December 14, 2014

தயிர் தரும் பலன்கள்

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரதம் பாலில் உள்ள புரதத்தை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும்.
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பக்டீரியாவை உருவாக்குகிறது.தயிரில் இருக்கும் புரதம் இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்க தயிர் சாப்பிட வேண்டும் .
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கல்சியத்தை தயிர் வழங்குகிறது.வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 2-3 நாட்கள் வரை புளிக்காது.
வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம். தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

இதோ… தன்னம்பிக்கை

இதுதான் தன்னம்பிக்கை…

“தன்னம்பிக்கை உள்ள மனிதனின் வளர்ச்சியை யாரேனும் தடை செய்தால்,
ஏன்? தடைசெய்ய நினைத்தால்கூட போதும் அவன் முன்பைவிட மும்மடங்கு ஆற்றலோடு செயல்படத் தொடங்குவான்.

அவன் உள்ளத்தில் ஆற்றலின் ஊற்றுகள் பீறிட்டு எழும்பத் தொடங்கிவிடும்.

இதுவரை நிகழ்த்தாத சாதனைகளை எல்லாம் அவன் நிகழ்த்தியே தீருவான்” 

தன்னம்பிக்கை எனும் கவசம் அணிந்து…

“நமது முயற்சிக்கு ஏற்ப நாம் முன்னேறலாம்” என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மையும் ஆகும்.

முயற்சிக்கும்கூட ஒரு எல்லையுண்டு என்று ஒரு காலத்தில் எல்லை வகுத்தார்கள். வானமே நமது எல்லை என்று தொடமுடியாத வானத்தை ஒரு இலட்சியத்தின் எல்லையாகக் கூறினார்கள். ஆனால் Sky is the limit என்று இருந்த நிலை மாறி இன்று வானம்கூட நீண்ட காலத்திற்கு நமது எல்லையாக - வரையறையாக இருக்க முடியாது (Sky is no longer the limit) என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முயற்சி உள்ளவன் வானத்தைக் கடந்தும் அவன் தன் வெற்றியை ஈட்டுவான். முயற்சிக்கு ஓர்எல்லை என்பதே கிடையாது என்ற கருத்து அண்மைக் காலத்தில் வளர்ந்துள்ளது. இத்தகைய முயற்சிக்குத் தடை நேராமல் கவசம்போல் அமைவதுதான் தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை என்பது உண்மை என்ற மூல வித்துக்கு மேலுறைபோல் அமைவது. தன்னம்பிக்கை உள்ளவன் கவசம் அணிந்த மனிதனைப் போன்றவன். தன்மீது எவ்விதத் தாக்குதல் நேர்ந்தாலும் அதனால் அவன் பாதிக்கப்படமாட்டான். எது தாக்கியதோ அதுவே அவன் மீது மோதியதும் வீழ்ந்துபடும்.

தன்னம்பிக்கை உள்ளவன் பிறர் தன்னைப் பற்றிக் கூறும் புகழ்ச்சி, இகழ்ச்சிகளை, கேலி, கிண்டல்களை ஏன் அவதூறுகளைப் பற்றிக்கூட கவலைப்படுவதில்லை. தான் எடுத்துக்கொண்ட செயலில் நேரிய வழியில் சென்று, வெற்றி காண்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறான். 

அவன் நேரம் முழுவதும் வெற்றியை நோக்கிய சிந்தனையிலேயே செலவிடப்படுகிறது. தோல்வியைப் பற்றிச் சிந்திக்கவும் அவனுக்கு நேரமில்லை (There is no time for failure).

தன்னம்பிக்கை உள்ளவன் இறுதியில் பெறுவது வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி என்பது ஒன்றே.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும் இளைஞர்கள் தாம். தன்னம்பிக்கை உள்ள இளைய தலைமுறையே எழுந்திரு! சோம்பலை முறி! சுறுசுறுப்போடு செயல்படத் துவங்கு. வெற்றி உறுதி!

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...