ஒரு காட்டில் சிங்கம், புலி, கரடி, யானை, குரங்கு என பல விதமான பறவைகள் எல்லாம் வாழ்ந்து வந்துச்சாம். இவையெல்லாம் ஒற்றுமையா ஒரு குடும்பம் மாதிரி இருந்த தாம். தினந்தோறும் மாலையில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் சிங்க ராஜா தலைமையில் கூடி, அன்றைய நிகழ்ச்சிகள் பேசி மகிழுமாம். அந்த ஆலமரத்து விழுதில் ஒரு சிலந்தி இருந்ததாம்… அந்த சிலந்தி கூட்டம் கூடியதும் கீழ வந்து,
“நான் தான் பலசாலி, நான் தான் புத்திசாலி நான் தான் அறிவாளி” என்று பாடுமாமாம். நான் இதைக்கேட்ட விலங்குகளில் சில சிரிக்குமாம், சில விலங்குகளுக்கு கோபமாக வருமாம்… சிலந்தி பாடிட்டு விழுது வழியா மேல போயிடுமாம். இது வாடிக்கையாக தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி…..
கோடைகாலம் வந்தது. காட்டில மழையே இல்ல. விலங்குகள் நிறைய செத்துப் போயின.. குடிக்கத் தண்ணீர் இல்லாம அந்த காட்டில இருந்த குதூகலமே போயிடுச்சு…. எல்லா விலங்குகளும் வழக்கம்போல ஆலமரத்தடியில சோகமா கூடியிருந்தது…. எந்த விலங்கு மூஞ்சிலேயும் தண்ணீர் கிடைக்கும் நாம் வாழ்வோம் என்ற நம்பிக்கையே இல்லையாம். அப்போ சிலந்தி வேகமா மரத்தில இருந்து கீழிறங்கி வந்து கழுகுகிட்ட என்னோட வாண்ணு கூட்டிகிட்டு கழுகு ரொம்ப உயரத்தில பறக்க அதன் மேலே இருந்த சிலந்தி மழை மேகத்த தன் வாய் நூலால் கட்டி இழுத்து வந்து காட்டிற்கு அருகில் கொண்டு வந்திடுச்சாம்… காட்டிற்கு அருகில் மழை மேகம் வந்ததும் மரங்களின் குளிர்ச்சி பட்டு பெரிய மழை பொழிந்ததாம். சிங்கம் உள்பட எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியால துள்ளி குதிச்சதாம் சிலந்திய பார்த்து…
நீ தான் புத்திசாலி
நீ தான் பலசாலி
நீ தான் பலசாலி
என்று ஆரவாரம் செய்ததாம். சிலந்தி வெட்கத்தோடு அமைதியாக இருந்ததாம். தெரிந்த கதைதான். இதைப் படித்ததும் நமது மூளையும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை பெறுகிறதா இல்லையா……
ஆம்! சிங்கத்தின் முன்னால் சிலந்தி பெரிய விலங்காகும் போது நம்மால் எவ்வளவு பெரிய உயர்வை நாம் அடைய முடியும் என்ற புத்திசாலித்தனம் நமக்குள் எழுகிறதல்லவா?
சொற்கள் செயல் வடிவாகும் போது தான் நமக்கு புகழும் பெருமையும் சேர்கிறது. எண்ணம் சொற்களாகிறது. சொற்கள் செயல்வடிவாகும் போது நம் வாழ்வு உயர்கிறது. எதுவும் என்னால் முடியும் என்ற எண்ணம் நமக்குள் எதையும் சாதிக்கக்கூடிய சக்தியை தரும் என்பது உண்மைதான்.
நான் புத்திசாலி என்னால் எதுவும் முடியும் என்று வாய்விட்டுச் சொல்வதில் தவறில்லை. சொல்வதை வாய்ப்பு கிடைக்கும் போது செயல்வடிவமாக்கிட வேண்டும். அப்போது நம் திறமையை நாமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை…. நம்மைப்பற்றி உலகம் சொல்லும்!
முடியும் என்று நினைப்பதை சொல்வதை செயல்வடிவமாக்குவதைத் தவிர வேறு இலட்சியம் நமக்கு இருக்கக் கூடாது…. செம்மண்ணில் இருக்கும் நீர் சிவப்பாகும். பசு எதைச் சாப்பிடுகிறதோ…. அதைப் போலத்தான் பாலின் தன்மை அமையும்… நமது எண்ணம் போல்தான் செயல்பாடும் அமையும் என்பதை நினைவில் கொள்வோம். முடியும் என்பதையே மூச்சாகக் கொள்வோம்.
No comments:
Post a Comment