விரக்தி வேண்டாம் விரட்டி விடு
கவலை வேண்டாம் களைந்து விடு
துக்கம் வேண்டாம் துரத்தி விடு
துயரம் வேண்டாம் துறந்து விடு
மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு
புன்னகை வேண்டும் சிரித்தே இரு
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு
முயற்சி வேண்டும் வெற்றி பெறு
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு
இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு
நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்
முனைப்போடு முயன்றால்
தோல்வி இல்லை உலகில்!
கவிஞர் இரா. இரவி, மதுரை
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
April 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...
-
மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம். ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் க...
-
பெண்களே உங்கள் கன்னங்கள் ஒட்டியுள்ளதா? இதனால், உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரி...
-
வாழ்வில் முன்னேற துடிக்கின்ற, வெற்றிபெற, Energy இழந்த என அனைவருக்கும் பயன்படும் என்ற வகையில், இங்கே போதுமான வரை அந்நூலில் உள்ள தகவல்களை இ...
No comments:
Post a Comment