December 5, 2009

வாழ்க்கையின் உண்மையான வழிகாட்டி

அன்னையே, ஒரு மனிதனின் வாழ்க்கைப்போக்கு அந்தராத்மாவால் வழிகாட்டி இயக்கப்படுகிறதா?

ஆம். ஆனால் மிகப் பெரும்பாலும் அவன் அதைச் சிறிதும் உணர்வதில்லை; அந்தராத்மாதான் அவனுடைய இருப்பை ஒழுங்கமைக்கிறது - ஆனால் முதன்மையான போக்குகளில்தான; ஏனெனில் சிறு விவரங்களிலும் தலையிட வேண்டுமானால் புற ஜீவனுக்கும், அதாவது பிராணமய ஜீவனுக்கும் தூல ஜீவனுக்கும், சைத்திய புருஷனுக்குமிடையே உணர்வுள்ள ஐக்கியம் இருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த ஐக்கியம் இருப்பதில்லை. உதாரணமாக, ஒருவர் பெரிய மனக் குழப்பத்தில் என்னிடம், "சைத்திய புருஷனே, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அந்தராத்மாவிலுள்ள இறைவனே நமது வாழ்க்கையை இயக்குகிறான் என்றால் என்னுடைய தேநீரில் எவ்வளவு சர்க்கரை போட வேண்டும் என்பதை நிர்ணயிப்பது அவன் தானா?" என்று கேட்டார், இதே வார்த்தைகள். அதற்கு நான் அளித்த பதில், "இல்லை, இப்படிச் சிறு சிறு விவரங்களிலும் தலையிடுவதில்லை."

... நீ உன்னுள்ளே சென்று உனது சைத்திய புருஷனைக் கேட்டு அதையே நீ செய்ய வேண்டியதை முடிவு செய்ய அனுமதித்தால்தான் நீ அதைத் தயக்கமின்றி, நிச்சயத்துடன், சந்தேகங்கள் எழாதபடி செய்ய முடியும். அப்பொழுது நீ செய்ய வேண்டியது இதுதான் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வாய், சந்தேகத்திற்கே இடமிராது; அப்படிச் செய்யும்போதுதான் அந்தத் தெளிவும் உறுதியும் இருக்கும். ஆகவே, உன்னுடைய சைத்திய புருஷன் உணர்வுடனும், எப்போதும் உன்னை வழி நடத்த நீ அனுமதிக்கும்போதுதான் உன்னால் உணர்வுடனும் எப்போதும் சரியான காரியத்தைச் செய்ய முடியும்; அப்பொழுது மட்டுந்தான்.

...உன்னுள் அறியக் கூடியது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது, அது உன்னுடைய சைத்தியபுருஷன்தான்; அது தவறு செய்யாது, அது உடனடியாக, கணப்பொழுதில் சொல்லிவிடும்; மறு பேச்சு இன்றி, உன்னுடைய கருத்துக்களையும் விவாதங்களையும் கொண்டு வராமல் அதன் சொல்லைக் கேட்டால் அது உன்னை எது சரியோ அதைச் செய்யச் செய்யும்.

நீ எதைப் படிக்க வேண்டும் எதைப் படிக்கக் கூடாது, எந்த வேலையைச் செய்ய வேண்டும், எந்த வழியில் செல்ல வேண்டும்? எல்லாச் சாத்தியக் கூறுகளும், நீ கற்றவை அல்லது வாழ்க்கையில் கண்டவை, எல்லாப் பக்கங்களிலுமிருந்தும் வரும் யோசனைகள், இவை எல்லாம் உன்னைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும். எதைக் கொண்டு நீ முடிவு செய்வாய்? நான் பேசிக் கொண்டிருப்பது முழு நேர்மை உடையவர்களைப் பற்றி, தப்பான எண்ணங்கள், ஆராய்ந்து பார்க்காத கருத்துடையவர்கள், உண்மையைக் காண முயலாமல் கண்ணை மூடிக் கொண்டு வழக்கத்திலுள்ள விதிகளின்படி நடக்கிறவர்கள் இவர்களைப் பற்றி அல்ல, அவர்களுக்கு அவர்களுடைய மனக் கட்டுமானங்களே உண்மை. அவர்கள் விஷயம் எளிது. அவர்கள் நேரே தங்கள் வழியில் போக வேண்டியதுதான், சுவரில் போய் மோதிக் கொள்வார்கள். ஆனால் மூக்கு நன்றாக நசுங்கும் வரை அதை உணரமாட்டார்கள். மற்றபடி இது மிகக் கடினமானது.

சாதாரணமாக மனிதன் எப்போதும் அஞ்ஞானத்திலேயே வாழ்கிறான். மனம் இருக்கும் இடத்தை ஒளிமனம் (mind of light) பெற்றாலன்றி ஒருவனால் உண்மையான பாதையில் செல்ல முடியாது, முழுமையான உருமாற்றம் ஏற்படுவதற்கு முன் இது இன்றியமையாத ஆயத்தமாகும் என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்வதன் பொருள் இதுதான்.

உங்களால் ஆகாத செயலும் உண்டோ?

தீர நெஞ்சுடையோராலேதான் துன்பத்தைக் கண்டு சிரிக்க முடியும், எப்பொழுதும் புன்முறுவலோடு இருக்க முடியும்; மனமார்ந்த மகிழ்ச்சிக் குரலைவிட இதமானது (Cordial) வேறொன்றும் இல்லை. ஆங்கில மொழியில் Cordial என்ற சொல்லும் Courage என்ற சொல்லும் ஒரே வேரிலிருந்து தோன்றியவை. உள்ளத்திலிருந்து எழும் மகிழ்ச்சிக்குரல் இக்கட்டான வேளைகளில் ஒருவகைத் துணிவைத் தரும்.

எப்பொழுதும் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் மலர்ச்சியும் அமைதியும் கூடிய மனநிலை, உள்ளத்திலே ஓர் உவகை இவை எப்பொழுதும் விரும்பத்தக்கவைகளே. இக்குணங்களால் எத்தனை அரிய தொண்டுகளெல்லாம் நிறைவேறுகின்றன!

இக்குணங்களால்தான் ஒரு தாய் தன் வீட்டை குழந்தைகளுக்கு ஓர் இன்பப் பூங்காவாக ஆக்குகிறாள், மருத்துவமனைகளிலே தாதிகள் நோயாளிகளை விரைவில் குணமடையுமாறு செய்கின்றனர், ஒரு முதலாளி தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அவர்கள் செய்யும் வேலை பெரும் பாரமாகத் தெரியாதபடி செய்கிறார், தொழிலாளிகள் பணி நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுகின்றனர், தொலைத்தூரப் பயணி கடினமான பாதை வழியே தனது சகாக்களைக் அழைத்துச் செல்கிறான், தேசபக்தன் தேசமக்களின் உள்ளத்தில் நம்பிக்கை அணைந்துபோகாமல் காக்கிறான்.

இன்பக் குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியுடனிருந்தால் உங்களால் ஆகாத செயலும் உண்டோ?

அன்னையின் ஒரு பிரார்த்தனை

எம்பெருமாளே, நீ அன்பே உருவானவன், நின் அன்பு ஒவ்வொரு சிந்தனையின் ஆழங்களிலும், ஒவ்வொரு இதயத்தின் ஆழத்திலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. நினது திருவுருமாற்ற வேலையை நிறைவேற்று, எங்களை ஒளியுறுத்து, இன்னும் மூடிக்கிடக்கும் கதவுகளைத் திற, காட்சி எல்லையை விரிவாக்கு, வலிமையை நாட்டு, எங்களுடைய ஜீவன்களை ஒருமைப்படுத்து, எல்லா மனிதர்களையும் அதில் பங்கு பெறச் செய்.

எங்களை நினது திவ்விய பேரின்பத்தில் பங்குகொள்ளச் செய். நாங்கள் எங்கள் உள்ளும் புறமும் உள்ள கடைசித் தடைகளையும் இறுதி கஷ்டங்களையும் வெல்ல அருள். நின்னை நோக்கி எழுந்த தீவிரமான இதயபூர்வமான பிரார்த்தனை எதுவும் வீண்போனதில்லை. எப்பொழுதும் நினது உதார குணத்தினால்ர எல்லா அழைப்பிற்கும் பதிலளிக்கிறாய். நின் கருணைக்கு எல்லை இல்லை.

தெய்வத் தலைவனே, இக்குழப்பத்தினுள் நினது ஒளி புகுந்து அதிலிருந்து ஒரு புதிய உலகைத் தோற்றுவிக்கட்டும், இப்பொழுது ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை நிறைவு பெறச் செய், நினது புதிய உன்னதமான தர்மத்தின் பூரண விளக்கமாக இருக்கக்கூடிய புதிய மனித இனத்தைப் படைத்தருள்.

எங்கள் உத்வேகத்தை எதனாலும் நிறுத்த முடியாது; எதுவும் எங்கள் முயற்சியை அயரச் செய்யாது; எங்கள் நம்பிக்கைகளையும் செயல்களையும் நின்மீது வைத்து, நினது பரம சங்கல்பத்திற்குப் பூரண சரணாகதி செய்துள்ள வலிமையில், நினது வெளிப்பாட்டை எதிர்க்கும் அனைத்தையும் வெல்வோம் என்ற அமைதியான நிச்சயத்தில் நினது முழுமையான வெளிப்பாட்டின் வெற்றி நோக்கி வீரநடை போடுவோம்

உலகநாதனே போற்றி! எல்லா இருளையும் வெல்பவனே போற்றி!

மனிதன் அடைய வேண்டிய உண்மையான இலக்கு

வாழ்வில் இறைவனை வெளிப்படுத்துவதே மனிதனுக்கு விதிக்கப்பட்ட மகத்தான வேலை. விலங்கிற்குரிய உயிர்த் தத்துவமும் செயல்களும் அவன் தொடக்கம், ஆனால் அவன் அடைய வேண்டிய இலக்கோ முழு தெய்வத்தன்மையாகும்.

நம் உள்ளேயே மெய்ப்பொருளைக் காண வேண்டும். அவ்வாறே பூரண வாழ்வின் மூலத்தையும் அடித்தளத்தையும் நம் உள்ளேயே காணவேண்டும். புற அமைப்புகள் எதுவும் அதைத் தரமுடியாது. உலகிலும் இயற்கையிலும் உண்மையான வாழ்வைப் பெறவேண்டுமானால் உள்ளே உண்மையான ஆன்மாவை அடைய வேண்டும்.

இயற்கையைத் திருவுருமாற்றம் (transformation) செய்து தெய்வீக வாழ்க்கை வாழ்வதற்கு முதல் தேவை நம்முள்ளே உற்று நோக்கி, உள் உண்மைகளைக் கண்டு, உள்ளே ஆழ்ந்து சென்று அந்த ஆழத்தில் வாழ்வதே ஆகும்.

வாழ்வுப் பிரச்சனைக்கு ஆன்மீகம் கூறும் விடை புறச்சாதனங்களால் தீர்வு காண்பதல்ல. புறச்சாதனங்களையும் பயன்படுத்தலாம், ஆனால் உண்மையான தீர்வு உணர்வும் இயல்பும் ஓர் அகமாற்றம், ஒரு திருவுருமாற்றம் அடைவதன் மூலமே கிடைக்கும்.

நம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகப் பாதையில் முன்செல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையை ஒருவன் மீது திணிக்கக்கூடாது. அது சுயமாக உணர்ந்து வரவேண்டும் அல்லது அந்தராத்மாவின் மறுக்க முடியாத வழிகாட்டுதலாக வரவேண்டும்.

"எல்லா அறங்களையும் விதிகளையும் செயல்களையும் துறந்துவிட்டு என்னை மட்டுமே சரணடை", இதையே ஆர்வங்கொண்ட மனிதனுக்கு மிக உயரிய ஆன்மீக நிலையில் வாழ்வதற்கான மிக உயர்ந்த விதியாகக் கடவுள் காட்டுகிறான்.

விதியை எதிர்த்துப் போரிட முடியும்

ஸ்ரீ அரவிந்தர்

எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சியடைந்து முடிவுற்றாலும்
இதயம் தோல்வியுற்றாலும்,
மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்,
விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே என்றிருக்கும் போதும்,
எந்த மனித வலிமையும் தடுக்கவோ, உதவவோ முடியாதென்றாலும்,
கடவுளால் கொடுக்கப்பட்ட அவளுடைய வலிமை
விதியை எதிர்த்துப் போரிட முடியும்.

Melmaruvathur Adhiparasakthi - Moola Manthiram



Moola Manthiram

Ohm Saktheeyei! Paraa Saktheeyei!
Ohm Saktheeyei! Aadhi Paraa Saktheeyei!
Ohm Saktheeyei! Maruvoor Araseeyei!
Ohm Saktheeyei! Ohm Veenaayagaa!
Ohm Saktheeyei! Ohm Kaamaatcheeyei!
Ohm Saktheeyei! Ohm Bangaaru Kaamaatcheeyei!
Ohm Sakthi!

Mangayar Ulakam: தாழ்வுமனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்

Mangayar Ulakam: தாழ்வுமனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...