November 6, 2019

பெண்கள் சீக்கிரம் கர்ப்பம் தரிக்க நினைத்தால்


கருப்பை என்பது பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும்.
சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். நம் வீட்டில் இருக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும் சீக்கிரம் நீங்கள் தாய்மை அடையலாம்.

சீக்கிரம் கருவுற நினைப்பவர்கள் இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அவர்களது கருப்பை நன்றாக பலப்படும். இதனால் கரு தங்குவது எளிதாகிறது 
  1. நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
  2. பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார் மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
  3. ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகிய வற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். 
  4. பெண்கள் காபி குடிப்ப தை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சத விகித வாய்ப்பை அதிகரிக்கிறது. 
  5. காய்கறிகளில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் அதிகமான காய்கறிகளை எடுத்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை விரட்டி விடலாம்.
  6. பச்சையிலை காய்கறிகளில் நிறைய போலிக் அமிலம், இரும்புச் சத்து போன்றவைகள் உள்ளன. அதே மாதிரி கருப்பையின் உள்ளடுக்குகள் நன்றாக வலிமையடையவும் உதவுகிறது. இரும்புச் சத்து கர்ப்ப பையின் ஷைச்கோட் இணைப்பிற்கு உதவுகிறது.
  7. பூசணிக்காய் விதைகளில் உள்ள அதிகளவு இரும்புச் சத்து சீக்கிரம் கர்ப்பமடைய உதவி புரிகிறது.
  8. பழங்களில் வைட்டமின் சி, பயோப்ளேவோனாய்டு போன்றவைகள் உள்ளன. இவைகளும் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை தடுக்கிறது. னவே பசிக்கும் போது பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
  9. பால் பொருட்களான யோகார்ட், சீஸ், பால் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
  10. பெண்கள் 8 வாரங்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை குறைத்து விடலாம்.
  11. கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற குளிர்ந்த நீரில் வாழும் மீன்களில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பெண் உடம்பில் உள்ள புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியை குறைக்க உதவுகிறது
  12. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள். தினமும் காலையில் குடித்து வாருங்கள். இது உங்கள் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  13. ஒரு நாளைக்கு 2-4 கப் கீரை டீ குடித்து வாருங்கள். அதே மாதிரி பச்சை காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் கருப்பையின் ஆரோக்கியத்திற்கு தேவையான போலிக் அமிலம் போன்றவை உள்ளதால் இவை உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை வளர உதவி புரிகிறது.
  14. பாதாம் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை எடுத்து சாப்பிடுங்கள். இதில் அதிகளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  15. விளக்கெண்ணெய் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் கருப்பை நீர்க் கட்டிகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள ரிகோனோலிக் அமிலம் உங்கள் நோயெதிப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது கருப்பை தொற்றுகளை போக்கும்.
  16. கர்ப்பம் தரிக்க உதவுவதில் கொண்டைக்கடலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் கர்ப்ப பை ஊட்டச்சத்திற்கு உதவுகிறது.
  17. தினமு ம் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவைய ற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்த தை நீக்குகிறது. 
  18. மாதுளை கர்ப்ப பைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கருப்பை சுவர்களை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. அதே நேரத்தில் ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்தி எளிதில் கர்ப்பம் தரிக்க உதவுகிறது.
  19. வேக வைத்த உருளைக்கிழங்கை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கில் உள்ள விட்டமின் பி மற்றும் ஈ செல்பிரிதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப பைக்கு பயன்படுகிறது.
  20. பன்னீரில் உள்ள புரோட்டீன் பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தை வலுப்படுத்துகிறது. 
  21. பிரக்கோலி கர்ப்பம் தரிக்க உதவும் சூப்பர் உணவாகும். இதிலுள்ள போலிக் அமிலம், இரும்புச் சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் போன்றவை பெண்களின் கர்ப்ப பை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் சி கருமுட்டை முதிர்ச்சி அடைந்து ஓவுலேசன் செயல் நடக்க பயன்படுகிறது.
  22. நல்ல காரசாரமான உணவுகளும் நீங்கள் தாய்மை அடைய பெரிதும் உதவுகிறது. பச்சை மிளகாய் இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் அதிகரித்து இனப்பெருக்க மண்டல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
  23. விட்டமின் பி6 அடங்கிய வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள். இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சரியாக்குவதோடு தாய்மை அடையவும் உறுதுணை புரிகிறது.
மேற்கண்ட உணவுகள் உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே உங்கள் உணவுப் பழக்கத்தில் இது போன்ற உணவுகளை சேர்த்து ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...