November 18, 2012

ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம் : இளமை, ஆரோக்கியம் நிச்சயம்!


தினசரி ஒரு ஆப்பிள்;டாக்டர் வேண்டாம் என்பது ஆங்கில அறிவுரை.அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான்.எனினும்,இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:

வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

தன்னம்பிக்கை practice



உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை
வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே…
உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது?

அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்!

ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை!

நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது…

அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்கும் இடையே பரஸ்பர கருத்தொற்றுமை இருக்கிறதா? என்பதைக் கண்டறிவேன்.

ஆ. பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமானவர் மாதிரி அரட்டையடிக்கத் தொடங்கிவிடுவேன்..!

இ. அவர் என்னிடம் முதலில் பேச மாட்டாரா? என்று காத்திருப்பேன்!
சொந்தபந்தங்களுடன் உறவை பேணுவதில் நீங்கள் எப்படி?

அ. எப்போதாவது கருத்துவேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுவதுபோல தோன்றினால் நான் என் நிலையை ஆய்வு செய்து தவறுகள் இருந்தால் அதற்காக மன்னிப்புக் கோரி உறவு முறையை மேம்படுத்த முயற்சிப்பேன்.

ஆ. உறவுமுறை நன்றாகவே இருக்கிறது..! ஆனாலும் சில பிரச்சினைகள் வந்து போகின்றன.

இ. உறவுகள் என்றாலே தொல்லையும் துயரமும்தான்..! அவர்கள் என்னை புரிந்து நடந்து கொள்ளவே மாட்டார்கள்!

உங்கள் முகத்தில் திடீரென்று முகப்பரு தோன்றினால் என்ன செய்வீர்கள்..?

அ. முகப்பரு மருந்து தடவுவேன். இன்றைய முகப்பரு நாளைக்கு மறைந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அடுத்த வேலையில் கவனம் செலுத்துவேன்.!

ஆ. முகப்பருவைக் கண்டதும் உடனே நல்ல டாக்டரை நாடி செல்வேன். டாக்டரிடம் செல்வதை தள்ளிப்போட மாட்டேன்.

இ. எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு, அன்றைய அலுவலை ஒத்திப்போட்டுவிட்டு கவலையில் ஆழ்ந்து விடுவேன்!

நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத துன்பத்தில் மாட்டிக்கொண்டால்…?

அ. முதல்ஆளாக ஓடிப்போய் அவருக்கு உதவி செய்வேன்..!

ஆ. அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கேட்டறிந்து உதவி செய்வேன்!

இ. உதவி செய்ய எனக்குத் தெரிந்த இன்னொரு நண்பரை அனுப்பி வைப்பேன்..!
உங்களது வாழ்க்கை எப்படி செல்கிறது?

அ. எனக்கு உண்மையான நண்பர்கள் அதிகம். அதனால் வாழ்க்கை ஆனந்தமாய் கழிகிறது..!

ஆ. ஏதோ இருக்கிறேன். நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கங்கே தனித்தனியாக இருக்கிறார்கள். எனக்கு ஏற்படும் கஷ்டநஷ்டத்தை கண்டுகொள்ள ஆளில்லை.

இ. இது என்ன வாழ்க்கை. ஒரு சந்தோஷமும் இல்லை. வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது!
ஒரு குழுவை வழிநடத்தும் தலைவராக உங்களை தேர்வு செய்தால்…?

அ. உடனடியாக ஒத்துக்கொள்வேன்!
ஆ. நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டறிவேன். அதன்பிறகு தலைமை தாங்குவது பற்றி முடிவு செய்வேன்.
இ. நான் என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பேன். தலைமை தாங்க யோசிப்பேன்!

உங்கள் பஸ் பயணம் திடீரென்று ரத்தாகிறது, தனியார் பஸ் நிறுவனம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. என்ன செய்வீர்கள்…?
அ. கம்பெனி மேலாளரை சந்தித்து, இழப்பீடு தர வற்புறுத்துவேன்.

ஆ. என் கோரிக்கையை அமைதியாகத் திரும்பத் திரும்ப எடுத்துரைப்பேன்!

இ. திரும்ப திரும்ப கேட்பதால் பயனில்லையென்று கருதி, இன்னொரு பஸ்சில் ஏறி வீட்டிற்கு போய்விடுவேன்.
உங்கள் பதில்களில் `அ’ விடைகள் அதிகமாக இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்தான். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு! எப்படிப்பட்ட சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமாக்கி நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

அதிக கேள்விகளுக்கு விடை ஆ-வை தேர்வு செய்திருந்தால் நீங்கள் எதுவும் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவீர்கள். சிறிது சஞ்சலங்கள் தோன்றினாலும் சூழ்நிலையை சமாளிக்கும் வல்லமை உங்களிடம் இருக்கும்.
பதில் `இ’ உங்கள் விடைகளில் மிகுந்திருந்தால் நீங்கள் நம்பிக்கை குறைவானவர். உங்கள் வாழ்வியல் முறைகளை சீர்திருத்துவதோடு மன தைரியத்துடன் செயல்படத் தொடங்குங்கள்.

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள்..




“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை.
தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.
நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;
1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.
1. தன்னம்பிக்கை (Self Confidence)
“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.
“நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” – என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.
“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!
2.ஆர்வம் (Interest)
ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.
3. செயல் ஊக்கம் (Motivation)
இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.
உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?
தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.
4. விழிப்புணர்வு (Awareness)
மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.
உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் – வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.
5. புரிந்துகொள்ளல் (Understanding)
புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் – தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.
6. உடல் ஆரோக்கியம் (Health)
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
மூளைச் சோர்வை தடுக்கும்
அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.
ஊறவைத்த பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்
அக்ரூட், திராட்சை
அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மூளைக்கு சுறுசுறுப்பு
நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.
பசலைக்கீரை
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்
நெல்லிக்காய்
மாணவர்கள் நெல்லிக்காய் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும்.


இளமையோடு வாழ 7 இரகசியங்கள்


நாம் அனைவரும் விரும்புவது எல்லாம் நீண்டநாள் சந்தோசமாக இளமையோடு வாழவேண்டும், ஆனால் சுகமில்லாமலோ அல்லது பலகீனமாகவோ இருந்தால் எப்படி சந்தோசமாக வாழ முடியும். சரி விஷயத்துக்கு வருவோம், நம்முடைய அழகான சந்தோச வாழ்க்கைக்கான 7 இரகசியங்களை நிபுனர்கள் விளக்கியுள்ளார்கள், அவை என்னென்ன பார்க்கலாம்.
நம்முடைய உடலில் ஒரு சுருக்கம் அல்லது வெள்ளை முடி ஏற்பட்டால் அன்ன பன்னுவோம், நம் பெற்றோரை (அவர்களுடைய Genes) திட்டிகொண்டு மார்கெட்டில் புதிதாக அறிமுகம் ஆகியூள்ள கிரிம் என்னன்னு பாத்துவாங்கி பயன்படுத்துவோம். சில ஆளுங்க அதுக்கு மேல போயி பிளாஸ்டிக் சர்ஜரி பன்னி அழக மெயின்டைன் பன்ன try பன்னுவாங்க.
ஆனால் முதுமை தோற்றத்துக்காக மரபனுக்களையோ, மருத்துவரையோ கடிந்துகொள்வதில் அர்த்தமில்லை. உண்மையான காரணம் நாம் உண்ணும் உணவிலும், எப்படி மனஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்து வாழ்கிறோம் என்பதிலும் உள்ளது.
சமீபத்திய ஆய்வு படி, முதுமை தோற்றத்துக்கான காரணமாக,
நாம் எப்படி உடற்பயிற்சி செய்கிறோம்
நாம் எப்படி சாப்பிடுகின்றோம் (எவ்வகையான உணவுகள்)
நாம் எப்படி சந்தர்ப சூழ்நிலைகளை சமாளிக்கின்றொம் என்பதை பொருத்தே அமைகின்றது என்கிறது.
அரோக்கியமான வாழ்விற்கும் மற்றும் முதுமை தோற்றத்தை தடுக்கும் 7 இரகசியங்களை வரையறுத்துள்ளனர்..
1. நல்ல அரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க. (எவ்வளவு சப்பிடுகின்றோமோ அதற்கான உழைப்பு இருந்தால் போதுமானது.)
2. அளவுக்கு அதிகாம மருந்து மாத்திரைகளை எடுக்காதிர்கள் (உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்)
3. தினம் அரைகரன்டி அளவு கறுவா (கருவாப்பட்டை / கறுவாப்பட்டை / இலவங்கப்பட்டை) எடுத்து கொள்ளுங்கள் என்னா இதில் பொதுமான இன்சுலின் உள்ளது மற்றும் தேவையற்ற சக்கரையை நீக்குகிறது.
4. நல்லா தூங்குங்க உடம்பை அரோக்கியமா சிலிம்மா வச்சுக்கோங்க. (7 – 8 மணி / நாள் தூக்கம் அவசியம்)
5. தினம் தோறும் உடற்பயிற்சி செய்யுங்க. (நடக்குறது கூட ஒரு உடற்பயிற்சி தான்.)
6. ஃபைபர் காரணி உணவுகளை சாப்பிடுங்க குறிப்பாக ஓட்ஸ் வகைகள்
7. எப்போதும் நண்பர்கள் கூட சந்தோசமாக இருங்க.
அவ்வளவுதான் முயற்சி பன்னலாமே…..

March 15, 2012

“”சாவை சாவு தீர்மானிக்கட்டும்
உன் வாழ்வை நீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைக்கும் தான் நெருப்பு
சுற்றும் வரைக்கும் தான் புவி
போராடும் வரைக்கும் தான் மனிதன்
நீ மனிதனாக இருந்தால் போராடு
போராடி வெற்றி கொள்”

February 18, 2012

வாழ்க்கை தத்துவம்

இந்த உலகில் மகிழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல எந்த நேரமும் சோகத்துடன் இருக்கிறார்கள். இவர்களின் சிந்தனையும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. எதிர்மறையாகச் சிந்திபவர்கள் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய வெகுநாட்கள் ஆகும். சிலர் மட்டுமே சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அவர்கள் எதிர்மறையான எண்ணங்களை ஆக்கமுள்ளதாக மாற்றிக் கொண்டதே அதற்குக் காரணம்.   `ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறியவுடன் நாம் ஆசைபடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. வேறொன்றின் மீது நம் ஆசை திரும்புகிறது. நடந்து செல்லும்போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை, அது நிறைவேறியவுடன் `பைக்’ மீது திரும்புகிறது. அது நிறைவேறியவுடன் கார் என இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது நம்மிடம் இருக்கின்ற பொருள்களைக் கொண்டு திருப்தியடைகிறோமோ, அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தோன்றும்.   வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. சில நேரம் வெற்றி கிடைக்கும். சில நேரம் தோல்வி கிடைக்கும். தோல்வியடையும் சமயங்களில், `நான் எப்போதும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று புலம்பி அடுத்தகட்ட முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதற்குக் காரணம் `நம்மால் முடியாது’ என்ற எண்ணமே. முதலில் அந்த எண்ணத்தைத் தூக்கி போட்டுவிட்டு, உங்களின் கடந்த கால வெற்றிகளை ஒரு தாளில் எழுதிக்கொண்டே வாருங்கள். நீங்கள் பெற்ற வெற்றியின் சாதனைபட்டியல் உங்களை அடுத்த வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.   ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் உயர்ந்தவராக இருப்பார். அழகு, படிப்பு, குணம், திறமை, செல்வம் இதில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவரிடம் இருக்கலாம். அதற்காக அந்தத் தகுதி நம்மிடம் இல்லையே என மற்றவரை ஒப்பிட்டு பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நாமே சிறந்தவர் என உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். உங்களுடைய சாதனைகள், வெற்றிகள் சிறியதாக இருந்தாலும் அதை எண்ணி பெருமைபட வேண்டும். அதற்காக தற்பெருமைடன் திரியக் கூடாது.   வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் சந்தோஷமான சம்பவங்களும் உண்டு, கசப்பான சம்பவங்களும் உண்டு. கசப்பை ஜீரணித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. `எனக்கு மட்டும் ஏன் எல்லாம் தப்பாகவே நடக்கிறது?’ என்று எண்ணி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பலர். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அதை புரிந்து கொண்டு வெற்றிக்கான தேடலைத் தொடங்குங்கள்.   மற்றவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷபடுபவர்களை விட, பொறாமைபடுபவர்களே அதிகம். ஒருவரை அழிக்கும் மிகபெரிய ஆயுதம் அவரிடம் உள்ள பொறாமைக் குணம்தான். ஒருவருடைய வெற்றியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரை பார்த்து பொறாமைபடத் தேவையில்லை. அவரை பாராட்டி ஊக்கபடுத்துவதன் முலம் நாமும் முன்னேற முடியும். இப்படிச் செய்வதால் அவர் பெற்ற வெற்றி ஒருநாள் உங்கள் பக்கமும் திரும்பும். அதேநேரம் உங்களைவிடவும் அதிகமானோர் இன்னும் மேலே வர முடியாமல் இருக்கின்றனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.   ஒருவருடைய வெற்றியை பார்த்து பொறாமைபடுவதை விட, அந்த வெற்றியை நாமும் அடைய முயற்சி செய்வது தான் சரியான வழி. அனுபவம் இல்லாமல் திடீரென ஒரு செயலில் இறங்கினால் தோல்விதான் கிடைக்கும். எனவே, பிறருடைய வெற்றியில் பங்கு கொண்டு, அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், சரியான வாய்புகள் வரும்போது வெற்றியை அடையலாம். ஒரே குறிக்கோளை அடைய எண்ணி இருவர் முயற்சி செய்யும்போது ஒருவரை மற்றவர் ஊக்கபடுத்தினால் வெற்றியின் இலக்கை விரைவில் அடையலாம்.   எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருபவர்கள், தன்னை பற்றி ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் நல்ல விமர்சனங்களை உருவாக்கக் கூடிய வாய்புகளை அவர்கள் இழக்கக் கூடும். எனவே, எதிர்மறையான விமர்சனங்களை எண்ணி நேரத்தை வீணாக்காமல், நல்ல விமர்சனங்களை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிடுங்கள். பிறருடன் ஆக்கபூர்வமாக பேசுவதே உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை பிறரிடம் ஏற்படுத்துவதுடன், நீங்களே உங்களை பற்றி உயர்வாக உணரவும் வழிவகுக்கும்.   எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்ய அர்பணிப்பும், தெளிவான குறிக்கோளும் அவசியம். முதலில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை அடைவதற்கான வழிகளைக் கண்டுபிடிங்கள். அதற்காக உங்களின் சக்தி முழுவதையும் செலவழிங்கள். உங்களுடைய வாழ்க்கையையே அர்பணியுங்கள். அந்த செயலில் தோற்றால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதையும் தாமதிக்காமல் உடனே செய்யுங்கள்.   பிறருடைய வெற்றியில் இருந்தோ அல்லது தோல்வியில் இருந்தோ உங்களுக்குத் தேவையானதை கற்றுக் கொள்ளுங்கள். அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? எந்த விஷயங்களை புதிதாக சேர்த்துக் கொண்டார்? எந்த விஷயங்களை தம்மிடம் இருந்து விலக்கி வைத்தார்? போன்ற விஷயங்களை வெற்றி பெற்றவரிடம் இருந்தும், என்ன காரணத்திற்காகத் தோல்வியைத் தழுவினார் என்பதை தோல்வி அடைந்தவரிடம் இருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்.

Intellect vs. Intelligence by Swami Parthasarathy

Vedanta Academy founded by Swami Parthasarathy in India

அழகு குறிப்பு – முகத்திற்கு பொலிவு தரும் கன்னங்களுக்கு . . .

முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். உடல் ஒல்லியாக இருந்தாலும் கன்னங்கள் கொ ஞ்சம் புஷ்டியாக இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோ ற்றத்தையே கெடுத்து விடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உண வு முறை அவசியம் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் அறிவு ரையாகும்.

பள பளக்கும் பட்டுக் கன்னம்

தினமும் அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தோடு கன்னங்கள் புஷ்டிக்கும் அவசியமாகிறது. கா லையில் எழுந்து சிறிதளவு வெண் ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற் கு பேசியல் போட கன்னம் பள பள ப்பாக மாறுவதோடு குண்டாகும். மித மான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றிவை த் திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும்.
சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச் சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்க ளை பிடித்து கிள்ளத் தூண்டும். கற் றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவ தோடு பளபளப்பைம் தரும்.

ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும். அதோடு தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர புசு புசு கன்னம் கிடைக்கும்.

மஞ்சள் அதிகம் போடுவதை சற்று குறைத்துக் கொள்ளவது கன்னத் தின் அழகை வறட்சியாக்குவதை தடுக்கும்.

ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப் பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

சத்தான உணவு, உறக்கம்

பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண் ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரை கள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது
நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங் கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக் கும்.
AD

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...