* தினமும் குளிக்கும் முன்பு பாலேடை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் வைத்திருந்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகும், இளமையுடனும் இருக்கும்.
* முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெயைத் தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.
* கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணைய் தேய்த்து வந்தால் முடிகள் பளிச்சென்று கருமையாக இருக்கும்.
* கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேயுங்கள். உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக மாறிவிடும்.
வெதுவெதுப்பான பாலில் நனைத்த காட்டன் துணியைக் கண்களில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் போகும்.
* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.
* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
* குளிர் காலங்களில், சருமத்தில் தங்கி, பொலிவிழக்க செய்யும் இறந்த செல்களை நீக்குவது மிகவும் முக்கியம்.
இதற்கு ஒரு ஸ்பூன் ரவையுடன், இரண்டு மடங்கு கொண்டைக்கடலை மாவு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதனால், இறந்த செல்கள் நீங்கி, முகம் பளபளப்புடன் திகழும்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...

-
இன்று காலை,டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் ...
-
1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை. 2. அ...
-
ஆழந்து மூச்சு விடுங்கள் – கே.எஸ்.சுப்ரமணி ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்...
No comments:
Post a Comment