியிருக்கிறதா? என்பது குறித்துதான் ஆராய்ச்சி தேவைப் படுகிறது.
கற்பனைக்கு நிலைக்களன் மனிதர்களின் வலது பக்கத்து மூளை. வலது பக்கத்து மூளையை பயன்படுத்தி கற்பனையாற்றலை, கண்டுபிடிக்கும் திறனை உருவாக்குவது பற்றி

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும், தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம்.


நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி
பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம்
ஒரு உதாரணத்திறகு ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது-
மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது மனிதனுடைய வலது மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கும். வலது மூளை கற்பனை சக்திக்கும், ஆக்க அறிவிற்கும் (Creativity) காரணமாக இருப்பதால், படிப்பதால் நன்மை விளைகிறது.
மேற்கண்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லாவற்றையும் காட்சியில் பார்த்துவிடுவதால் மூளைத் தூண்டலுக்கு அங்கு வாய்ப்பில்லை.
நல்ல நூல்களைப் படிப்பதால் விளையும் நன்மைகள்
1.திருவள்ளுவர் வழுக்குகின்ற இடத்தில் ஒரு ஊன்றுகோலைப் போல சான்றோர் சொல் பயன்படும்என்று கூறுகிறார்.
2. இந்த உலகில் பல்வேறு வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போவதற்கு முன்பு ஏதேனும் ஒரு நல்ல நூலின் ஒரு பகுதியை படித்துவிட்டுத்தான் படுக்கச் செல்கிறேன்என்று கூறியுள்ளனர். இவ்வாறு படிக்கும் பழக்கம் பல புதிய விசயங்களை தெரிந்து கொள்ளவும் நமக்கு நானே மேலும் மேலும் தூண்டுதல் செய்து கொள்ளவும் பயன்படும்.
3. ஒரு அறிஞர் சொல்கிறார், “Life is a Learning Process”. அப்படிப் பார்க்கும்போது வாழ்க்கை முழுதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
4. ஜப்பானியரின் கைசன் என்னும் கொள்கை சொல்கிறது தொடர்ச்சியாக வளர்ச்சியடைய வேண்டும்அதாவது அறிவில் - தொழிலில் வளர்ச்சியடைய மேலும் மேலும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும்.
5. நாம் சார்ந்திருக்கும் துறையில் என்னென்ன புதுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டே இருக்கவேண்டும். அதன் எதிர்காலம் அதன் மார்க்கெட் நிலவரம், போட்டியாளர்களுடைய செயல்கள், அரசின் வணிகக் கொள்கைகள் என்பது பற்றியெல்லாம் விழிப்புணர்வு வர, செய்திகளைத் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.
6. மற்றவருடைய அனுபவங்களையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிற போது அவை வளர்ச்சிக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.
7. மனித மனம் ஓர் நிலம். அந்த நிலத்தில் ஒன்றும் பயிர் செய்யவில்லையென்றால் புல்- பூண்டுகள் முளைத்து விடும். அந்த நிலத்தில் விதைகளை தொடர்ந்து தூவிக் கொண்டே இருக்க நல்ல நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
8. நல்ல நூல்களைப் படித்த பின் அவற்றை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சந்தித்து உரையாடும்போது பேச வேண்டிய விசயத்தை பேசி முடித்தப்பின் படித்த நூலில் உள்ள சிறப்பம்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த சந்திப்புக்கு பின் உங்களுடைய சந்திப்பு பல நல்ல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்துஎன்ற நல்ல உணர்வை அது நண்பரிடம் ஏற்படுத்தும்.
9. என்னுடைய பயிற்சியின் போது சில அன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் நூல்கள் வாங்கிவிடுவேன் ஆனால் படிக்கத் தவணை செய்கிறேன். என்ன செய்வது?’
பதில்: நூலை எடுத்து முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அமைதியாக பொறுமையாக உட்கார்ந்து படிக்க வேண்டும் அதற்கு இப்பொழுது நேரமில்லைஎன்று சிலர் தள்ளிப் போடுகின்றனர். அதற்குப் பதிலாக ஒவ்வொரு அத்தியாயத்தின் பின் பகுதியில் அதன் சுருக்கம் இருக்கும். அதைப் படியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடு போடப்பட்டோ அல்லது பெரிய எழுத்திலோ உள்ள முக்கிய வரிகளைப் படியுங்கள். நேரம் கிடைக்கும் போது முதலில் படித்த அத்தியாயத்தை படியுங்கள்.
ஹென்றி ஃபோர்டு சொல்லுவார், “எந்தப் பெரிய வேலையையும் பகுதி பகுதியாக பிரித்துச் செய்து விட்டால் வேலை எளிதில் முடியும்
அடுத்து, படிக்கும்போது வேறு நினைவுகள் வந்து கவனம் சிதறினால் விரல் வைத்து படியுங்கள் பின் சிறிது சிறிதாக விரலை வேகமாகக் கொண்டு சென்று படியுங்கள். படித்து முடித்ததற்கு பிறகு வருகிற பயன்களை எண்ணிப் பார்த்து படியுங்கள்.
நிறைவுரை
பல நூல்களைப் படித்து அறிவை வளர்ப்பதின் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். ஆக்க அறிவு (Creativity) மிகும். உரையாடும் போது மற்றவர்களால் மதிக்கப்படுவோம். எல்லோராலும் வேண்டப்பட்டோராக மாற முடியும்.
நண்பர்களே! பல நல்ல வாழ்வியல் செய்திகளைத் தாங்கி வருகிற தன்னம்பிக்கை மாத இதழைப் பலருக்கு அறிமுகப்படுத்துவோம். பலருக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்குவோம். நம் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்குத் தக்கபடி நூல்களை வாங்கி கொடுப்போம். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைப்போம்!

தாழ்வு மனப்பான்மையை தகர்ப்போம்

புன்னகைத்துப் பழகியதால் பிரச்சனைகளை ஓட்டிவிடும் திறமையைப் பெறதுடித்துக் கொண்டிருப்பவர்களே, பிரச்சனைகள் வருவதற்கான காரணங்களில் தாழ்வு மனப்பான்மையும் ஒன்று. ஏனென்றால் இது நமது வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. இதை விரிவாய் சிந்திப்போம்.
தாழ்வு மனப்பான்மை (Inferiority complex)
விளக்கம் : நம் மனதின் நம்மைப்பற்றிய கற்பனையான, ஆரோக்கியமற்ற, எதிர்மறையான எண்ணங்களே தாழ்வு மனப்பான்மை. பெரும்பாலும் சிறுவயதிலிருந்தே இது தோன்றுகிறது.
அனைவருக்கும் பொதுவானது.
இதற்கு தொடக்கம் எப்போது வேண்டு மானாலும் நிகழலாம்.
இதற்கு வயது வரம்பு இல்லை.
ஏன் வருகிறது?
கல்வி, அழகு, ஆரோக்கியம், அந்தஸ்து இவற்றில் மற்றவர்களோடு ஒப்பிடுவதால்.
தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால்.
குழந்தைகளை அதிக அக்கரை காட்டி வெளி உலகம் தெரியாமல் வளர்ப்பதால்.
பயம், கோழைத்தனம்.
தன் மீது நம்பிக்கை இல்லாததால்.
வகைகள் : பொதுவாக உல்ல் தொடர்புடையது (Organ Inferiority) மனம் தொடர்புடையது (Mind Inferiority) என இருவகையாகத் தாழ்வு மனப்பான்மையைப் பிரிக்கலாம்.
உடல் தொடர்பான தாழ்வு மனப்பான்மை
உடல் உறுப்புகளில் உள்ள குறை பாடுகளால் இது உண்டாகிறது. குழந்தைப் பருவத்தில் விவரம் தெரிந்தபின் இம் மனநிலை உண்டாகிறது. இதனால், தன் குறையை நினைத்து அக்குழந்தை கவலைப்படும். கோபப்படும். மற்றவர்களுடன் பேசாமல் இருக்கும். பிறகுழந்தைகளோடு ஒப்பிட்டு தன்னால் முடியாது என முயலாமல் ஒதுங்கி விடும்.
சிறுவயதில் தோன்றும் தாழ்வு மனப்பான்மைக்கு முக்கிய காரணமாக அமைவது உடல். அக்குழந்தைகள் வளரும் வீட்டில் உள்ளவர்கள் அவ்வீட்டுக்கு வந்து செல்வோர். அவர்களை விடப் பலசாலிகள் மற்றும் தன்னையொத்த மற்ற குழந்தைகள் செய்யும் செயல்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு தனது உடலில் உள்ள ஏதோ ஒரு சிறு குறையைப் பெரிதாகப் பார்த்து என்னால் இவர்களைப் போல் செய்ய முடியாதுஎன்றஎதிர்மறையான எண்ணத்தை ஆழ்மனதில் பதித்துவிடுகிறது. இவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
சுயநலம் மிகுந்து பொது நலமற்ற நிலை
செயலைத் துவங்குமுன், தன்னால் முடியாவிட்டால்என்றெண்ணும் நிலை.
நிஜமான வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல் நிழல் சண்டை போடும் நிலை
எதிர்மறையான வளர்ச்சியும் வாழ்க்கை முறையும் உள்ள நிலை.
மனம் தொடர்பான தாழ்வு மனப்பான்மை
மனக்குழப்பம் உள்ளவர்கள் பேசுவதற்கும் ஏதாவது செய்வதற்கும் கூட, தங்களுக் குள்ளேயே இது முடியுமாஎன சந்தேகப் பட்டு, பயந்து, இந்த மனநிலைக்கு செல்வர். தங்களிடமுள்ள திறமைகளை தாங்கள் சிறப்பாகச் செயல்பட்டதை கவனத்தில் கொள்ளாமல், பிறரது படிப்பு, புகழ் இவற்றின் முன் மனதிற்குள் கூனிக்குறுகி ஒதுங்கி விடுவர்.
தாழ்வு மனப்பான்மையை நீக்கும் பயிற்சிகள்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, அரவணைப்பு, பாராட்டு (Family Support)
பெற்றோர்களின் நட்பு முறையிலான கண்காணிப்பும் வழிகாட்டுதலும் (Good Parentship)
உறவினர்கள், நண்பர்களின் அரவணைப்பு (Social Support)
நீ தைரியசாலி, புத்திசாலி, தன்னம்பிக்கையாளன்எனத் தினமும் கூறி, இந்த எண்ணத்தை அவர்கள் மனதில் பதிய வைத்தல். இதேபோல் தானும் கூறுதல்
அதன் தொடர்ச்சியாக சுய சங்கல்பம் (Auto Suggestion) செய்து தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டு வருதல்.
அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு சந்தேகங்களைப் போக்குதல்.
தனது செயல்பாடுகளைத் தானே பாராட்டுதல்.
பெரியவர்கள் கண்காணிப்பில் சிறுசிறு சவாலான செயல்களில் ஈடுபடுதல் (Risk taking habit)
நான் தன்னம்பிக்கையாளன், எனக்கு பயம் கிடையாது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். அனைவரும் என்னை நேசித்து வழிகாட்டுகின்றனர்.
என நாள்தோறும் சொல்லி உடல் அணுக்களிலிருந்து தாழ்வு மனப்பான்மை எனும் உணர்வை வெளியேற்றுதல்.

பணியை / தொழிலை விரும்புக

நமது வாழ்வின் பெரும்பகுதியை செய்யும் தொழிலில் செலவிடுகிறோம். ஆகவே, தொழிலில் நிம்மதி - மகிழ்ச்சி பெற முடியவில்லையென்றால் வாழ்க்கையில் நிறைவு பெற முடியாது. பலவகையான தொழில் செய்வோருக்கு இத்தனை ஆண்டுகள் பயிற்சிகள் நடத்திய அனுபவத்தை வைத்து செய்கின்ற தொழிலை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. விரும்பித் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொண்ட தொழில்
2.
வந்து அமைந்த தொழில்
3. “
பிடிக்காத தொழில்தான், இப்போதைக்கு வேறு வழியில்லை. இது தற்காலிகத் தொழில், படிப்படியாக முயற்சி செய்து எனக்கு பிடித்த தொழிலுக்குச் சென்று விடுவேன். It is temporary landing. பணி செய்து கொண்டுள்ளேன்என்றுள்ள தொழில்.
மேற்கண்டபடி எவ்வகையான தொழில் செய்வோராக இருந்தாலும், செய்து கொண்டுள்ள பணியை எப்படி முழுமையாகப் பிடித்ததாக மாற்றிக்கொள்வது?” செய்யும் தொழிலில் சந்தோஷம் - நிம்மதி (Job Satisfaction) பெறுவது எப்படி? அதற்கான கருத்துக்கள் - பயிற்சிகள் என்ன? அர்ப்பணிப்பு உணர்வுகளை உருவாக்கி அப்பணியை எப்படிச் சிறப்பாகச் செய்வது?
விபரங்களைக் காண்போம்.
கடமை எது?
வேதாத்திரி மகரிஷி அவர்கள் கடமையைப் பற்றி ஓர் அற்புதமான விளக்கம் அளித்துள்ளார்கள். அவர்கள் கூறும்போது நாம் அணிந்திருக்கின்ற சட்டை - விவசாயிகள் பருத்தி உற்பத்தி நூல், துணி ஆக்கினர். வியாபார நண்பர்கள் அதை வாங்கி, விற்று, டெய்லர் என்ற தொழிலாளர் சட்டை உருவாக்கினார். அப்படியாயின் நாம் அணிந்திருக்கின்ற உடைகளுக்குப் பின்னால் பலர் உழைப்பு உள்ளது. இதன்படி நம் உணவு உபயோகப்படுத்தும் பொருட்கள், கல்வி, மருத்துவம்…. இப்படி சமுதாயம் நமக்குப் பலவற்றைக் கொடுத்துள்ளது. பெற்றவற்றை நம் தொழிலின் மூலம் உழைத்துத் திருப்பிக்கொடுத்திருக்கிறோம். கடன் + மை = கடமை. பெற்ற கடன்களைத் திருப்பி அளிக்கிறோம் - நம் உழைப்பின் மூலம்”.
பெற்றது அதிகமாகவும், திருப்பிக் கொடுத்தது குறைவாகவும் இருக்கும்போது, நாம் இறக்கும்போது கடன்காரர்களாகத்தான் செல்ல வேண்டும். சந்தோஷம் பெற நினைக்கிற எந்த மனிதரும் கடன் சுமையை இறக்கித்தான் வைப்பார். நம் மனசாட்சி தராசு வைத்து எடைபோடும்.
காந்தியடிகள் சொல்கிறார், “உழைக்காமல் உண்பவன் திருடன்”.
வாழ்வு முழுவதும் ஏதேனும் ஒர் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிற மனிதர்கள் - இந்த உலகத்துக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வின் இறுதிக்காலத்தில் மனிதனாக இந்த உலகுக்கு வந்து - முழுமயாகப் பணி செய்தேன். தொடர்ந்து கொடுத்தேன்என மன நிறைவுடன் ஆத்ம திருப்தி அடையலாம்.
ஏற்றுக்கொள்க
நமக்கு அமைந்திருக்கிற தொழில் - ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்கலாம் - அல்லது சொந்தமாக வியாபாரம் அல்லது தொழில் செய்யலாம். அது எதுவாக இருந்தாலும், எந்த ஊர், எந்த நிறுவனம், எந்த நாடு….. எப்படியிருந்தாலும் - அதை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். எப்படியிருந்தாலும் - அதை முழுமையாக ஏற்றுக் கொள்வோம். செய்யும் தொழிலே தெய்வம்”.
பொருளாதாரம், அங்கீகாரம், பாதுகாப்பு, எதிர்கால வளர்ச்சிஎல்லாமே கொடுப்பது நம் தொழில்.
அதை ஓர் தவமாய் - தியானமாய் - முழு ஈடுபாட்டுடன் - அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வோம்.
தொழில் என்பது நம் அறிவை - திறமையை உலகுக்குக் காட்டக் கிடைத்த வாய்ப்பு. நம்மிடம் மறைந்துள்ள மாபெரும் மனித ஆற்றல் வெளிவரத் தொழில் துணைபுரியும்.
ஆகவே, நாம் செய்யும் தொழிலை - முழுமையாய் - முழு மனதுடன் - ஆத்மபூர்வமாக - ஏற்றுக் கொள்வோம். நேசிப்போம்.
விருப்பத்தை ஏற்படுத்த
இதற்கு ஓர் பயிற்சி உள்மனக் கட்டளைப்பயிற்சி (Auto Suggestion).
என் தொழிலை நான்
விரும்புகிறேன்!
என் தொழிலை நான்
மதிக்கிறேன்!
என் நிறுவனத்தை நான்
விரும்புகிறேன்!
என் நிறுவனத்தை நான்
மதிக்கிறேன்!
கண்களை மூடி அமர்ந்து கொண்டு, மேற்கண்ட வார்த்தைகளை காலையில் ஒருமுறை - மாலையில் ஒருமுறைகூறுக. அப்போது மனத்தை - ஓய்வாக வைத்த நிலையில் மனதளவில் ஓர் ஈடுபாட்டுப் பாவனையை ஏற்படுத்திக் கொண்டு செல்க.
இவ்வாறு செய்யச் செய்ய இவ்வார்த்தைகள் உள்மனதில் பதிந்து - விருப்ப உணர்வுகளை - ஈடுபாட்டுணர்வை ஏற்படுத்தும்.
பணிக்குக் கிளம்பும்போது அது சம்பந்தமான பொருட்களை எடுக்கும்போது - இவ்வார்த்தைகள் மனதில் தோன்றும்படி செய்துவிட்டால் - மனதில் தொழில் பற்றிய ஓர் இலயம் ஏற்படும்.
நாம் செய்கிற தொழிலால் - மானிட சமுதாயத்துக்குக் கிடைக்கிற நன்மையை நினைத்துப் பார்க்க வேண்டும். நம் வாழ்க்கைக்கு நம் தொழிலால் ஏற்படுகிற வெற்றி - வளர்ச்சியை உணர்தல் வேண்டும்.
உணர, உணர தொழில்மேல் ஓர் மதிப்பு ஏற்படும்.
எது சிறந்த தொழில்?
தொழில் - இஷ்டப்பட்டுச் செய்வதற்கும், கஷ்டப்பட்டுச் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

கற்பனை செய்வோமே! கனவுகள் வெல்வோமே!

கற்பனை என்கிற ஆற்றலை இந்த இயற்கை மனிதனுக்கு தந்ததற்கு மனித குலம் இயற்கைக்கு நன்றி பாராட்ட வேண்டும். இந்த மகத்தான சக்தி இல்லையென்றால் மனிதர்களிடம் வளர்ச்சி ஏது? மகிழ்சி ஏது?
கற்பனையில் மனிதர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை மனச்சித்திரங்களாக திரும்பத் திரும்பப் பார்க்கத் தொடங்கிவிட்டால் போதும் இலட்சியங்களை அடையலாம்; ஆசையை நிறைவேற்றலாம்; எண்ணியதைப் பெறலாம்.
இந்த உலகத்தில் உங்களுக்கு எது தேவையோ, எதை அடைய விரும்புகிறீர்களோ, அதை அடைந்து விட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை உங்களால் அடைய முடியும். பெற முடியும். இதை விட எளிமையான வழி வேறெதுவும் இல்லை. சோதித்துப் பாருங்களேன்!
சின்னச் சின்ன செயல்பாடுகளில் இந்த உத்தியை பயன்படுத்திப் பாருங்கள். சோதிக்கப்படாமல் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ள இயலாத பொய்யாகிப் போகும். சோதித்துப் பார்ப்போமா?
உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின் - குறள்
இந்தக் குறளை வாசிக்கின்றபொழுது மறக்காமல் மறந்துவிடாமல் வேண்டியவற்றைக் குறித்து எண்ணிக்கொண்டேயிருந்தால நினைத்ததை அடைவது எளிதுஎன்கிற கருத்து நம்மை வியப்படையச் செய்கிறது.
ஏனெனில்,
வள்ளுவர் பொய் சொல்லமாட்டார். அவர் பொய்யா மொழிப்புலவர்.
வள்ளுவர் புனைந்துரைப்பவர் அல்லர். ஏனெனில் குறள் கற்பனைக் காவியம் அல்ல.
திருக்குறள் உலகப் பொதுமறை.
வள்ளுவம் அனைவருக்கும் பொதுவான வேதம். காலத்தால் அழியாத, மாறாத, சத்திய வாசகங்கள்.
உலகம் உள்ளவரை, மனிதம் உள்ளவரை மாறாத உண்மைகள் வாழ்வியல் இலக்கியங்கள், சூட்சுமங்கள்.
நினைத்ததை அடைய மறக்காமல் நினைத்துக் கொண்டே இரு.
நினைத்தாலே போதும். நீ நினைத்ததை அடைவாய். மிக எளிமையாய் இருக்கிறதே. இதில் ஏதேனும் உண்மை இருக்குமா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது அல்லவா?
இயற்கையில், நீர் நிலைகளில் மீன்கள் முட்டையிட்டுவிட்டு கண்களால் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். அவைகளிலிருந்து மீன் குஞ்சுகள் உருவாவதற்கு நயன தீட்சை தேவை எனலாம்.
கடல் ஆமைகள் கடற்கரைகளில் வந்து குழுபறித்து முட்டையிட்டுவிட்டு மணலால் மூடி வைத்துவிடு கடல் சேருமாம். முட்டைகளைக் குறித்து மறந்துவிடமால் நினைத்துக் கொண்டே இருந்தால்தான் முட்டைகள் பொறித்து ஆமைக் குஞ்சுகள் வெளிவருமாம். தாய் ஆமை இறந்து விட்டால் முட்டைகள குஞ்சு பொறிப்பதிலையாம். மானச தீட்சை தேவை போலும்.
நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பறவைக் முட்டையிட்டு விட்டு அடைகாக்க வேண்டுமென்று அப்பொழுதுதான் குஞ்சுகள் உருவாகும். ஸ்பரிச தீட்சை நிச்சயம் தேவை.
அத போலத்தான் நாமும் கூட வேண்டியவைகளைக் குறித்து பார்க்கவும், எண்ணவும், செய்யவும் வேண்டிய நிலையிலிருக்கிறோம்.
பார்க்காத பயிர் பாழ்என்றுதானே பகர்ந்திருக்கிறார்கள்.
நினைத்தல் என்றால் என்ன? வார்த்தைகளாக நாம் நினைக்கிறோமா அல்லது படங்களாக, வார்த்தைகளின் வடிவங்களாக நாம் நினைக்கிறோமா? ஆமாம். நாம் படங்களாகத்தான் மனதில் பார்க்கிறோம். அதுதான் நமது எண்ணம். அதுதான் நமது சிந்தனை. எத்தகைய படங்களை நாம் கற்பனையில் நம் அனுபவத்ததின், நம் அறிவாற்றலின் அடிப்படையில் பார்க்கிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். இது நம்மையறியாமேலேயே நம் வாழ்வில் நடைபெறுகின்ற, இயற்கை நிகழ்த்துகின்ற அற்புதங்கள்.
மனப்படங்கள் எப்படியோ அப்படியே வாழ்க்கை அமைகிறது.
அதனால்தான் நீங்கள் நினைப்பதையெல்லாம் பெரிதாக வளமாக, வசதிமிக்கதாக பெருமைக்குரியதாக, போற்றத்தக்கதாக மிகத் துல்லியமாக கற்பனை செய்யுங்கள். (Creative Visualization). ஒரு வேளை அதை அடைய காலதாமதம் மேற்பட்டாலும் கற்பனையை மட்டும் கை விட்டுவிடாதீர்கள். மீண்டும் நாம் வள்ளுவரின் வார்த்தைகளையே பார்ப்போமே.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினம தள்ளாமை நீர்த்து - குறள்
மேற்கண்ட திருக்குறள்களை அவற்றின் பொருளை சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்காமல் இவைகள் பிரபஞ்ச இரகசியத்தின் வெளிப்பாடுகள் என்ற கோணத்தில் பார்த்தால் இதுவரை இந்த குறட்பாக்களை நாம் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு நம்மால் உணரப்படும்.
கற்பனை என்பது வெறும் கற்பனையாக இல்லாமல் உணர்ச்சியைக் கலந்து (Emotion) செய்கிறபோது கற்பனையின் சக்தி பல மடங்கு பெருகி நினைத்ததை அடைவதற்கான காலத்தை குறைத்துவிடுகிறது. விரைவில் நிறைவேறும் உடனே நடக்கும்.
இலட்சியக் கற்பனை, கனவுக் கற்பனை, ஆசைக் கற்பனை தேவைக்கற்பனை இவைகள் உணர்ச்சிப் பூர்வமானதாக இருக்கட்டும். உணர்ச்சியற்ற எண்ணங்களும், வார்த்தைகளும் அர்த்தமற்ற சப்தங்களன்றி வேறில்லை. அவைகள் அடைய முடியா வெறுமைகளால் ஆனவைகள்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...