November 23, 2013

எண்ணத்தின் ஆற்றல்கள்

எண்ணங்களே உலகின் மிகச் சிறந்த சக்தியாகும்.
எண்ணங்கள் அசைந்து செல்லும் தன்மை உடையவை.
எண்ணங்கள் ஒன்று பலவாகப் பருகும் தன்மை உடையவை

நல் எண்ணங்களின் சேமிப்பே ஆற்றலை சேமிக்கும் முறையாகும்
எண்ணங்கள் – செயலாகி, செயல் – பழக்கமாகி, பழக்கம் – பண்பாகி, பண்பு – விதியாக மாறுகிறது.
எண்ணம் தூண்ட மனம் செயல்படுகிறது. மனம் செயல்படும்போது உடலும் செயல்படுகின்றது.
மகிழ்ச்சியான எண்ணங்கள் மன ஆற்றலை வளர்க்கின்றன. துன்பமான எண்ணங்கள் மன ஆற்றலை குறைக்கின்றன.
பகைவனைக்கூட நல்ல எண்ணங்கள் மூலம் நண்பனாக்கலாம்.
தீயவர்களைக்கூட நல்ல எண்ணங்கள் மூலம் நல்லவர்களாக மாற்றி விடலாம்.
ஒத்த எண்ணங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தவை.
நல்லெண்ணம் படைத்தவர்களின் உள்ளொளி அந்த வட்டத்துக்குள் வந்தவர்களுக்கு எல்லாம் நன்மை செய்கிறது.
நம்பிக்கை மிகுந்தவர்கிடமிருந்து வெளியாகும் எண்ணங்கள் பிறரிடமும் நம்பிக்கையை வளர்க்கின்றன.
எங்கெங்கோ இருக்கும் பலருடைய நல்ல எண்ணங்கள் ஒன்று சேரும்போது மிகப்பெரிய நல்ல விளைவை உண்டாக்குகின்றது.
நம் எண்ணங்களின் ஆற்றலுக்கு ஏற்பவே நமக்கு வெற்றி கிடைக்கிறது.
எண்ணத்தின் மூலம் தூரத்திலுள்ள பொருள்களைப் பார்க்கலாம். ஒலிகளைக் கேட்கலாம்.
உயர்வான எண்ணங்கள் உடலைப்பொலிவாக ஆக்குகிறது. எண்ணங்கள் நம் சூழ்நிலையை உருவாக்குகின்றன.
மனதை ஒருமைப்படுத்துவதன் மூலம் எண்ண ஆற்றலைப் பெருக்கலாம். முறையான பழக்க வழக்கங்கள் மூலம் எண்ணங்களை ஒருமைப்படுத்தலாம்.
ஒரு நேரத்தில் ஒன்றைப் பற்றித் திரும்ப திரும்பச் சிந்திப்பதால் மனதை ஒருமைப்படுத்தலாம்.
எண்ணங்கள் உயிருள்ளவை. அவற்றை வளர்க்கும் முறையில் வளர்த்தால் பயன் பெறலாம்.
ஒரு மனிதனின் தீர்மான எண்ணத்தின்படியே அவன் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது.
இன்றைய வாழ்க்கை அவனது இதுநாள் வரையான எண்ணங்களின் விளைவே ஆகும்.
இந்தப் பரந்த உலகில் ஒருவன் எண்ணும் அளவிற்கு அவனுக்கு சொந்தமாகிறது.
முடியும் என்ற எண்ணம் உடையவர்களால் மட்டுமே எதனையும் சாதிக்க முடியும்.
யாரிடமிருந்து எதைப் பெற்றாலும் அது அவரவர் எண்ணத்தின் விளைவேயாகும்.
தீவிரமாக எண்ணும் அனைத்தும் அடையக் கூடியவையே
சரியான எண்ணங்களின் மூலம் சரியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
நம்முன் தோன்றும் எண்ணங்கள் நாம் அடைய விரும்பும் நிலையை அடைய உதவும்.
ஒரு மனிதனின் கட்டுப்பாடான வாழ்க்கை எண்ணத்தின் ஆற்றலைப் பெருக்குகிறது.
எண்ணம் படகு போன்றது. நம்மைப் பயனுள்ள இடத்தற்கு அது அழைத்துச் செல்கிறது.
நல்ல எண்ணங்களே உலகை ஆள்கின்றன.
ஒழுக்கமுள்ள மனிதர்களின் எண்ணங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை. அவை நல்ல விளைவுகளை உண்டாக்கும்.
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைக்கும் போது எண்ணங்கள் ஆற்றல் பெறுகின்றன.
எல்லோரும் வாழ வேண்டும் என்பதைவிடச் சிறந்த எண்ணம் ஒன்றில்லை.
நல்ல எண்ணங்கள் மூலம் இவ்வுலகில் புதிய நாகரிகத்தையே தோற்றுவிக்கலாம்.

நான் யார்?

நான் யார்?

கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்து வளர்ந்து மடிந்து போன பூமி இது. இங்கு வரலாறு என்பது மிக சொற்பமே. மனிதனின் வரலாறும் பூமியின் வரலாறும் ஒன்றுதான். பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாய் அல்லது ஒரு குழுவாய் மனிதர்கள் செய்த செயல்கள், எடுத்த முடிவுகள் மற்றும் அவர்கள் ஆற்றிய எதிர்வினைகள் யாவும் வரலாற்றை உருவாக்கின. இன்றும் அது தொடர்கிறது.

அனைவரும் வரலாற்றை படிக்கின்றனர். ஒருசிலர்தான் அதை படைக்கின்றனர்.

உலகில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள், அதிசயங்கள், புரட்சிகள், போர்கள் யாவுமே முதன்முதலில் விதை முளைப்பது தனிமனிதனின் மனதில்தான். நீங்கள் எடுக்கும் எந்த முடிவானாலும், அதன் விளைவு ஒரு வரலாறாகவோ அல்லது ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாகவோ மாறுகிறது.

இங்கே மிக முக்கியமானது முடிவெடுப்பதுதான்.

சரி. நீங்கள் யார்? எதற்காக பிறந்தீர்கள்? உங்கள் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? நீங்கள் யாருக்காக வாழப்போகிறீர்கள்? உங்களுக்காகவா? உங்கள் குடும்பத்திற்காகவா? உங்கள் சமூகத்திற்காகவா? உங்கள் நாட்டிற்காகவா? அல்லது உங்கள் அழகான காதலிக்காகவா? இதற்கு விடை கிடைத்துவிட்டால்  போதுமானது. நீங்கள் யார் என்று கண்டுபிடித்துவிடலாம்.

சிலருக்கு இலட்சியங்கள் அவ்வபோது மாறிக்கொண்டே இருக்கும். முடிவுகளை அடிக்கடி மாற்றும் ஒருவர் பாதைகளையும் அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். அது மேலும் பல சிக்கல்களை உருவாக்கும்.

சிலர் ஒரே லட்சியத்தில் பல வருடங்கள் வெற்றியடையாமல் இருப்பதுண்டு. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்தபோது அவர் தன்னுடைய லட்சியத்தை என்னிடம் கூறினார். அதாவது, அவர் ஒரு அரசு அதிகாரி ஆகவேண்டும் என்பதே அந்த லட்சியம். மீண்டும் பலமுறை அவரை சந்தித்தபோதும் அவர் அதே லட்சியத்தை கூறினார்.

"கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்ணிட்ருக்கேன் ஜீவா" என்று சில வருடங்களுக்கு முன்பு  நான் சந்தித்த போதும் அதையே கூறினார். ஆகா அவர் தன்னுடைய லட்சியத்தை மாற்றவுமில்லை அடையவுமில்லை. அவர் யார் என்பதும் அவருடைய வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதும் கடைசிவரை அவருக்கு புரியாமலேயே போயிற்று. இப்போது அவர் அரசு வேலைக்கான வயதுவரம்பை கடந்து வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

வெறும் லட்சியத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அதற்கான சரியான முயற்சியோ முடிவோ எடுக்கவில்லை எனில், உங்கள் லட்சியம் தண்ணீரின் மேல் எழுதிய எழுத்தாக மட்டுமே இருக்கும்.

நீங்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை நீங்களே  கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். உங்கள் வாழ்க்கையின் உண்மையான லட்சியம் அகப்ப்படும்வரையில் கேட்டுக்கொண்டே இருங்கள். உங்களுக்காக சில லட்சியங்களை பட்டியலிடுகிறேன்

உறவுகள் சார்ந்த இலட்சியங்கள்

குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது, காதலியை கைபிடிப்பது, அண்ணன் தம்பிகள் சேர்வது, இழந்த பூர்வீக சொத்தை மீட்பது, அப்பா அம்மாவை உலக சுற்றுலா அனுப்புவது, தங்கையின் திருமணம், குடும்பத்துக்காக ஒரு பெரிய வீடு கட்டுவது அல்லது பிரிந்த உறவுகளை சேர்ப்பது போன்றவை அடங்கும்.

தொழில் அல்லது வேலை சார்ந்த இலட்சியங்கள்

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் அல்லது அரசு வேலையில் சேர்வது, குறிப்பிட்ட ஊதியம் பெறுவது, தொழில் வளர்ச்சி பெறுவது, புதிதாக ஏதேனும் கண்டறிவது மற்றும் புதிதாக சாதனை புரிவது போன்றவை அடங்கும்.

பணம் சார்ந்த இலட்சியங்கள்

உங்கள் லட்சியம் எதுவாயினும் அதனூடே பயணிப்பது நம் கண்களுக்கு புலப்படாத பணமும்தான். வாழ்வில் பணம் மிகவும் முக்கியமானது என்பதை அனைவரும் அறிவர்.

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை " - திருவள்ளுவர்

"பணம் பத்தும் செய்யும்" - பழமொழி

"காசேதான் கடவுளடா" -  பேச்சுவழக்கு

உண்மையிலேயே உலகின் மாபெரும் சாதனையாளர்கள் ஆகக்கூடிய தகுதிகள் அத்தனையும் இருந்தும் சாதிக்காமல் போனவர்கள் எத்தனையோ! அந்த பட்டியலில் நீங்கள் வேண்டாமே!

இந்த உலகம் மோசமானது என்று குறைசொல்லி நாம் ஒதுங்க முடியாது. ஏனெனில் பல சமயங்களில் நாமும் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். பணம் இல்லாத ஒரு சாமான்யனிடமும் பெரும் பணம் படைத்த பணக்காரனிடமும் நாம் ஒரே மாதிரி நடந்து கொள்வதில்லை. பணம் இல்லாதவன் உண்மையிலேயே நாயை விட கேவலமானவனாகத்தான் கருதப்படுகிறான்.

நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் விழைந்தால், நீங்கள் யார் என்பதை உலகிற்கு உணர்த்த உங்களுக்கு பணம் அவசியம் தேவை. நீங்கள் யாராக இருந்தாலும் சரி நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ உங்களுக்கு தேவையான ஒன்று பணம்தான்.

பணம் பெரிதல்ல என்று நினைப்பவர்கள் எவரும் அதை வைத்துக்கொண்டிருப்பவர்கள்தான். மேற்கொண்டு படியுங்கள். இந்த வலைப்பூவின் மற்றபிற பக்கங்கள் பணத்தின் வாசனையை உங்கள் அருகே கொண்டுவரும்.


எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம்.

இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும்.

இந்த இதழ் முழுவதும் பரவிக் கிடக்கின்ற எண்ணங்கள் பற்றிய கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாகப் படியுங்கள். ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். உங்கள் எண்ணங்களோடு இக் கருத்துகளை இணைத்துப் பாருங்கள்.

எடுத்த எடுப்பில் சில கருத்துக்கள் உண்மை என்று உணர்வீர்கள்.

இரண்டாம் மூன்றாம் முறை இந்த இதழைப் படியுங்கள். எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு என்பதை உணர்வீர்கள்.

உங்களுக்கான நல்ல எண்ணங்களைத் தேர்ந்து எடுங்கள். அதை நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள்.

சந்தேகம் இருப்பின் எழுதுங்கள். அடுத்த இதழல் அதற்கான பதிலைப் பெறலாம்.

எண்ணங்களின் தோற்றம்

மனத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள பதிவுகளிலிருந்து எண்ணங்கள் தோன்றுகின்றன. இவை இயல்பாகத் தோன்றும் எண்ணங்களாகும்.

நடைமுறை வாழ்க்கையில் தோன்றும் எண்ணங்கள்

அறிகுறியால் தோன்றும் எண்ணங்கள்
இயல்பான உணர்ச்சியால் தோன்றும் எண்ணங்கள்
கேள்வியால் தோன்றும் எண்ணங்கள்
காட்சியால் தோன்றும் எண்ணங்கள்
பழக்கத்தின் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்
சிந்திப்பதன் காரணமாகத் தோன்றும் எண்ணங்கள்.
எண்ணங்கள் பதிவாகும் இடங்கள்

நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் விண்வெளயில் பதிவாகின்றன.
எண்ணங்கள் நம் மனதிரையில் பதிவாகின்றன.
எண்ணங்கள் நம் முகத்திரையில் பதிவாகின்றன
எண்ணங்கள் நம் கண்களில் பதிவாகின்றன.
எண்ணங்களை வகைப்படுத்துதல்

மனதில் தோன்றும் எண்ணங்களை குறித்து வைத்துக் கொண்டு பாகுபடுத்தி ஆராய வேண்டும்
எண்ணம் உருவாக ஒரு பின்னணி வேண்டும். நாம் அடைய விரும்பும் இலட்சியத்தைப் படமாகப் பார்க்கும் கற்பனை திறன் வேண்டும்.
தீய எண்ணங்களால் ஏற்படும் விளைவுகள்

மனம் வெற்றிடமாக இருக்கும் போது தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.
எதையும் காம இச்சையோடு பார்க்கும்போது தீய எண்ணங்கள் தோன்றுகின்றன.
பிறரைக் குறைகூறும்போது அந்த எண்ணங்களால் குறை கூறியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
மனம் ஓய்ந்திருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் தீய எண்ணங்கள் நுழைந்து விடுகின்றன. தீய எண்ணங்கள் தீமையையே விளைவிக்கின்றன.
முரண்ப்பட்ட எண்ணங்கள் முரண்பட்ட விளைவுகளையே உண்டாக்குகின்றன.
எண்ணங்களால் பற்றும் பற்றினால் ஆசையும், ஆசையால் கோபமும் உண்டாகின்றது.
எண்ணங்களைக் கட்டுப் படுத்தும் முறை:

எண்ணங்களைக் கட்டுப் படுத்த அளவு கடந்த முயற்சியும் பொறுமையும் தேவை
தேவைகளையும் குறைப்பதால் மட்டுமே ண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும்.
எண்ணத்தை வெல்வது என்பது நம்மிடம் உள்ள குறைகளை வெல்வது ஆகும்
.

இறை வழிபாட்டால் எண்ணங்களைக் கட்டுப்டுத்தலாம்.
தியாகங்கள் செய்வதால் எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம்.
முறையான பழக்க வழக்கங்களால் எந்த வகையான எண்ணங்களையும் கட்டுப்படுத்தலாம்.

வெற்றியின் படிமுறைகள்

நமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும்.

இது ஏன்? என்ன காரணத்தினால் ?.

அதீக நம்பிக்கை
சோம்பல்த்தனம்
அலட்ச்சியப்போக்கு


சரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம்.

மனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்)
பிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம்
மீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில் பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறு அட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள்
இவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு மூன்று தரம் ஆராய்ந்து பார்த்தால் பிரச்சனைக்குரிய அடிப்படைக்காரணத்தை கட்டாயம் அறியலாம்
இப்பொழுது பிரச்சனை ஒரு நெல்லிக்காயளவு இருப்பதை உணர்வீர்கள்.இதனை தீர்க்கும் வழிமுறைகளைளும் தெளிவாக வடிவமைக்கப்பட்டுவிடும்
வெற்றியானது உங்களுக்கு இலவசமாகவும் நிரந்திரமாகவும் கிடைத்துவிடும்
ஆகவே மேற்சொல்லப்பட்ட படி முறையானது அநுபவத்தில் இருந்துபெறப்பட்டதாகும்

வெற்றி தரும் எண்ணங்கள்

வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து

"வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்.வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும். மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது"     -  வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்)

"நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது "   -    வில்லியம் ஜேம்ஸ்

"எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது "- கவிஞன் கதே

"தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது "- டாக்டர்  வால்டர் ஸ்கட்

"நாம் என்ன  நினைக்கிறோமோ ,அதுவாகத்தான் நாம் இருக்கிறோம் .நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும் அதுதான் நிர்ணயிக்கிறது "-  டாக்டர் எம்.ஆர். காப்மேயர்

"ஒருவன் எதை நினைக்கிறானோ ,அதுவாகவே இருக்கிறான் "-பைபிள்

"நாம்  இப்போது எப்படி இருக்கிறோமோ என்பது இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது "-புத்தர் 

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது படலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.


உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.


November 7, 2013

ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போது....


நமது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதாரம் பணம். அந்த பணத்திற்காகவே மக்கள் பணிபுரிகிறார்கள். அந்த வகையில், முடிந்தளவு அதிக சம்பளம் வாங்குவதே பலரின் குறிக்கோளாக இருக்கிறது. பணி திருப்தி மற்றும் வாழ்க்கை திருப்தி என்பது பலருக்கும் இரண்டாம்பட்சம்தான்.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒருவர், தான் பணியாற்றிவரும் நிறுவனத்தில் வாங்கும் ஊதியத்தைவிட, வேறு நிறுவனம் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை அதிகமாக கொடுக்க முன்வந்தால், வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல், உடனேயே அப்பணிக்கு மாறிவிட துடிக்கின்றனர். மாறியும் விடுகின்றனர். ஆனால், வெறுமனே சம்பளம் என்பதற்கு பின்னால், யோசிக்க வேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன.

எங்கோ ஓரிடத்தில்!

உங்களுக்கு பணி வாய்ப்பை அளிக்கும் புதிய நிறுவனம், உங்களுக்கு கார்பரேட் அலுவலகத்தில் பணி என்று சொல்லிவிட்டு, பின்னர், உங்களை அதன் ஏதோவொரு தூரத்திலுள்ள கிளைக்கோ அல்லது பிளான்டிற்கோ அனுப்பிவிட வாய்ப்புண்டு.

அந்த இடங்களில், சரியான பள்ளிக்கூட வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ மற்றும் இதர அடிப்படை வசதிகளோ முறையாக இருக்காது. எனவே, சம்பந்தப்பட்டவரது குழந்தைகளும், குடும்ப உறுப்பினர்களும் நெருக்கடிக்கு ஆளாகலாம்.

மொழி, கலாச்சார பிரச்சினை

மேலும், பெரிய நிறுவனமாக இருந்தால், அதன் கிளைகள் வெளி மாநிலங்களிலும் இருக்கலாம். எனவே, அங்கே நீங்கள் மாற்றப்பட்டால், மொழி பிரச்சினையில் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும்தான்.

மொழிப் பிரச்சினை மட்டுமின்றி, மாநிலம் மாறிச் செல்லுகையில், கலாச்சார பிரச்சினைகளும் மிக அதிகம். அங்கேயுள்ள உணவுப் பழக்கம் உங்களுக்கு ஒத்துவராமல் போகலாம் மற்றும் அதைப் பழகிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும். மேலும், அங்கேயுள்ள காலநிலையும் உங்களுக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

பணி திருப்தி

முந்தையப் பணி உங்களுக்கு திருப்தியானதாகவும், சிக்கல்கள் குறைவானதாகவும் இருந்திருக்கும். ஆனால், அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்திற்காக வேறு பணிக்கு மாறியிருப்பீர்கள். ஆனால், அந்தப் பணி உங்களுக்கு திருப்தியானதாக அமையாமல் போகலாம்.

இதன் காரணமாக நமது சந்தோஷம் காணாமல் போய், ஏன் இங்கு வந்தோம் என்று வருந்துமளவுக்கு தள்ளப்படுவோம். எனவே, ஊதியம் மட்டுமே ஒருவருக்கு பணி திருப்தியை கொடுத்துவிடாது.

முன்னேற்றமின்மை

நாம் மாற நினைக்கும் பணியில், சம்பளம் கூடுதலாக கிடைக்கலாம். ஆனால், அதில் எதிர்கால முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் எந்தளவு இருக்கின்றன என்பதை கட்டாயம் நாம் பார்க்க வேண்டும். இல்லையெனில், இன்று சில ஆயிரங்களுக்காக ஆசைப்பட்டு நாம் அவசரப்பட்டு பணி மாறினால், நாளை கவுரவமான பதவி உயர்வையும், வேறு பல சலுகைகளையும் இழக்க நேரிடலாம்.

மீண்டும் பழைய இடத்திற்கே...
   
ஒருவர், அதிக சம்பளம் கிடைக்கிறது என்று அவசரப்பட்டு, வேறு நிறுவனங்களுக்கு மாறுகிறார். அந்த நிகழ்வின்போது, பழைய நிறுவனம் அவரை தக்கவைக்க முயற்சிக்கிறது. முடியாதபோது, அவரின் அதுவரையிலான சேவையைப் பாராட்டி, அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்.

ஆனால், புதிதாக போன இடத்தில் ஒத்துவராமல், அவர் மீண்டும் பழைய நிறுவனத்திற்கே வந்து, அதே வேலையை தருமாறு கேட்கும் தர்மசங்கடமான சூழல் சில சமயங்களில் எழுகிறது. ஆனால், அவரது பணியிடம் வேறு ஒருவரால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே, அவருக்கு வேறுவொரு முக்கியமற்ற பணி ஒதுக்கப்படலாம்.

அப்போது, தனது பழைய மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை இழந்து, அவர் பரிதாபகரமான நிலையில், பழைய நிறுவனத்தில், தர்மசங்கடமான சூழலில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மேலும், வேறுசிலரோ, பழைய நிறுவனத்திற்கு திரும்ப மனம் இடம்கொடுக்காமல், புதிதாக சேர்ந்த இடத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, வேறு பொருத்தமான பணிக்காக அலைந்து கொண்டிருப்பார்கள் அல்லது வேறு சரியான பணி கிடைக்காமல், அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள்.

எனவே, ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதற்கு முன்னதாக, வெறுமனே சம்பளத்தை மட்டும் கணக்கில் வைக்காமல், பணி திருப்தி, பணிச் சூழல், நிறுவனத்தின் தன்மை, சக பணியாளர்கள், பணிபுரியும் இடம், பணி மாறுதலுக்கான வாய்ப்புகள், குடும்பச் சூழல் மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு முடிவெடுப்பதே புத்திசாலித்தனம்.

மனதில் இருக்கும் சக்தியை பயன்படுத்துங்கள்..!!!


மின் உற்பத்தி நிலையத்தில் தொடரந்து மின்சக்தி உற்பத்தியாகி வருதைப் போன்று,மனதில் ஆக்கச் சக்தி உற்பத்தியாகி வருகிறது.  கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்து நீர் மட்டம் பழைய அளவுக்கு வந்துவிடுதைப் போன்று,நாம் செலவு செய்யும் சக்தி சமமாக உங்களுடைய மனதில் புதிய சக்தி உருவாகிவிடுகிறது.

சாம்பல் பூத்துக்கிடக்கும் நெருப்பை ஊதி கொழுந்துவிட்டு எரியச் செய்வதைப் போன்று, மனதில் முடங்கிக்கிடக்கும் சக்தியை எண்ணங்களின் உதவியைக்கொண்டு விஸ்வரூபமாக வெளிவரச்செய்ய முடியும்.  சாதாரண எண்ணங்களை நினைத்து வருபவன் பூமியில் நெளியும் புழுவைப் போன்று அவலமாக வாழ்ந்து வருவான்.. பெரிய எண்ணங்களை நினைத்து வருபவன், ராக்கெட்டைப் போன்று சீறிப் பாய்ந்து, மனித இனத்தை முனேற்றப் பாதையில் அழைத்துச்செல்லுவான்.. 


தன்னிடம் இருக்கும் திரண்ட செல்வத்தை சிறிது கூட பயன்படுத்திக்கொள்ளாமல் சாவைத் தழுவும் கஞ்சனைப் போன்று, நிறைய பேர்கள் தங்கள் மனதில் மறைந்திருக்கும் சக்தியை சிறிதுகூட பயன்படுத்திக் கொள்ளாமல் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து மறைந்து வருகிறார்கள்.  தன் மனதில் இருக்கும் சக்தியை முழுக்கப் பயன்படுத்திக்கொள்ள ஒருவன் பயன்தரும் எண்ணங்களை முதலில் நினைக்க வேண்டும்.

கடினமான உழைப்பின் துணையைக் கொண்டு ஒருவன் தான் நினைத்தவைகளைச் செய்து முடித்து, தன்னை ஒரு சரித்திக் கதாநாயகனாகவோ, மாபெரும் ஆராச்சியாளனாகவோ, உலகம் போற்றும் இலக்கியப் படைப்பாளியாகவோ அல்லது தொழில் சாம்ராஜ்யத்தின் மகா சக்கரவர்த்தியாகவோ தன்னை உயர்த்திக்கொள்ள முடியும்.


எண்ணங்கள் கனவு போன்றவைகள்தான்.. கடினமான உழைப்பின் மூலம்தான் நீங்கள் உங்கள் கனவுகளை நனவாக்க முடியும்.


நிறைய பேர்கள், சுயநலம் கலந்த முன்னேற்றம் தராத எண்ணங்களை அனைத்து நேரமும் நினைத்து வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரே மாதிரியான எண்ணங்களை நினைப்பதைத் தவிர்த்து, புதிய மாபெரும் இலட்சியங்களைப் பற்றி நினைத்து வருவதைப் பழகமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..

இந்தப் பழக்கம் உங்களிடம் இருக்கும் ஆக்கச் சக்தியை பல மடங்களுகளாக அதிகரிக்கும்படி செய்து விடும்.  கற்பனைத் திறனை வளர்த்து, புதிய சிந்தனைகளை நினைத்து வருபவனால்தான், பல சாதனைகளைப் படைக்க முடியும்.

'ஏழ்மையும், சௌகரியங்கள் நிறைந்த வாழ்க்கையும் எண்ணங்களின் குழந்தைகள்தான்' என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார்.. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருபவன், தன் இயலாமையையும், இல்லாமையையும் நினைத்து அழுது புலம்பி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பவனாகத்தான் இருப்பான். 'என்னிடம் திறமையிருக்கிறது. மற்றவர்கள் செய்து முடித்திருப்பதை என்னாலும் செய்ய முடியும்' என்ற நம்பிக்கை கலந்த எண்ணங்களை நினைத்து வருபவன், நிறைய பணம் சம்பாதித்து அனைத்து சௌகரியங்களையும் அனுபவித்து வாழ்ந்து வருவான்...

நம் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை நாம் மாற்றிக்கொள்ளும்போது, நம் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுவதை நாம காண முடியும்.

எண்ணங்களுக்கு எல்லையே இருக்கக்கூடாது.  ஆனால் அநேகமாக அனைவரும் தங்கள் எண்ணங்களுக்கு எல்லைகளை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வருகிறார்கள். பெரிய எண்ணங்கள்தான் மாபெரும் மாற்றங்களை உருவாக்கும்.. வாழ்க்கையில் முன்னேறி நல்லவைகளைச் செய்ய விரும்புகிறவர்கள், தங்களுடைய எண்ணங்களின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

உங்களுடைய எண்ணங்களின் பிரதி பிம்பமாகத்தான் நீங்கள் இருக்கப் போகிறீர்கள்..

நீங்கள் கடந்த காலத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை நினைத்து வந்திருக்கிறீர்கள் என்பதைப ்பொறுத்து நீங்கள் தற்போது வாழ்ந்து வரும் வாழ்க்கை அமைந்திருக்கும். இதுநாள் வரையில் நீங்கள் கண்டு வந்த ஒட்டுமொத்த சிந்தனைதான் உங்களை இப்போது நீங்கள் இருக்கும் நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பதை நாம் முழுவதும் உணரவேண்டும்..

இதைப் போன்றே அடுத்து வரும் நாட்களிலும் நம் எண்ணப்படியே நமது வாழ்க்கையும் அமையும்.

உதாரணத்திற்கு, குமாஸ்தா வேலையே தனக்கு போதும் என்று நினைத்து வருபவன் தன்னை அதிகாரியாக நிச்சயம் உயர்த்திக்கொள்ள முடியாது.

எனவே எண்ணங்களை மேம்படுத்துங்கள்.. உங்கள் மனசக்தியை முழுவதுமாக பயன்படுத்துங்கள்.. நிச்சயம் வாழ்வில் உயர்நிலையை அடையலாம்.. உலகப் புகழ் பெறலாம்.



நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்?



ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு மனிதர் எவ்வாறு உணர்கிறார், சிந்திக்கிறார், அதுதொடர்பாக அவரது நடத்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, ஒரு தனிமனிதனின் குணநலன் தீர்மானிக்கப்படுகிறது. இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள்? என்ற கேள்விக்கு மிக எளிதான் விடையை அளிக்கலாம். வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர்.
உதாரணமாக, தாகம் கொண்ட ஒரு மனிதர், ஒரு வீட்டில் நுழைகையில் அவருக்கு பாதியளவு தண்ணீர் நிரம்பிய ஒரு தம்ளர் தரப்படுகிறது. அதைப் பார்த்ததும் அவர் திருப்தியடைந்தால், அவர் நேர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். மாறாக, அதிருப்தியடைந்தால், எதிர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். ஏனெனில், திருப்தியடைபவர், பாதியளவு தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்கிறார். எதிர்மறை எண்ணம் உள்ளவரோ, அந்த தம்ளர் பாதியளவு காலியாக இருப்பதைப் பார்க்கிறார். எனவே எதிர்மறை எண்ணம் உள்ளவரைவிட, நேர்மறை எண்ணம் உள்ளவர் சிறிய விஷயங்களில் அதிக திருப்தியடைகிறார்.
மேலும், சுய நம்பிக்கை, வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பண்புகளும் அவருக்கு இருப்பதால் அவரின் வெற்றி மிகவும் எளிதாகிறது.
"ஒருவர் தோல்வியடைந்தால் அவருக்கு ஏமாற்றம் கிடைக்கத்தான் செய்யும். அதற்கு பயந்து ஒருவர் முயற்சியே செய்யாமல் இருந்தால் அவர் பிணத்திற்கு சமம்"
என்று ஒரு பொன்மொழி உண்டு.
நாம் இந்த வகையில்தான் சிந்திக்கப் பழக வேண்டும். நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்களோ, அவ்வாறே உங்களின் நடத்தையும் இருக்கிறது. நேர்மறை எண்ணம் இருந்தால், சிறுசிறு தடைகள் உங்களின் லட்சியத்தை அடைவதை தடைசெய்ய முடியாது.
"நீ எங்கே இருக்கிறாய், உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து உன்னால் முடிந்ததை செய்"
"உனக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதை மாற்றிவிடு. ஒருவேளை அதை மாற்ற முடியவில்லை என்றால், உன்னை நீ மாற்றிக்கொள். அதற்காக குறை கூறிக்கொண்டு இருக்காதே"
"ஒரு உண்மை அறிவாளி என்பவர் 1% மட்டுமே உந்துதலைக் கொண்டிருப்பார். ஆனால் 99% கடும் முயற்சியைக் கொண்டிருப்பார்"
போன்றவை பிரபலமாக பொன்மொழிகள்.
* நமது லட்சியத்தை அடைய, நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து இயங்குகிறது. நமது பணி மற்றும் சமூக சூழல் போன்றவை நமது எண்ணம் மற்றும் செயல்பாட்டில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
* ஒரு நேர்மறை சிந்தனையாளர், தடைக் கற்களைப் படிக்கற்களாகவே நினைக்கிறார். ஒரு தோல்வியைப் பற்றி சிந்திக்கும்போது, அது எந்தளவு நம்மை காயப்படுத்தியது என்பதைப் பற்றி சிந்திக்காமல், அது எதனால் ஏற்பட்டது என்பதைப் பற்றி சிந்தித்து, அது மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், இயற்கையாகவே அந்த எண்ணத்துடன் பிறக்கிறார்களா? அல்லது காலப்போக்கில் அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்களா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. பொதுவாக, ஒரு மனிதனின் குணநலன் என்பது, அவரது வாழ்க்கையின் உருபெறும் காலகட்டத்தில் வடிவமைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் உருவாக்க காலகட்டமானது, குடும்பம், பள்ளி, சமூகம், மீடியா, தொலைக்காட்சி, அரசியல், மதம் மற்றும் கலாச்சாரப் பிண்ணனி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது மற்றும் அந்த அனைத்து அம்சங்களும் ஒரு மனிதனின் மனநிலை உருவாக்கத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
* எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் வாழும்போதும், அத்தகைய கலாச்சாரத்தைப் பின்பற்றும்போதும் ஒருவரால் நேர்மறையாக சிந்திப்பது கடினம். எனவே, அத்தகைய ஒரு எதிர்மறை அம்சத்திலிருந்து விடுபடுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
"ஒரு இயந்திரம் 50 சராசரி மனிதர்களின் வேலைகளை செய்யும். ஆனால் எந்த ஒரு இயந்திரமும், ஒரு குறிக்கோளுடைய அசாதரண மனிதனின் வேலையை செய்துவிட முடியாது"
இதுவும் ஒரு புகழ்பெற்ற பொன்மொழிதான்.
ஒரு நேர்மறை எண்ணம் கொண்ட மனிதரை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் அவரது குணாதிசயங்கள் எவ்வாறு இருக்கும்? இது மிகவும் எளிது.
* நேர்மறை மனிதர்கள் பணிவானவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும், நம்பிக்கை மற்றும் பொறுமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும், முயற்சிசெய்ய எப்போதுமே ஆவலாக இருப்பார்கள். அந்த மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகவும் பெரியளவில் இருக்கும். அத்தகைய மனிதர்கள் எல்லாவித சூழல்களிலும் வரவேற்கப்படுவார்கள்.
* அத்தகைய மனிதர் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் சூழலையே மாற்றி விடுவார். நடந்துவிட்ட துன்பங்களை இறந்த காலமாக கருதி, சிறப்பான எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.
* ஒரு மனிதர் நேர்மறை எண்ணமுள்ளவராக மாறுவதில் ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. இதன்மூலம், உற்பத்தி அதிகரிக்கும், குழுமுயற்சி ஊக்குவிக்கப்படும், பணி செய்யும் சூழல் மேம்படும், பணியின் தரம் அதிகரிக்கப்படும் மற்றும் மனித உறவுகள் மேம்படும், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும், நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் அத்தகைய எண்ணம் உள்ள மனிதரின் தோற்றத்திலும் நல்ல மாறுதல் ஏற்பட்டு, பலரை கவரும் விதத்தில் இருக்கும்.
* நேர்மறை சிந்தனையால் மேற்கண்ட ஏராளமான நன்மைகள் ஏற்படும் அதேவேளையில், எதிர்மறை எண்ணத்தால், பகைமை சிந்தனை, ஆரோக்கிய குறைபாடு, கசப்புணர்வு மற்றும் கடும்கோபம் போன்றவை ஏற்படும். ஒரு எதிர்மறை சிந்தனையாளர் தன்னை கெடுத்துக்கொள்வது மட்டுமின்றி, தான் சார்ந்த ஒட்டுமொத்த சூழலையும் கெடுக்கிறார். அவரது வாழ்க்கையில், அனைத்துவித உறவுகளுமே நிலையற்றதாகவே இருக்கும்.
* எதிர்மறை எண்ணங்கள் இவ்வளவு ஆபத்தானவை என்று தெரிந்தபோதும், பலர் ஏன் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. அதற்கு காரணம், அவர்கள் தங்களின் எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர விரும்புவதில்லை மற்றும் அந்த மாறாத நிலையின் ஒரு பகுதியாகவே அவர்கள் இருக்கிறார்கள். மாற்றமானது, நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. எனவே, இத்தகைய மனிதர்கள் முதலில் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.
* ஒருவர் மற்றவரின் மனதை வசியம் செய்து மாற்றிவிட முடியாது. ஒவ்வொருவருமே, மனதளவில், மாற்றத்திற்கான கதவை திறக்க முடியாதவாறு வாயிற்காப்போனாக நிற்கிறோம். எனவே ஒருவர் மனதை விவாதம் செய்தோ அல்லது உணர்ச்சி வகையிலோ மாற்றிவிட முடியாது. அந்த முயற்சியானது ஒவ்வொருவரின் உள்மனதிலிருந்து தொடங்க வேண்டும்.

எண்ணங்களை மேம்படுத்துங்கள்! வாழ்க்கையை வெற்றி கொள்ளுங்கள்!





இன்று காலை,டொயோடா  கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவுட்சோர்சிங் பற்றி திரு டோண்டு ராகவன் எழுதிய ஒரு பதிவில் என்னுடைய பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு, இரு வேறு பதிவர்கள் தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்வு, பதிவில் பேசப்பட்டிருந்த விஷயத்தை முழுக்க மறந்து விட்டு, விவாதங்களைத் திசைதிருப்புகிற மாதிரியாக எழுதியிருந்ததைப் படிக்கவும் நேர்ந்தது.

நேற்றுத் தான் மனிதவளம் என்ற  குறியீட்டில் Just Enough Anxiety என்ற தலைப்பில் திரு ராபர்ட் ரோசென் எழுதியிருந்த புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்பீட்டை, கொஞ்சம் மறுபடியும் திருத்தம் செய்து மீள் பதிவாக எழுதியிருந்தேன்.

சுய முன்னேற்றம், மனித வளம், எண்ணங்களை மேம்படுத்துதல், மேலாண்மை, நிர்வாகம், சந்தைப் படுத்துதல் முதலான எனக்குப் பிடித்தமான துறைகளில் படித்ததும் பிடித்ததுமான புத்தகங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற எண்ணம்,  இந்த மாதிரி எதிர்மறையான கருத்துக்களைப் படித்த பிறகு, இன்னமும் வலுவானது.

எசைப்பாட்டு என்ற அளவில் அவர்கள் தொனியிலேயே நிச்சயமாக இந்தப் பதிவுகளைத் தொடரப்போவதில்லை என்பதோடு, இந்தப் பக்கங்கள் புத்தகங்களுக்காக மட்டும், வாசித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே என்ற உறுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

டொயோடா வே என்ற புத்தத்தை  என் சேகரத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, பதினேழு வருடங்களுக்கு முனனால் வாங்கிய "எண்ணங்களை மேம்படுத்துங்கள்" என்ற புத்தகம் கையில் கிடைத்தது. டாக்டர் மரியான் ரூடி காப்மேயர் எழுதிய Thoughts to build on புத்தகத்தின் தமிழ் வடிவம்
இது.

திரு பி சி கணேசனின் சரளமான மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வெளி வந்தது. நீண்ட நாட்களாகிவிட்ட படியால், மறுபடியும் இந்தப் புத்தகத்தை இன்று படித்துமுடித்துவிட்டேன்.

படித்தவுடனேயே, இந்தப் புத்தகம் தோற்றுவித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு!

எண்பது சிறு அத்தியாயங்களாக, புத்தகம் என்றால் ஒரே  தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல், ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அறிமுகப் படுத்துகிற விதத்தில் சுமார் முன்னூறு பக்கங்களில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது.

உங்களுக்காகச் சிந்திப்பதாக, அல்லது உங்களை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுவதாக எந்த ஒரு பொய்யான வாக்குறுதியும் இல்லாமல், படிக்கும்போது, உங்கள் அனுபவங்களைத் தொட்டு நீங்களே தொடர்ந்து யோசிக்கத் தூண்டுகிற விதத்தில் எழுத பட்டிருக்கும் புத்தகம் இது!

ஆங்கில மூலம் வெளிவந்து முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற எண்ணமே எழாமல், இன்றைக்கும் பொருந்துகிற மாதிரிப் பொதுவான நடையில், சிந்தனையில் சுய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இருக்கக் கூடிய புத்தகம் இது.

தமிழில், இந்தப் புத்தகத்தின் இன்றைய விலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் 2007 பதிப்பு ரூபாய் அறுபத்தைந்துக்குக் கிடைக்கிறது.  இந்தப் புத்தகத்தில் இருந்து, ஒரு சிறு பகுதி, நீங்களே படித்து, புத்தகத்தின் அருமையை மதிப்பிடுவதற்குஉதவியாக!.


"பல ஆண்டுகளுக்கு முன், எல்லாமே ஒன்று கருப்பாக இருக்க வேண்டும், அல்லது வெண்மையாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியது உண்டு. ஒன்று, இந்தக் கோடியில் நிற்பேன். அல்லது, அந்தக் கோடியில் நிற்பேன். அசையாமல் நிற்பேன். என்ன இழப்பு நேரிட்டாலும் அந்த நிலையிலேயே உறுதியாக நிற்பேன்.

என்னுடைய நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டும் இருக்காது. மற்றவர்களுக்கு சவால்களாகவும் இருக்கும்.

நிர்வாகி ஒருவர், வேலை செய்யும் தன்னுடைய மேஜையின் மீது ஓர் அறிவிப்பை வைத்திருந்தார். "எதையும் சிந்தித்து முடிவெடுங்கள். நான் சொல்கிறபடி  செய்யுங்கள்!" இது தான் அந்த அறிவிப்பு!

நானும் இந்த ரகம் தான். அது அந்தக் காலம். இப்போது முன்பை விட வயது எனக்குக் கூடி விட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல நானும் மாறிவிட்டேன். சரியாகச் சொல்ல வேண்டுமானால், அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டேன்.

மற்றவர்கள் வெற்றி பெறுவதைப் பார்த்துப் பார்த்து....அமைதியாக...நளினமாக...நிச்சயமாக....வெற்றிக்கான வழி எனக்கு விளங்க ஆரம்பித்து விட்டது. முன்னிலும் சிறந்த வாழ்க்கை எனக்குப் புரிய ஆரம்பித்து விட்டது.

என்னைச் சுற்றி நான் எழுப்பிக் கொண்ட கோட்டைச் சுவர்களைத் தாண்டி நான் வளர ஆரம்பித்து விட்டேன். கோட்டையின் அசையாத தன்மையே அதை ஒரு சிறைச் சாலையாக்கி விடுகிறது.

தற்காத்துக் கொள்ள எதுவும் இல்லாதபோது, கோட்டை எதற்காக? லட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்வதில் கோட்டையின் பங்கு எதுவும் இல்லை. முன்னேறி நகர்ந்து சென்று கொண்டே இருப்பது தானே வாழ்க்கை!

வாழ்க்கையில், சாம்பல் நிறமான பகுதி ஒன்று இருப்பதையும் புரிந்துகொண்டேன். எல்லாமே, ஒன்று வெள்ளையாகவோ, அல்லது கருப்பாகவோ தான் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எதுவுமே முற்றிலும் சரியானதாகவோ தவறானதாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை! எல்லாமே கருப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ இளைஞர்களுக்குத் தோன்றலாம். முதிர்ச்சி அடையாத வளர்ந்தவர்களுக்கும் தோன்றலாம். வேலை நிறுத்தம், கண்டன ஊர்வலம், உள்ளிருப்பு வேலை நிறுத்தம் போன்ற அனைத்திற்கும் இதுவே காரணம்.

இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பார்த்து உலகம் புன்முறுவல்  பூக்கிறது. அவர்களின் செயல்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து அல்ல! ஆனால், உலகம் தன்னுடைய காரியங்களை சாம்பல் நிறப் பகுதிகளில் தான் நிறைவேற்றிக் கொள்கிறது. அனுபவம் போதாத நாட்களில், இந்த உண்மை எனக்குப் புரியவில்லை.

கருமையின் விளிம்பும், வெண்மையின் விளிம்பும் ஒன்றிக் கலக்கிற பகுதிதான், நான் இது வரை சொன்ன சாம்பல் நிறப்பகுதி. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இணக்கம் ஆகிற பகுதியும் இது தான்!

சாம்பல் நிறப்பகுதியில் தான்  ஒவ்வொருவருடைய கருத்தும் கவனத்துடன், மரியாதையுடன் பரிசீலிக்கப் படுகிறது. இங்கே தான் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் பரஸ்பர ஆதாயத்தைப் பெறுகிறார்கள். இந்தப் பகுதியில், பேரங்கள் கொஞ்சம் கடுமையானதாக இருக்கலாம், கொஞ்சம் சாதுர்யமானதாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், ஒத்துழைப்பைப் பரிமாறிக் கொள்ளவும் இந்தப் பகுதி தான்  வழிவகுத்துக் கொடுக்கும் இடமாகவும்  இருக்கிறது.

சாம்பல் நிறப்பகுதியில், தொடர்ந்து பேச முயற்சித்தோமேயானால், பயனுள்ள முடிவுகளுக்கு வர முடியும். இல்லை என்றால் கருப்பு-வெள்ளை என்ற நேரெதிர் நிலையில் தான் நின்று கொண்டே இருக்க வேண்டும்.

இந்த சாம்பல் நிறப்பகுதியில் தான், கூட்டுச் சிந்தனை உருவாகிறது. அனைவருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளக் கூடிய பயனுள்ள முடிவுகளும் இங்கே தான் சாத்தியமாகிறது.

'உலகத்தில் எல்லா விஷயங்களுமே இப்படித்தான்-- ஒன்று கருப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ தான் இருந்தாக வேண்டுமென்ற அவசியமே இல்லை' என்பதைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி அடைந்ததற்காக சந்தோஷப்படுகிறேன். கருத்துக்கள், அபிப்பிராயங்கள் எல்லாம் சங்கமிக்கிற இடம் தான் சாம்பல் பகுதி.  இங்கே நல்லெண்ணத்தோடு சந்திக்க முடிகிறவர்களுக்கு, தங்களுடைய கருத்து வேற்றுமைகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு, ஒரே லட்சியத்தை நோக்கிப் பயணிக்கவும் முடிகிறது.

எதிரெதிர் நிலைகள் சந்திக்கும் சாம்பல் நிறப்பகுதியை கண்டு பிடிக்க முடிந்ததில், எனக்கேற்பட்டதைப் போலவே உங்களுக்கும் சந்தோஷம் உண்டாகியிருக்கும் என்றே நம்புகிறேன்."


நல்ல புத்தகங்களுக்குத் தனி இடம் இருக்கத் தான் செய்கிறது, இல்லையா?

எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ்க்கை உங்கள் வசமாகும்


வாழ்வில் முன்னேற துடிக்கின்ற, வெற்றிபெற, Energy இழந்த என அனைவருக்கும் பயன்படும் என்ற வகையில்,  இங்கே போதுமான வரை அந்நூலில் உள்ள தகவல்களை இணைத்துள்ளேன்…

அடிப்படை

முயற்சி திருவினையாக்கும், முயன்றால் முடியும், முயன்றால் “மட்டுமே” முடியும்.

- லேனா தமிழ்வாணன்

மனப்பாங்கு

நேற்மறை
எதிர்மறை
மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பகும்.

- வில்லியம் ஜேம்ஸ் (மன நல நிபுனர் – ஹார்வர்டு பல்கலைகழகம்)

நேற்மறை மனபாங்குள்ள மக்கள்: (முடடியும் முயற்சிப்போம்)

தன்னம்பிக்கை
விடா முயற்சி
அறிவுகூர்மை
சாதிக்க விரும்புவது
மாற்றத்தை வரவேற்பது
எதிர்மறை மனபாங்குள்ள மக்கள்: (முடியாது வீண்முயற்சி)

எல்லாம் என் நேரம்.
எல்லாம் என் தலைவிதி
அதெல்லாம் நமக்கு வேண்டாம்
இதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
இது போதும்.
நடப்பது நடக்கட்டும் போ!.
மாற்றம்:

ஒவ்வொரு மனிதனும் உலக்கத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென நினைப்பது இல்லை. – லியோ டால்ஸ்டாய்.

மாற்றம் என்பது மானிட தத்துவம். மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன் – கவியரசு கண்ணதாசன்

நாம் மாற வேண்டும்
நாம் மாறியே ஆக வேண்டும்
நாம் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்
எண்ணங்களை மேம்படுத்துங்கள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. – திருவள்ளுவர்.

உயர்வான எண்ணங்கள்
|
நேர்மறையான மனப்பாங்கு
|
நல்ல நடத்தை
|
சிறந்த செயல்பாடு
|
சரியான முன்னேற்றம்

தானே வகுத்த கட்டுப்பாட்டு நம்பிக்கையை தகர்தெரியுங்கள்:

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தனிதலும் அவற்றோறன்ன – புறநானூறு.

நான் அதிஷ்டம் இல்லாதவன்
நான் அவ்வளவாக படிக்காதவன்
எனக்கு புத்திசாலிதனம் போதாது
எனக்கு திறமை குறைவு
எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை.
எனக்கு போதுமான நேரமில்லை
எனக்கு யாரிடம் எப்படி பேச வேண்டுமென தெரியவில்லை.
எனக்கும் பொறுமைக்கும் ரொப்ம தூரம்.
என்னை யாரும் மதிப்பதில்லை.
உற்சாகமே உயர்வு :

உற்சாகம் இல்லாமல் பெரிய காரியங்களை யாரும் சாதிக்க முடியாது – எமர்சன்

சிலரிடம் காணப்படும் பதட்டம், படபடப்பு, ஆர்பாட்டம் ஆகியவற்றை சுறுசுறுப்பென்றோ, உற்சாகம் என்றோ நம்ப வேண்டாம்.
உண்மையான உற்சாகத்தில் பதட்டமோ, ஆர்பாட்டமோ, படபடப்போ இருக்காது.
பிறகு எப்படி உற்சாகமாக இருப்பது?

இரவில் ஆழ்ந்த உறக்கம் (7 மணி நேரம்)
சுறுசுறுப்பாக நாளைத் தொடங்குவது (படபடப்பு, பதட்டம் இல்லாமல்)
நேர்மறையான எண்ணங்களுடன் வேலையை செய்வது
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது.
மகிழ்ச்சியுடன் அன்றைய வேலையை முடிப்பது.
தவறு:

தவறு செயவது மனித இயல்பு – பொதுமொழி

நாம் ஒரு தவறை செய்யும் போது,

அதை நியாயப்படுத்தக் கூடாது.
அதை மறைக்க கூடாது.
பிறரைக் குற்றம் சாட்டக் கூடாது.
அதை மீண்டும் செய்யக் கூடாது.
பிறகு என்னதான் செய்ய வேண்டும்,

ஒப்புக் கொள்ளுங்கள்
|
மன்னிப்புக் கோருங்கள்
|
கற்றுக் கொள்ளுங்கள்

முடிவெடுக்கும் திறன்:

தேனிக்கள் கொட்டும் என்று அஞ்சி கொண்டேயிருந்தால் என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே முடியாது. – பெயர் தெரியாத நபர்
எதர்க்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்புவதில்லை – சுகி சிவம்

முடிவெடுங்கள்:

தன்னம்பிக்கையுடன் (பயமின்றி)
திட நம்பிக்கையுடன் (சந்தேகமின்றி)
முழி நம்பிக்கையுடன் (தயக்கமின்றி)
முடிவுகள் :

சிக்கல் / சந்தர்ப்பம்
|
தீர்வுக்கான வழிகள் (1,2,3,4,5,6)
|
சிறந்த வழி
|
முடிவு
|
செயல்படுத்தல்
|
ஆய்வு

குறிக்கோள் – இலட்சியம் – இலக்கு:

இலக்கினை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
இலக்குகள் சாதிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
இலக்குகள் கால எல்லைக்குள் இருக்க வேண்டும்.
இலக்கினை அடைய முடியும் எனற நம்பிக்கை வேண்டும்.
நேர்மறை சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.
இதுதான் வேண்டும் என்பதை திட்டவட்டமாக தெளிபட நிர்ணயித்து செயல்பட வேண்டும்.
இலக்குகளை நிர்ணயித்தல்:

நீண்ட கால இலக்குகள் (5 ஆண்டுகளுக்குள்)
இடைப்பட்ட கால இலக்குகள் (3 ஆண்டுகளுக்குள்)
குறுகிய கால இலக்குகள் (1 ஆண்டுக்குள்)
1 ஆண்டு இலக்குகள், (குறுகிய கால இலக்குகள் நல்ல பலனை தரும்)

இந்த மாதம் (1-3 மாதம் வரை, 3-6 மாதம் வரை, 6-12 மாதம் வரை)
இந்த வாரம்
இந்த நாள்
இந்த நிமிடம்
நேர உணர்வு:

இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள் – பெஞ்ஜமின் ஃபிராங்க்ளின்

நிர்வாகத்தின் குறிக்கோளை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
தினசரி பணிகளை திட்டமிட்டு சரியான வரிசையில் செயல்படுத்தவும்.
சரியான நேரத்தில் வேலையை தொடங்கவும்.
தேவைக்கு அதிகமாக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
தேவையில்லா வேலைகளைத் தவிர்க்கவும்.
தள்ளிபோடும் மனப்பான்மையை அகற்றவும்.
மற்றவர்கள் நம் நேரத்தை வீணாக்க அனுமதிக்க கூடாது.
மற்றவர்களின் நேர விரயமும் நம்மால் தவிர்க்கப்பட வேண்டும்.
பேசும் கலை:

எந்த இடத்தில் எதை சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு
எந்த இடத்தில் எதை சொல்லக்கூடாது என்பதிலும் இருக்க வேண்டும். – சோம.வள்ளியப்பன்

தெளிவாக / புரியும்படி
சுறுக்கமாக
தேவைபடும் நேரங்களில் விளக்கமாக
தேவையான விஷயங்களை மட்டும்
தேவையான நேரத்தில்
சமையத்தில் உடணடியாக
வேறு சில சமயங்களில் கொஞ்சம் பொறுத்து
கவனமாக
சொற்களால் சுடாமல்
எனப் பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு விதமாக நாம் பேச வேண்டும்.

கேட்கும் / கவனிக்கும் திறன்:

ஒரு திறந்த இதயத்தின் நம்பக்கூடிய
ஒரே அறிகுறி திறந்த காதேயாகும். – டேவிட் ஆக்ஸ்பர்கர்

கண், காது, மனம் இவை மூன்றும் ஒரு சேர கேட்கவும்.
சொற்களை கவனமாக கேட்கவும்.
பொறுமையுடன் கேட்கவும்.
கோபம் / உணர்ச்சிகளை வெளிப்படுத்தகூடாது.
இடைமறித்து பேசக்கூடாது.
இவர்தானே! இது என்ன பெரிய விஷயமா! இவர் என்னத்தை சொல்ல போகிறார்! என்கிற மெத்தனப் போக்கு / அலட்சியம் கூடாது.
சரியாக கேட்காமல் தவறாக புரிந்து கொண்டு பதில் அளிப்பதோ அல்லது வேலை செய்வதோ கூடாது.
தவிர்க்க வேண்டியவை:

மூடிய மனது
பொறாமை
சாக்கு போக்குகள்
அலுவலக அரசியல்
வம்பு பேசுவது
பிரச்சினைகளை பெரிதாக்குவது
மாற்றத்தை எதிர்ப்பது
குழம்பி இருப்பது
அறியாமை
சகாக்களின் கட்டாயத்திற்கு இணங்குவது.
நேற்று, இன்று, நாளை:

இன்றிருக்கும் நான் நேற்றிருந்த நான்-ஐ விட அறிவு, எண்ணம், படிப்பு, செயல், திறமை, பழக்கம்,… ஆகிய ஏதோ ஒன்றிலாவது, சிறிதளவாவது முன்னேறி இருக்க வேண்டும்.

நான் வேறு யாரோடும் போட்டியிடத்தேவையில்லை. நேற்றைய நானுடன் இன்றைய நான் போட்டியிட்டு முன்னேற வேண்டும். நாளைய நான் இன்றைய நானை விட ஒரு படியாவது மென்னேற வண்டும்.

November 6, 2013

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து!!?

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக  வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும்..... இவ்வளவும்  சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும்  முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும் !!!??

என்ன கொடுமைங்க இது.  தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி,  ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை  குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்ல...??

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின்  வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமே என்கிறார்கள். அதற்காக குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள்.   அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்காதீர்கள். அதன் விளைவை வெகு சீக்கிரம் நீங்கள் அனுபவிக்க நேரும் மிக கொடுமையாக...! வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து ! என் குழந்தை எப்படி பேசுறா என்பது எல்லா நேரமும் சாதாரணமாக சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.

குழந்தை  குழந்தையாகவே...

தன்  போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பாருங்கள்...அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும் ! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள் !! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  . குழந்தை செய்வதை எல்லாம் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மீடியாக்கள்  வேறு தன் பங்கிற்கு இந்த காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது

சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு 6 வயது குழந்தை ஆடிய ஆட்டம் எல்லோரையும் ஆரவார கூச்சலிட வைத்தது. முகநூலில் இந்த குழந்தையின் நடனத்தை ரசித்து பல ஆயிரம் ஷேர்ஸ், பலவித கமெண்ட்டுகள், அதிலும் ஒருவர் 'நீ நல்லா வருவே' என வாழ்த்த(?) எதில் நல்லா வர, குத்து பாட்டு நடிகையாகவா ? என்ன சொல்ல தெரியல. இந்த 'நல்லா வருவ' க்கு என்ன அர்த்தம்னும் புரியல.

பார்க்கும்  கண்ணை பொறுத்தது என்று எப்படி இதை ரசிப்பது. இன்றைய திரைப்படங்கள் நன்றாகவே நம் கண்ணையும் கருத்தையும் கெடுத்து வைத்திருக்கிறது. முகநூலில்  கருத்து சொன்னவர்களும் சிறு குழந்தை என்று எண்ணாமல் 'எப்படி இடுப்பை வளைக்குறா', கிறங்கடிக்குது கண்ணு, என்னமா கண் அடிக்கிறா என ஒவ்வொன்றாக வர்ணிக்கும் போது குழந்தையின் தாயால் அதை பாராட்டாக எண்ணி மகிழமுடிகிறது என்பது எனக்கு  ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சி !
போனமாதம்  ஒரு விழாவிற்கு சென்றிருந்த இடத்தில் , 4 வயதிருக்கும் ஒரு பெண்குழந்தையை பார்த்து எனக்கு அருகில் இருந்த ஒரு  தோழி ,'செம கிளாமர் ' என கமென்ட் அடித்து சிரித்தார். காரணம் இது தான்,  இடுப்பு தெரியும்விதத்தில் அக்குழந்தை அணிந்திருந்த மாடர்ன் உடை. சிறு குழந்தையின் ஆடை அழகை ரசிக்கும் லட்சணம் இப்படி இருக்கு! அதுவும் ஒரு பெண்ணே இப்படினா... ஆண்கள் ?!!

சினிமா,  தொலைகாட்சி போன்றவற்றை  பார்த்து அதில் வருபவர்களை போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காத போது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை...இறுதியில் அடி !!?  

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால்  கைத்தட்டு வாங்குவது தான் முக்கியம் என்பது  குழந்தையின் மனதில் ஆழமாக  பதிந்துவிடுகிறது...கிடைக்கும் கைத்தட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்டனும் என்பதை நோக்கித் தான் அதன் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு அடுத்தவங்க புகழ, நல்ல(!) பெயர் எடுக்க என்று முயலுகிறது. இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறது...சமயத்தில் தற்கொலை !

தேவையற்ற அதிக மன அழுத்தம்

நண்பர்  ஒருத்தர் சொன்னார், 'என் குழந்தை இப்பவே ஓஷோ புக்  படிக்கிறாள்' என்று... நம்மில் பலருக்கு புரிய கடினமான விஷயத்தை குழந்தையை  படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் என்னனு புரியல...?! ஒன்பது  வயது குழந்தைக்கு வேண்டிய புத்திமதிகளை பெற்றோர்கள் நீங்கள் சொல்லி வழிகாட்ட முடியாதா? யாரோ ஒருவர்  அன்று அவர் வாழ்ந்த சூழல், பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று இன்றைய குழந்தைகளுக்கு எப்படி புரியும், எப்படி இன்றைய சூழலுக்கு சரியாக வரும்.  பெற்றோர்கள் நீங்கள் அதை படித்து அதில் குழந்தையின் வயதிற்கு  தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்'  என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள் !

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை  சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர்,அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் உங்களிடத்தில்  கண்டுக்கொள்ளட்டும்... கண்டு கற்றுக்கொள்ளட்டும்... உணரட்டும்...உங்களை மதிக்கட்டும் ! நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தை என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே , இவர்களை போன்றவர்களே என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிருங்கள் அது போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களிடத்தில் காணமுடியாத  நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்' என்ற கேள்வி எழும் ! உங்களிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது உங்கள் மீதான மதிப்பின் சதவீதம் பற்றியும்  சற்று சிந்தியுங்கள் !!  அரிச்சந்திரன் கதையை கேட்டு பின்பற்றி நடந்தது என்பது அந்த காலம் ...இப்போதைய உலகம் வேறு...! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள் !

எங்கையோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது    என்பதற்காக உங்கள் குழந்தையையும் படுத்தி எடுக்காதீர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது எது என்று கண்டு அந்த வழியில் நடக்க விடுங்கள், வழிகாட்டுங்கள், வழிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! மாறாக உங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்க பார்க்காதீர்கள், ஒடிந்துவிடுவார்கள் !

பொருளாதாரத்தில்  உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளருங்கள். அப்போதுதான் உங்களின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

ஆரோக்கியமான சமூதாயம் நம் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து நம் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து நம் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

தயவுசெய்து குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்...! உலகை தெரிந்துக் கொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.. மூன்றே வருடத்தில் தென்னையை  வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல !

குழந்தையின் வயதுக்கு  மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து  தன்னம்பிக்கையை  இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்... எரிச்சல், கோபம் , இயலாமை,விரக்தி, சுயபச்சாதாபம்  போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள்  இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை !?





ரிலாக்ஸ் பிளீஸ்...!

உற்சாகம் எதில் இருக்கிறது ?? என்று கேட்பதை விட அப்படினா என்ன என்று கேட்ககூடிய நிலையில் தான் இப்ப நம்ம நிலைமை இருக்குனு சட்னு சொல்லிடலாம்...?! வேலை,  விலைவாசி,கல்யாணம், குடும்பம்.  குழந்தை, படிப்பு.......இப்படி நாம புலம்பறதுக்கு நமக்கு நிறைய விஷயம் இருக்கு. பணம் பின்னாடி ஓடவே நேரம் சரியாக இருக்கிறது இந்த காலத்தில நான் உற்சாகம் அப்படின்னு சொன்னா கிலோ என்ன விலைன்னு தான் கேட்கவேண்டியது இருக்கிறது.

உற்சாகத்தை தேடி வேற எங்கும் போக வேண்டாம்...உங்களுக்குள்ளேயே இருக்கு அப்படின்னு பலரும் சொல்லி இருப்பாங்க நான் புதுசா ஒண்ணும் சொல்ல போறது இல்லை.  ஆனா அதையே அடிக்கடி கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணித்  தான் பார்ப்போமே என்று தோன்றும் அல்லவா...?!

எழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் சொல்லி இருப்பார் "ஒருநாள்  பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று...!" நம்மிடமும், நம்மை சுற்றியும் பார்த்து வியப்பதற்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. எங்கேயும், எப்போதும் அபூர்வங்கள் நம்மை சூழ்ந்து இருந்தும் நாமோ பூர்வமானவற்றை  பற்றி  யோசித்து, முந்தினவற்றையே  நினைத்து கவலைக் குழியில் விழுந்துக்கிடக்கிறோம்.

கண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி  கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.

உற்சாகமாக வைத்துகொள்வது அடுத்தவர் கையில் இல்லை, நிச்சயமாக நம்மிடையே தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் கூட 'ஆமாம் எல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும், காய்ச்சலும் என்று நீங்க நினைக்கலாம்' உண்மைதான் அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரிசு தான். அதே சமயம் வலி தலையை பிளந்தாலும் காபி குடிக்கும் போது அதன் நறுமணத்தை நல்லா ஆழமாக, உள்ளிழுத்து, சுவாசித்து ரசித்து பார்க்கும் போது அந்த தலைவலியை கொஞ்சம் மறக்க முடியுமே.

ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது !!

முதலில் நம்மை நாமே ரசிக்க பழகிக்க வேண்டும். காலை எழுந்ததும், ஏண்டா விடியுதேனு புலம்பிட்டே எழுந்திருக்காம உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வெளியில் சூரியன் காத்திட்டு இருக்கிற மாதிரி நினைச்சிட்டு உற்சாகமா எழுந்து வெளியே வந்து ஒளிவீசிட்டு இருக்கிற சூரியனை பார்த்து ஒரு ஹாய்,குட் மார்னிங் சொல்லிப் பாருங்க (பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there  னு  எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! ) மழை காலத்தில சூரியன் வரலைனா என்ன பண்றதுன்னு புத்திசாலித்தனமா, நீங்க  கேட்டா 'மழைக்கு welcome சொல்லுங்களேன்' என்று சொல்வேன்.

உற்சாகத்தை பத்தியும் வாழ்க்கையை ரசிக்கணும், கடின படுத்திக்க கூடாதுன்னு நான் ஏன் சொல்றேன்னு தொடர்ந்து படிங்க புரியும்.

சொந்த அனுபவம்

எனக்கு ரோஜா செடி வளர்கிறது ரொம்ப பிடிக்கும், அதுவும் உலகத்தில் இருக்கிற அத்தனை கலர் ரோஜாக்களும் என் வீட்டில் இருக்கணும்  என்கிற சின்ன ஆசை நிறைய உண்டு...!! என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!) மாடி படில வரிசையா நிறைய தொட்டிகள் வச்சிருக்கிறேன், எல்லா செடியும்  ஒரு குட்டி மரம் போல இருக்கும்.  அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன். வைத்த நாளில் இருந்து சில பூக்கள் காணாம போயிட்டு இருந்தது. பூ நிறைய பூக்கிரதால ஒண்ணு இரண்டு தானே பறிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.

காலையில் எழுந்ததும் எப்பவும் தொட்டிகளின் பக்கம் வந்து பூக்களை ரசித்துவிட்டு (பேசிட்டு...!) அப்புறம் தான் மத்த வேலை பார்பேன். வழக்கமா நேற்றும் எழுந்ததும் நேரா ரோஜாக்களிடம்  சென்றேன், அப்படியே மயக்கம் வராத குறைதான்  எனக்கு...?! சுவர் மேல இருந்த ஒரு தொட்டியை காணும்...எனக்கு வந்த பதட்டத்தில என்ன செய்றதுனே  தெரியல...கீழே விழுந்திருக்கும்னு வெளியில போய் பார்த்தேன்...அதை ஏன் கேட்கிறீங்க...இருந்த டென்ஷன்ல மொட்டை மாடில வேற போய் பார்த்தேன்...(தொட்டி எப்படி நடந்து படி ஏறி  மாடிக்கு போய் இருக்கும்னு கூட அப்ப யோசிக்க தோணல...?!!)

பக்கத்து வீட்டல இருக்கிறவங்க கிட்ட சரியா பேசினது கூட இல்லை. எனக்கு இருந்த வேகத்தில அவங்க கிட்டயும் போய் "ரோஜா  தொட்டியை யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, நீங்க பார்த்தீங்களா ?" கேட்க, அவங்களும் "அச்சச்சோ, அப்படியா ? நீங்க ஏங்க சுவர் மேல வச்சீங்க, நல்ல பெரிய ரோஜா பூவாச்சே, ரத்த கலர்ல செவாப்பா அழகா  இருக்குமே " அப்படின்னு எண்ணைய  கொஞ்சம் ஊத்திட்டு போனாங்க.

அந்த நேரம் ரோட்டில வாக்கிங் போறவங்க நான் புலம்பறதை ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு  ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே  இருந்தேன்...! (எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால  செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை, ஆறடி உயர சுவர் மேல இருந்து எப்படி எடுத்திருப்பாங்க...! எத்தனை பேர் வந்திருப்பாங்க ......? எதில வச்சி கொண்டு போய் இருப்பாங்கனு, வேற சம்பந்தம் இல்லாம யோசிச்சிட்டு இருந்தேன்......

என் கூச்சல் கேட்டு மெதுவா...?!!வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்...என் மண்டைக்கு எதுவும் ஏறல...புலம்பறதையும் நிறுத்தல...அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, "ஏம்மா வருத்த படுறீங்க,  உங்களை விட அதிகமா ரோஜா செடியை  லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி  எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா  இருங்க...டென்ஷன் படாதிங்க"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...! நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.


என்ன ஒரு தெளிவு ! என்ன அழகான நேர்மையான எண்ணம் ! இது ஏன் எனக்கு  இல்லை?? அந்த நிமிஷம் , " எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்... எந்த விசயமுமே நாம் எதிர் கொள்ற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்...?!"    

சக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அன்றைக்கு என் மகன் எனக்கு தகப்பன்சாமியாக தெரிந்தான்...!!

தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்...அனுபவம் பேசுதுங்க...!!)




October 31, 2013

மனசே ரிலாக்ஸ் பிளீஸ் பாகம் ஒன்று

மனசே ரிலாக்ஸ் பிளீஸ் ஆனந்தவிகடனில் சுவாமி சுகபோதாநந்தாவின் எழுதித் தொடராக வந்ததை இங்கே வலைப்பதிவு செய்துள்ளேன்.

மனசே ரிலாக்ஸ் பிளீஸ் இந்தப் புத்தகம் ஆனந்தவிகடனில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தபோது வாசகர் இதை வெறும் தொடராகப் படிக்கவில்லை. இதிலே கூறப்பட்டிருக்கும் கதைகளோடு தங்களின் வாழ்க்கையை அவர்கள் தொடர்புபடுத்திப் படுத்திக் கொண்டு படித்தார்கள். மதங்களையும் மனித மனங்களையும் ஒன்றாக இணைத்து நெய்யப்பட்ட எந்தப் புத்தகமானாலும் சரி அவற்றை ஒரு முறை படித்து மூடி வைத்துவிட்டால் முழு பலன் கிடைக்காது. நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்காக இவற்றை நாம் திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும். புத்தகம் ஒன்றாக இருந்தாலும் நாம் எந்த மனநிலையில் நின்று படிக்கின்றோமோ அதற்கு ஏற்றாற்போல் ஒரே புத்தகத்தில் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளிப்படும். எந்த நிகழ்ச்சி எந்த ஞானியின் வாழ்க்கையில் நடந்தது, எந்தக் கதை எந்த வேதத்தில் இருக்கின்றது, என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் மட்டுமே ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படித்தார் என்றால் கதைகளையும் நிகழ்ச்சிகளையும் வார்த்தைகளையும் வேண்டுமானால் அவரால் கிரகித்துக் கொள்ளமுடியும். ஆனால் இதன் அர்தங்கள் புத்தகத்திலேயே தங்கிவிடும். இந்தப் புத்தகத்தில் சொல்லப்படிருக்கும் கருத்துக்களைப் படித்து, அசைபோட்டு, சிந்தித்து, அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பாருங்கள். புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளும் கதைகளும் உங்கள் அறிவுக்கு இடம்மாறாது அது உங்களையே மாற்றிவிடும்.

இங்கே நான் கூறியிருக்கும் கருத்துக்களும் கதைகளும் இந்துமதம், பௌத்தம், ஜென், இஸ்லாம் போன்ற பல மதங்களின் வேத நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது அத்துடன் பிரபலமான மற்றும் பிரபலம் அடையாத சாதாரண மனிதர்களிடமும் இந்து நிறையப் பாடங்களை எடுத்துக் கொடுத்திருக்கின்றேன். எனவே இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கும் கருத்துக்களை நடைமுறைப்படுத்திப் பார்ப்பது கடினமான காரியம் இல்லை. நீங்கள் முயற்சித்தால் செய்வீர்கள் உங்களின் முயற்சிக்குப் பலன் நிச்சயம் உண்டு

இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம்

நான் பார்த்தவரை உலகத்தில் உள்ள அத்தனை பேரும் மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்பும் கேள்வி இதுதான். “ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டத்தைக் கொடுக்கிறான்”  இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம் புத்தமதத்தில் கூறப்படுகின்ற ஓர் சின்னக் கதையை அவர்களிடம் சொல்லுவது வழக்கம். ”அது ஒரு கிராமம், சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையடப் போகிறான். அப்போது “என்னைக் காப்பாற்று, காப்பாற்று” என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கத்துகின்றது. ”உன்னை வலையில் இருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய், நான் மாட்டேன்” என்று முதலையை காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை ”நான் உன்னை சத்தியமாகச் சாப்பிடமாட்டேன், என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் விடுகின்றது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கின்றான். வலையில் இருந்த முதலையின் தலை வெளிப்பட்ட உடனேயே அது சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. ”பாவி முதலையே இது நியாயமா?” என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க ”அதற்கென்ன செய்வது, இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவதைப் பற்றிக்கூடக் கவலையில்லை. ஆனால் நன்றி கெட்டத் தனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்ததைத் தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முதலையின் வாய்க்குள் மெல்லப் போய்கொண்டிருக்கும் சிறுவன் மரத்தில் இருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் ”முதலை சொல்வது மாதிரி இதுதான் உலகமா?, இதுதான் வாழ்க்கையா?” அதற்குப் பறவைகள் “எவ்வளவோ பாதுகாப்பாக, மரத்தின் உச்சியில் கூடு கட்டு முட்டையிடுகின்றோம், ஆனால் அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்று விடுகின்றன. அதனால்தான் சொல்கின்றோம் இதுதான் வாழ்க்கை, இதுதான் உலகம், முதலை சொல்வதுதான் சரி”. ஏரிக்கரையில் மேய்ந்துகொண்டுருக்கும் கழுதையைப் பார்த்துச் சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்  ”நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். ”இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது” என்று முயல் சொல்ல,  முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ”ஆஹா வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை” என்றது முயல்.

பெரிதாகச் சிரித்த முதலை “நான் முட்டாள் இல்லை. சிறுவனை விட்டால் ஓடி விடுவான்” என்று சொல்ல முயல் “புத்தி இல்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே”. என்று நினைவுபடுத்த… முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து ”நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த..” சிறுவன் ஓடுகிறான்.

முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது – ”புரிந்ததா… இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !”

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர… அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி… சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.

வாழ்க்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்கப் புரிந்துகொள்ளமுடியாது என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்த மதமும் சொல்கின்றது. பரோடாவின் என்னைச் சந்தித்துக் கதறிய பெண்ணெருத்தியின் வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். அறிவு என்பது ஒரு எறும்பு, வாழ்க்கை என்பது யானை. ஒரு முறை பகவத் கீதை பற்றிச் சொற்பொழிவாற்ற பரோடா சென்றிருந்தேன். அங்கே ஒரு பெண்மணி என்னைத் தனிமையில் சந்திக்க விரும்புவதாகச் சொன்னாள். என்னைச் சந்தித்த உடனேயே கடுப்படுத்தமுடியாமல் அழுதாள். மனதிலே உள்ளதை வெளியிலே கொட்டினால் பாரம் குறையும் என்பதால் அவளை மேலும் பேசச் சொல்லித் தூண்டினேன். ”உலகத்திலேயே என்னைப் போல யாரும் கஷ்டப் பட்டிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு கஷ்டத்தை நான் அனுபவிக்கின்றேன்.” என்ற பீடிகையோடு அந்தப் பெண் தன் கதையைச் சொன்னாள். ”நான் சிறுமியாக இருக்கும் பருவத்தில் இருந்தே மகள் என்றும் பாராமல் என் தந்தை என்னிடம் பாலியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வார். அப்போது ஐயோ என்று மனதுக்குள் கதறினேனே தவிர இதை எப்படித் தடுப்பது என்று தெரியவில்லை. நான் வளர்ந்து பருவம் அடைந்த பின்பும் என் தந்தை மாறவில்லை, என் துயரமும் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் இருட்டாகவே எனக்கு விடிந்தது. பிறகு எனக்குத் திருமணமும் ஆனது. அன்பு மிக்க கணவர் கிடைத்தார் ஆனால் அந்தத் துயரம் மட்டும் மறையவில்லை. என் திருமணத்திற்குப் பின்பும் கூட என் தந்தை மாறவில்லை. இதைச் சகிக்க முடியாத நான் இந்த நரக வேதனையில் இருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பார் என்ற ஆசையில் எல்லாவற்றையும் என் கணவர் முன்பு கொட்டி அழுதேன். விளைவு இப்போது என் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். ஏன் எனக்கு மட்டும் இப்படி ஓர் துன்பம்? என்று கேட்டழுதாள் அந்தப் பெண். அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு இந்து மத தத்துவத்தின் அடிப்படையில் இது உன் பூர்வ ஜென்மப் பலன், கர்மா அதை நீ அநுபவித்துதான் ஆகவேண்டும் என்று நான் பதில் சொல்லியிருக்க முடியும். ஆனால் மனோ தத்துவரீதியாக ஒருவேளை உன் தாய் உன் தந்தையை சரியாகத் திருப்திப் படுத்தியிருக்க மாட்டாள் அல்லது உன் தந்தைக்கு ஏதோ மன வியாதி இருக்கவேண்டும் என்று மருத்துவத்தைத் துணைக்கு அழைத்திருக்கலாம். இந்தப் பெண்ணிற்கு ஏன் இப்படி ஒரு கொடுமை நடந்தது என்று யாராவது பதில் சொல்ல முடியும் என்றால் முசோலினி, ஹிட்லர் போன்ற கொடுமைக்காரர்கள் ஏன் பிறந்தார்கள் என்பதற்கும் காரணம் சொல்லிவிடமுடியுமே. மீண்டும் இப்படிப் பட்டவர் பிறக்காமல் இருக்க வழியும் சொல்லிவிட முடியுமே. அந்தப் பெண்மணிக்குச் சொன்னேன். “நமது அறிவு என்பது ஓர் எறும்பு என்றால் வாழ்கையும் இந்த உலமும் யானை போன்றது” யானையின் காலுக்கடியில் கிடக்கும் எறும்பால் யானையை என்றுமே முழுமையாகப் பார்த்துவிட முடியாது. யானையில் ஒரு பகுதியைத் தான் பார்க்கமுடியும். எறும்பின் பார்வையைப் போல் நமது அறிவு கூர்மையானதாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை புதிர்களுக்கும் நம்மால் விடை தேடிவிட முடியாது. இப்படிச் சொல்வதால் யார் நம்மை மிதித்தாலும் உதைத்தாலும் விதியே என்று சும்மா இருக்கவேண்டும் என்று அர்த்தம் அல்ல. ஆங்கிலத்தில் assertive என்று ஓர் வார்த்தை உண்டு இல்லையா? இந்தக் குணம் உடையவர்கள் தமது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தமது அதிகாரத்திற்கும் உரிமைக்கும் உட்பட்ட பகுதிகளை அந்நியர்கள் ஆக்கிரமிப்பதை ஏற்க மாட்டார்கள். நாம் இந்தக் குணத்தோடுதான் இருக்க வேண்டும். என்ன சோதனை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் ஆனால் அந்தப் போராட்டத்தின் முடிவு எப்படிப் பட்டதாக இருந்தாலும் இதுதான் வாழ்க்கை இதுதான் உலகம் என்று ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் வந்துவிட்டால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி எழாது சுய பச்சாதாபம் வராது, துயரத்தின் வேதனை தாக்காது. அந்தநிலையை அடைய இந்தப் பிராத்தனை உங்களுக்கு உதவலாம்.

”ஆண்டவா, என்னால் எதையெல்லாம் மாற்ற முடியுமோ, அதை மாற்றக் கூடிய வலிமையைக் கொடு. என்னால் மாற்ற முடியாதவை எவை என்கின்ற அறிவை என்னிடம் கொடு என்னால் மாற்ற முடிந்தது மாற்ற முடியாதது இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிந்து அறிந்து கொள்கின்ற பக்குவத்தை எனக்குக் கொடு”

தூணிலே ஒரு பூனை

பிராத்தனை என்பது என்ன. இந்த இடத்தில் கடவுள் என்ற வியசத்திற்கு நான் போகவில்லை. ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நம்மையே நாம் முழுமையாக உணர்ந்து கொள்வதுதான் பிராத்தனையின் சாரம். வார்த்தைகளிலோ உருவ வர்ணணைகளிலோ சட்டங்களிலோ மட்டும் பிராத்தனை இல்லை. முக்கியமாக உணர்வதில்தான் இருக்கின்றது. சம்பிரதாயச் சடங்குகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல் அதற்குள் போய் சிக்கிக் கொள்வதல்ல பிராத்தனை. இந்த இடத்தில் வருத்தமான விசயத்தை நான் சொல்லவேண்டும். சமீபத்தில் நான் ஒரு வீட்டிற்குச் சென்ற போது வித்தியாசமான ஒரு சுப்பிரபாததைத் கேட்டேன். ”கௌசல்யா, சுப்ரதா அலமே பால் பொங்குது காஸ் நிறுத்தடி. ராம பூர்வா சந்யா, கோபு பான் வீணா சுத்திட்டு இருக்கு. பிரபத்ததே உத்திஷ்ட” இதை நான் நகைச் சுவைக்காகச் சொல்லவில்லை. பிராத்தனை என்பது மட்டும் அல்ல காமாட்சி அம்மன் விளக்கேற்றுதல், மாவிலை கட்டுதல், ஆராதனை செய்தல் போன்ற ஆன்மீகமான விசயங்களையும் இப்போது அர்த்ததைப் புரிந்து கொள்ளாமலேயே வெறும் சம்பிரதாயமாகவே பலர் செய்து வருகின்றோம். நான் சொல்வது எல்லா சமுதாயத்தினருக்கும், இனத்தவருக்கும், மதத்தினருக்கும் பொருந்தும். வேதம், உபநிடதம் என்று எல்லாவற்றிலும் தேர்ந்த சாமியார் ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் தமது சீடர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது பூனை ஒன்று சாமியாருக்கு எதிரே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்தச் சாமியாரின் கவனம் சிதறவில்லை ஆனால் சீடர்கள் சிலரின் கவனம் சிதறியது. ஆகவே பூனையைப் பிடித்து பக்கத்தில் இருந்த தூணில் கட்டும்படி சாமியார் சொல்ல பூனையும் தூணில் கட்டப்பட்டது. அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று அடுத்தடுத்து வந்த நாட்களிலும் பூனை தொந்தரவு கொடுத்ததால் சாமியார் பாடம் எடுக்கும் போதெல்லாம் தவறாமல் பூனை தூணிலே கட்டப்பட்டது. சில வருடங்களில் சாமியார் இறந்து விட்டார், சீடர் ஒருவர் அந்த ஆச்சிரமத்தின் புதிய சாமியார் ஆனார். அவர் சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போதும் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது. சில மாதங்களில் அந்தப் பூனையும் இறந்து விட்டது. அடுத்த நாள் பாடம் எடுப்பதற்காக வந்த அந்தச் சாமியார் “பாடம் எடுக்கும் போது தூணிலே ஒரு பூனை கட்டப்படவேண்டும் என்று தெரியாதா? உடனே போய் ஒரு புதிய பூனையைப் பிடித்து வந்து தூணில் கட்டுங்கள்” என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

சிலபேர் கிருஷ்ண பக்தர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வார்கள். கிருஷ்ணன் என்பது யார் மகிழ்ச்சி, உவகை, ஆனந்தம், கொண்டாட்டம் என்று எல்லாம் சேர்ந்தவந்தானே கிருஷ்ணன். ஆனால் கிருஷ்ண பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர் உம் என்ற முகத்துடன் சதா சோகமாக இருப்பதை நீங்களும் கூடப் பார்த்திருக்கலாம். ஒரு கட்டத்தில் அன்பும் அரவணைப்பும் போய் பக்தி என்பதே ஒரு முரட்டுத் தனமாக மாறிவிட்டது. உணர்சிகளை மறந்து விட்டு வெற்று வார்த்தைகளை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குவதால்தான் மதத்தின் பெயரால் இப்போது கலவரங்கள் நடக்கின்றன. இப்படிச் சொல்வதால் நமது முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த சம்பிரதாயங்களை மதிக்காதீர்கள் என்று சொல்லவில்லை, அதற்கு எதிராகச் செயற்படுங்கள் என்று தூண்டவில்லை. செய்வது எதுவாக இருந்தாலும் அர்தத்தை உணர்ந்து உணர்ச்சிகளை அனுபவித்து முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். சிலர் என்னிடம் வந்து என் வீட்டில் தனிப் பூஜை அறை இல்லை, பக்கத்தில் டமார் டாமார் என்று சத்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொழிற்சாலை இருகின்றது. சதா குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றன, மனைவி நை நை என்று நச்சரித்துக் கொண்டே இருக்கின்றாள் அதனால் பிராத்தனை செய்ய என்னால் முடியவில்லை என்று சொல்கின்றாள். பிராத்தனை செய்யவோ, தியானம் செய்யவோ அமைதி நமது உடம்புக்கு வெளியே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அமைதி நமக்கு உள்ளே இருந்தால் மந்திரங்களையும், சுலோகங்களையும் சொல்லாமற் கூடப் பிராத்தனை செய்யவியலும், எப்படி?. அது ஒரு பொட்டல் வெளிப் பிரதேசம், வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அங்கே முருகப் பெருமானுக்குக் கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. உச்சி வெயிலில் செங்கற்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தான். அங்கே வந்த சாமியார் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்த ஒருவனை அழைத்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அதற்கு அவன் ”பார்த்தால் தெரியவில்லையா? கல் சுமந்து கொண்டிருக்கிறேன், என்றான். இதே கேள்வியைப் பக்கத்தில் இருந்த இன்னொருவனிடம் கேட்டார் சாமியார்” அதற்கு இரண்டாமவன் ”நான் என் குடும்பத்திற்கான உணவைச் சம்பாத்திக் கொண்டிருக்கின்றேன்”, என்றான். சாமியார் இன்னொருவனிடமும் “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு மூன்றாமவன் “நான் தெய்வத்திற்குக் கோயில் கட்டும் புண்ணியமான காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றேன் என்றான்” . நம் எல்லோருக்குமே கோயில் கட்டும் வேலை கிடைத்து விடாது. ஆனால் செய்யும் வேலை எதுவானாலும் கோயில் கட்டும் வேலையைப் போல முழு ஈடுபாட்டுடன் லயித்துச் செய்தால் அதுவே சிறந்த பிராத்தனைதான்.

அவர்களுக்கு அது ஹாரஸ்கோப்

நமது வாழ்க்கை பல நேரம் பயத்தில்தான் கரைகிறது. வீட்டில் இருக்கும் இருட்டை விரட்டுவதற்காக ஒருவன் வாழி வாழியாக இருட்டைக் கொண்டுவந்து வீதியில் கொட்டிக் கொண்டிருந்தானாம். எத்தனை ஆண்டுகள் செய்தாலும் இருட்டைப் சுற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் இருட்டை வெளியேற்ற முடியாது. ஒளியில்லாமை என்பதுதான் இருட்டு. அதனால் ஒரு சின்ன விளக்கை ஏற்றி வைத்தால் இருட்டி ஓடுவிடும். பயமும் இருட்டு மாதிரித்தான். அன்பு இல்லாமைதான் பயம். அன்பு என்ற விளக்கை ஏற்றி வைத்தால் பயம் மறைந்து விடும். புரியவில்லை என்றால் அன்பின் ஒருவகையான காதலை எடுத்துக் கொள்ளுங்கள். காதல் எப்படி மலர்கிறது? ”ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கையில்தானே காதல் பிறக்கின்றது”  ஒரு பெண்ணின் மீது ஆணுக்கோ அல்லது ஆணின் மீது பெண்ணிற்கோ நம்பிக்கை வராவிட்டால் அங்கே காதல் என்ற அன்பு கிடையாது. சுபி இலக்கியத்தில் வரும் முல்லா நசருதீனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால் இந்தத் தத்துவம் உங்களுக்குச் சுலபமாக விளங்கக் கூடும். முல்லா நசருதீனுக்கு அன்று காலையில்தான் திருமணம் நடந்தது. அன்றிரவு நதியைக் கடந்து மறுகரைக்கு முல்லா நசருதீனும் அவரது இளம் மனைவியும் உறவினர்களோடு படகில் போய்க்கொண்டுருந்தார்கள். அப்போது தீடிரென்று புயல் அடித்தது, நதியிலே வெள்ளம் கரை புரண்டது. இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு பேயாட்டம் ஆடியது, மணப்பெண் உட்பட படகில் இருந்த அத்தனை பேரையும் மரணபயம் தொற்றிக்கொண்டது. ஆனால் முல்லா மட்டும் பயம் ஏதும் இல்லாமல் இருந்தார். இதைப் பார்த்த புதுமணப்பெண் “உங்களுக்குப் பயமாக இல்லையா?” என்று கணவரை ஆச்சரியத்தோடு கேட்டாள். அதற்கு முல்லா நசருதீன் பதில் சொல்லாமல் தன் இடுப்பிலே சொருகியிருந்த கத்தியை எடுத்து மனைவியின் குரல்வளையைக் குத்துவது போல் ஓங்கினார், மனைவியில் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அப்போது முல்லா நசருதீன் தன் மனைவியைப் பார்த்து ”கத்தி என்றால் உனக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டார் அதற்கு அவரது மனைவி “கத்தி வேண்டும் என்றால் அபாயகரமாக இருக்கலாம். ஆனால் அதைப் பிடித்துக் கொண்டுருப்பவர் என்னிடம் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் என் கணவர், அதனால் நான் பயப்படவில்லை என்றார். அதேபோலத்தான் இந்த அலைகள் வேண்டுமானால் ஆபத்தானதாக இருக்கலாம் ஆனால் இதை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் அல்லா அன்புமயமானவர், அதனால் எனக்குப் பயம் இல்லை என்றாராம் முல்லா நசருதீன். முல்லா நசருதீனுக்கு அல்லாவின் மீது நம்பிக்கை இருந்தது அதனால் அன்பு இருந்தது. அல்லா மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் அன்பும் இருந்திருக்காது. அன்பு இல்லையென்றால் படகில் பயணித்த மற்றவர்களைப் போல முல்லா நசருதீனும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பார். இதே உண்மையை நம் வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கலாம். நமக்குப் பயம் ஏற்படுகின்றது என்றால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள். நான் கடவுளுக்குப் பயந்தவன் என்று பலர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இது அபத்தமானது. கடவுளிடம் நாம் செலுத்தவேண்டியது அன்புதானே தவிர பயம் இல்லை. நமது உபநிஷத்துக்கள் சொல்லும் மிகப்பெரிய விஷயமே பயம் இல்லாமல் இரு என்றுதான் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கின்றார். சிலர் தங்களின் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு எனக்கு மரணம் எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள ஜோசியர் மாறி ஜோசியராகப் போய்க்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் ஹாரஸ்ஹோப் ஜாதகம் என்பது ஹாரஸ்ஹோப். இம்மாதிரி நபர்கள் வாழும் போது என்ன செய்யலாம் என்பதை விட எந்த நேரம் இறந்து விடுவோமோ என்ற பீதியிலேயே உருகி உருக்குலைந்து கொண்டிருப்பார்கள். மரணபயம் பற்றித் தாகூர் சொல்லும் போது நீ இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காகத் உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும். அதனால் நம்பிக்கையோடிரு என்கிறார். பயப்படுபவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான் சொல்ல முடியும். எதிர்காலத்தைப் பற்றித் திட்டம் இடுங்கள், தவறில்லை ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற கற்பனைகளில் பயப்படுவதால் உங்கள் மகிழ்ச்சிதான் பாழாகும். பணம் திருட்டுப் போகாமல் இருக்க அதை எங்கே எப்படி வைப்பது மீறித் திருட்டுப் போனால் இன்சூரன்ஸ் மூலம் எப்படிப் பாதுகாப்புப் பெறுவது என்று திட்டமிடுங்கள். இதில் எதையும் செய்யாமல் சும்மா நின்று பயப்படுவதில் அர்த்தம் இல்லை. எது சந்தோஷம் ஒன்று சுபி இலக்கியத்தின் முக்கிய கதாபாத்திரமான முல்லா நசருதீன் ஒரு நாள் சோகமாக உட்கார்ந்து இருந்தான். முல்லாவைப் பார்க்க வந்திருந்த நெருங்கிய சினேகிதன் ”ஏன் சோகமாக இருகிறாய்” என்று கேட்க, முல்லா அழ ஆரம்பித்து விட்டார். ”என் மாமா தன் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் என் பெயரிற்கு எழுதுவிட்டு போனமாசம் இறந்து போனார். அதை நினைத்தேன் அழுகிறேன்” என்றார் முல்லா. ”உன் மாமாவை எனக்குத் தெரியும் அவரிற்கு 80 வயதாயிற்றே, மரணம் இயற்கையானதுதானே. அதற்கென்ன இத்தனை பெரிய சோகம்? உண்மையில் பார்த்தால் அவரது திரண்ட சொத்துக் கிடைத்தற்காக நீ சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும்.” என்று முல்லாவிற்கு நண்பன் ஆறுதல் சொல்ல முயன்றான். முல்லாவோ “என் சோகம் உனக்குத் தெரியாது நண்பா, போனவாரம் தான் என் சித்தப்பா என் பெயரில் ஒரு இலட்ச ரூபா சொத்துக்களை எழுதிவிட்டு செத்துப் போனார்” என்று சொல்லிவிட்டு இன்னும் சத்தமாக அழத்தொடங்கினான். நண்பனுக்குக் குழப்பம். ”உன் சித்தப்பாவையும் எனக்குத் தெரியுமே, அவரிற்கு 85 வயது. பணம் வந்ததை நினைத்து சந்தோஷப் படாமல் முட்டாளைப் போல இப்படி அழுகிறாயே என்று நண்பன் எரிச்சலுடன் கேட்டான். ”என்சோகம் இன்னும் அதிகம். எனது 100 வயதுத் தாத்தா இரண்டு இலட்ச ரூபாயிற்கு மேலே என் பெயரில் சொத்துக்களை எழுதிவிட்டு நேற்று இறந்துவிட்டார்” என்றார் முல்லா. வெறுத்துப் போன நண்பன் ”எனக்குப் புரியவில்லை. நீ ஏந்தான் அழுகிறாய்” என்றான். முல்லா கண்களைத் துடைத்தபடியோ சொன்னார் ”செல்வந்தர்களான என் மாமா, சித்தப்பா, தாத்தா மூவருமே இறந்து விட்டார்கள். இனிமேல் என் பெயரில் சொத்து எழுதிவிட்டுச் சாக உறவினர்கள் யாருமே இல்லையே”. மிக முக்கியமாக ஒரு கருத்தை உணர்த்துவதற்காகச் சொல்லப்படும் கதைதான் இது. சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில்தான் இருக்கின்றது. எல்லைகளை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் விரிவடையச் செய்துகொண்டுபோனால் எந்த சந்தோஷமும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது. ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ அதேமாதிரி இதுபோலத் திருப்தியற்ற மனம் உடையவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காது. அவர்களின் மனம் சோக மயமாகவே இருக்கும். தன்னிடம் இல்லாததை நினைத்தே கஷ்டப்படும். வாழியில் உள்ள ஓட்டை அடைத்து விட்டால் ஓரளவு தண்ணீர் ஊற்றியதும் நிரம்பி விடுவது போல் மனதில் இருக்கும் கரும்புள்ளிகளை Blind Spots அழித்து விட்டால் மகிழ்ச்சி நிரம்பும். இது கிடைத்தால்தான் எனது மனது சந்தோஷப்படும் என்று மண்டைக்குள் சில விஷயங்களை நம் மனது ஏற்றுக் கொள்கின்றது. அந்த இதுகள்தான் மனதின் கரும் புள்ளிகள். சில இளைஞர்கள் சந்தோஷம் என்றால் அமெரிக்கா என்று அர்தம் பண்ணிக் கொள்வதையும் நாம் பார்கிறோம். அவர்களைப் பொறுத்தவரையில் அமெரிக்கா போக விசா கிடைத்தால் அதுதான் சந்தோஷம். அதாவது விசா கிடைக்கும் வரை நான் சந்தோஷப் படுவதை ஒத்தி வைத்திருக்கிறேன் என்று அர்த்தம். ஆம் வருங்காலத்தில் நடக்கப்போகும் ஒரு விஷயம் மட்டுமே சந்தோஷம் கொடுக்கப் போகின்றது என்று சொல்லிக் கொண்டு நிகழ்காலத்தில் கிடைக்கும் சந்தோஷங்களை ஓட்டை வாளியைப் போல இவர்கள் கீழே விட்டுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட Blind Spot மன் உடைய இளைஞர்களுக்கு அமெரிக்கா போக விசா கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்கமுடியாது. விசா கிடைத்த மறுகணமே அமெரிக்காவில் வேலை கிடைத்தால்தான் என் மனது சந்தோஷப்படும் என்று ஏதாவது இன்னொரு காரணத்தைச் சொல்லி இவர்களே தமது சந்தோஷத்தைத் ஒத்திப் போட்டு விடுவார்கள். சரி அமெரிக்காவில் வேலையும் கிடைத்து விட்டது, அப்போதாவது சந்தோஷப்படுவார்களா?, கிறீன்கார்ட் கிடைக்கும்வரை சந்தோஷம் இல்லை என்பார்கள். அதுவும் கிடைத்துவிட்டால் அமெரிக்க வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. அப்பா, அம்மா, அக்கா, தங்கை, மாமா, உறவினர்கள், உற்றார்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரும் இருக்கும் இந்தியாவில்தான் சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லி மீண்டும் தங்கள் சந்தோஷத்தை ஒத்திப் போட்டு விடுவார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்பது கடைகளில் விற்பனையாகிறது என்ற கருத்து உடையவர்கள். ஆம் அவர்களுக்கு சிகரெட், மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப் பார்க்கும் போது ரமண மகரிஷி சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகின்றது. வசதியான மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாயிற்கு வேளா வேளைக்குக் கிடைத்த சாப்பாட்டில் ருசியில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறு ரோட்டில் வந்து தனக்குப் பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள் கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம். ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டு தெருவோர எச்சில் இலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால் அதில் இருந்த அத்தனை சுவையும் வற்றிப் போய் கல் போல ஆகியிருந்தது, ஆனாலும் அது தெரியாத நாய் அந்த எலும்பைக் கஷ்டப்படுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருச்சித்த நாயோ ரத்தம் எலும்பில் இருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ”மட நாயே! அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் இரத்தம் எலும்பில் இருந்து வெளிப்படும் இரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் இரத்தம்” .என்று சொல்ல வழிப்போக்கனைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொன்னது ”இத்தனை நாள்வரை இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும் வரை என் நாக்கு இரத்தம் சுவைத்ததில்லை. இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் இரத்ததின் சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே இந்த இரத்தம் எலும்புத் துண்டில் இருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது” என்று சொல்லி காய்ந்த எலும்பை மேலும் ஆவேசமாகக் கடிக்க ஆரம்பித்தது.

தன்னையே அழித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத் தேடி ஓடும் இப்படிப்பட்ட
மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dogs Logic என்று சொல்கின்றோம்.

சிந்தித்துப் பாருங்கள் … காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த சந்தோஷத்துக்கும் சிகரட் மது பொன்ற பொருட்களால்
தன்னையே அழித்துக் கொண்டு சிலர் அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

September 7, 2013


வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

சருமத்திற்கு அவோகேடோவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?





அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதிலும், வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. நிறைய ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் என்றால் அது அவோகேடோ தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இந்த பழத்தில் ஸ்டெரோலின் என்னும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு அவோகேடோவை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதிலும் அந்த அவோகேடோவை வெறும் ஃபேஸ் பேக் என்று மட்டும் பயன்படுத்தாமல், பல்வேறு வகைகளிலும் பயன்படுத்தலாம். மேலும் இந்த அவோகேடோ பழம் உதட்டிற்கும் மிகவும் சிறந்தது. இப்போது அற்புதமான அவோகேடோ பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவோகேடோ ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கில் அவோகோடோவுடன், உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிது தேனையும் ஊற்றி, முகத்திற்கு தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்.

அவோகேடோ ஸ்கரப்
பொதுவாக ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொலிவற்று காணப்படும் சருமத்தை பொலிவோடு வைக்க உதவும். இத்தகைய ஸ்கரப்பை வெண்ணெய் பழத்தை வைத்து கூட செய்யலாம். அதற்கு வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது உப்பு சேர்த்து, முகத்தில் தடவி, 2-4 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

அவோகேடோ மற்றும் பப்பாளி பேக்
இது சருமத்தை அழகாக்க செய்யப்படும் மற்றொரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கில் கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் வேக வைத்துள்ள அவோகேடோவின் கூழை சேர்த்து, சிறிது தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

அவோகேடோ ஸ்டோன் மசாஜ்
வீட்டிலேயே ஸ்பா சிகிச்சை செய்ய வேண்டுமா? அப்படியெனில் அவோகேடோ ஸ்டோன் மசாஜ் செய்து பாருங்கள். அதற்கு அவோகேடோவை மசித்து, முகத்தில் பூசி, பின் சிறு கற்களை கொண்டு, ஸ்கரப் செய்யும் போது முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பொலிவு பெறும்.

அவோகேடோ தேங்காய் க்ரீம்
இந்த க்ரீம்மை குளிர்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கலாம். மேலும் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்திருப்பதால், பழுப்பு நிற சருமம் மற்றும் சரும பிரச்சனைகளான அரிப்பு, தோல் செதில் செதிலாக வருவது போன்றவை நீங்கும்.

அவோகேடோ எண்ணெய்
பொதுவாக மசாஜ் செய்வதால், நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் அவோகேடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், இருக்கும். மேலும் இந்த எண்ணெயை உதட்டில் தடவினால், உதடு மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் மாறும்.

அவோகேடோ ஜூஸ்
இந்த வெண்ணெய் பழத்தின் ஜூஸ் சருமத்திற்கு நிறைய நன்மைகளை தரும். எனவே தினமும் ஒரு டம்ளர் அவோகேடோ ஜூஸ் குடித்தால், சருமம் அழகாக, சுருக்கமின்றி காணப்படும்.

August 12, 2013

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்


“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதில்லை. பலரும், “எனக்கு மட்டும் ஏன் இந்த கடன் தொல்லை? இந்த வியாதி…’ என்று நம் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகிறோம். பல நேரங்களில் பிரச்னைகளை நினைத்து கடவுளை நொந்து கொள்கிறோம். ஆனால், நாம் எப்போதாவது, “கடவுளே எனக்கு ஏன் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை? நான் ஏன் இதில் வெற்றி பெற்றேன்? என் தோழிக்கு வந்த அந்த நோய் எனக்கு ஏன் வரவில்லை?’ என்று நினைக்கிறோமா? ஒரு போதும் இல்லை. வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான். இரண்டையும் சரிசமமாக எண்ண வேண்டும்.

துன்பம் வரும் போது அதை நினைத்து கண்ணீர் விடுவதால் எந்த பலனும் இல்லை. அதிலிருந்து வெளி வருவது எப்படி என் பதை யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் வெற்றி நிச்சயம். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

1. நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் முதலில் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி எண்ணும் போது தான், பிரச்னையை நம்மால் எளிதாக கையாள முடியும்.

2. “இதை நான் எப்படி சமாளிக்க போகிறேன்?’ என்று பயப்படக் கூடாது. எதுவாக இருந்தாலும், நாம் தான், அதை எதிர்கொள்ள வேண்டும். எனவே, பயத்தை போக்குங்கள்.

3. என்னால் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்று நம்புங்கள். உங்கள் நம்பிக்கை மன தைரியத்தை கொடுக்கும். மன தைரியம் இருக்கும் போது, சிந்தனை தெளிவாக இருக்கும். எனவே,எடுக்கும் முடிவும் தெளிவாக இருக்கும். இது பிரச்னையில் இருந்து எளிதில் வெளிவர உதவும்.

4. தீர்வு காண முயலுங்கள். உங்கள் பிரச்னையை எடுத்து அதன் காரண, காரியங்களை அலசுங்கள். எவ்வாறு அதிலிருந்து வெளி வருவது என்பது பற்றி யோசியுங்கள்.

August 10, 2013

திறமை இருந்தும் ஏன் வெற்றி பெற முடிவது இல்லை?


நிறைய பேருக்கு திறமை இருக்கின்றது.
ஆனால் திறமை இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடிவது
இல்லை.காரணம் அவர்கள் திறமை மீது அவர்களுக்கே
நம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான்.

உங்களுடைய திறமையை வைத்து நிச்சயமாக
வெற்றி அடையலாம் என்று நீங்கள் நினைத்தால்
நிச்சயமாக உங்களால் வெற்றியடைய முடியும்.

நம்பிக்கையை உங்களுக்குள் வளர செய்வதிற்கு
பெரும் பங்கு உங்கள் மனதுதான்.

விரக்திகள் சில நேரத்தில் உங்கள் வெற்றி இலக்கை
அடைய தடை செய்யும். அவற்றை பொருட் படுத்தவே கூடாது.

தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தின் மூலமாக மிக சுலபமாக
விரக்தியை விரட்டி விடலாம். நம்மாலும் நம் திறமையினாலும்
வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும் என தீவிரமாக
நினைக்க வேண்டும்.

எந்த துறையில் திறமை அதிகம் உள்ளது என்றது
நீங்கள் என்று நினைக்கிறீர்களோ அந்த துறையில்
நிச்சயமாக உங்களால் வெற்றி அடைய முடியும்.
எல்லா துறைக்குமே இந்த உலகில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு.

உங்களையும் உங்கள் மனதையும் தயார் படுத்தி கொண்டால்
நிச்சயமாக உங்கள் திறமையை வைத்து உங்களால்
வெற்றி அடைய முடியும்.

தன்னம்பிக்கை ஒருவரது மனதில் தழைக்க தியானம்
பெரிதும் உதவும். தியானம் பழகும்போது மனதில் உள்ள
எதிர் மறையான சிந்தனைகள்(Negative  thinkings)  களையப்பட்டு
ஆக்க பூர்வமான (Positive thinkings) சிந்தனைகள் விதைக்க படுகின்றன.

நம்மாலும் வெற்றியடைய முடியும் நம்மால் வெற்றி
அடைய முடிய வில்லை என்றால் வேறு யாரால் வெற்றி பெற
முடியும் என்ற ஆக்க பூர்வமான சிந்தனைகளை (Positive thinkings)
தியானம் விதைக்கின்றது.
 
உங்களையும் உங்கள் மனதையும் தயார் படுத்த
தியானம் நிச்சயமாக உதவும்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...