மனசே ரிலாக்ஸ் பிளீஸ் ஆனந்தவிகடனில் சுவாமி சுகபோதாநந்தாவின் எழுதித் தொடராக வந்ததை இங்கே வலைப்பதிவு செய்துள்ளேன்.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் இந்தப் புத்தகம் ஆனந்தவிகடனில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தபோது வாசகர் இதை வெறும் தொடராகப் படிக்கவில்லை. இதிலே கூறப்பட்டிருக்கும் கதைகளோடு தங்களின் வாழ்க்கையை அவர்கள் தொடர்புபடுத்திப் படுத்திக் கொண்டு படித்தார்கள். மதங்களையும் மனித மனங்களையும் ஒன்றாக இணைத்து நெய்யப்பட்ட எந்தப் புத்தகமானாலும் சரி அவற்றை ஒரு முறை படித்து மூடி வைத்துவிட்டால் முழு பலன் கிடைக்காது. நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்காக இவற்றை நாம் திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும். புத்தகம் ஒன்றாக இருந்தாலும் நாம் எந்த மனநிலையில் நின்று படிக்கின்றோமோ அதற்கு ஏற்றாற்போல் ஒரே புத்தகத்தில் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளிப்படும். எந்த நிகழ்ச்சி எந்த ஞானியின் வாழ்க்கையில் நடந்தது, எந்தக் கதை எந்த வேதத்தில் இருக்கின்றது, என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் மட்டுமே ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படித்தார் என்றால் கதைகளையும் நிகழ்ச்சிகளையும் வார்த்தைகளையும் வேண்டுமானால் அவரால் கிரகித்துக் கொள்ளமுடியும். ஆனால் இதன் அர்தங்கள் புத்தகத்திலேயே தங்கிவிடும். இந்தப் புத்தகத்தில் சொல்லப்படிருக்கும் கருத்துக்களைப் படித்து, அசைபோட்டு, சிந்தித்து, அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பாருங்கள். புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளும் கதைகளும் உங்கள் அறிவுக்கு இடம்மாறாது அது உங்களையே மாற்றிவிடும்.
இங்கே நான் கூறியிருக்கும் கருத்துக்களும் கதைகளும் இந்துமதம், பௌத்தம், ஜென், இஸ்லாம் போன்ற பல மதங்களின் வேத நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது அத்துடன் பிரபலமான மற்றும் பிரபலம் அடையாத சாதாரண மனிதர்களிடமும் இந்து நிறையப் பாடங்களை எடுத்துக் கொடுத்திருக்கின்றேன். எனவே இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கும் கருத்துக்களை நடைமுறைப்படுத்திப் பார்ப்பது கடினமான காரியம் இல்லை. நீங்கள் முயற்சித்தால் செய்வீர்கள் உங்களின் முயற்சிக்குப் பலன் நிச்சயம் உண்டு
இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம்
நான் பார்த்தவரை உலகத்தில் உள்ள அத்தனை பேரும் மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்பும் கேள்வி இதுதான். “ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டத்தைக் கொடுக்கிறான்” இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் புத்தமதத்தில் கூறப்படுகின்ற ஓர் சின்னக் கதையை அவர்களிடம் சொல்லுவது வழக்கம். ”அது ஒரு கிராமம், சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையடப் போகிறான். அப்போது “என்னைக் காப்பாற்று, காப்பாற்று” என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கத்துகின்றது. ”உன்னை வலையில் இருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய், நான் மாட்டேன்” என்று முதலையை காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை ”நான் உன்னை சத்தியமாகச் சாப்பிடமாட்டேன், என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் விடுகின்றது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கின்றான். வலையில் இருந்த முதலையின் தலை வெளிப்பட்ட உடனேயே அது சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. ”பாவி முதலையே இது நியாயமா?” என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க ”அதற்கென்ன செய்வது, இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவதைப் பற்றிக்கூடக் கவலையில்லை. ஆனால் நன்றி கெட்டத் தனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்ததைத் தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முதலையின் வாய்க்குள் மெல்லப் போய்கொண்டிருக்கும் சிறுவன் மரத்தில் இருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் ”முதலை சொல்வது மாதிரி இதுதான் உலகமா?, இதுதான் வாழ்க்கையா?” அதற்குப் பறவைகள் “எவ்வளவோ பாதுகாப்பாக, மரத்தின் உச்சியில் கூடு கட்டு முட்டையிடுகின்றோம், ஆனால் அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்று விடுகின்றன. அதனால்தான் சொல்கின்றோம் இதுதான் வாழ்க்கை, இதுதான் உலகம், முதலை சொல்வதுதான் சரி”. ஏரிக்கரையில் மேய்ந்துகொண்டுருக்கும் கழுதையைப் பார்த்துச் சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான் ”நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.
சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். ”இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது” என்று முயல் சொல்ல, முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ”ஆஹா வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை” என்றது முயல்.
பெரிதாகச் சிரித்த முதலை “நான் முட்டாள் இல்லை. சிறுவனை விட்டால் ஓடி விடுவான்” என்று சொல்ல முயல் “புத்தி இல்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே”. என்று நினைவுபடுத்த… முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து ”நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த..” சிறுவன் ஓடுகிறான்.
முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது – ”புரிந்ததா… இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !”
சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர… அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி… சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.
வாழ்க்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்கப் புரிந்துகொள்ளமுடியாது என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்த மதமும் சொல்கின்றது. பரோடாவின் என்னைச் சந்தித்துக் கதறிய பெண்ணெருத்தியின் வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். அறிவு என்பது ஒரு எறும்பு, வாழ்க்கை என்பது யானை. ஒரு முறை பகவத் கீதை பற்றிச் சொற்பொழிவாற்ற பரோடா சென்றிருந்தேன். அங்கே ஒரு பெண்மணி என்னைத் தனிமையில் சந்திக்க விரும்புவதாகச் சொன்னாள். என்னைச் சந்தித்த உடனேயே கடுப்படுத்தமுடியாமல் அழுதாள். மனதிலே உள்ளதை வெளியிலே கொட்டினால் பாரம் குறையும் என்பதால் அவளை மேலும் பேசச் சொல்லித் தூண்டினேன். ”உலகத்திலேயே என்னைப் போல யாரும் கஷ்டப் பட்டிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு கஷ்டத்தை நான் அனுபவிக்கின்றேன்.” என்ற பீடிகையோடு அந்தப் பெண் தன் கதையைச் சொன்னாள். ”நான் சிறுமியாக இருக்கும் பருவத்தில் இருந்தே மகள் என்றும் பாராமல் என் தந்தை என்னிடம் பாலியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வார். அப்போது ஐயோ என்று மனதுக்குள் கதறினேனே தவிர இதை எப்படித் தடுப்பது என்று தெரியவில்லை. நான் வளர்ந்து பருவம் அடைந்த பின்பும் என் தந்தை மாறவில்லை, என் துயரமும் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் இருட்டாகவே எனக்கு விடிந்தது. பிறகு எனக்குத் திருமணமும் ஆனது. அன்பு மிக்க கணவர் கிடைத்தார் ஆனால் அந்தத் துயரம் மட்டும் மறையவில்லை. என் திருமணத்திற்குப் பின்பும் கூட என் தந்தை மாறவில்லை. இதைச் சகிக்க முடியாத நான் இந்த நரக வேதனையில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பார் என்ற ஆசையில் எல்லாவற்றையும் என் கணவர் முன்பு கொட்டி அழுதேன். விளைவு இப்போது என் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். ஏன் எனக்கு மட்டும் இப்படி ஓர் துன்பம்? என்று கேட்டழுதாள் அந்தப் பெண். அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு இந்து மத தத்துவத்தின் அடிப்படையில் இது உன் பூர்வ ஜென்மப் பலன், கர்மா அதை நீ அநுபவித்துதான் ஆகவேண்டும் என்று நான் பதில் சொல்லியிருக்க முடியும். ஆனால் மனோ தத்துவரீதியாக ஒருவேளை உன் தாய் உன் தந்தையை சரியாகத் திருப்திப் படுத்தியிருக்க மாட்டாள் அல்லது உன் தந்தைக்கு ஏதோ மன வியாதி இருக்கவேண்டும் என்று மருத்துவத்தைத் துணைக்கு அழைத்திருக்கலாம். இந்தப் பெண்ணிற்கு ஏன் இப்படி ஒரு கொடுமை நடந்தது என்று யாராவது பதில் சொல்ல முடியும் என்றால் முசோலினி, ஹிட்லர் போன்ற கொடுமைக்காரர்கள் ஏன் பிறந்தார்கள் என்பதற்கும் காரணம் சொல்லிவிடமுடியுமே. மீண்டும் இப்படிப் பட்டவர் பிறக்காமல் இருக்க வழியும் சொல்லிவிட முடியுமே. அந்தப் பெண்மணிக்குச் சொன்னேன். “நமது அறிவு என்பது ஓர் எறும்பு என்றால் வாழ்கையும் இந்த உலமும் யானை போன்றது” யானையின் காலுக்கடியில் கிடக்கும் எறும்பால் யானையை என்றுமே முழுமையாகப் பார்த்துவிட முடியாது. யானையில் ஒரு பகுதியைத் தான் பார்க்கமுடியும். எறும்பின் பார்வையைப் போல் நமது அறிவு கூர்மையானதாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை புதிர்களுக்கும் நம்மால் விடை தேடிவிட முடியாது. இப்படிச் சொல்வதால் யார் நம்மை மிதித்தாலும் உதைத்தாலும் விதியே என்று சும்மா இருக்கவேண்டும் என்று அர்த்தம் அல்ல. ஆங்கிலத்தில் assertive என்று ஓர் வார்த்தை உண்டு இல்லையா? இந்தக் குணம் உடையவர்கள் தமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தமது அதிகாரத்திற்கும் உரிமைக்கும் உட்பட்ட பகுதிகளை அந்நியர்கள் ஆக்கிரமிப்பதை ஏற்க மாட்டார்கள். நாம் இந்தக் குணத்தோடுதான் இருக்க வேண்டும். என்ன சோதனை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் ஆனால் அந்தப் போராட்டத்தின் முடிவு எப்படிப் பட்டதாக இருந்தாலும் இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம் என்று ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் வந்துவிட்டால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி எழாது சுய பச்சாதாபம் வராது, துயரத்தின் வேதனை தாக்காது. அந்தநிலையை அடைய இந்தப் பிராத்தனை உங்களுக்கு உதவலாம்.
”ஆண்டவா, என்னால் எதையெல்லாம் மாற்ற முடியுமோ, அதை மாற்றக் கூடிய வலிமையைக் கொடு. என்னால் மாற்ற முடியாதவை எவை என்கின்ற அறிவை என்னிடம் கொடு என்னால் மாற்ற முடிந்தது மாற்ற முடியாதது இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிந்து அறிந்து கொள்கின்ற பக்குவத்தை எனக்குக் கொடு”
தூணிலே ஒரு பூனை
பிராத்தனை என்பது என்ன. இந்த இடத்தில் கடவுள் என்ற வியசத்திற்கு நான் போகவில்லை. ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம்மையே நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதுதான் பிராத்தனையின் சாரம். வார்த்தைகளிலோ உருவ வர்ணணைகளிலோ சட்டங்களிலோ மட்டும் பிராத்தனை இல்லை. முக்கியமாக உணர்வதில்தான் இருக்கின்றது. சம்பிரதாயச் சடங்குகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல் அதற்குள் போய் சிக்கிக் கொள்வதல்ல பிராத்தனை. இந்த இடத்தில் வருத்தமான விசயத்தை நான் சொல்லவேண்டும். சமீபத்தில் நான் ஒரு வீட்டிற்குச் சென்ற போது வித்தியாசமான ஒரு சுப்பிரபாததைத் கேட்டேன். ”கௌசல்யா, சுப்ரதா அலமே பால் பொங்குது காஸ் நிறுத்தடி. ராம பூர்வா சந்யா, கோபு பான் வீணா சுத்திட்டு இருக்கு. பிரபத்ததே உத்திஷ்ட” இதை நான் நகைச் சுவைக்காகச் சொல்லவில்லை. பிராத்தனை என்பது மட்டும் அல்ல காமாட்சி அம்மன் விளக்கேற்றுதல், மாவிலை கட்டுதல், ஆராதனை செய்தல் போன்ற ஆன்மீகமான விசயங்களையும் இப்போது அர்த்ததைப் புரிந்து கொள்ளாமலேயே வெறும் சம்பிரதாயமாகவே பலர் செய்து வருகின்றோம். நான் சொல்வது எல்லா சமுதாயத்தினருக்கும், இனத்தவருக்கும், மதத்தினருக்கும் பொருந்தும். வேதம், உபநிடதம் என்று எல்லாவற்றிலும் தேர்ந்த சாமியார் ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் தமது சீடர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது பூனை ஒன்று சாமியாருக்கு எதிரே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்தச் சாமியாரின் கவனம் சிதறவில்லை ஆனால் சீடர்கள் சிலரின் கவனம் சிதறியது. ஆகவே பூனையைப் பிடித்து பக்கத்தில் இருந்த தூணில் கட்டும்படி சாமியார் சொல்ல பூனையும் தூணில் கட்டப்பட்டது. அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று அடுத்தடுத்து வந்த நாட்களிலும் பூனை தொந்தரவு கொடுத்ததால் சாமியார் பாடம் எடுக்கும் போதெல்லாம் தவறாமல் பூனை தூணிலே கட்டப்பட்டது. சில வருடங்களில் சாமியார் இறந்து விட்டார், சீடர் ஒருவர் அந்த ஆச்சிரமத்தின் புதிய சாமியார் ஆனார். அவர் சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போதும் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது. சில மாதங்களில் அந்தப் பூனையும் இறந்து விட்டது. அடுத்த நாள் பாடம் எடுப்பதற்காக வந்த அந்தச் சாமியார் “பாடம் எடுக்கும் போது தூணிலே ஒரு பூனை கட்டப்படவேண்டும் என்று தெரியாதா? உடனே போய் ஒரு புதிய பூனையைப் பிடித்து வந்து தூணில் கட்டுங்கள்” என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
சிலபேர் கிருஷ்ண பக்தர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வார்கள். கிருஷ்ணன் என்பது யார் மகிழ்ச்சி, உவகை, ஆனந்தம், கொண்டாட்டம் என்று எல்லாம் சேர்ந்தவந்தானே கிருஷ்ணன். ஆனால் கிருஷ்ண பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர் உம் என்ற முகத்துடன் சதா சோகமாக இருப்பதை நீங்களும் கூடப் பார்த்திருக்கலாம். ஒரு கட்டத்தில் அன்பும் அரவணைப்பும் போய் பக்தி என்பதே ஒரு முரட்டுத் தனமாக மாறிவிட்டது. உணர்சிகளை மறந்து விட்டு வெற்று வார்த்தைகளை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குவதால்தான் மதத்தின் பெயரால் இப்போது கலவரங்கள் நடக்கின்றன. இப்படிச் சொல்வதால் நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த சம்பிரதாயங்களை மதிக்காதீர்கள் என்று சொல்லவில்லை, அதற்கு எதிராகச் செயற்படுங்கள் என்று தூண்டவில்லை. செய்வது எதுவாக இருந்தாலும் அர்தத்தை உணர்ந்து உணர்ச்சிகளை அனுபவித்து முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். சிலர் என்னிடம் வந்து என் வீட்டில் தனிப் பூஜை அறை இல்லை, பக்கத்தில் டமார் டாமார் என்று சத்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொழிற்சாலை இருகின்றது. சதா குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றன, மனைவி நை நை என்று நச்சரித்துக் கொண்டே இருக்கின்றாள் அதனால் பிராத்தனை செய்ய என்னால் முடியவில்லை என்று சொல்கின்றாள். பிராத்தனை செய்யவோ, தியானம் செய்யவோ அமைதி நமது உடம்புக்கு வெளியே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அமைதி நமக்கு உள்ளே இருந்தால் மந்திரங்களையும், சுலோகங்களையும் சொல்லாமற் கூடப் பிராத்தனை செய்யவியலும், எப்படி?. அது ஒரு பொட்டல் வெளிப் பிரதேசம், வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அங்கே முருகப் பெருமானுக்குக் கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. உச்சி வெயிலில் செங்கற்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தான். அங்கே வந்த சாமியார் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்த ஒருவனை அழைத்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அதற்கு அவன் ”பார்த்தால் தெரியவில்லையா? கல் சுமந்து கொண்டிருக்கிறேன், என்றான். இதே கேள்வியைப் பக்கத்தில் இருந்த இன்னொருவனிடம் கேட்டார் சாமியார்” அதற்கு இரண்டாமவன் ”நான் என் குடும்பத்திற்கான உணவைச் சம்பாத்திக் கொண்டிருக்கின்றேன்”, என்றான். சாமியார் இன்னொருவனிடமும் “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு மூன்றாமவன் “நான் தெய்வத்திற்குக் கோயில் கட்டும் புண்ணியமான காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றேன் என்றான்” . நம் எல்லோருக்குமே கோயில் கட்டும் வேலை கிடைத்து விடாது. ஆனால் செய்யும் வேலை எதுவானாலும் கோயில் கட்டும் வேலையைப் போல முழு ஈடுபாட்டுடன் லயித்துச் செய்தால் அதுவே சிறந்த பிராத்தனைதான்.
அவர்களுக்கு அது ஹாரஸ்கோப்
நமது வாழ்க்கை பல நேரம் பயத்தில்தான் கரைகிறது. வீட்டில் இருக்கும் இருட்டை விரட்டுவதற்காக ஒருவன் வாழி வாழியாக இருட்டைக் கொண்டுவந்து வீதியில் கொட்டிக் கொண்டிருந்தானாம். எத்தனை ஆண்டுகள் செய்தாலும் இருட்டைப் சுற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் இருட்டை வெளியேற்ற முடியாது. ஒளியில்லாமை என்பதுதான் இருட்டு. அதனால் ஒரு சின்ன விளக்கை ஏற்றி வைத்தால் இருட்டி ஓடுவிடும். பயமும் இருட்டு மாதிரித்தான். அன்பு இல்லாமைதான் பயம். அன்பு என்ற விளக்கை ஏற்றி வைத்தால் பயம் மறைந்து விடும். புரியவில்லை என்றால் அன்பின் ஒருவகையான காதலை எடுத்துக் கொள்ளுங்கள். காதல் எப்படி மலர்கிறது? ”ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கையில்தானே காதல் பிறக்கின்றது” ஒரு பெண்ணின் மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணிற்கோ நம்பிக்கை வராவிட்டால் அங்கே காதல் என்ற அன்பு கிடையாது. சுபி இலக்கியத்தில் வரும் முல்லா நசருதீனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால் இந்தத் தத்துவம் உங்களுக்குச் சுலபமாக விளங்கக் கூடும். முல்லா நசருதீனுக்கு அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. அன்றிரவு நதியைக் கடந்து மறுகரைக்கு முல்லா நசருதீனும் அவரது இளம் மனைவியும் உறவினர்களோடு படகில் போய்க்கொண்டுருந்தார்கள். அப்போது தீடிரென்று புயல் அடித்தது, நதியிலே வெள்ளம் கரை புரண்டது. இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு பேயாட்டம் ஆடியது, மணப்பெண் உட்பட படகில் இருந்த அத்தனை பேரையும் மரணபயம் தொற்றிக்கொண்டது. ஆனால் முல்லா மட்டும் பயம் ஏதும் இல்லாமல் இருந்தார். இதைப் பார்த்த புதுமணப்பெண் “உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்று கணவரை ஆச்சரியத்தோடு கேட்டாள். அதற்கு முல்லா நசருதீன் பதில் சொல்லாமல் தன் இடுப்பிலே சொருகியிருந்த கத்தியை எடுத்து மனைவியின் குரல்வளையைக் குத்துவது போல் ஓங்கினார், மனைவியில் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அப்போது முல்லா நசருதீன் தன் மனைவியைப் பார்த்து ”கத்தி என்றால் உனக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டார் அதற்கு அவரது மனைவி “கத்தி வேண்டும் என்றால் அபாயகரமாக இருக்கலாம். ஆனால் அதைப் பிடித்துக் கொண்டுருப்பவர் என்னிடம் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் என் கணவர், அதனால் நான் பயப்படவில்லை என்றார். அதேபோலத்தான் இந்த அலைகள் வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம் ஆனால் இதை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் அல்லா அன்புமயமானவர், அதனால் எனக்குப் பயம் இல்லை என்றாராம் முல்லா நசருதீன். முல்லா நசருதீனுக்கு அல்லாவின் மீது நம்பிக்கை இருந்தது அதனால் அன்பு இருந்தது. அல்லா மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் அன்பும் இருந்திருக்காது. அன்பு இல்லையென்றால் படகில் பயணித்த மற்றவர்களைப் போல முல்லா நசருதீனும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பார். இதே உண்மையை நம் வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கலாம். நமக்குப் பயம் ஏற்படுகின்றது என்றால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள். நான் கடவுளுக்குப் பயந்தவன் என்று பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இது அபத்தமானது. கடவுளிடம் நாம் செலுத்தவேண்டியது அன்புதானே தவிர பயம் இல்லை. நமது உபநிஷத்துக்கள் சொல்லும் மிகப்பெரிய விஷயமே பயம் இல்லாமல் இரு என்றுதான் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கின்றார். சிலர் தங்களின் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு எனக்கு மரணம் எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள ஜோசியர் மாறி ஜோசியராகப் போய்க்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் ஹாரஸ்ஹோப் ஜாதகம் என்பது ஹாரஸ்ஹோப். இம்மாதிரி நபர்கள் வாழும் போது என்ன செய்யலாம் என்பதை விட எந்த நேரம் இறந்து விடுவோமோ என்ற பீதியிலேயே உருகி உருக்குலைந்து கொண்டிருப்பார்கள். மரணபயம் பற்றித் தாகூர் சொல்லும் போது நீ இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காகத் உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும். அதனால் நம்பிக்கையோடிரு என்கிறார். பயப்படுபவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான் சொல்ல முடியும். எதிர்காலத்தைப் பற்றித் திட்டம் இடுங்கள், தவறில்லை ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற கற்பனைகளில் பயப்படுவதால் உங்கள் மகிழ்ச்சிதான் பாழாகும். பணம் திருட்டுப் போகாமல் இருக்க அதை எங்கே எப்படி வைப்பது மீறித் திருட்டுப் போனால் இன்சூரன்ஸ் மூலம் எப்படிப் பாதுகாப்புப் பெறுவது என்று திட்டமிடுங்கள். இதில் எதையும் செய்யாமல் சும்மா நின்று பயப்படுவதில் அர்த்தம் இல்லை. எது சந்தோஷம் ஒன்று சுபி இலக்கியத்தின் முக்கிய கதாபாத்திரமான முல்லா நசருதீன் ஒரு நாள் சோகமாக உட்கார்ந்து இருந்தான். முல்லாவைப் பார்க்க வந்திருந்த நெருங்கிய சினேகிதன் ”ஏன் சோகமாக இருகிறாய்” என்று கேட்க, முல்லா அழ ஆரம்பித்து விட்டார். ”என் மாமா தன் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் என் பெயரிற்கு எழுதுவிட்டு போனமாசம் இறந்து போனார். அதை நினைத்தேன் அழுகிறேன்” என்றார் முல்லா. ”உன் மாமாவை எனக்குத் தெரியும் அவரிற்கு 80 வயதாயிற்றே, மரணம் இயற்கையானதுதானே. அதற்கென்ன இத்தனை பெரிய சோகம்? உண்மையில் பார்த்தால் அவரது திரண்ட சொத்துக் கிடைத்தற்காக நீ சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும்.” என்று முல்லாவிற்கு நண்பன் ஆறுதல் சொல்ல முயன்றான். முல்லாவோ “என் சோகம் உனக்குத் தெரியாது நண்பா, போனவாரம் தான் என் சித்தப்பா என் பெயரில் ஒரு இலட்ச ரூபா சொத்துக்களை எழுதிவிட்டு செத்துப் போனார்” என்று சொல்லிவிட்டு இன்னும் சத்தமாக அழத்தொடங்கினான். நண்பனுக்குக் குழப்பம். ”உன் சித்தப்பாவையும் எனக்குத் தெரியுமே, அவரிற்கு 85 வயது. பணம் வந்ததை நினைத்து சந்தோஷப் படாமல் முட்டாளைப் போல இப்படி அழுகிறாயே என்று நண்பன் எரிச்சலுடன் கேட்டான். ”என்சோகம் இன்னும் அதிகம். எனது 100 வயதுத் தாத்தா இரண்டு இலட்ச ரூபாயிற்கு மேலே என் பெயரில் சொத்துக்களை எழுதிவிட்டு நேற்று இறந்துவிட்டார்” என்றார் முல்லா. வெறுத்துப் போன நண்பன் ”எனக்குப் புரியவில்லை. நீ ஏந்தான் அழுகிறாய்” என்றான். முல்லா கண்களைத் துடைத்தபடியோ சொன்னார் ”செல்வந்தர்களான என் மாமா, சித்தப்பா, தாத்தா மூவருமே இறந்து விட்டார்கள். இனிமேல் என் பெயரில் சொத்து எழுதிவிட்டுச் சாக உறவினர்கள் யாருமே இல்லையே”. மிக முக்கியமாக ஒரு கருத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது. சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கின்றது. எல்லைகளை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் விரிவடையச் செய்துகொண்டுபோனால் எந்த சந்தோஷமும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது. ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ அதேமாதிரி இதுபோலத் திருப்தியற்ற மனம் உடையவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காது. அவர்களின் மனம் சோக மயமாகவே இருக்கும். தன்னிடம் இல்லாததை நினைத்தே கஷ்டப்படும். வாழியில் உள்ள ஓட்டை அடைத்து விட்டால் ஓரளவு தண்ணீர் ஊற்றியதும் நிரம்பி விடுவது போல் மனதில் இருக்கும் கரும்புள்ளிகளை Blind Spots அழித்து விட்டால் மகிழ்ச்சி நிரம்பும். இது கிடைத்தால்தான் எனது மனது சந்தோஷப்படும் என்று மண்டைக்குள் சில விஷயங்களை நம் மனது ஏற்றுக் கொள்கின்றது. அந்த இதுகள்தான் மனதின் கரும் புள்ளிகள். சில இளைஞர்கள் சந்தோஷம் என்றால் அமெரிக்கா என்று அர்தம் பண்ணிக் கொள்வதையும் நாம் பார்கிறோம். அவர்களைப் பொறுத்தவரையில் அமெரிக்கா போக விசா கிடைத்தால் அதுதான் சந்தோஷம். அதாவது விசா கிடைக்கும் வரை நான் சந்தோஷப் படுவதை ஒத்தி வைத்திருக்கிறேன் என்று அர்த்தம். ஆம் வருங்காலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயம் மட்டுமே சந்தோஷம் கொடுக்கப் போகின்றது என்று சொல்லிக் கொண்டு நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களை ஓட்டை வாளியைப் போல இவர்கள் கீழே விட்டுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட Blind Spot மன் உடைய இளைஞர்களுக்கு அமெரிக்கா போக விசா கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்கமுடியாது. விசா கிடைத்த மறுகணமே அமெரிக்காவில் வேலை கிடைத்தால்தான் என் மனது சந்தோஷப்படும் என்று ஏதாவது இன்னொரு காரணத்தைச் சொல்லி இவர்களே தமது சந்தோஷத்தைத் ஒத்திப் போட்டு விடுவார்கள். சரி அமெரிக்காவில் வேலையும் கிடைத்து விட்டது, அப்போதாவது சந்தோஷப்படுவார்களா?, கிறீன்கார்ட் கிடைக்கும்வரை சந்தோஷம் இல்லை என்பார்கள். அதுவும் கிடைத்துவிட்டால் அமெரிக்க வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. அப்பா, அம்மா, அக்கா, தங்கை, மாமா, உறவினர்கள், உற்றார்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரும் இருக்கும் இந்தியாவில்தான் சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லி மீண்டும் தங்கள் சந்தோஷத்தை ஒத்திப் போட்டு விடுவார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்பது கடைகளில் விற்பனையாகிறது என்ற கருத்து உடையவர்கள். ஆம் அவர்களுக்கு சிகரெட், மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப் பார்க்கும் போது ரமண மகரிஷி சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகின்றது. வசதியான மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாயிற்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் ருசியில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறு ரோட்டில் வந்து தனக்குப் பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள் கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம். ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டு தெருவோர எச்சில் இலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால் அதில் இருந்த அத்தனை சுவையும் வற்றிப் போய் கல் போல ஆகியிருந்தது, ஆனாலும் அது தெரியாத நாய் அந்த எலும்பைக் கஷ்டப்படுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருச்சித்த நாயோ ரத்தம் எலும்பில் இருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ”மட நாயே! அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் இரத்தம் எலும்பில் இருந்து வெளிப்படும் இரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் இரத்தம்” .என்று சொல்ல வழிப்போக்கனைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது ”இத்தனை நாள்வரை இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும் வரை என் நாக்கு இரத்தம் சுவைத்ததில்லை. இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் இரத்ததின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே இந்த இரத்தம் எலும்புத் துண்டில் இருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது” என்று சொல்லி காய்ந்த எலும்பை மேலும் ஆவேசமாகக் கடிக்க ஆரம்பித்தது.
தன்னையே அழித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத் தேடி ஓடும் இப்படிப்பட்ட
மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dogs Logic என்று சொல்கின்றோம்.
சிந்தித்துப் பாருங்கள் … காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷத்துக்கும் சிகரட் மது பொன்ற பொருட்களால்
தன்னையே அழித்துக் கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.