இதுதான் தன்னம்பிக்கை…
“தன்னம்பிக்கை உள்ள மனிதனின் வளர்ச்சியை யாரேனும் தடை செய்தால்,
ஏன்? தடைசெய்ய நினைத்தால்கூட போதும் அவன் முன்பைவிட மும்மடங்கு ஆற்றலோடு செயல்படத் தொடங்குவான்.
அவன் உள்ளத்தில் ஆற்றலின் ஊற்றுகள் பீறிட்டு எழும்பத் தொடங்கிவிடும்.
இதுவரை நிகழ்த்தாத சாதனைகளை எல்லாம் அவன் நிகழ்த்தியே தீருவான்”
தன்னம்பிக்கை எனும் கவசம் அணிந்து…
“நமது முயற்சிக்கு ஏற்ப நாம் முன்னேறலாம்” என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மையும் ஆகும்.
முயற்சிக்கும்கூட ஒரு எல்லையுண்டு என்று ஒரு காலத்தில் எல்லை வகுத்தார்கள். வானமே நமது எல்லை என்று தொடமுடியாத வானத்தை ஒரு இலட்சியத்தின் எல்லையாகக் கூறினார்கள். ஆனால் Sky is the limit என்று இருந்த நிலை மாறி இன்று வானம்கூட நீண்ட காலத்திற்கு நமது எல்லையாக - வரையறையாக இருக்க முடியாது (Sky is no longer the limit) என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முயற்சி உள்ளவன் வானத்தைக் கடந்தும் அவன் தன் வெற்றியை ஈட்டுவான். முயற்சிக்கு ஓர்எல்லை என்பதே கிடையாது என்ற கருத்து அண்மைக் காலத்தில் வளர்ந்துள்ளது. இத்தகைய முயற்சிக்குத் தடை நேராமல் கவசம்போல் அமைவதுதான் தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கை என்பது உண்மை என்ற மூல வித்துக்கு மேலுறைபோல் அமைவது. தன்னம்பிக்கை உள்ளவன் கவசம் அணிந்த மனிதனைப் போன்றவன். தன்மீது எவ்விதத் தாக்குதல் நேர்ந்தாலும் அதனால் அவன் பாதிக்கப்படமாட்டான். எது தாக்கியதோ அதுவே அவன் மீது மோதியதும் வீழ்ந்துபடும்.
தன்னம்பிக்கை உள்ளவன் பிறர் தன்னைப் பற்றிக் கூறும் புகழ்ச்சி, இகழ்ச்சிகளை, கேலி, கிண்டல்களை ஏன் அவதூறுகளைப் பற்றிக்கூட கவலைப்படுவதில்லை. தான் எடுத்துக்கொண்ட செயலில் நேரிய வழியில் சென்று, வெற்றி காண்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறான்.
அவன் நேரம் முழுவதும் வெற்றியை நோக்கிய சிந்தனையிலேயே செலவிடப்படுகிறது. தோல்வியைப் பற்றிச் சிந்திக்கவும் அவனுக்கு நேரமில்லை (There is no time for failure).
தன்னம்பிக்கை உள்ளவன் இறுதியில் பெறுவது வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி என்பது ஒன்றே.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும் இளைஞர்கள் தாம். தன்னம்பிக்கை உள்ள இளைய தலைமுறையே எழுந்திரு! சோம்பலை முறி! சுறுசுறுப்போடு செயல்படத் துவங்கு. வெற்றி உறுதி!

No comments:
Post a Comment