January 16, 2010

அழகுக்கு எலுமிச்சை

நம் உடல் உபாதைகளுக்கான மருந்தையும் தீர்வையும் இயற்கையே வைத்திருக்கிறது. ஒவ்வொரு காய்கறியும் கனி வகையும் இயற்கையின் அருங்கொடை. அவற்றைப் புறக்கணிக்காமல் உண்கிறவர்களுக்கு வாழ்வே வசந்தம்.

சிதைந்த உயிரணுக்களை புதிதாக உருவாக்கும் திறன் எலுமிச்சைக்கு உண்டு. பிராண சக்தியை மீட்டுக் கொடுக்கும் ஆற்றல் இதில் அதிகம் என்பதால் சோர்வாக உணரும் போது எலுமிச்சம்பழச் சாற்றைக் குடிக்கலாம். சுடச்சுட வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வந்தால் மந்தமான வயிறு மற்றும் வாயுத் தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலைக் கிடைக்கும்.

அஜீரணம் வயிற்றின் தனிப்பட்டப் பிரச்சனை மட்டுமல்ல ...அது ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தையும் பாதிக்கும். குறிப்பாக புற அழகை அது கடுமையாகத் தாக்கும். முகத்தில் அதிகம் பருக்கள், வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோருக்கு அஜீரணமும் மலச்சிக்கலும் இருக்க வாய்ப்புண்டு. இவர்கள், உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் வெந்நீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து அருந்தி வர அஜீரணம் காணாமல் போகும். அழகும் மீண்டு வரும்.

தவிர, மலச்சிக்கலுக்கும் எலுமிச்சை அருமருந்து. எலுமிச்சையின் தோலை மெலிதாக நீக்கிவிட்டு உள் வெள்ளைத் தோலுடன் அப்படியே ஒரு பாட்டில் தண்ணீரில் போட்டு இறுக மூடி இரவு முழுவதும் ஊறவிடவும். அதிகாலை எழுந்தவுடன் முதல் வேலையாக பாட்டிலை நன்றாக குலுக்கி தண்ணீரை வடித்து குடிக்கவும். தினமும் இதே போல் செய்து வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்

தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும். தேனால் நம் சருமம் அடைகிற நன்மைகளைச் சொன்னால் மனசெல்லாம் பூரிக்கும். தேன் தரும் அற்புத நனமைகளை சற்று தெரிந்து கொள்வோம்.

தோல் தொய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டதே என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.

இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன், ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சோப்புத் துண்டுகளை போடவும். ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள்.

வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும். மேலும், சோப்பு உடலை சுத்தமாக்கும், எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

கண்கள் சோர்வடைவதைப் போக்க 'தேன்' வைத்தியம்!

அன்றாட வாழ்வில் கம்யூட்டர் என்பது அடிப்படை ஒன்றாகிவிட்டது. நகர்புறங்களில் பணிக்குப் போகும் பலரும் பணிபுரிவது கம்யூட்டரின் முன்னால்தான்.

இவ்வாறு எட்டிலிருந்து ஒன்பது மணி நேரமும் கம்ப்யூட்டர் திரையை வெறித்துக் கொண்டே காலத்தை நகர்த்தும் சூழலால், முதலில் பாதிக்கப்படுவது கண்கள்.

கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிபவர்கள் மட்டுமின்றி, தூக்கமின்மையால் வாடுபவர்களுக்கும் கண்களில் சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.

நகர்மயமான சூழலில் வாழ்ந்தாலும், எளிதில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களால் நம் உடல் நலனைப் பேணலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கண்கள் சோர்வடைவதைப் போக்கிக் கொள்ளவும் இயற்கை முறையில் எளிதில் வைத்தியம் செய்து கொள்ளலாம்.

செய்ய வேண்டிவை

தேனையும் உருளைக்கிழங்கையும் அரைத் தேக்கரண்டி அளவில் பிழிந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பஞ்சினைத் தொட்டு கண்களின் மேல் வைத்து 2 நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்துவந்தால், கண்கள் சோர்வில் இருந்து விடுபடுவதுடன் பளிச்சென்று இருக்கும்.

கன்னம் ஒட்டியிருந்தால் சரி செய்யவது எப்படி?

பெண்களே உங்கள் கன்னங்கள் ஒட்டியுள்ளதா? இதனால், உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா?

கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரிய குறையே இல்லை. ஆரோக்கிய உணவு முறை இருந்தால் மிக எளிதாக சரிசெய்ய முடியும்.

கன்னங்கள் குண்டாக காட்சியளிக்க, தின்மும் எடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். டம்பெல், பார்பெல் போன்ற எடைப் பயிற்சியில் தினமும் அரை மணி நேரம் ஈடுபடவேண்டும்.

புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும். பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய்,நெய்,வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும்.

வேண்டாத கவலையை விட்டொழியுங்கள். இப்படியாக செய்து வந்தால் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக ஊதி விடும்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...