January 16, 2010

அழகுக்கு எலுமிச்சை

நம் உடல் உபாதைகளுக்கான மருந்தையும் தீர்வையும் இயற்கையே வைத்திருக்கிறது. ஒவ்வொரு காய்கறியும் கனி வகையும் இயற்கையின் அருங்கொடை. அவற்றைப் புறக்கணிக்காமல் உண்கிறவர்களுக்கு வாழ்வே வசந்தம்.

சிதைந்த உயிரணுக்களை புதிதாக உருவாக்கும் திறன் எலுமிச்சைக்கு உண்டு. பிராண சக்தியை மீட்டுக் கொடுக்கும் ஆற்றல் இதில் அதிகம் என்பதால் சோர்வாக உணரும் போது எலுமிச்சம்பழச் சாற்றைக் குடிக்கலாம். சுடச்சுட வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வந்தால் மந்தமான வயிறு மற்றும் வாயுத் தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலைக் கிடைக்கும்.

அஜீரணம் வயிற்றின் தனிப்பட்டப் பிரச்சனை மட்டுமல்ல ...அது ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தையும் பாதிக்கும். குறிப்பாக புற அழகை அது கடுமையாகத் தாக்கும். முகத்தில் அதிகம் பருக்கள், வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோருக்கு அஜீரணமும் மலச்சிக்கலும் இருக்க வாய்ப்புண்டு. இவர்கள், உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் வெந்நீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து அருந்தி வர அஜீரணம் காணாமல் போகும். அழகும் மீண்டு வரும்.

தவிர, மலச்சிக்கலுக்கும் எலுமிச்சை அருமருந்து. எலுமிச்சையின் தோலை மெலிதாக நீக்கிவிட்டு உள் வெள்ளைத் தோலுடன் அப்படியே ஒரு பாட்டில் தண்ணீரில் போட்டு இறுக மூடி இரவு முழுவதும் ஊறவிடவும். அதிகாலை எழுந்தவுடன் முதல் வேலையாக பாட்டிலை நன்றாக குலுக்கி தண்ணீரை வடித்து குடிக்கவும். தினமும் இதே போல் செய்து வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...