November 7, 2019

தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிங்க..

மோர் என்பது பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று.இது கோடைக் காலத்திற்கு ஏற்ற, எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்குகின்றது
மோரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் வளமாக இருப்பதோடு, பொட்டாசியம், புரோட்டீன் போன்றவைகளும் உள்ளது.அந்தவகையில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

  • அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டிருந்தால், காலையில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். மேலும் மோர் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் புளிப்பான ஏப்பத்தைத் தடுக்கும்
  • ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
  • மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்
  • மோரில் உணவை ஆற்றலாக மாற்றும், செரிமானம் மற்றும் ஹார்மோன் உற்பத்திக்கு முக்கியமான ரிபோஃப்ளேவின் மற்றும் பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது.
  • மோரில் அத்தியாவசிய இதர பொருட்கள் மற்றும் இஞ்சி உள்ளது. இது அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். மேலும், மோர் அதிகப்படியான அமில சுரப்பால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
  • ஒரு டம்ளர் மோரில் சிறிது இஞ்சி சேர்த்து குடித்தால், அஜீரண பிரச்னை நீங்கிவிடும். அதுவும் ஒருவர் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் நிச்சயம் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
  • உடல் வறட்சியை சரிசெய்ய சிறந்த வழி என்றால், அது மோர் குடிப்பது தான். மோரை ஒருவர் தினமும் குடித்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, உடலில் ஆற்றலும் அதிகரிக்கும்.
  • வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்னை குணமாகிவிடும்.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...