இளைஞனே
“சூரியனையே சுட்டுவிடும்
நெருபன்றோ உன் விழிகள்!
இமயத்தைவிடவும்
உயர்ந்ததன்றோ உன் தன்னம்பிக்”கை”;
இரும்பையும் விடவும்
வலிமையானதல்லவா உன் இதயம்”
நீ ஏன் தோழனே தோல்விகளைக் கண்டு
கலங்கி விடுகிறாய்?
நெருபன்றோ உன் விழிகள்!
இமயத்தைவிடவும்
உயர்ந்ததன்றோ உன் தன்னம்பிக்”கை”;
இரும்பையும் விடவும்
வலிமையானதல்லவா உன் இதயம்”
நீ ஏன் தோழனே தோல்விகளைக் கண்டு
கலங்கி விடுகிறாய்?
கனவுகள் ஆயிரம் கண்களில் சுமந்து கல்லூரி வாசல் கடந்து வந்தாய்; வேலை தேடியா ஓய்ந்து விட்டாய்; சூழ்நிலையும், சுற்றமும் ஏளனப் பேச்சால் புண்படுத்தியதோ, புரிந்து கொள் தோழனே!
“புண்பட்ட மனமே
பண்பட்ட மனமடா”
பண்பட்ட மனமடா”
தன்னம்பிக்கையால் உன் தோல்வித் தழும்புகளை ஒரு நொடியில் அழித்துவிடு.
“ஒன்பது முறையும் கீழேவிழுதவனைப் பார்த்து
இந்தப் பூமித்தாய் சொன்னாளாம்;
எட்டுமுறையும் நீ எழுந்தவன் தானே
இம்முறையும் எழுந்துவிடு பூமகனே” என்று…
இந்தப் பூமித்தாய் சொன்னாளாம்;
எட்டுமுறையும் நீ எழுந்தவன் தானே
இம்முறையும் எழுந்துவிடு பூமகனே” என்று…
தோல்வியின் வலி தெரியாவிட்டால் உனக்கு வெற்றி மலரின் வாசனை நிச்சயமாக உணர முடியாது. உன்னுள் இருக்கும் “தன்னம்பிக்கை கத்தியை” தோல்வி என்ற சாணைக்கல் மட்டுமே கூர்மையாக்க முடியும்.
அற்புதமேதை “அரிஸ்டாடிலின்” கொள்கைகளையும் கருத்துக்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த ஓர் இளைஞனான “அலெக்சாண்டர் ஒருவனால் தானே முடிந்தது.
இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீக தத்துவத்தை அகிலம் முழுவதும் “வெளிச்சம் போட்டுக் காட்ட ஒரு விவேகானந்தர்” என்ற மெழுகுவர்த்தியால் அல்லவா முடிந்தது.
புரிந்துகொள் தோழனே!
இதுவரை கடந்த டிசம்பர் 31ல் நீ கவலையுடன் கடந்திருப்பாய்! ஆனால் இனிமேல் உன்னை கடக்க விருக்கும் ஒவ்வொரு டிசம்பர 31 -ம் உன்போன்ற ஒருவரை விட்டு கடப்பதற்காக அந்த நாளே கவலைப்படட்டும்.
“தெளிவுபடு இன்றே!
திறமுடன் நன்றே!!
உன்னையே நீ நிலமாக்கு!
திறமுடன் நன்றே!!
உன்னையே நீ நிலமாக்கு!
உன் முயற்சிகளையே உழவாக்கு!
தோல்விகள் யாவையும் விதையாக்கு!
வியர்வைத் துளிகளை மழையாக்கு
வெற்றி மலரை மட்டுமே பயிராக்கு”
தோல்விகள் யாவையும் விதையாக்கு!
வியர்வைத் துளிகளை மழையாக்கு
வெற்றி மலரை மட்டுமே பயிராக்கு”
உன் வாழ்வின் சூத்திரம் வரைய வருகின்ற புதுவருடம் ஏட்டுடன் எழுதுகோல் எடுக்கட்டும்; இனி யாவும் இளையசக்தி முரசு கொட்டி ஒலிக்கட்டும்.
Author: இளங்கவி ஊமை
No comments:
Post a Comment