May 2, 2015

மனவருத்தம்

எத்தனை தடவைகள் இறந்த காலத்தில் நடந்த இரணங்கள் பற்றி எண்ணிப்பார்க்கிறோம்?
எத்தனை தடவைகள் கிடைக்காமல் போன விடயங்களை எண்ணி வருத்தப்படுகிறோம்?
எத்தனை தடவைகள் பழைய நினைவுகளால் பெருமூச்சி விட்டு விட்டு நிகழ்காலத்தை காயப்படுத்துகிறோம்?
இப்படி எண்ணி எண்ணி எத்தனை பெறுமதியான நேரத்தையும் சந்தர்ப்பங்களையும் 
சாகடித்திருக்கிறோம்?
நாம் சொன்னதை எம்மால் மாற்ற முடியாது
சொன்னவை சொன்னவையாக பதியப்பட்டுவிட்டன
இறந்தகால நிகழ்வுகள் எம்மைவிட்டு தூரப்போய்விட்டன
தூரப்போனவற்றை துரத்திப்பிடிக்க முடியாது
துரத்திப்பிடித்தாலும் அவற்றால் மனஅமைதி பெறமுடியாது
செய்தவற்றையும் செய்யப்பட்டிருப்பவற்றையும் மாற்றி அமைக்கவும் முடியாது
செய்யபபட்டவை செய்யப்பட்டவைகளாக செதுக்கப்பட்டுவிட்டன
அவற்றை மனவருத்தம் என்று எண்ணி மனம் நொந்து போவதா?
கவலை என்று எண்ணி கருகிப் போவதா?
குற்ற உணர்வு என்று எண்ணி குனிந்து போவதா?
மனவருத்தத்தை மறந்து விடுங்கள்
இறந்தகால இரணங்களை மனதில் இருந்து இறக்கிவைத்து விடுங்கள்
நிகழ்காலத்தின் மீது குறிவையுங்கள்
செய்யாததையும் செய்யத்தவறியதையும் நோக்காமல்
செய்ய முடியுமானதை இப்பவே செய்ய மனதைப் பதப்படுத்துங்கள்
பழைய நினைவுகள் புதிய நினைவுகளைப் பாழாக்க இடம் கொடுக்காதீர்கள்
நேற்றைய நாளைப்போல் இன்றைய நாளையும் நோக்காமல்; 
நாளைக்காக இன்றை நாளைத் தயார் படுத்துங்கள்.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...