December 5, 2009

அன்னையின் ஒரு பிரார்த்தனை

எம்பெருமாளே, நீ அன்பே உருவானவன், நின் அன்பு ஒவ்வொரு சிந்தனையின் ஆழங்களிலும், ஒவ்வொரு இதயத்தின் ஆழத்திலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. நினது திருவுருமாற்ற வேலையை நிறைவேற்று, எங்களை ஒளியுறுத்து, இன்னும் மூடிக்கிடக்கும் கதவுகளைத் திற, காட்சி எல்லையை விரிவாக்கு, வலிமையை நாட்டு, எங்களுடைய ஜீவன்களை ஒருமைப்படுத்து, எல்லா மனிதர்களையும் அதில் பங்கு பெறச் செய்.

எங்களை நினது திவ்விய பேரின்பத்தில் பங்குகொள்ளச் செய். நாங்கள் எங்கள் உள்ளும் புறமும் உள்ள கடைசித் தடைகளையும் இறுதி கஷ்டங்களையும் வெல்ல அருள். நின்னை நோக்கி எழுந்த தீவிரமான இதயபூர்வமான பிரார்த்தனை எதுவும் வீண்போனதில்லை. எப்பொழுதும் நினது உதார குணத்தினால்ர எல்லா அழைப்பிற்கும் பதிலளிக்கிறாய். நின் கருணைக்கு எல்லை இல்லை.

தெய்வத் தலைவனே, இக்குழப்பத்தினுள் நினது ஒளி புகுந்து அதிலிருந்து ஒரு புதிய உலகைத் தோற்றுவிக்கட்டும், இப்பொழுது ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை நிறைவு பெறச் செய், நினது புதிய உன்னதமான தர்மத்தின் பூரண விளக்கமாக இருக்கக்கூடிய புதிய மனித இனத்தைப் படைத்தருள்.

எங்கள் உத்வேகத்தை எதனாலும் நிறுத்த முடியாது; எதுவும் எங்கள் முயற்சியை அயரச் செய்யாது; எங்கள் நம்பிக்கைகளையும் செயல்களையும் நின்மீது வைத்து, நினது பரம சங்கல்பத்திற்குப் பூரண சரணாகதி செய்துள்ள வலிமையில், நினது வெளிப்பாட்டை எதிர்க்கும் அனைத்தையும் வெல்வோம் என்ற அமைதியான நிச்சயத்தில் நினது முழுமையான வெளிப்பாட்டின் வெற்றி நோக்கி வீரநடை போடுவோம்

உலகநாதனே போற்றி! எல்லா இருளையும் வெல்பவனே போற்றி!

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...