கண்கள் பராமரிப்பு :
கண்ணில் கருவளையமா?
பல பெண்களுக்கு உள்ள பிரச்னையே கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குவது எப்படி என்பது தான். கருவளையங்கள் முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றன.
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இதுதான் அவர்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கரு வளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
* உருளை கிழங்கை மேல் தோலோடு சீவி சாறு எடுத்து, கண்களுக்கு அடியில் தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.
* பிஞ்சு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறையும்.
* மாதுளம் பழச்சாறு, பன்னீர் ஆகியவற்றை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் பளிச்சிடும் கண்களை பெறலாம்.
* நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.
கண்களை அலங்கரியுங்கள்
கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும்... பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக்கும்போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள்.
சரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்.
உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்...
கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும்.
பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள்.
கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சிறிய கண்களைக் கொண்டவர்கள்..
நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.
இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள்.
சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.
உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு...
கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும்.
இது உங்கள் கண்களை அழகாக்கும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது என்று கீழே பாருங்கள் .
டோநர் (Toner )
வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும் .
ஸ்கரப் (scrub)
ஒட்ஸ்( oats) 2 டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் + தயிர் 2 டிஸ்பூன் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .
ப்ளீச் (Bleach)
தேன் 2டீஸ்பூன் + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .
க்லன்சர் (cleanser)
1/4 cup தேன் + சோப் (liquid soap) 1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin) 1 டீஸ்பூன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .
தினமும் அழகாக இருக்க
·மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் மூக்கின் நுனியில் கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி போட்டுக் கொண்டால் அவர்கள் மூக்கு பார்ப்பதற்குச் சின்னதாகத் தெரியும்.·மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டி ருக்கும் பெண்களுக்குக் கண்களின் அழகு கொஞ்சம் குறையும் மூக்குக் கண்ணாடி அணியும் அந்தப் பெண்கள் கொஞ்சம் பட்டையாகவே தங்கள் கண் இமைகளுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும்.
·வயதான பெண்கள் அவசியம் தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்வதால் கண்களில் உள்ள வயதான தோற்றம் போகும். இளமையான தோற்றம் வரும். ·நாற்பது வயதாகிவிட்ட பெண்களும்கூட இளமையுடன் இருக்கலாம். அழகுடன் இருக்கலாம். தினமும் ஒரு தம்ளர் ஒரேஞ்சுப் பழ ஜுஸ் குடிக்க வேண்டும். வயிறு நிறையச் சாப்பிடக்கூடாது. இனிப்பு வகைகள், தயிர், பால், முட்டை, நெய், வெண்ணெய், மாமிசம், தேங்காய், கிழங்கு வகைகள் சாப்பிடக்கூடாது. அடிக்கடி வெயிலில் சுற்றக் கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் சிறிது தூரம் நடக்க வேண்டும்.
·பெண்கள் சூடான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து அதிலிருந்து வரும் ஆவியைத் தங்கள் முகத்தில் படும்படி செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டு முகத்தைச் சோப்புப் போட்டுக் கழுவிவிட வேண்டும். முகம் சுத்தமாகும்.மிருதுவாகும். பொலிவு பெறும்.
·காலையில் எழுந்ததும் எலுமிச்சம்பழச் சாற்றைத் தண்ணீரில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களை வெளிப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. இரத்தம் சுத்தமாகிவிட்டால் உடம்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
·பெண்கள் வெயிலில் வெளியில் போகும்போது இருபது நிமிஷங்களுக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருக்கக் கூடாது. கால்மணி நேரத்துக்கு ஒரு தடவை எங்கேயாவது நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெயிலில் நின்றால் பெண்களின் அழகு கெட்டுப் போகும். முகம் சுருங்கும். உடம்பின் பளபளப்பும் போய்விடும்.
·அடிக்கடி குளிர்ந்த பானங்களைக் குடிப் பவர்களும் ஐஸ்கிரீம் சாப்பி டுகிறவர்களும் சொக்லேட் உண்பவர்களும் கோப்பி குடிப் பவர்களும் பருமனாகி விடுகி றார்கள். உடம்பு இளைக்க வேண் டும்; பெருக்க கூடாது என்று நினைக்கி றவர்கள் இவற்றையெல்லாம் தொடக் கூடாது. தள்ளிவைக்க வேண்டும். ·தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அதில் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து பருக வேண்டும். இப்படிச் செய்து வந்தால் அவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். அவர்கள் குரல் இனிமையாக இருக்கும்
முகத்தில் கரும்புள்ளிகளா கவலை வேண்டாம்
துடைத்து வைத்த குத்துவிளக்கு போன்ற அழகு என்பார்களே... முகத்தில் மாசு, மறு, கரும்புள்ளி என்று எதுவும் இல்லாமல் இருந் தாலே முகம் பளபளக்கும். ஒரு வேளை முகப்பருவோ, கரு வளையமோ வந்து விட்டால் அவற்றை எப்படிச் சரி செய்வது? அல்லது தற்காலிகமாக மேக்கப் மூலம் எப்படி மறைப்பது என்று பார்ப்போமா... முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால்...
உங்களுடைய சருமம் ரொம்பவே எண்ணெய்த்தன்மையாக இருந்தால், இந்தக் கரும்புள்ளிகள் அழைக்காமலேயே உங்கள் முகத்தில் வந்து விடும். எப்படிச் சரி செய்வது? ஐஸ் கட்டியை சுத்தமான கைக்குட்டையில் சுற்றி, அதைக் கொண்டு முகத்தை ஒற்றி யெடுங்கள். இப்படிச் செய்தால் முகத்தில் வழி யும் எண்ணெய், கட்டுப்பாட்டில் வரும். சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை தேனுடன் பிசைந்து கரும்புள்ளிகள் மீது தடவி வரவும். லேவண்டர் ஒயிலை தொடர்ந்து அப்ளை செய்து வந்தாலும் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
எப்படி மறைப்பது?
கன்சீலரை சற்று அதிகமாக எடுத்து பிரஷ் ஷின் மூலமாக முகத்தில் தடவி அதன் மீது ட்ரான்ஸுலின்ட் பவுடரை அப்ளை செய்தால், முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பதே தெரி யாது.
முகத்தில் முகப்பரு மற்றும்
தழும்பு இருந்தால்...
முகப்பருவே ஒரு தொல்லை என்றால், அதைவிட பெருந்தொல்லை அதைக் கிள்ளி விட்டால் வரும் தழும்பு. எப்படிச் சரி செய்வது?
உங்களுடையது எண் ணெய்ப் பசை சருமம் என் றால் தக்காளி ஜூஸ், வெள் ளரி ஜூஸ், தர்பூசணி ஜூஸ் மூன்றிலும் தலா ஒரு டீஸ் பூன் எடுத்துக் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால், முகப்பருவும் சரியாகிவிடும். அதைக் கிள்ளினால் வரும் தழும்பும் சரியாகிவிடும். உங்களுடையது நோர்மல் சருமம் என்றால் ஒரு டீஸ் பூன் தர்பூசணி ஜூஸ், 4 டீஸ் பூன் ஓட்ஸ் பவுடர், ஒரு டீஸ் பூன் லெமன் ஜூஸ், ஒரு டீஸ்பூன் ஓரேஞ் ஜூஸ் நான் கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வாருங்கள் போதும். எப்படி மறைப்பது?
இதற்கும் கன்சீலரை கொஞ்சம் அதிகமாக அப்ளை செய்து, அதன் மீது பிரஷ்ஷால் லேசாக டிரான் ஸுலின்ட் பவுடரை டச் செய்யுங்கள். தழும்பு சற்று ஆழமாக இருந்தால் தொடர்ந்து பேஷியல், ஸ்கிரப்பிங் என்று சரியான இடைவெளியில் செய்து வாருங்கள். முகத்தில் லேசான தீக்காயம் இருந்தால்...
முகத்தில் லேசான தீக்காயம் ஏற்பட்டால், அதற்கு உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பெஸ்ட் தீர்வு இருக்கிறது. எப்படிச் சரி செய்வது?
சோற்றுக் கற்றாளையைக் கீறி, அந்த ஜெல்லை அப்படியே தீக்காயத்தின் மீது தடவி வாருங்கள். லேவண்டர் ஒயிலைத் தொடர்ந்து தடவி வந்தால் தீக்காயம் எங்கே என்று தேடி னாலும் கிடைக்காது. தீக்காயத்தினால் ஏற்பட்ட தழும்பு மறைய வேண்டுமென்றால் விட்டமின் ஈ' ஒயிலை அதன் மீது தொடர்ந்து தடவுங்கள். எப்படி மறைப்பது?
இதற்கும் பிரஷ்ஷினால் கன்சீலரை அப்ளை செய்து, அதன் மீது பவுடரை ஸ்பொன்ஜால் தொட்டுத் தடவுங்கள்! உப்பிய கண்களோ, கருவளையமோ இருந்தால்...
எத்தனை அழகான கண்களும் வீங்கி இருந் தாலோ, அதைச் சுற்றி கருவளையம் இருந் தாலோ எடுபடாமல் போய்விடும். எப்படிச் சரி செய்வது?
நேரத்திற்குத் தூங்கினால் கண்கள் வீங்காது. தவிர உருளைக் கிழங்கு மற்றும் வெள் ளரிக்காயை வட்டமாக சீவி அதை கண்களின் மீது 10 நிமிடம் வைத்தால் வீக்கம் மற்றும் கருவளையம் இரண்டுமே சரியாகிவிடும்.
எப்படி மறைப்பது?
உங்கள் ஒரிஜனல் ஸ்கின் கலரை விட லைட் கலரில் கன்சீலரை கண்களைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது தடவி அதன் மீது உங்க ளின் ஸ்கின் கலர் பவுடர் பவுன்டேஷனை அப்ளை செய்யுங்கள்.
கண்களைச் சுற்றி சுருக்கம் விழுந்தால்...
சட்டென்று வயதைக் கூட்டிக் காட்டிவிடும். இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்யலாம்?
எப்படிச் சரி செய்வது?
சுருக்கம் உள்ள பகுதிகளில் விட்டமின் ஈ' ஒயிலையோ அல்லது பாதாம் ஒயிலையோ தடவி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரை கண்கள் மீது மெதுவாக வாரி அடியுங்கள்.
எப்படி மறைப்பது?
மை வைக்கும் இடத்தில் தரமான ஐ ஜெல்' லைத் தடவி பத்து நிமிடம் கழித்து பவுன் டேஷனை அப்ளை செய்யுங்கள். சுருக்கம் தெரியாது.
உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேயுங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள்.
- கடுக்காய், செம்பருத்திப்பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
- முகத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமானால், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
- பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்.
-கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத்தையும் அரைத்து உடலில் பூசுங்கள். அரை மணி நேரம் கழித்து ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் குளியுங்கள். இவ்வாறு செய்தால் தோலுக்கு நல்ல நிறமும் தோற்றமும் கிடைக்கும்.
- கற்க்ண்டு, தேன், கரட் சாறு, வெள்ளிக்காய்ச்சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப்பிட்டால் முக அழகு அதிகமாகும்.
- தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெயை இமையில் தேய்த்தால் இமை நன்றாக வளரும்.
- முகத்தில் பால் ஆடையை தேய்த்து அது காயும்போது லேசான சுடு நீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்.
- தினமும் கரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது.
தூய்மையான சந்தனம், கடுக்காய் 4, கசகசா 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு இலைகளால் தயாரித்த கலவையினை ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.
- கடைகளில் ஃபேஸ்- மாஸ்க் பொடி விற்கும். அதை வாங்கி ஒரு ஸ்பூன் மாஸ்க் பொடியில் சிறிது வெள்ளரி, கரட், தயிர் சேர்த்துக் குழைத்து பூசி 20 நிமிடம் ஊறினதும் கழுவிவந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.
- வெள்ளரிச்சாறும் புதினாச்சாறும் கலந்து முகம், கைகளில் தேய்த்து வரலாம்.
- குளிர்காலத்தில் படுக்கும் முன், முகத்தில் மொயிஸ்ச்ரைஸர் பூசுவது நல்லது.
- கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.
- முட்டைக்கோஸ், முள்ளங்கிச்சாறுகளும் முகத்தை பளிச்சென்றாக்க உதவும்.
- தலைக்கு முட்டை தேய்த்து குளிப்பது நல்லது.
- கை கால் நகங்களைச் சுத்தமாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் சோப் துண்டுகளை போட்டு, கொஞ்ச நேரம் அமிழ்த்தி வைத்து பழைய tooth brush கொண்டு சுத்தம் செய்து, நெயில்பாலிஷ் போட்டு வந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
பெண்கள் பச்சைத் தக்காளிப் பழங்களைத் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டு வந்தால், தோல் கொஞ்சம் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம் மாறும். நிறமும் மாறி, சுருக்கமும் மறைந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
கோழி முட்டையை உடைத்து வெள்ளைப் பாகத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்ற வேண்டும். இதில் கொஞ்சம் எலுமிச்சம்பழச் சாறைக் கலக்க வேண்டும். கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்து இதில் சேர்க்க வேண்டும். சேர்த்து, மூன்றையும் கலக்கி, பெண்கள் தங்கள் முகததில் தடவிக் கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.
பெண்களும் சரி, ஆண்களும் சரி, தங்களுக்கு ஊளைச் சதை விழாமலிக்கப் பழம் சாப்பிட்டு வரவேண்டும். பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை கரையும். பப்பாளிப்பழம் ஒன்றுக்குத்தான் ஊளைச் சதையைக் குறைக்கும் சக்தி உண்டு.
முகத்தில் பரு இருக்கிறதா? இருந்தால், பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் விகாரமுள்ள, மாறாத வடுக்கள் விழுந்துவிடும். எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.
பனிக்காலத்தில் சிலருக்குத் தோலில் சில இடங்களில் வெடிப்புத் தோன்றும். வெடிப்புத் தோன்றிய இடங்களில் கொஞ்சம் வாஸ்லைனைத் தடவி வரவேண்டும். தடவி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும்!
தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண் மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும்.
முகத்தில் தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள். உரிந்த தோல் வந்துவிடும்.
குளித்தவுடன் உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக் கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.
தேங்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் தேங்காய் பார்த்துக் கொள்கிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்களும், இருதயநோய் உள்ளவர்களும் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
முகத்தை, சோப்பு மட்டும் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கக் கூடாது. பயித்தம் மாவு, சிகைக்ககாய் ஆகியவற்றையும் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். இப்படிச் செய்தால்தான் முகத்தில் இருக்கும் பளபளப்பு குறையாமல் இருக்கும்.
முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இதைப் போக்கத் தினசரி காலையிலும் இவு படுக்கப் போகும் போதும் முகத்தில் எலுமிச்சம்பழத்தை அறுத்துக் தேயுங்கள். எண்ணெய் பசை போய்விடும்.
பெண்கள் தினமும் படுக்கப் போகும்போது புருவங்களிலும் இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணையைக் தடவிக் கொண்டால், புருவங்களிலும் இமைகளிலும் முடி நன்றாக வளரும். பெரிதாக வளரும். இதனால் அழகு அதிகமாகும
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...

-
இன்று காலை,டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் ...
-
1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை. 2. அ...
-
ஆழந்து மூச்சு விடுங்கள் – கே.எஸ்.சுப்ரமணி ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்...
No comments:
Post a Comment