July 25, 2015

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

உடல் வெப்பம் தணிக்கும் வெட்டிவேர்:

கொளுத்தும் கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண் பானை தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு.
கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும்..முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது.
காய்ச்சல் மற்றும்வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது.
நீண்ட நாட்களாக ஆறாமல் வடுக்கள் இருப்பின் அவற்றின் மேல் வெட்டிவேர் எண்ணெய் தடவி வந்தால் தழும்பு மறைந்து விடும். இதன் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது. வெட்டிவேரின் எண்ணெய் பாலுணர்வு செய்யும் மூளையின் லிபிடோ பகுதிகளை தூண்டுகிறது. மஜாஜ் செய்வதற்கு வெட்டிவேரின் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். நமது உடலில் உள்ள போதை நீக்க பணிகளை செய்து நிணநீர்க்குரிய வடிகாலை தூண்டுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.

July 18, 2015

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி!

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?
வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதை கச்சிதமாக செய்ய,  முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும்.

செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள், நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

காலையில் 10 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்த செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும். கோடை காலம் என்றால் அடிக்கடி தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதால் தண்ணீர் குடிக்க மறக்க மாட்டோம். ஆனால் மற்ற காலங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த செயலியை ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் அது உற்ற நண்பன் போல சரியான நேரங்களில் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். தண்ணீர் குடிப்பது இயல்பான தேவையாக இருந்தாலும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு பிரச்னையாகவே இருக்கிறது. சீரான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தும் நிலையில்,  இதற்காக என்றே ஒரு செயலி இருப்பது நல்ல விஷயம்தான். தண்ணீர் குடிப்பதை மறக்காமல் இருக்க உதவுவதோடு அதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது இந்த செயலி. 

அத்துடன் தண்ணீர் அளவு பற்றிய விவரங்களையும் வரைபட அறிக்கையாக தந்து அசத்துகிறது. எனவே பிட்ன்ஸ் செயலிகள் பட்டியலில் இந்த செயலியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள்.

மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.         போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.         நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.         உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.         பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

5.         பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

6.         சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.         அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.         இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.         கஷ்டம் தான் … ஆன முடியும்.

10.       நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.

11.       இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.       விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.       விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14.       ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.

15.       இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.       இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.       இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.       இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

19.       முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

20.       கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

21.       அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22.       விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.       திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24.       சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

25.       ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

26.       உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.       ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.       கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.       எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.       அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

31.       அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

32.       நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

வீழ்வது கேவலமல்ல,
வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்

ஒன்பது முறை விழுந்தவனுக்கு
இன்னொரு பெயர் உண்டு-

எட்டு முறை எழுந்தவன்

எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

சருமத்தை பாதுகாக்கும் கேரட்

பொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலும் அழகுடன் மின்னும். அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந் தது. கேரட் சாப்பிட்டால் கண்களுக்கும், சருமத்திற்கும் மிக நல்லது. கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைசாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண் டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான ரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும் புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட தள்ளி போட வாய்ப்பு உள்ளது. கேரட் ஆப்கானிஸ் தானை பிறப்பிடமாகக் கொண்டது. கேரட் செடி யின் வேர்ப்பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக்கூட சாப்பிடக்கூடியது.
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லை இருக்காது. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும்போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இவை இரத் தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலு மிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்றுநோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா வில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப்புற்று நோயிலிருந்து ஆரம்பநிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்பநிலையிலேயே அழித்துவிடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத்தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பொடுகுக்கான வீட்டு சிகிச்சை

கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக கிடைக்கிற கற்றாழை ஜெல்லைவிட, வீட்டில் வளர்க்கும் கற்றாழைச் செடியில் இருந்து அதன் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து நான்கைந்து முறை அலசி வைத்துக் கொள்ளவும். அதைத் தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, மைல்டான ஷாம்பு போட்டு அலசவும்.

அரை கப் வினிகரை, ஒன்றரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். ஒவ்வொரு முறை ஷாம்பு குளியல் எடுத்து முடித்ததும், இந்தக் கரைசலை கடைசியாக தலையில் விட்டு அலசி, நன்கு காய விடவும். பொடுகு குறையும்.

வெள்ளை மிளகுப் பொடியை சிறிதளவு தயிரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். சிறிதளவு பாதாம் எண்ணெயில் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு விட்டுக் கலந்து தலையில் தடவி, விரல் நுனிகளால் மிதமாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி ஊற வைத்தும் குளிக்கலாம். கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். வேப்பிலையை அரைத்து, தலையில் தடவி, ஊற வைத்தும் அலசலாம். இரண்டு சிகிச்சைகளுமே பொடுகை விரட்டும்.

வெயிலே படாமல் வாழ்வது சருமத்தை அழகாக வைக்கலாம். ஆனால், பொடுகுப் பிரச்னைக்கு சூரிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயில் சிறிதாவது நம் மேல் படும்படி இருப்பதுகூட பொடுகை விரட்ட உதவும்.

டீ ட்ரீ ஆயில் என ஒன்று கிடைக்கும். ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் டீ ட்ரீ ஆயில் கலந்து மூடி போட்ட ஸ்பிரே பாட்டிலில் விட்டுக் குலுக்கவும். தலைக்குக் குளித்து முடித்ததும், இந்தக் கலவையை தலையில் ஸ்பிரே செய்து கொள்ளவும். லேசாக மசாஜ் செய்து, அப்படியே விட்டு விடவும்.

மறுபடி கூந்தலை அலச வேண்டாம்.டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பு கொண்டு அலசவும். ஆரஞ்சு பழத்தோலை மிக்ஸியில் விழுதாக அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சைச்சாறு சோ்த்து கலக்கவும். அதைத் தலையில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினாலும் பொடுகு மறையும்.

இரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்!

எந்தெந்த காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது. எந்த நேரத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் போன்றவற்றை எல்லாம், சொல்லிக் கொடுக்க, பெற்றோருக்கு நேரமில்லை, தாத்தா, பாட்டி உடனில்லை. ஆகையால் தான் குறிகிய காலக்கட்டதில் நமது வாழ்வியல் முறையில் பல வேறுபாடுகளும். உடல்நலத்தில் குறைபாடுகளும் கண்டு வருகிறோம்.

நீங்கள் இரவு வேளையில் செய்யும் சில வேலைகள், மறுநாள் காலை உங்களை சுறுசுறுப்பாகவும், உடல் இலகுவாகவும் இருக்க உதவும்….

ஏழு மணிக்கு காபிக்கு “நோ” இரவு ஏழு மணிக்கு மேல், காபி குடிக்கும் பழக்கத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தையும், தூக்கத்தையும், பாதிக்கும்.

திட்டமிடுதல் நாளை நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை திட்டமிட்டு வையுங்கள்.

குளிக்க வேண்டியது அவசியம் இரவு தூங்க செல்லும் முன்பு குளிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இது, உங்கள் உடலை இலகவாக்குவது மட்டுமின்றி, நல்ல உறக்கம் வரவும் உதுவும். இது உங்களை அடுத்த நாளும் சுறுசுறுப்பாக இயங்க உதவும் பழக்கமாகும்.

திருமணம் ஆனவர்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும், அவர்களது வேலைகள் என்னென்ன எல்லாம் மிச்சம் இருக்கிறது என்று ஒருமுறை சோதித்து பார்த்துக்கொள்வது வேண்டும். தேவையில்லாமல் மறுநாள் காலை அடித்துப்பிடித்து வேலை செய்வதை தவிர்க்க இது உதவும்

துணிகளை இஸ்திரி செய்து வையுங்கள் காலை அவசரமாக நீங்கள் கிளம்புவது மட்டுமின்றி மற்றவர்களையும், அவசரப்படுத்தாமல் நீங்களே, நாளை நீங்கள் உடுத்தும் உடைகளை இஸ்திரி செய்து வைத்துக்கொள்வது ஓர் நல்ல பழக்கம் ஆகும்.

மின்னணு உபகரணங்கள் டிவி, கணினி, விளக்குகள் போன்ற மின்னணு உபகரணங்களை ஒரு மணிநேரத்திற்கு முன்பே அனைத்து வைத்துவிடுங்கள்.

புத்தகம் படிக்கும் பழக்கம் இரவு தூங்குவதற்கு முன்பு புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது, உங்கள் நினைவாற்றல், நல்ல உறக்கம் மற்றும், சுறுசுறுப்பான காலை பொழுதுக்கு வழிவகுக்கும்.

அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் இரவு தூங்கும் முன்னரே, அறையை சுத்தம் செய்துவிட்டு தூங்க வேண்டியது அவசியம். இது, சுவாச பிரச்சனைகள் ஏற்படாது இருக்க உதவும், நல்ல உறக்கத்தை கொடுக்கும். பெரும்பாலும் அனைவரும் இதை பின்பற்ற வேண்டுடிய பழக்கம் இதுவாகும்

விளக்கை அணைக்காமல் தூங்க வேண்டாம் சிலர் தூங்கும் அறையில் விளக்கை அணைக்காமலே உறங்குவார்கள். இது, உங்கள் உடலில் சுரக்கும் சுரப்பியின் அளவை குறைத்துவிடுமாம். எனவே, இரவு தூங்கும் போது, அந்த அறையில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.

நடைப்பயிற்சி முடிந்தவரை குறைந்தது 5-10 நிமிடங்களாவது இரவு உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது, செரிமானத்தை சீராக்குவதற்கு உதவும்.

July 8, 2015

சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து.!!!

* எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
* கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.
* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
* அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
சித்த மருத்துவ குறிப்புகள்
* தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.
* இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.
* ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
* வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.
* ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
* சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.
* பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.
* தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.
* காசம் இறைப்பு நீங்க: கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.
* தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
* ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
* தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.
* கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
* சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
* கபம் நீங்கி உடல் தேற: கரிசலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.
* காசம் இறைப்பு நீங்க: கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.
* இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
* தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்
* சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.
* காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

May 2, 2015

மனவருத்தம்

எத்தனை தடவைகள் இறந்த காலத்தில் நடந்த இரணங்கள் பற்றி எண்ணிப்பார்க்கிறோம்?
எத்தனை தடவைகள் கிடைக்காமல் போன விடயங்களை எண்ணி வருத்தப்படுகிறோம்?
எத்தனை தடவைகள் பழைய நினைவுகளால் பெருமூச்சி விட்டு விட்டு நிகழ்காலத்தை காயப்படுத்துகிறோம்?
இப்படி எண்ணி எண்ணி எத்தனை பெறுமதியான நேரத்தையும் சந்தர்ப்பங்களையும் 
சாகடித்திருக்கிறோம்?
நாம் சொன்னதை எம்மால் மாற்ற முடியாது
சொன்னவை சொன்னவையாக பதியப்பட்டுவிட்டன
இறந்தகால நிகழ்வுகள் எம்மைவிட்டு தூரப்போய்விட்டன
தூரப்போனவற்றை துரத்திப்பிடிக்க முடியாது
துரத்திப்பிடித்தாலும் அவற்றால் மனஅமைதி பெறமுடியாது
செய்தவற்றையும் செய்யப்பட்டிருப்பவற்றையும் மாற்றி அமைக்கவும் முடியாது
செய்யபபட்டவை செய்யப்பட்டவைகளாக செதுக்கப்பட்டுவிட்டன
அவற்றை மனவருத்தம் என்று எண்ணி மனம் நொந்து போவதா?
கவலை என்று எண்ணி கருகிப் போவதா?
குற்ற உணர்வு என்று எண்ணி குனிந்து போவதா?
மனவருத்தத்தை மறந்து விடுங்கள்
இறந்தகால இரணங்களை மனதில் இருந்து இறக்கிவைத்து விடுங்கள்
நிகழ்காலத்தின் மீது குறிவையுங்கள்
செய்யாததையும் செய்யத்தவறியதையும் நோக்காமல்
செய்ய முடியுமானதை இப்பவே செய்ய மனதைப் பதப்படுத்துங்கள்
பழைய நினைவுகள் புதிய நினைவுகளைப் பாழாக்க இடம் கொடுக்காதீர்கள்
நேற்றைய நாளைப்போல் இன்றைய நாளையும் நோக்காமல்; 
நாளைக்காக இன்றை நாளைத் தயார் படுத்துங்கள்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...