சக்திமாலை
சக்திமாலையைச் சிறுபிள்ளைகள் உட்பட ஆண், பெண் அனைவரும் வயது வரம்பு இன்றி அணியலாம் சக்திமாலையை அணிந்த பக்தர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே ஐந்து அல்லது மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டு மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை அடைய வேண்டும்.
ஆடவருக்கு ஆண்குருவும், மகளிர்க்குப் பெண் குருவும் தான் மாலை அணிவிக்க வேண்டும்.
மாலை அணிபவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள வார வழிபாட்டு மன்றத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள மன்றத்திலோ தான் மாலை அணிய வேண்டும்.
மாலை அணிந்து விரதமிருந்து சித்தர்பீடம் வந்து திரும்பப் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு தடையல்ல.
நன்மைகள்
அருள்மிகு அன்னை ஆதிபராசக்தி தன் அருள்வாக்கில், "அன்னையை, மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி, சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து, மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை வலம் வந்து அன்னையிடம் சரணமடைந்தால், நினைத்தபலன் அத்தனையும் நிறைவேறும்" என்று அருளி உள்ளாள்.
உடல் நலமின்றி வாடுபவர்கள்நோய் நீங்கி நலம் பெறுவார்கள்.அன்னை ஊழ்வினையை வேரறுத்து மன உறுதியையும், அமைதியையும் தருவாள்.
திருமணம் ஆகாதவர்களுக்குக் குறை நீங்கி விரைவில் திருமணம் நடைபெரும்.
மகப்பேறின்றி வேதனைப் படும் குடும்பத்தில் குழந்தைச் செல்வம் பெருகும்.
கல்வி, அறிவு மேன்மையோடு பெருகும்.
பணிபுரிவோர்க்கு நற்பதவி, உயர்வு தந்து மேன்மை அடையச் செய்வாள்.
வியாபாரம் வளர்ந்து நியாயமான இலாபம் கிடைக்கும்.
குடும்பத் தொல்லைகளைத் தீர்த்து மன அமைதியையும், செல்வச் செழிப்பினையும் தருவாள்.
வேலையின்றி வேதனைப் படுவோர்க்கு வேலை வாய்ப்புக்கிட்டும்.
விவசாயத்தில் வளம் பெருகும். பக்தியிலே இணைந்து ஆன்மிகத்தில்; ஈடுபாடு உண்டாகும்.
நம்மைத் தீயவரிடம் இருந்து விலக்கி, நாம் நல்ல ஒழுக்கத்தோடு வாழ அன்னை வழி வகுப்பாள்.
விரத நாட்களில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்
மாலை அணிபவர்களும், அணிந்தவர்களும் (பணிக்குச் செல்பவர்கள் உட்பட) சிவப்பு நிற உடைகள் மட்டுமே அணியவேண்டும். ஒரு வேளை உணவை தவிர்க்க வேண்டும். விரத நாட்களில் ஐம்புலன்களை அடக்கி, மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச்செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி இறைவியை வழிபடுதல் வேண்டும். உறங்கும்போது செவ்வாடையின் மீதே படுத்து உறங்க வேண்டும். காலையில் தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருப் படத்தின்முன், அவளுடைய திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம். மாலை வேளைகளில் தவறாமல் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்திற்கு சென்று கூட்டுவழிபாடு செய்தல் வேண்டும். மாலை அணிந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது முதலில் "ஓம் சக்தி" என்று சொல்லுதல் வேண்டும்.
மேலும் விரங்களுக்கு அருகாமையில் உள்ள மன்றத்திலோ அல்லது சக்தி பீடத்திலோ நாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment