November 17, 2010

எண்ணப் படம்

விசித்திரமானது மனித மனம், மனம் பற்றி அறிவியல் ஆன்மிகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருவே இதுவரை எழுதவில்லை.

ஒரு நாளைக்கு மனித மனத்தில் தோன்று எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.

மனதில் ஏற்படுத்தும் எண்ணங்களில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல எண்ணங்கள், மற்றது கெட்ட எண்ணங்கள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை எண்ணங்கள் உண்டு அவை தேவையற்ற எண்ணங்கள் என்ற வகையில் வரும்.

எண்ணங்கள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான், தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது நடப்பது போன்றது தான் மனதில் தோன்றும் எண்ணங்கள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது ஓடிக் கொண்டே இருக்கும், குழந்தைகளுக்கு பேச்சுவரும் வரை எண்ணங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் எண்ணங்கள் ஏற்பட்டு அறிவு வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் எண்ணங்கள் பிறகு அதனுடன் ஒப்பீட்டிற்காக தோன்று எண்ணங்கள் சேர்ந்துவிடும்.

தன்னால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் தான் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற THAT IS POSSITIVE / NEGATIVE OR BAD / WASTE THOUGHTS) எண்ணங்கள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே நமக்கு வந்து செல்லும் எண்ணங்கள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் மன ஓட்டத்தை மட்டுமே கவனியுங்கள் உங்கள் சிந்தனைகள் எங்கெல்லாம் சென்றுவருகிறது என்பதைப் பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய எண்ணங்களில் 90 விழுக்காடு தேவையற்ற எண்ணங்களாகவே இருக்கும்.

உடல் சார்ந்த அயற்சியைவிட மனம் சார்ந்த அயற்சியே சோர்வை மிகுதியாக தரும். இந்த மனச்சோர்வின் மூல காரணிகளே எண்ணங்கள் தான். நல்ல எண்ணங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், கெட்ட எண்ணங்களும் தேவையற்ற எண்ணங்களும் மனச்சோர்வை ஏற்படுத்தும். நம் எண்ணங்களில் 10 விழுக்காடு கெட்ட எண்ணங்கள், 80 விழுக்காடு வீனான எண்ணங்கள் என 90 விழுக்காடு இருக்கிறது. மூளையில் இருந்துதான் எண்ணங்களுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற எண்ணங்களினால் மூளையின் சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது, உடல் நலம் மனநலத்துடல் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வையும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற எண்ணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றியாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற எண்ணங்களை குறைத்துக் கொண்டவர்கள் தானே.

November 6, 2010

கந்த சஷ்டி கவசம்














காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

October 8, 2010

"யோக வாழ்க்கை" என்ற நூலில் மனம் - ஜீவனின் முக்கிய கரணம்

விலங்கு உடலாலும், உணர்வாலும் வாழ்கிறது. மனிதனுக்கு மனம் உண்டு. ஆனால் அவன் வாழ்வில் மனம் பெரும்பங்கு கொள்ளவில்லை. விலங்குக்குச் சிந்தனையில்லை, மனிதனுக்குச் சிந்தனையுண்டு, சிந்திக்கும் திறனிருந்தாலும், ஆசை எழும் நேரத்திலும், அவசியம் உள்ளபொழுதும், மனிதன் சிந்தனையை விலக்கி உணர்வின்படி நடக்கின்றான். சொத்து, சம்பந்தம் போன்ற விஷயங்களில் மனிதன் உணர்வைப் புறக்கணித்து, தேவைப்படி, உடலையொட்டி முடிவு செய்கிறான். மனம் உடையவன் என்பதாலேயே அவனுக்கு மனிதன் எனப் பெயர். அவனுடைய ஜீவனில் முக்கிய கரணமாக மனத்தைக் கூறினாலும், முக்கியக் கரணம் மனமில்லை. அது ஆன்மாவாகும். இன்றுவரை ஆன்மாவே மனிதனுக்கு முக்கிய கரணமாக உள்ளது. இருந்தாலும் இதுவே முடிவன்று. வருங்காலத்தில் சத்திய ஜீவியம் முக்கியக் கரணமாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.


விஞ்ஞானம் உடலைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி அதிகம். அவர்கள் கண்டு கொண்டதும் ஏராளம். உணர்வைப் பற்றிப் பண்டைய நாகரீகங்கள் ஏராளமாகத் தெரிந்திருந்தனர். கல்வி பரவும்பொழுது அந்தப் புலன்கள் மறைய ஆரம்பித்தன. 12 புலன்கள் 5 ஆக மாறின. புலன் என்பது உணர்வு. உளநூல் புலன்களை ஆராய்கிறது. முடிவாகச் சொல்லக் கூடியவை குறைவு. மனம் என்பதை அறிஞர்கள் அறிவார்கள். ஆனால் மனம் எப்படி உற்பத்தியாகிறது, எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆராய வேண்டும் என்று அறிஞர்கட்கு இன்றும் தோன்றவில்லை. அந்த ஆராய்ச்சியைத் தொடங்கும் உரிமை ஆன்மீகத்திற்கேயுண்டு. உலகெங்கும்,

ஆன்மீகப் பெருமக்கள் மனத்தைப் பற்றி ஏராளமாக அறிவார்கள்.
ஆனால் மனத்தின் ஆதி, அவசியம், அமைப்பு பற்றி இதுவரை இந்திய ரிஷிகளோ, மேல்நாட்டு விஞ்ஞானிகளோ, தத்துவ ஞானிகளோ சிந்தித்ததாகத் தெரியவில்லை.
ஸ்ரீ அரவிந்தம் மனம் எப்படி ஏற்பட்டது, எங்ஙனம் செயல்படுகிறது எனக் கூறுகிறது.
ஆன்மா, மனம், உணர்வு, ஜடம் ஆகியவற்றைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவுகளை Life Divine மூலம் கூறுகின்றது.
அடுத்த கட்டத்திற்கும் ஸ்ரீ அரவிந்தம் போகிறது. சிருஷ்டியை அதேபோல் ஆராய்கிறது.

மனம் உற்பத்தியான தத்துவத்தைச் சுருக்கமாகக் கூறி அதன் அம்சங்களை விளக்கமாகக் கருதுவோம். மனத்தின் ஆதி சத்தியஜீவியம். இது இரு பிரிவுகளாக மாறும்பொழுது இடைப்பட்ட நிலையில் மனம் உற்பத்தியாகிறது. இடைப்பட்ட நிலையில் இருப்பதால் அதனால் ஒரு பக்கம்தான் பார்வையுண்டு. ஆனால் திரும்பி அடுத்த பக்கத்தைப் பார்க்க முடியும். சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது மனம் ஏற்பட்டது. மனத்தின் கடமை பொருள்களைத் துண்டாடுவதாகும். இதுவே அதன் தத்துவம். மனத்திலிருந்து உணர்வும் வாழ்வு உடலும் (ஜடமும்) ஏற்பட்டது என்பதையும் ஸ்ரீ அரவிந்தர் இங்குக் கூறுகிறார். மனத்திற்கு ஞானம், உறுதி (knowledge, will) என இரு பகுதிகளுண்டு. ஞானத்திற்கு உறுதியில்லை, உறுதிக்கு ஞானமில்லை. இரண்டும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஞானம் உறுதியுடன் கலந்தால் ஓரளவு தன்னை இழந்துவிடுகிறது. உறுதி ஞானத்தை ஏற்றால் சக்தி பிறக்கிறது. இந்த சக்தியே உணர்வு, வாழ்வு என நாம் அறிவதாகும். ஜடம் ஏற்பட்ட விதம் மேலும் தத்துவமானது என்பதால் மனம் செயல்படும் வழிகளைக் கருதுவோம். மனத்தின் முக்கியக் குணங்கள், தன்மைகள், அம்சங்கள், திறன்களாவன,

ஒன்று பலவானால் சிருஷ்டியுண்டு. ஒன்றைப் பலவாக மாற்ற ஏற்பட்ட கருவி மனம்.
மனம் சத்திய ஜீவியத்தின் துணைக் கருவி.
இதன் கடமை பொருள்களைத் துண்டிப்பது.
சத்திய ஜீவியம் தன் ஆதி என்பதை நினைவு கூறும்வரை மனத்திற்கு அறியாமையில்லை.
ஆதியை மறந்தால் மனத்திற்கு அறியாமை எழும்.
சிருஷ்டி சத் என்பதில் ஆரம்பித்து சித், ஆனந்தம், சத்திய ஜீவியம்வரை வந்து மனத்துடன் முடிகிறது.
சிருஷ்டியின் கடைசி கட்டம் மனம், ஜடமன்று.
வாழ்வும், ஜடமும் மனத்தின் மற்ற உருவங்கள்.
வாழ்வில் மனம் ஓரளவு மறைந்துள்ளது.
முழுவதும் மனம் வாழ்வில் மறைந்தால் வாழ்வு ஜடமாகும்.
மனத்தின் கருவி சிந்தனை.
சிந்தனையின் முடிவு அறிவு.
சிந்தனைக்கு அடிப்படை ஜடமான எண்ணம், உயர்வு சூட்சும எண்ணம்.
சிந்தனைக்குக் கருவி எண்ணம்.
எண்ணத்திற்கு 3 பகுதிகளுண்டு ஜடம், சூட்சுமம், காரணம்.
எண்ணம் முழுவதும் சூட்சுமமானால், அது அழியாது.
எண்ணம் மூன்றாம் நிலையான காரணத்தை எட்டினால் மனம் மேதையாகும்.

மூளையில் நிலவும் சொல்லான எண்ணம் ஜடம்.
மூளையினுள் நுழையுமுன் எண்ணம் சூட்சுமமானது.
நினைவு, சிந்தனை, அறிவு, கற்பனை, முடிவு, பாகுபாடு, ஆராய்ச்சி போன்றவை மனத்தின் திறன்கள்.
ஜடமும் வாழ்வும் மனத்தால் உற்பத்தி செய்யப்பட்டவை. நடைமுறையில் மனம் வாழ்வாலும், ஜடத்தாலும் ஆளப்படுகிறது. தானே அதிபதி என மனம் உணர்ந்தால் மனத்திற்கு விடுதலையுண்டு. இன்று ஜடம் மனத்தை ஆள்கிறது. மனம் தானே அதிபதி என அறிந்தால் மனம் ஜடத்தை ஆளும். உடலுக்குப் பசித்தால், உணவு கேட்கிறது. இன்று பசிக்கும் பொழுது நாம் உடலைச் சும்மாயிரு எனக் கூற முடியாது. இதை ஜடமான உடலுக்கு மனம் கட்டுப்பட்டதாகக் கூறுகிறார்கள். மனம் தானே அதிபதி என்று கண்டுகொண்டால், உடலை, உனக்குப் பசி தேவையில்லை என்று கூறினால் வயிறு பசிக்காது. அதுவே மனம் ஜடத்தை ஆள்வதாகும். மனத்திற்கு மேலே ஆன்மாவுண்டு. ஜடம் உடலுக்குக் கீழேயுள்ளது. Life Divineஇல் 1039ஆம் பக்கத்தில்,

புறம் அகமானால், ஆன்மா ஜடத்தை ஆளும் என்கிறார் பகவான்.
அது முடிவான சித்தி. அதன் முதல் நிலைகள் நமக்குப் பயன்படும். 'கூ' என வைத்தியமுறையுண்டு. வியாதி வந்தால் அம்முறைப்படி, எனக்கு வியாதியில்லை என மந்திரமாக இடைவிடாமல் கூற வேண்டும். வியாதி குறைந்து மறையும். உடல் தனக்கு வியாதி வந்ததாக நினைக்கிறது. உடல் நினைப்பதை மனம் ஏற்கிறது. மனம் ஏற்பதால் வியாதிக்கு உயிர் வருகிறது. இதுவே 'கூ' முறையின் தத்துவம். மனம் தனக்கு வியாதியில்லை என்பதைச் சொல்வதால், மனம் வியாதியை நம்பாதே என உடலுக்குக் கூறுகிறது. உடல், மனம் கூறுவதை ஏற்றால் வியாதி குணமாகிறது.


மனம் விலகினால், வியாதி விலகும்.
சச்சிதானந்த சத், ஜடமாகவும்; சித், வாழ்வாகவும்; ஆனந்தம் சைத்தியப் புருஷனாகவும்; சத்திய ஜீவியம் மனமாகவும் மாறுகிறது என்பது தத்துவம்.

பரிணாமத்தால் பாதை மாறுகிறது.

சிருஷ்டி : பிரம்மம் → சத் → சித் → ஆனந்தம் → சத்தியஜீவியம் → மனம் → வாழ்வு → ஜடம்

பரிணாமம் : ஜடம் → வாழ்வு → மனம் → சத்தியஜீவியம் → ஆனந்தம் → சித் → சத் → பிரம்மம்

சிருஷ்டியில் பிரம்மம் பல நிலைகளைக் கடந்து ஜடமாகிறது. பரிணாமத்தில் ஜடம் பல நிலைகளைக் கடந்து பிரம்மமாகிறது. சிருஷ்டியில் பிரம்மம் தவிர வேறெதுவுமில்லை என்பதால் எல்லாமே பிரம்மம்.

ஜடம் மனமாகி, சத்தாகி, பிரம்மமாகிறது. அதுவே ஜடப்பிரம்மம்.
மனம் பிரிக்கும் கருவி. அதனால் சத்திய ஜீவியம் தரும் நிறைவை மனம் குறையாகக் காண்கிறது. தகப்பன் மகனுக்கு 1 கோடி ரூபாயை நிலம், வீடு, மனை, நகை, பணம் என அளித்தால், மகனின் மனம் வெளியூர் போகும் பொழுது கையிலுள்ள 2000 ரூபாயைக் கண்டு, அதை மட்டுமே தகப்பனார் கொடுத்ததாக நினைத்து 1 கோடி ரூபாயை, ரூ. 2000மாகக் காண்கிறது. மனம் எதிரிலுள்ளதை மட்டும் காணும் என்பதால்,

நிறைவைக் குறையாக நினைப்பது மனம் என பகவான் கூறுகிறார்.
குறையில் ஆன்மீக நிறைவைக் காண்பது சத்திய ஜீவியம்.

கையில் ரூ. 2000/- வந்தபொழுது அது தனக்குக் கிடைத்த 1 கோடியை நினைவுபடுத்தினால் அது மனம் செயல்படுவதில்லை. நம்முள் உள்ள சத்தியஜீவியம் செயல்படுவதாகும். அதனால் ரூ. 2000/- த்தில் 1 கோடியைக் காண முடியும்.

பணம் தேவை. பணமில்லாமல் வாழ்வில்லை. தேவை என்பது வேறு, ஆசை என்பது வேறு. பணத்திற்கு ஒரு குணம் உண்டு. தான் யாரிடம் உள்ளதோ, அவரைத் தனக்கு அடிமையாக்கும் திறன் பணத்திற்குண்டு. சன்னியாசி அனைத்தையும் துறந்தவன். பணத்தையும் துறந்தவன். பணம் வேறு, பணத்திற்குள்ள மரியாதை வேறு. பணத்தைத் துறந்த சன்னியாசி பணத்தின் மீதுள்ள மரியாதையைத் துறந்துவிட்டான் என்று கூறமுடியுமா? அன்னையிடம் வந்தவர்களில் பலர் தங்கள் சொத்து முழுவதையும் அன்னைக்குக் கொடுத்தனர். முழுச் சொத்தும் காணிக்கையான பின்னும் மனத்திற்குப் பணத்தின் மீது மரியாதை, பற்று இருப்பதுண்டு.

முழுச் சொத்தும் காணிக்கையான பின்னும் மனத்தைப் பணம் ஆட்கொள்வதுண்டு. I-94 (யோக வாழ்க்கை)
அற்புதம், அதிசயம், ஆச்சரியம் என்பவை பல்வேறு வகைப்பட்டவை. சரணாகதி என்பதற்கு இரு குணங்கள் உண்டு. நதி கடல் சங்கமமாவதை பகவான் உதாரணமாகக் காட்டுகிறார். சிறிய நதி, பெரிய கடல் சங்கமமாகி கடலின் பெரிய பரப்பில் கலந்து மறைகிறது. அடுத்த குணம் மனம் சரணாகதியை நாடினால் மனத்திற்கு அடுத்த கரணமான ஆன்மா வெளிவரும். மனத்திற்கு முந்தைய உணர்வும், உடலும் மனம் தேடும் சரணாகதியை ஏற்று அதன் பலனைத் தாங்களும் பெறுவார்கள். அதனால் ஆன்மா மலரும். அது அற்புதமாகும்.

அற்புதம் என்பது சரணாகதியில் சந்திக்கும் மனமும் ஆன்மாவுமாகும். I-128

மனம் என்பதன் இருப்பிடம் மூளை. அதன் கருவிகள் புலன்கள். புலன்கள் உணர்வுகளை மனத்திற்குத் தெரியப்படுத்துகின்றன. மனம் மூளை என்ற உடலுறுப்பிலிருந்து ஐம்புலன்களின் வழியாகச் செயல்படும் கரணமாகும். மனத்தின் தலையாய செயல் சிந்தனை. சிந்தனையின் முடிவும், தெளிவும் அறிவு எனப்படும். அறிதல் மனத்தின் தொழில். மனம் சிந்தனையின் மூலம் அறிதல் என்ற தொழிலில் ஈடுபட்டு உலகை அறிகின்றது. அப்படிப் பெறுகின்ற அறிவு தெளிவற்றது. மனத்தின் தெளிவை உணர்வும் உடலும் கரைப்படுத்துகின்றன. மஞ்சள் காமாலை கண்ணுக்குப் பார்ப்பனவெல்லாம் மஞ்சளாக இருக்கும். மனம் உயர்ந்த கருவியானாலும், உடலுக்கு மஞ்சள் காமாலை என்ற நோய் ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படுகிறது. மனம் உடலால், அதனுடைய பசி, தாகம், தூக்கம், நோய், வலி இவற்றால் பாதிக்கப்படாத திறனுடையதன்று. மேலும் கேட்கும் செவி, பார்க்கும் கண், நுகரும் நாசி, ருசிக்கும் நாக்கு, தொடும் உடல் ஆகியவற்றாலும் பாதிக்கப்படும். பாதிக்கப்படாத சுதந்திரம் மனத்திற்கில்லை. அவை போக விருப்பு, வெறுப்பு என்ற உணர்ச்சிகளாலும் மனத்தின் அறிவும், தெளிவும் பாதிக்கப்படும்.

உடலாலும், உணர்வாலும் பாதிக்கப்படாத மனம் காய்தல், உவத்தலில்லாத மனம். அம்மனம் தெளிவுக்குரியது. தெளிவுக்குரிய மனம், உயர்வுக்குரியது.

தெளிந்த உயர்வே, உயர்ந்த மனம். I-139.
சுபமுகூர்த்தம், கெட்டவேளையுண்டு. சில நேரங்கள் நல்லவை. வேறு சில நேரம் கெட்டவை. நல்ல நேரம் நல்லதைச் செய்யும். கெட்ட நேரம் கெட்டதைச் செய்யும், என்பது உலகம் உணர்ந்த உண்மை. ஸ்ரீ அரவிந்தம் இக்கூற்றை ஏற்க மறுக்கிறது. ஏனெனில், இதற்கு எதிரான அனுபவம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு உண்டு. எதிரானதும் ஒரு நேரம் உண்மை என்பதால், மேற்கூறியது பொய்யாகாது. மேற்கூறியது அதை நம்புபவர்கட்கு உண்மை. நாமறிந்தவற்றை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.


1. நல்லவை
2. கெட்டவை
3. நம்மைப்பொருத்து நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அமைவன.

பால் அமிர்தம், எல்லோருக்கும் நல்லது. எட்டிக்காய் கசப்பு, விஷம், அனைவருக்கும் கெட்டது. கத்தியின் பலன், உபயோகத்தைப் பொருத்தது. கத்தியை உபயோகப்படுத்தத் தெரிந்தவருக்கு பலன் உபயோகத்தைப் பொருத்தது. தெரியாதவனுக்குக் கத்தி தவறாமல் கையை வெட்டும். நம் நிலையுயர்ந்தால் கருவியின் பலனை நாமே நிர்ணயிக்கலாம். நேரம் என்பது மனத்தால் ஏற்பட்ட கருவி, காலம் எனப்படும். காலமும், நேரமும் மனத்திற்குட்பட்டவை. நேரத்தின் தன்மையைவிட மனம் உயர்ந்துவிட்டால், நேரத்தின் தன்மையை நிர்ணயிக்கும் திறன் மனத்திற்கு வரும். மனம் மேலும் உயர்ந்து உயர்ந்த மனமாகிவிட்டால், அம்மனம் செயல்படும் நேரம் சுபமுகூர்த்தமாகும். நேரத்தால் மனிதன் பாதிக்கப்படுவதற்குப் பதில், மனத்தின் உயர்வால் நேரம் உயர்வாகும்.

நேரத்தை முகூர்த்தமாக்கும் மனம் I-225,

மனம் தெளிவை ஏற்படுத்தும் கருவி. அதே காரணத்தால் சிக்கலை உற்பத்தி செய்யும் திறன் அதற்குண்டு. இராணுவம் எதிரியிடமிருந்து மக்களைக் காப்பாற்றும், ஆனால் இராணுவம் ஓரூரில் முகாமிட்டால் கொள்ளையடிக்கும் பழக்கம் அந்த நாளில் உண்டு. எதிரியிடமிருந்து காப்பாற்றும் இராணுவம் கொள்ளையடிக்கும் திறனுடையது. இராணுவம் ஆயுதம் தாங்கியது. ஆயுதம் எதிரியை வீழ்த்தும். இராணுவம் பிரியப்பட்டால் அதே ஆயுதம் எந்த மக்களைக் காக்க வேண்டுமோ அவர்களைத் துன்புறுத்தும். மனம் தெளிவுக்குரிய கருவி. சிக்கலை அவிழ்ப்பதே அதன் திறன். சிக்கலை உண்டு பண்ண மனம் முடிவு செய்தால் சிக்கல் தவறாது ஏற்படும்.

மனம் உள்ளவரை சிக்கலுண்டு. I-263
மனம் திறந்து பேசுவது மனம் மகிழ்ந்து இணைவதாகும். I-329
நியாயம் என்ற சொல்லை வழக்கில் சில சமயங்களில் சௌகரியம் என்ற கருத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள். திருடியவன் தன்னைத் தண்டிக்காதது நியாயம் என்று கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதுண்டு. திருடியவனைத் தண்டிக்காமல் அனுப்பியபொழுது அவன் அவ்விடம் விட்டுப் போகாமல் நெடுநேரம் நின்று கொண்டிருந்தான். ஏன் நிற்கின்றான் என விசாரித்ததில் தான் திருடிய பொருளைக் கொடுக்கும்படிக் கேட்டான். இன்று முழுவதும் நான் இதைத் திருடுவதில் செலவு செய்துவிட்டேன், இனி எங்குப் போய் சாப்பாட்டுக்குச் சம்பாதிக்க முடியும், என நியாயம் பேசினான். திருடனுக்குத் தான் திருடிய பொருளின் மீது உரிமையுண்டு என அவன் நினைக்கிறான்!

"அடிபட்டவனுக்கு அழ உரிமையில்லையா?"

"பெற்றவளுக்குப் பிள்ளையை அடிக்க உரிமையில்லையா? என்பதுபோல் எனக்கு என் மருமகளைக் கொடுமைப்படுத்தும் உரிமையில்லையா?" எனக் கேட்கும் மாமியாரும், அதே மனமுடைய முதலாளி, மருமகள், சிப்பந்திகள் உண்டு.

கொடுமை செய்யும் உரிமையை மனம் நியாயம் என்று கூறும். I-335.

இது நம்பமுடியாததாக இருக்கலாம். இது இன்று மட்டும் உண்மையில்லை. பைபிள் காலத்திலும் உண்மை. பாரத காலத்திலும் உண்மை. இதை ஒருவரால் நம்பமுடியவில்லை என்றால், கொடுமைக்காரர் ஒருவர் பதவியிலுள்ள ஸ்தாபனத்தில் நடந்தவற்றை அவர் அறிய முற்பட்டால், உடனே புரியும். அதைவிடத் தெளிவாகப் புரியக்கூடிய இடம் ஒன்றுண்டு. அது பொறாமைக்குரிய இடம். பொறாமை பொங்கி எழுந்தால், மனம் கொடுமைச் செய்யத் துடிக்கும். முடியும் என்றால் க்ஷணம் பொறுக்காமல் அக்கொடுமையை செய்வார்கள். செய்தபின் அது தங்கள் உரிமை என்று பேசுவார்கள். சொந்தப் பிள்ளைக்கும், பெற்று வளர்த்தவர்க்கும் இதுபோல் கொடுமை செய்வதுண்டு. அங்கு அது நியாயம் எனப் பேசுவதுண்டு.

தியானத்தில் மனம் அமைதியாகும். அமைதியான மனத்தில் பல உருவங்கள் தோன்றும். அது என்ன என்று மனம் நினைத்தால் உருவம் மறையும். அவ்வுருவங்கள், காட்சிகள் மனம் அமைதியாக இருக்கும்வரை இருக்கும்.

மனம் மறைந்தால் திருஷ்டி கிட்டும். I-347
நாம் நல்லெண்ணம், கெட்ட எண்ணம் எனப் பிரிக்கிறோம். அன்னை எண்ணமே கெட்டது என்கிறார். மனத்தில் எண்ணம் நடமாடினால் மாசு படியும்.

மனம் கடந்த மாசற்ற நிலை. I-490
எண்ணத்தைக் கடப்பதுபோல், மனத்தையே கடந்தால் மாசற்ற நிலை நிலையாகும்.


காலம் என்பது சித் என்பதிலிருந்து வருவது. நம்மைப் பொருத்தவரை சித் என்பது ஜீவியம் (consciousness) - சித் என்பது சித்தம், மனம். சித் காலத்தை உற்பத்தி செய்தது என்பது தத்துவம். மனம் காலத்தை உற்பத்தி செய்கிறது என்ற கருத்து நமக்குப் பொருந்தும். புலன்களை மனம் கருவிகளாக ஏற்படுத்தியது. மனம் காலத்தையும், புலன்களையும் உற்பத்தி செய்தது எனில், புலன்களையும், மனத்தையும் கடந்தவன் காலத்தைக் கடந்தவனாவான்.

புலனையும் மனத்தையும் கடந்தவன் காலத்தையும், இடத்தையும் கடந்தவனாவான். I-514
உடல் அஸ்திவாரம். உணர்வு மேலெழுந்தது. மனம் அதற்கும் மேலுள்ளது. செயலில் பலன் அடிப்படைத் தோற்றம் மேலெழுந்தவாரியானது. மேலெழுந்தவாரியான மனம் மேலெழுந்தவாரியான தோற்றத்தை நாடுகிறது. உரியதை நாடுபவனும், உயர்ந்ததை நாடுபவனும் நிதானமாக இருப்பார்கள். சிறியதை நாடுபவனும், உரிமையற்றதை நாடுபவனும் அவசரப்படுவார்கள், துடிப்பார்கள், பதைப்பார்கள்.

பலனை விட மனம் தோற்றத்திற்காகத் துடிக்கும். I-532

மனத்தில் எண்ணம் ஓடியபடியிருக்கும். அதுவே மனத்தின் தன்மை. வானில் மேகக் கூட்டங்கள் இருந்தபடியிருக்கும். அதே போல் மனத்தில் எண்ணமிருக்கும். இருவர் இதற்கு விலக்கு. மௌனம் பெற்ற யோகிக்கும், மனம் வளராத மடையனுக்கும் மனத்தில் எண்ணம் ஓடாது. ஓடும் எண்ணம் நாடும் விருப்பத்தைக் குறிக்கும். எண்ணம் வேகமானால் உடல் பதைபதைக்கும். கடமைகளைப் பற்றிய எண்ணங்கள் கனத்தவை. அவை மனித மனத்தைப் பிடித்து உலுக்காது. ஆசை, பயம், அவா, கற்பனைக் கோட்டை ஆகியவை எண்ணங்களை உற்பத்தி செய்யும். ஒவ்வொரு வகையான எண்ணத்திற்கும் உரிய போக்குண்டு. விவரத்தைத் தேடும் மனம் ஆராயும். முடிவை நாடும் மனம் சிந்திக்கும். அர்த்தமற்ற எண்ணங்கள் அதிவேகமாக எழும். அசை போடும் மனம் அர்த்தமற்றவற்றைக் கருதும். அவை மனத்தை உலுக்கும். கனத்த எண்ணத்திற்கு மௌனமில்லாவிட்டாலும், நிதானமிருக்கும்.

அசை போடும் மனம் பேயாய் உலுக்கும் . I-608
மேல்மனம், அடிமனம், உள்மனம், ஆழ்மனம் என்பவை பல நிலைகள். நாமறிந்த வாழ்வு முழுவதும் மேல் மனத்திற்குரியது. உள்மனம் என்பது பரந்தது. ஒருவருடைய உள்மனம் அவரறிவதானால், அவருக்கு விலங்கு, செடி கொடிகள் பாக்ஷை புரியும். அடிமனம் தெரியுமானால் அவருக்கு வீட்டினுள்ளிருக்கும்பொழுதே தெருவில் வருவது யார் எனத் தெரியும். நாம் இன்று வாழும் வாழ்வு முழுவதும் மேல் மனத்தைச் சேர்ந்ததேயாகும்.

முழு வாழ்வும் மேல் மனத்திற்குரியது. I-626
தூய மனம் தூய ஆன்மாவை அடைவது மோட்சம். I-634
மனம் உடலின் அதிபதி. I-735
செப்புப் பாத்திரத்தை மாற்றி வேறொரு பாத்திரமாக்க அதை அனலிலிட்டு உருக்க வேண்டும். பழைய வீட்டை வாங்கி புது பேஷனில் கட்ட வேண்டுமானால், பல இடங்களை இடிக்க வேண்டும். தோண்ட வேண்டும், கூரையை இறக்க வேண்டும். ரிப்பேர் முடிந்தபின் வீடு அழகாக, அலங்காரமாக இருக்கும். இடைநிலை கோரமாக இருக்கும். மனம் இன்றைய நிலையை விட அதிகத் தெளிவு பெற உள்ளதைக் கலைத்து புதியதை நிறுவுமுன் இடைநிலை பயங்கரமாக இருக்கும். மனத்திற்கு அது பைத்தியம்போல் தோன்றும்.


தெளிவுக்கு முந்தைய பைத்தியம். I-777
மனம் மாறினால் ஜடம் திருவுருமாறும். I-880
திருட்டு ஆசையை நாடும் மனம் பிரம்மத்தைத் திருட்டில் வெளிப்படுத்துகிறது. I-901
Stolen pleasure is sweet, திருட்டு ஆசைக்கு ருசி அதிகம் என்பது பழமொழி. மறைவாகச் செய்வதால் திறமை அதிகமாகத் தேவை என்பதால் ருசி அதிகமாக இருக்கும். மனித வாழ்வு, தெய்வீக வாழ்வு என மாறும்பொழுது சரி என்பது எல்லாக் கட்டங்களிலும் தப்பாகத் தெரியும். மனம் மாற்றத்திற்கு ஒத்துக் கொள்ளாது. பாரத யுத்தமும், கிருஷ்ண பரமாத்மாவின் யுக்திகளும் இதற்கு உதாரணம். திருவுருமாற்றத்தை நாடினால், நாம் கிருஷ்ணபரமாத்மா செய்தவற்றைச் செய்ய வேண்டியிருக்கும். கிருஷ்ணன் தெய்வம். தெய்வம் எதையும் செய்யலாம். நாம் தெய்வமாக நடக்க முடியாது என்பதால் கிருஷ்ணன் சொன்னதைச் செய், செய்ததைச் செய்யாதே என்றார் பெரியோர். ஸ்ரீ அரவிந்தத்தை ஏற்க வேண்டுமானால் கிருஷ்ணன் செய்தவற்றைச் செய்ய வேண்டும். எப்படிப் போவது? கிருஷ்ணன் எதிரிகளுக்குச் செய்த துரோகம், தவறான யுக்திகளை கிருஷ்ணன் என்ன மனநிலையில் செய்தானோ அம்மனநிலையில் செய்ய வேண்டும் என்பது பொருத்தமான பதில்.

செய்யும் மனப்பான்மை சரியானால், எந்த முறையும் தவறாகாது.
திருட்டு ஆசை தவறு. அதனால் அது கூடாது. திருடினாலும் பிரம்மம் உண்டு. பிரம்மத்தைத் திருட்டில் காண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் பிரம்மத்திற்காகத் திருட்டையும் ஏற்க வேண்டும். ஏற்கும் மனப்பான்மை, பிரம்மத்திற்குரியதாக இருக்க வேண்டும், திருட்டுக்குரிய மனப்பான்மையாக இருக்கக்கூடாது. பிரம்மத்திற்குரிய மனப்பான்மையுடன் திருட்டை ஏற்றால் அது திருடாக இருக்காது, திருவுள்ளமாக இருக்கும்.


தரித்திரம் போனாலும் மனம் தத்தளிக்கும். I-923
இம்மனநிலையை முன்னோர் அறிந்ததால் விருதுபட்டிக்குப் போன சனியனை வீடுவரை வந்துவிட்டுப் போ என்ற பழமொழியைச் சொன்னார்கள்.

உலகம் தாராத உரிமையை மனம் எதிர்பார்க்கும். II-26
ஓர் எண்ணம் சரியில்லை என்றால், நம்மால் அதை ஒதுக்க முடிவதில்லை. நம்மை மீறி மனம் ஏதாவது நடக்காதா என எதிர்பார்க்கும். மறுக்கும் எண்ணம் உணர்வு பெறுவது எதிர்பார்ப்பதாகும். மனம் எப்படி எதிர்பார்க்கும்? எந்தச் சட்டப்படி, எந்த நியாயப்படி எதிர்பார்க்கும் என்று நம்மால் நிர்ணயிக்க முடியாது. நம் அறிவைக் கடந்த நிலையில், நம் கற்பனை இதுவரை கருதாதவற்றையும் எதிர்பார்க்கும் திறனுடையது மனம்.

மனத்தின் ஆழம் ஆசையை ஆழ்ந்து அனுபவிக்கும். II-29
நம் மனத்தை நாம் அறிவோம் என நினைப்பது தவறு. நாம் அறியாத எண்ணங்கள், நாம் அறிய முடியாத எண்ணங்கள் நம் மனத்துள்ளிருக்கும். ஆசைக்கு சந்தர்ப்பம் வந்தபொழுது, அதை மறுக்கும் நிலை ஏற்பட்டபொழுது மனம் பாடுபடுவதை அறிந்தவருக்கு அது புரியும். புத்தி தெளிவாக இருந்தாலும், உணர்வு மாறுபட்டிருக்கும்.

பிறரைத் தீண்டும் மனம் உறவை விஷமாக்கும். II-68

உறவு என நாம் கூறுவது இரத்தபாசம். Human relationship என்பதை நாம் உறவு என்ற சொல்லால் குறிப்பிட்டால் சொந்தம் எழுந்து தெளிவு மறையும். உடன் பிறந்தவர், தம்பதிகள், வியாபாரக் கூட்டு, நட்பு இவற்றுள் உள்ள மனித உறவை நான் உறவு எனக் குறிப்பிடுகிறேன். அண்ணனுக்கு 9 பிள்ளைகள் தம்பிக்கு 1 பிள்ளை. சட்டப்படி சமமானாலும் தம்பி அண்ணனுக்குப் பெரிய பாகம் கொடுப்பது, கணவன் கடனுக்குத் தன் நகைகள் அனைத்தையும் கொடுத்த மனைவி, கூட்டில் கூட்டாளி தன் கடனைக் கொடுக்க சம்மதப்பட்ட கூட்டாளி தன் பங்கை விட்டுக் கொடுப்பது, நண்பனுக்கு உபரி இலாபம் வர பிரதிபலனின்றி உழைத்த நண்பன் ஆகியோர் இரத்தபாசத்தையும், திருமணக்கடமையையும், வியாபார நிர்ப்பந்தங்களையும், நட்பின் உரிமையையும் விட்டுக் கொடுத்த மனித உள்ளம் உள்ளவர்கள். மனித நேயத்தைக் கடந்த தெய்வச் சாயல் உள்ள உறவுகள் இவை. இவ்வுறவில் ஆதாயமாகவோ, ஆபாசமாகவோ, கணக்குப்படியோ பேசுவது தவறு. பேசினால் உறவு தன் உயர்ந்த நிலையை இழக்கும்.

பெரிய பாகத்தைப் பெற்ற அண்ணன், நீ விட்டுக் கொடுத்தது உண்மைதான், ஆனால் என் கஷ்டம் தீரவில்லையே என்பதுண்டு.
"உன் நகை கடனை அடைத்தது, இன்று பிழைக்க வழியில்லையே" எனக் கணவன் கூறுவான்.
"உன் பங்கு இலாபம் என் கடனை அடைத்தது உண்மைதான். இன்று முதல் போதவில்லையே".
"இலாபம் வந்தது உண்மைதான். ஆனால் மரியாதை வரவில்லையே" எனக் கூட்டாளியும், நண்பனும் பேசினால் மனம் உடைந்துவிடும். இவற்றை மனிதனால் பொறுக்க முடியாது. ஆனால் இதைக் கடந்த நிலையுண்டு. கணவன் மனைவியிடம் நான் விரும்பிய பெண் வேறு என்று கூறினால், அடுத்தவளை கணவன் மனம் தீண்டினால், அதன் பிறகு அங்கிருப்பது திருமணமில்லை. வெறும் உறவுதான்.
நேரடியாக மனம் சத்திய ஜீவியத்தை அடைய முடியுமென்றாலும் அது அரிது II-74

நாட்டில் தலைமைப் பதவியை நாடுபவர் படிப்படியாக உயருவதே இயல்பு. அதுவே கஷ்டம். நேரடியாக நாட்டின் தலைமைப் பதவிக்கு இந்திராவும், ராஜீவும் வந்தது அரிது. ஆன்மீகச் சட்டம் மனம் சத்திய ஜீவியத்தை நேரடியாக அடைய அனுமதிக்கும். ஆனால் நடைமுறையில் அது அரிது. படிப்படியாக உயருவதே முடியக்கூடியது. ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் அப்படி உயர்ந்தவர்களே. அன்னை சத்திய ஜீவியத்தை நேரடியாக அடைந்தவர்கள். நான் கொல்லைப் புறமாக வந்தேன் என்றார். பகவான் அவதாரப் புருஷர். 6 வருஷ காலத்தில் அத்தனை யோக சித்திகளும் அவரைத் தேடி வந்தன. அவர் இதைக் கூறினால் நாம் எங்கே?

மனம் உணரும் ஆனந்தம் அழகு. II-176
சச்சிதானந்தத்தில் உள்ள ஆனந்தத்தை மனமும், உணர்வும், ஆன்மாவும் காண முடியும். ஆன்மாவின் பார்வைக்கு ஆனந்தம் அன்பாகத் தெரியும். உணர்வில் ஆனந்தம் சந்தோஷமாகத் தெரியும். மனத்தின் கண்ணில் ஆனந்தம் அழகாகத் தெரியும்.

மனம் ஏற்காவிடில் எதிரான பலனிருக்கும். II-337
இது முக்கியமான செய்தி. ஆன்மீகப் பலனைப் பெறும் தகுதியைக் குறிக்கிறது. பெறுபவர் எக்காரணத்தாலோ தன்னை உயர்வாகக் கருதினால், தாழ்ந்தவரிடமிருந்து ஆன்மீகப் பலன் பெற முடிவு செய்தால், அதை அவர் மனம் ஏற்காவிட்டால், பலன் எதிராக இருக்கும். வயதாலோ, படிப்பாலோ, ஜாதியாலோ, பெண் என்பதனாலோ, தம்மைவிடத் தாழ்ந்தவரிடமிருந்து தீட்சை பெற முடிவு செய்தவர் பெறும் பலன் தீட்சையாக இருக்காது. தீட்சை பெற்றவுடன் அவருக்கு நோய் அல்லது விபத்து வரும். தீட்சை, ஆசி, அனுக்கிரஹம், கருணை ஆகியவை உயர்ந்தவை. தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்துடன் அதைப் பெற முடியாது. பெற முன் வந்தால் வீட்டில் தவறு நடக்கும். அது விலக்கப்பட வேண்டியது. குரு ஸ்தானத்தில் உள்ளவர் இதற்குச் சம்மதிக்கமாட்டார்.

அடங்கிய மனதை சுயநலம் மறக்கும். II-584

உடலும், உணர்வும் தேவை எழும் நேரம் அடக்க முடியாத வேகமுள்ளவை. மனத்திற்கும் அது உண்டு என்றாலும், பொதுவாக நாம் அதைக் காண்பதில்லை. மனிதன் விரும்பித் தவறு செய்வதுண்டு. தவறே மனதில் எழாத நேரம் பிறர் மூலம் ஆசையைச் சந்தர்ப்பம் கிளப்புவதுண்டு. முதல் நிலையிலுள்ளவனுக்கு நாம் சொல்லக் கூடியதில்லை. அவனுக்கே அவன் செய்வது தவறு என்று புரிய வேண்டும். தானே தவற்றை நாடி நான் போகவில்லை. பிறரால் நான் கெட்டுப் போனேன் என்பவன் செயலைப் பொருத்தவரை முந்தைய நிலையிலுள்ளவனிலிருந்து வேறுபட்டவனில்லை. எந்த அளவுக்கு மாறுபட்டவன்? ஏன் அந்த நிலை?

பிறர் தூண்டுதலையும் புறக்கணித்து முறையாக நடப்பவன் மனிதன். பிறர் தூண்டுதலுக்கு இரையானதற்குக் காரணம் மன உறுதியில்லை எனலாம். மன உறுதியுடன் எல்லா இடங்களிலும் நடந்தவருக்கும், பிறர் தூண்டுதல் சில சமயங்களில் காலை வாரி விடுவதுண்டு. அதற்குரிய பல காரணங்களில் ஒன்று கர்ம பலன். அதுவும் தன்னுடைய கர்மமாக இருக்கலாம். பிறர் கர்ம பலனில் தான் பங்கு கொண்டதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பலியானவன் பங்கு என்ன?

"வேகம் உள்ளத்தில் மறுக்க முடியாததாக இருப்பது ஒரு காரணம்"

மறுக்க முடியாத வேகம், அடக்க முடியாத உணர்ச்சி, பிறரைத் தூண்டச் செய்யும். நம்முள் உள்ள வேகம் அடக்க முடியாததானால், வெளியிலிருந்து சுயநலம் நம்மைத் தூண்டும். இது மனத்தின் தன்மை.

பூர்த்தியான மனத்திற்குப் புரியாதது இல்லை. II 713


எந்தக் காரியத்தை முடிப்பதும் பிரார்த்தனையால் முடியும். இது திறமையின் முதற்படி. அடுத்த கட்டத்தில் திறமை என்பது இனிமையான மனம். முதல் நிலை உடலுக்குரியது, அடுத்தது உணர்வுக்குரியது. மூன்றாம் கட்டத்தில் மனம் செயல்படுகிறது. மனம் தவறாது காரியத்தை முடிக்க, எனக்குப் புரியாதது இல்லை என்று சொல்ல வேண்டும். அம்மனம் பூர்த்தியானது.

மனத்தால் சரணாகதியை ஏற்பது மலை ஏறுவது போலாகும். II-869
சரணாகதிதத்துவத்தை கீதை மேற்கொண்டது. வைஷ்ணவர்கள் பின்பற்றுவது. நாயனார்கள் போற்றியது. மோட்சத்தை நாடி சரணாகதியை இவர்கள் மேற்கொண்டார்கள். நாம் நாடுவது மோட்சமன்று, பரிணாமம், திருவுருமாற்றம். இதற்குத் தேவையானது சரணாகதி என்றால் சொல் ஒன்றே என்றாலும், பொருள் வேறு. முதலீடு செய்து தொழில் செய்கிறோம். சிறிய தொழிலுக்கும் முதல் வேண்டும், பெரிய தொழிலுக்கும் முதல் தேவை. இரண்டுக்கும் தேவையானது முதல் என்றாலும் பெரிய தொழிலுக்குத் தேவையானது பெரிய முதல். வித்தியாசம் பெரியது.

மோட்சம் பெற ஆசையையும், அகந்தையையும் சரணம் செய்ய வேண்டும். அகந்தை என இங்கு குறிப்பிடுவது ஒரு கரணத்திற்குரிய அகந்தை.
பரிணாமம், திருவுருமாற்றம் பெற சரணாகதி தேவை என்றால் மனிதன் தன் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தம் ஆகிய நான்கையும் சரணம் செய்ய வேண்டும். இவற்றுள் 4 கரணங்கட்குரிய அகந்தைகள் அடங்கியுள்ளன. 4 அகந்தைகளும் சரணம் செய்யப்படவேண்டும்.
பகவான் சரணாகதி கடினம் என்கிறார்.
சரணாகதியை இதுவரை ஏற்றவர்கள் பகவானும், அன்னையும் மட்டுமே.
எல்லாக் கரணங்கட்கும் உரிய எல்லா அகந்தைகளையும் மனம் மட்டும் சரணம் செய்ய முடியாது. பூரண யோகம் ஒரு கரணத்தால் மனத்தால் செய்யப்படுவதன்று. அதனால் பூரணமான செயலை ஒரு கரணம் மனம் மேற்கொள்வது மலை ஏறுவது போலிருக்கும்.


மனத்தைக் காண முடியாது. எண்ணத்தைக் காணலாம். II-916
10 மடையன்கள் ஆற்றைக் கடந்து வந்த பிறகு 10 பேரும் இருக்கின்றார்களா என ஐயம் ஏற்பட்டு எண்ணினார்கள். 9 பேர் எனத் தெரிந்தது. ஒவ்வொருவரும் எண்ணினார்கள். முடிவு 9 என வந்தது. ஒருவரைக் காணோம் என அழுதார்கள். வழிப்போக்கன் விசாரித்து ஒருவரும் தவறவில்லை என 10 பேரிருப்பதாக எண்ணிக் காட்டியதாகக் கதை. எண்ணுபவர் தம்மை எண்ண மறப்பதால் 10 பேர் 9 பேராகத் தெரிந்தது. இது மடையனைப் பற்றிய கதை என நாம் சிரிக்கலாம். வாழ்வில் எவரும் ஒரு முறையாவது இதுபோல் நடக்காமலிருக்க மாட்டார்கள். கண்ணாடியைத் தேடுபவர்கள் போட்டுக் கொண்டே தேடுவதுண்டு.

எண்ணம் மனத்தின் கருவி என்பதால் எவரும் எண்ணத்தைக் காணமுடியும். நாமே மனம் என நினைப்பதாலும், மனத்தோடு நாம் ஐக்கியமாகி விடுவதாலும் நம் மனத்தை நாம் காண முடியாது. உடலைவிட்டு வெளியே போகும் திறமையுள்ளவர், வெளியிலிருந்து தம்முடல் தரையில் படுத்திருப்பதைக் காண்பார்கள். நம்மால் அது முடியாது. மனத்தை விட்டு வெளியே வந்தவர்கள் தங்கள் மனத்தை பிறர் மனம்போல் பார்க்கலாம். உடலை விட்டு வெளியேறுவது அனைவராலும் முடியாது. மனத்தை விட்டு வெளியேறுவது அதைவிடக் கடினம்.

ஒருவர் அதைச் செய்யப் பிரியப்பட்டால் அதற்கு முன் செய்யக் கூடியதுண்டு. தம் குறைகளை பிறர் அறிவதுபோல் அவர் அறிந்தால் அவருக்கு அத்தகுதியுண்டு.

மனம் மகிழுங்கள்

கூடுவாஞ்சேரியில் சின்னதொரு தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனபாலுக்கு வேலை போய்விட்டது. ஒருநாள் அவரை அழைத்த முதலாளி, "உலகப் பொருளாதார நிலை சரியில்லையாம். அமெரிக்காவில் வீடெல்லாம் விற்காமல், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல், பேங்க் திவாலாகிறதாம். அதனால் நமக்குத் தொழில் படுத்துவிட்டது. நான் ஆள் குறைப்புச் செய்ய வேண்டும். ரொம்ப ஸாரி. நீ இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்" எனக் கூலாகச் சொல்லிவிட்டார்.



என்ன அநியாயம் இது? அமெரிக்காவிற்கும் கூடுவாஞ்சேரிக்கும் என்ன சம்பந்தம்?

அது பொருளாதார இலாகா; அதில் நாம் மூக்கை நுழைக்க வேண்டாம். நமக்கு முக்கியம் தனபால். அவரது எதிர் வினை - reaction.

வீட்டிற்குத் திரும்பிய தனபால் யோசித்தார். என்ன செய்யலாம்? "போகட்டும், ஒரே கம்பெனியில் குப்பை கொட்டி அலுத்துப் போய்விட்டது. புதிதாய் ஏதாவது முயல்வோம். குச்சி ஐஸ் விற்றுப் பார்க்கலாமா? டீக்கடை? எங்கு போட்டாலும் மவுசு குறையாத தொழில், அதைச் செய்வோமா?" இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து ஏதோ ஒன்றை அடுத்த சில நாட்களிலேயே அவர் தொடங்கி விட்டார்.

சென்னையில் மற்றொரு தொழிலதிபர். ஏகப்பட்ட சொத்து, பங்களா, கார், ஆஸ்திக்கு ஒரு மனைவி, ஆசைக்குப் பல நாயகிகள் என்று சொகுசு வாழ்க்கை. ஒருநாள் தடாலென ஸ்டாக் மார்க்கெட் தலைகீழாகத் தரையில் விழுந்தது; மனுஷன் இரவில் படுக்கச் சென்றவரைக் காலையில் பார்த்தால் மின் விசிறியில் கால்கீழாகத் தொங்கிக் கிடந்தார்.

இங்கு இருவர் எடுத்த இருவேறு முடிவுகளுக்குக் காரணம் மனம் ஓர் இழப்பை எதிர்கொண்ட பக்குவம் ஆகும். அதுதான் இரு முடிவுகளுக்கிடையேயான முக்கியமான வித்தியாசம். ஒருவர் இழப்பை மட்டுமே கண்டு துவண்டுவிட, மற்றவர் ”போனால் போகட்டும் போடா” என்று உதறிவிட்டு, அதைவிட வேறு நல்ல வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

வாழ்க்கையின் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியையோ துயரத்தையோ நிர்ணயிப்பதில்லை. அந்த நிகழ்வை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; பிறகு எப்படி எதிர் வினையாற்றுகிறோம் (react) என்பது தான் நிர்ணயிக்கும்.

"எல்லாம் எல்லை மீறிப் போச்சு! இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை!" என்று நினைத்தால் நாம் அவ்விஷயத்தில் நமது கட்டுப்பாட்டை இழக்கிறோம். அந்தக் கட்டுப்பாட்டிழப்பு நமது முடிவு!

"நான் அம்பேல்!" என்று கையைத் தூக்கிவிடுவதால் ஏற்படுவது.

போராட்டம் இல்லையெனில் அது என்ன வாழ்க்கை?

மன மகிழ்வுடன் இருப்பதென்பது, எப்பொழுதுமே எளிதான ஒன்றில்லை. வாழ்க்கைப் பாதையில் காணும் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப அதன் கடுமையும் மாறுபடும். நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் அது! சில சமயங்களில் நம்முடைய மனவுறுதி, விடாமுயற்சி, சுயக் கட்டுப்பாடு ஆகியனவற்றையெல்லாம் படையாகத் திரட்டி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் உருவாவதுதான் நம் மனப் பக்குவம்.

மனப் பக்குவம் என்பதென்ன?

அதுவே தனி சப்ஜெக்ட் ஆக விரியும்.. இந்த இடத்தில் நமக்குத் தேவையான மனப் பக்குவத்தை மட்டும் பக்குவமாய்ப் பார்த்துவிடுவோம்.

இங்கு மனப் பக்குவம் என்பதன் பொருள் நமது மன மகிழ்விற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வது ஆகும்.

நம்முடைய சுற்றமும் நட்பும் சூழ்நிலையும் கூட நம் மன மகிழ்வைச் சிதைக்கக் கங்கணம் கட்டிக் களத்தில் இறங்கலாம்.

ஆனால் ஒவ்வொருவரின் மனதும் யாருடையது? அவரவருடையது!

அதன் மகிழ்வு யாருடையது? அவரவருடையது!

எனில், அதன் பொறுப்பு யாருடையது? அதுவும் அவரவருடையதே!

அப்படியானால் அவரவரும் தங்களிடம் இருப்பதில் தானே கவனம் செலுத்த வேண்டும்? அந்த மனப் பக்குவம் வர வேண்டும் என்கிறார்கள்.

மேலும் சற்று விளக்கமாய்ப் பார்ப்போம்.

நமது மனதில் ஓடக்கூடிய எண்ணங்கள் யாருடையவை?

நம்முடையவை! இன்று இதையெல்லாம் நீ நினைக்க வேண்டும் என்று யாரும் நமது மூளைக்குள், கணினியில் ஃபீட் செய்வதுபோல் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகவில்லையே! நம் மனதில் ஓடும் எண்ணங்களையெல்லாம் நாமாகத் தானே சிந்தித்து ஓட்டிக் கொள்கிறோம்.

எனவே நமது மகிழ்ச்சிக்கான ஆதிக்கம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஜவுளிக் கடைகளில் பெண்கள் தேடித் தேடி நல்ல டிஸைன் துணிகளை எடுப்பது போலத் தேடித் தேடி மகிழ்வான எண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில நம் கவனத்தைச் செலுத்தப் பழக வேண்டும். அந்த மனப் பக்குவம் வந்து விட்டால் போதும், வாழ்க்கையின் நிகழும் பெரும்பாலான அநாவசிய நிகழ்வுகளை உதாசீனப்படுத்தி விட்டோ, நிராகரித்து விட்டோ, மனம் மகிழலாம்.

ஆனால் பெரும்பாலும் நடப்பவை என்ன? நேர்மாறானவை!

அலுவலகத்தில் ஒரு முக்கிய ப்ராஜெக்ட். இராப் பகலாய் உழைத்துச் சாதித்து விட்டீர்கள். அனைவரும் உங்களைப் பாராட்டியிருப்பார்கள். நீங்களும் மகிழ்வடைவீர்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும், பர்மா பஜாரிலிருந்து நல்ல பூதக் கண்ணாடி ஒன்று வாங்கி வந்து நெற்றியில் மாட்டிக் கொண்டு, உங்கள் ப்ராஜெக்ட்டை அலசி மேய்ந்து, தருமியிடம் நக்கீரன் சொன்னதுபோல், "உமது ரிப்போர்ட்டில் ஒரு குற்றம் இருக்கிறது!" என்று மட்டம் தட்டியோ இகழ்ந்தோ பேசிவிடுவார்.

போச்சு! எல்லாம் போச்சு!

அத்தனை பேரின் பாராட்டும் நல்வாழ்த்துகளும் மறந்துபோய், அந்தக் கீறலும் கீரனும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ள, அந்த எண்ணமே நாள், வார, மாதக் கணக்காய் உங்கள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். வெற்றிகரமான 25ஆவது வாரம் போஸ்டர் ஒட்டாத குறை!

ஒரு கெட்ட அனுபவம், இகழ்ச்சி, யாரோ எவரோ போகிற போக்கில் உங்களைச் சீண்டிவிட்டுப் போகும் ஒரு பேச்சு, இப்படி ஏதாவது ஒன்று உங்கள் மனதை ஆக்கிரமித்து இடம்பிடித்துக் கொண்டால் அதன் விளைவுகள் மகிழ்வைக் கொன்றுவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது. நம் மனதின் கட்டுப்பாடு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

நம்மில் பலரும் பாராட்டைச் சில நிமிடங்களுக்கும் இகழ்ச்சியை ஆண்டாண்டிற்கும் நினைவில் வைத்துக் கொள்கிறோம். அதன் பலன்?

நாம் குப்பை சேகரிப்பாளர்களாக ஆகிவிடுகிறோம். தன் முகத்தை குறிவைத்துத் தூக்கி எறியப்பட்ட ஷுவையே புஷ் "ஷு" எனத் தட்டிவிட்டுச் சென்றுவிட, இருபது முப்பது வருடங்களுக்கு முன் நம் மீது வீசப்பட்ட குப்பைகளையெல்லாம் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொண்டு "மறப்பேனா அதை?" என்று மல்லுக்கட்டினால் எப்படி?

"இருபது வருஷமாச்சு. இன்னிக்கும் அவன் சொன்னது மறக்கலே! என் மனசுல அப்படியே இருக்கு!" என்பவர், முந்தாநாள் எதிர் வீட்டுக்காரர் ஏதோ ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியதை மறந்தே போயிருப்பார். ஆனால் பழைய குப்பை அவரது மனதை அப்படியே ஆக்கிரமித்து இருக்கும்.

ஆம்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எளிய உபாயம் உண்டு. நாளைக் காலை ஆயுள் பாக்கியிருந்து எழுந்தால், ஒரேயொரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அது, "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!". விவிதபாரதியில் ஒலிபரப்பாகும் பாடல் இல்லை; நீங்கள் எடுக்க வேண்டிய உண்மையான தீர்மானம்.

என்றாவது ஒருநாள் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தானே எல்லோரும் பிரயாசைப்படுகிறோம். அந்த என்றாவது ஏன் இன்றாக இருக்கக்கூடாது? உணர்ந்து பாருங்கள். மாற்றம் தென்படும்.

"கடுந்துயரம்", "மனப்பாரம்", "தனிமை" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம் இருந்து கொண்டுதான் இருக்கும். அவையெல்லாம் தீர்ந்தபின் மகிழ்வடையலாம் என்பதெல்லாம் அல்லாமல் ஒரே ஒரு முடிவு மட்டும் தேவைப்படுகிறது. அனைத்தையும் ஒதுக்கி ஓரமாய் வைத்துவிட்டு "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!"

வாழ்வின் நிறமே மாறிவிடும்!

மன மகிழ்வுடன் வாழ்வதென்பது, பூமி மாசடைய ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடினமாக இருந்துவந்த செயல்தான். அதற்காக மகிழ்வைத் தொலைப்பதா?

வீட்டை அழகாய் வைத்துக்கொள்ள என்ன செய்வோம்? குப்பையைக் கடாசிவிட்டு, பயனுள்ள பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்வோம். அதைப் போல்தான் மன மகிழ்வும். மனதிலுள்ள குப்பையை எறிந்துவிட்டு, நல்லவற்றை மட்டுமே சுமந்தால் போதும்.

கண்ணாடி சன்னல் வழியாக இருவர் வெளிப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னலுக்கு வெளியே உள்ள அழகிய தோட்டம் ஒருவரின் மனதைப் பறித்தது; அங்கிருந்த பூக்கள் புத்துணர்வூட்டின. மற்றவருக்கோ சன்னலில் படித்துள்ள அழுக்கும் பிசுக்கும் மட்டுமே கண்ணை உறுத்தியது. தோட்டமும் பூக்களும் அவர் கண்ணில் படவே இல்லை.

நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே நமது மனம் காணும். அதுதான் சூட்சமம்.

August 28, 2010

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்.

1. கால பைரவாஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது

இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.

2. சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:

”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

3.வடுக பைரவ மூல மந்த்ரம்:

”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்
குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”

சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

4.பைரவ காயத்ரி 1:

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:

”ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.

பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.

ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.

திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.

ஆலயத்தில் ஒதுக்குப் புறமாக இருக்கின்றாரே என ஒதுங்கிப் போகாமல், பைரவரை, நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம் அல்லவா?

August 27, 2010

வாழ்க்கை தத்துவம்

இந்த உலகில் மகிழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல எந்த நேரமும் சோகத்துடன் இருக்கிறார்கள். இவர்களின் சிந்தனையும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. எதிர்மறையாகச் சிந்திபவர்கள் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய வெகுநாட்கள் ஆகும். சிலர் மட்டுமே சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அவர்கள் எதிர்மறையான எண்ணங்களை ஆக்கமுள்ளதாக மாற்றிக் கொண்டதே அதற்குக் காரணம்.

`ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறியவுடன் நாம் ஆசைபடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. வேறொன்றின் மீது நம் ஆசை திரும்புகிறது. நடந்து செல்லும்போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை, அது நிறைவேறியவுடன் `பைக்’ மீது திரும்புகிறது. அது நிறைவேறியவுடன் கார் என இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது நம்மிடம் இருக்கின்ற பொருள்களைக் கொண்டு திருப்தியடைகிறோமோ, அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தோன்றும். வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. சில நேரம் வெற்றி கிடைக்கும். சில நேரம் தோல்வி கிடைக்கும். தோல்வியடையும் சமயங்களில், `நான் எப்போதும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று புலம்பி அடுத்தகட்ட முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதற்குக் காரணம் `நம்மால் முடியாது’ என்ற எண்ணமே. முதலில் அந்த எண்ணத்தைத் தூக்கி போட்டுவிட்டு, உங்களின் கடந்த கால வெற்றிகளை ஒரு தாளில் எழுதிக்கொண்டே வாருங்கள். நீங்கள் பெற்ற வெற்றியின் சாதனைபட்டியல் உங்களை அடுத்த வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.

ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் உயர்ந்தவராக இருப்பார். அழகு, படிப்பு, குணம், திறமை, செல்வம் இதில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவரிடம் இருக்கலாம். அதற்காக அந்தத் தகுதி நம்மிடம் இல்லையே என மற்றவரை ஒப்பிட்டு பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நாமே சிறந்தவர் என உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். உங்களுடைய சாதனைகள், வெற்றிகள் சிறியதாக இருந்தாலும் அதை எண்ணி பெருமைபட வேண்டும். அதற்காக தற்பெருமைடன் திரியக் கூடாது. வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் சந்தோஷமான சம்பவங்களும் உண்டு, கசப்பான சம்பவங்களும் உண்டு. கசப்பை ஜீரணித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. `எனக்கு மட்டும் ஏன் எல்லாம் தப்பாகவே நடக்கிறது?’ என்று எண்ணி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பலர். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அதை புரிந்து கொண்டு வெற்றிக்கான தேடலைத் தொடங்குங்கள். மற்றவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷபடுபவர்களை விட, பொறாமைபடுபவர்களே அதிகம். ஒருவரை அழிக்கும் மிகபெரிய ஆயுதம் அவரிடம் உள்ள பொறாமைக் குணம்தான். ஒருவருடைய வெற்றியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரை பார்த்து பொறாமைபடத் தேவையில்லை. அவரை பாராட்டி ஊக்கபடுத்துவதன் முலம் நாமும் முன்னேற முடியும். இப்படிச் செய்வதால் அவர் பெற்ற வெற்றி ஒருநாள் உங்கள் பக்கமும் திரும்பும். அதேநேரம் உங்களைவிடவும் அதிகமானோர் இன்னும் மேலே வர முடியாமல் இருக்கின்றனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவருடைய வெற்றியை பார்த்து பொறாமைபடுவதை விட, அந்த வெற்றியை நாமும் அடைய முயற்சி செய்வது தான் சரியான வழி. அனுபவம் இல்லாமல் திடீரென ஒரு செயலில் இறங்கினால் தோல்விதான் கிடைக்கும். எனவே, பிறருடைய வெற்றியில் பங்கு கொண்டு, அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், சரியான வாய்புகள் வரும்போது வெற்றியை அடையலாம்.

ஒரே குறிக்கோளை அடைய எண்ணி இருவர் முயற்சி செய்யும்போது ஒருவரை மற்றவர் ஊக்கபடுத்தினால் வெற்றியின் இலக்கை விரைவில் அடையலாம். எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருபவர்கள், தன்னை பற்றி ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் நல்ல விமர்சனங்களை உருவாக்கக் கூடிய வாய்புகளை அவர்கள் இழக்கக் கூடும். எனவே, எதிர்மறையான விமர்சனங்களை எண்ணி நேரத்தை வீணாக்காமல், நல்ல விமர்சனங்களை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிடுங்கள். பிறருடன் ஆக்கபூர்வமாக பேசுவதே உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை பிறரிடம் ஏற்படுத்துவதுடன், நீங்களே உங்களை பற்றி உயர்வாக உணரவும் வழிவகுக்கும்.

எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்ய அர்பணிப்பும், தெளிவான குறிக்கோளும் அவசியம். முதலில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை அடைவதற்கான வழிகளைக் கண்டுபிடிங்கள். அதற்காக உங்களின் சக்தி முழுவதையும் செலவழிங்கள். உங்களுடைய வாழ்க்கையையே அர்பணியுங்கள். அந்த செயலில் தோற்றால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதையும் தாமதிக்காமல் உடனே செய்யுங்கள். பிறருடைய வெற்றியில் இருந்தோ அல்லது தோல்வியில் இருந்தோ உங்களுக்குத் தேவையானதை கற்றுக் கொள்ளுங்கள். அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? எந்த விஷயங்களை புதிதாக சேர்த்துக் கொண்டார்? எந்த விஷயங்களை தம்மிடம் இருந்து விலக்கி வைத்தார்? போன்ற விஷயங்களை வெற்றி பெற்றவரிடம் இருந்தும், என்ன காரணத்திற்காகத் தோல்வியைத் தழுவினார் என்பதை தோல்வி அடைந்தவரிடம் இருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்.

July 31, 2010

வாழ்க்கையை முழுமையாக வாழ எளிய சுய-மனோவசிய பயிற்சி

இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் ஒவ்வொரு வினாடித் துளிகளும் நமக்கென்றே பரிசளிக்கப்பட்ட மிக அழகான தருணங்கள். ஒவ்வொரு தருணத்திலும் பல்வேறு அனுபவங்கள், அதற்குள் பொதிக்கப்பட்ட சின்ன சின்னச் சந்தோஷங்கள் என வியாபித்திருக்கின்றன. அவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரமும் நம் கையில் இருக்கிறது.

ஆனால், நாமோ நம்முடைய அன்றாடத் தேவைகளுக்காக ஓட ஆரம்பித்து, நமது எதிர்காலம், நமது வருங்கால சந்ததியினரின் தேவைகள் என ஓடிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குறிக்கோள். ஒரு இலக்கை குறித்துக் கொண்டு ஆரம்பித்த ஓட்டம் காலப் போக்கில் மாறி விடுகிறது. சிலர் குறித்த இலக்கை அடைகிறார்கள். சிலர் அடைவதில்லை. பலருக்கு அடைந்தும் திருப்தியில்லை. உண்மையில் வெற்றியோ மன அமைதியோ - எதனையும் அடையக் கூடிய சக்தி நம்முள்ளேதான் உள்ளது.

நம் உண்மையான வழிகாட்டியான ஆழ்மனதை (sub-conscious) எளிய சுயமனோவசிய பயிற்சிக்குப் பழக்கி நாம் விரும்பும் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வரலாம். தியானத்தின் போது இருக்கும் மனநிலைதான் ஆழ்மன சுயமனோவசியப் பயிற்சியின் மனநிலையும்.

இதோ பயிற்சிக்கான எளிய வழிகள்:

• முதலில் ஒரு அமைதியான இடத்தில் சற்று வசதியாக அமர்ந்து கொள்ளவும்.

• பிறகு கண்களை மூடி, மூச்சை நன்றாக உள் இழுத்து, சில வினாடிகள் வைத்திருந்து, பின் வெளியே விடவும். இதே போன்று மூன்று முறை செய்யவும்.

• பிறகு, தலையிலிருந்து பாதம் வரை மெதுவாக கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் ஒவ்வொரு தசையும் ஓய்வாக உணரும்படியாக, 'ரிலாக்ஸ்' என்ற ரம்மியமான கட்டளையுடன், உச்சந்தலையில் ஆரம்பித்து முன் மண்டை, முகம், கழுத்து என அடி வரை அவசரமில்லாமல் கவனத்தை கொண்டு செல்ல வேண்டும். நமது உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ரிலாக்ஸ் ஆவதை கண்களுக்குள் காட்சியாகவும் உருவகம் செய்யலாம்.

• பயிற்சியின்போது வெளியிலிருந்து எண்ண அலைகள் தாக்காமல் இருக்க, நம்மைச் சுற்றி ஒரு வெள்ளை ஒளி சூழ்ந்து பாதுகாப்பதாக கற்பனை செய்து கொள்ளவும்.

• உடலின் ஒவ்வொரு பாகத்தின் தசையும் ஓய்வாக உணர்ந்து, ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிய பிறகு, பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே மேலிருந்து கீழ் நோக்கி, மாடிப்படி வழியாகவோ அல்லது எலிவேட்டர் (Elevator) மூலமாகவோ இறங்குவதாக கற்பனை செய்யவும். ஒவ்வொரு எண்ணை எண்ணும்போதும் இன்னும் ஆழமாக, இன்னும் ஆழமாக என்று கூறிக்கொண்டே இறங்கவும். (கவனம் சிறிது பிசகுவது போல உணர்ந்தால், பத்திலிருந்து ஒன்று வரை எண்ணிக் கொண்டே இறங்குவதை இரண்டு முறை செய்யலாம்.)

• இப்பொழுது நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, மிக அழகான, மிக இனிமையான ஒரு இடத்திற்கு வந்து விட்டதை உணருங்கள். அந்த இடம் உங்கள் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடமாகவோ அல்லது உங்கள் விடுமுறை நாட்களில் செல்லும் இடமாகவோ அல்லது ஒரு கற்பனை இடமாகவோ கூட இருக்கலாம். மெதுவாக உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பாருங்கள். மிருதுவாக அவற்றை தொட்டுப் பாருங்கள். சுற்றிக் கேட்கும் இனிமையான ஒலி, ஒருவிதமான நறுமணம் ஆகியவற்றை உணருங்கள். இந்த அனுபவம் மனக் கண் முன் தெளிவான உயிரோட்டமுள்ள காட்சியாகட்டும்.

• இப்பொழுது, உங்கள் குறிக்கோளைக் கற்பனை செய்யத் தொடங்கலாம். அந்தக் குறிக்கோள் கற்பனையில் காட்சியாகவோ, செயலாகவோ அல்லது வார்த்தை வடிவாகவோ இருக்கலாம். குறிக்கோள் கற்பனை பலமுறை செய்யவும்.

• பிறகு, அந்த குறிக்கோள் முழுமை அடைவதை பல நிலைகளாக்கி, ஒவ்வொரு நிலைக்கும் சென்று, அந்த ஒவ்வொரு நிலை வெற்றி தரும் அனைத்து உணர்வுகளையும், அமைதியாக முழுமையாக அனுபவிக்கவும்.

• இதில் மிக முக்கியமானது, பயிற்சி பலன் கொடுக்க, நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளும் நேர்மறையானவையாக இருக்க வேண்டும்.

• பயிற்சி முடிந்தவுடன், ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிக் கொண்டே, 'மிக உற்சாகமாக, சந்தோசமாக இருக்கிறேன்' என்று கூறிக் கொண்டே கண்களை மெதுவாகத் திறக்கவும்.

நம்மில் பலருக்கு அலாரம் அடிக்கும் முன்னே அல்லது அடித்து முடிக்கும் முன் எழும் பழக்கம் இருக்கக்கூடும். அதேபோல் பயிற்சி ஆரம்பிக்கும்போது நம் மனத்திற்குள் குறிப்பிட்ட நிமிடப் பயிற்சி என்று சொல்லி விட்டால் போதும். நம் உடலில் உள்ள பயோகிளாக் (bio-clock) அதை தானே செட் செய்து கொள்ளும். அந்த நேரம் முடிந்ததும் தானாகவே பயிற்சியிலிருந்து நீங்கள் வெளியேறுவதை உணர்வீர்கள்.

பயிற்சியில் பதிவு செய்ய சில எடுத்துக்காட்டுகள்:

• நான் எப்பொழுதும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் இருப்பேன்.
• இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
• என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியான முறையில் வேலை செய்து என்னை ஆரோக்கியமாக வைக்கும்.
• நான் என்னைச் சுற்றியுள்ள அனைவரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.
• எனக்கு உடற்பயிற்சி செய்வது மிகவும் பிடிக்கும்.
• நான் என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவேன்.

பதிவு செய்யும் தகவல்களை விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம். அதே போல், ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு ஒரு விஷயம் என ஆரம்பித்து, பின் நாட்களைக் குறைத்தோ அல்லது கூட்டியோ கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் இந்தப் பயிற்சி தனியான அமைதியான இடத்தில் செய்ய ஆரம்பித்து, பின் இதை நாம் பயணம் செய்யும்போது கிடைக்கும் நேரத்திலோ, வேலையின் இடையில் கிடைக்கும் சில நிமிடங்களிலோ கூட செய்யலாம். சில நிமிடங்கள் கண்ணை மூடிச் செய்யும் பயிற்சி பொதுவாக மற்றவர்கள் பார்வையிலும் கவனிப்புக்குரியதாகாது.

சம தரையில் படுத்துக் கொண்டு, கண்களை மூடி உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் கவனம் செலுத்துதல் மற்றும் அதை அன்பாக நேசிப்பதாக உணர்வது என்பது போன்ற சுயமனோவசிய பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருப்பதால் பல யோகா மையங்களில் இப்பொழுது இது பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த எளிய பயிற்சி மூலம் மிகப் பெரிய வெற்றி அடைகிறோமோ.. இல்லையோ, விரக்தி, மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு இல்லாத ஒரு வாழ்க்கையை முழுமையாக, அதே சமயம், பிறரைக் காயப்படுத்தாத வகையில், சந்தோசமாக வாழலாம்.

July 27, 2010

ஜெயித்துக் காட்டுவோம்!

தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 சங்கதிகளே காரணமாக இருக்கின்றன.
1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி
2.வரையறுக்க்ப்பட்ட இலக்கு
3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
4.சரியான கண்ணோட்டம்
5.தன் மீதான முழு நம்பிக்கை

1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி:

நாம் எதைப் பெற வேண்டும்; எதில் ஜெயிக்க வேண்டும் என்று குறியாக இருக்கிறோமோ அதில் ஓர் ஆழமான பற்று கொள்ள வேண்டும்.உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும்.

மின்சார பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், பல நூறு முறை தன்னுடைய சோதனை சாவடியில் பின்னடைவு ஏற்பட்ட போதும் அவரது 'வெற்றி கண்டே தீர வேண்டும என்கிற வெறித்தனமான ஆர்வம்தான் இறுதியில் ஜெயித்தது.

2.வரையறுக்கப்பட்ட இலக்கு:

தீர்க்கதரிசனமான குறிக்கோளை(clearly defined goal)மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்.'குறிக்கோள்' அனைத்தும் நம் கட்டுப்பாடு, சம்பந்தப்பட்ட முயற்சி,திறமை,ஆர்வம்,ஈடுபாடு,ஞானம்,உழைப்பு மற்றும் நம்மால் எம்பக்கூடிய உயரத்திற்குள்(சாத்தியப்படுவதாக) நிர்ணயிக்கப்பட வேண்டும்.

3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்:

நமக்கு ஏற்படும் தோல்விகளுக்கு பெரும்பாலும் பிறறைத்தான் குறை சொல்கிறோம்.இது தவறில்லை என்று சிலருக்கு தோன்றும்.அவர்கள் தயவு செய்து ஒன்று செய்யுங்களேன்.ஹானஸ்டாக இன்றோ,நேற்றோ ஏற்பட்ட ஒரு சின்ன தோல்விக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று சுய மதிப்பீடு செய்து பார்த்து விடுங்களேன்.சம்பவத்தின் முடிவு தோல்வி என்பதால்,அதை வெற்றி கொண்டிருக்க நாம் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று.மாற்று வழி புலப்படும்.இந்த பரிசீலனை உங்களுக்கு அடுத்த முறை உதவும்.

4.சரியான கண்ணோட்டம்:

நாம் திட்டமிட்டு சாதிக்க வேண்டிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு பயணத்திறு சமமானது. அந்த பயணத்தை தொடங்கும் போதும்,பயணத்தின் போதும் சில வேளைகளில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனோதிடம் நமக்கு இருக்க வேண்டும். இப்படி பல சோதனைகளைத் தாண்டியவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றத்திற்கான வாய்ப்பு என்றும், ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பிரச்சினைகளின் பின் விளைவுகளை கண்டு பயப்பட்டால் ஓரடி கூட முன்னேற முடியாது. மனித சமுதாயத்தின் ஒவ்வொரு அடி வளர்ச்சிக்கும் இரண்டு அடியாவது பின்னடைவு இருந்திருக்கும் என்பதை உணருங்கள்.

5.தன் மீதான முழு நம்பிக்கை:

வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன் வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாக கொள்ளுங்கள். 'நம்மால் முடியும்' என்று தினசரி இரண்டு முறையாவது உங்களது குறிக்கோளை மனதில் கொண்டு வந்து மனதிற்கு கட்டளை இடுங்கள்.

' இது ஒன்றும் எனக்கு பெரிய விஷயமில்லை; நான் நினைத்தது நடக்கப் போகிறது; என்னை சுற்றி உள்ளவர்கள் எனது வெற்றிக்கு துணை புரிகிறார்கள், எனது வெற்றிகளை பாராட்டுய்கிறார்கள்' என்று திரும்பத் திரும்ப மனக்கண் முன்பாக உங்களது இலக்கை நிறுத்தி வைத்து கற்பனை செய்யுங்கள்.

April 17, 2010

தோல்வி இல்லை

விரக்தி வேண்டாம் விரட்டி விடு
கவலை வேண்டாம் களைந்து விடு
துக்கம் வேண்டாம் துரத்தி விடு
துயரம் வேண்டாம் துறந்து விடு
மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு
புன்னகை வேண்டும் சிரித்தே இரு
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு
முயற்சி வேண்டும் வெற்றி பெறு
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு
இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு
நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்
முனைப்போடு முயன்றால்
தோல்வி இல்லை உலகில்!

கவிஞர் இரா. இரவி, மதுரை

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை
ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை
உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்
உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்
சிறந்த மனிதன் யாரென்று கேட்டால்
சிறிதும் தயங்காமல் நான் என்று கூறுங்கள்
உங்களை நீங்கள் உயர்வாக எண்ணுங்கள்
உங்களை நீங்கள் தாழ்வாக எண்ணாதீர்கள்
என்னால் முடியும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்
நடந்த நல்லவற்றை அடிக்கடி நினையுங்கள்
நடந்த தீயவற்றை அன்றே மறந்திடுங்கள்
முடியாது நடக்காது கிடைக்காது விட்டுவிடுங்கள்
முடியும் நடக்கும் கிடைக்கும் என்றே எண்ணுங்கள்.
மகிழ்ச்சியாகவே மனதை எப்போதும் வைத்திடுங்கள்
மகிழ்ச்சியை பிறருக்கு வாரி வாரி வழங்குங்கள்

March 20, 2010

தியானம் செய்ய உகந்த நேரம் எது?

எண்ணித்துணிக கருமம் - ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். முடிவெடுத்த பின் அதுபற்றி யோசித்துப் பயன் இல்லை என்பதை விளக்குவதாக இந்த முதுமொழி அமைந்துள்ளது.

சிலருக்கு ஒருசில முடிவுகளை எடுப்பதில் மிகுந்த குழப்பம் காணப்படும். இப்படிச் செய்யலாமா? அல்லது வேறு எப்படி இதனைக் கையாளலாம்? என்பன போன்ற பல ஆயிரம் கேள்விகள் மனதில் எழும்.

இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது மனித இயல்புதான். இதனால் ஒன்றும் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை.

மனித வாழ்க்கையில் உறுதியான முடிவெடுக்க முடியாத மனோநிலைக்கு மிக முக்கிய காரணம் மனத்தில் ஏற்படும் சலனங்கள் அல்லது சஞ்சலங்கள் என்று கூறலாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியான சலனமற்ற நிலையைப் பெறுவதற்குத் தேவை தியானம். தியானம் மேற்கொள்ளத் தகுந்த நேரம், எளிய முறையிலான தியானத்தை கடைபிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில் பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம்.

பெருகிவிட்ட அறிவியல் சாதனங்களுக்கு இடையேயும், போக்குவரத்து இரைச்சல்களுக்கு இடையேயும் அன்றாடம் பயணித்து, பல்வேறு புதிய நபர்களை சந்தித்து அன்றாட வேலைகளை நிறைவேற்றி வருபவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதில் புதிர் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, அவற்றிலிருந்து சுமூகமாக மீள்வதுடன் சரியான ஒரு தீர்வை கொடுப்பவர்களே சாதித்து வெற்றி பெறுகிறார்கள்.

தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.

தியானத்தை எப்படிச் செய்வது? அதற்கென்று விதிமுறைகள் ஏதுமுண்டா? என்று கேட்டால் பலர் பல்வேறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள்.

அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையான முறையில் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதி ஒன்றை மட்டுமே கடைபிடித்து தியானித்தாலே போதும். வாழ்வில் பல்வேறு பலன்களை அடையலாம்.

பொதுவாக தியானம் செய்வதற்கு ஏற்ற நேரமாக அதிகாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலான நேரத்தைத் தேர்வு செய்யலாம். இந்த வேளையைத் தான் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள்.

சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலான தரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறிய விளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோ ஏற்றினால் உசிதம். வெண்மை நிறம் பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக் குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிற விரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்த வண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.

யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஒவ்வொரு மிருகங்களின் தோல் மீதும் அமர்ந்து தியானிப்பதால் வெவ்வேறு விதமான தியான பலன்களை அடைவதாக பரவலான கருத்து நிலவுகிறது.

வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின் தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம் வேறு எந்த புற தடங்கல்களையும் சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லது ஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கி கண்களை மெதுவாக மூட வேண்டும். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் மற்ற ஒலிகள் உங்கள் சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒரு சில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள்.

தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு சிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில் வரும். உங்களின் மனோதிடம் தானாகவே அதிகரிக்கத் தொடங்கும். மனத்தில் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். 99 சதவீத பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு கூடுமானவரை சாதகமான தீர்வுகளை நீங்கள் காண்பீர்கள் என்பது திண்ணம்.

இயந்திரகதியான இவ்வுலகில் இறைநம்பிக்கையுடன் கூடிய தியானத்திற்கும் சற்றே நேரம் ஒதுக்கி இன்புறுவீர்களாக!

உணவிற்கும் குணத்திற்கும் தொடர்புண்டு.

எல்லோரும் தான் சாப்பிடுகின்றார்கள். ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுபவர்கள் குறைந்தளவானவர்களே. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே அதை எப்படிச் சாப்பிடுகின்றோம்.... சாப்பிடும் போது நம் உடலின் தன்மை என்ன போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.

ஏனெனில் நாம் சாப்பிடும் பொருட்கள் வெறுமனே உடலுக்கு ஊட்டம் தருவதோடு நின்று விடுவதில்லை. நம் குணத்தை தீர்மானிப்பதிலும் அவை கணிசமான அளவு பங்கு வகிக்கின்றன. உதாரணமாக ஒருவர் பால், நெய், காய்கள், பழங்கள், கீரைகள், தானியங்கள், பருப்பவகைகள் என சாத்வீக உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பதட்டம் அடையாமல் தெளிவாக கிரகித்து முடிவுகள் எடுக்கும் பக்குவம் கொண்டவராக இருப்பார்.

உறைப்பு, உப்பு, புளிப்பு என அழுத்தமான உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு, மாமிசங்கள், எண்ணையில் பொரித்த உணவுகளை விரும்பி உண்பவர்கள் எப்போதும் பதட்டம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். உணர்ச்சிவசப்பட்டு தப்பான முடிவுகளை எடுத்தவிட்டு பின்பு வருத்தப்பட்டு விட்டு, மீண்டும் அதே தவறைச் செய்வார்கள்.

அசுத்தமான உணவு, புளித்துப்போனது, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்திருக்கும் உணவுகள், பழைய உணவு, டிகட்டுப்போன உணவு போன்றவற்றை உண்பவர்கள் மந்தமாக இருப்பார்கள். நல்லது, கெட்டது தெரியாமல் எதையும் நம்புவார்கள்.

தன்னம்பிக்கை

உன் சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், உன் மன
உறுதியால் உலகையே வெற்றி கொள்ளும் உத்தம
ஆத்மா நீ. அச்சம், கவலை குழப்பம் என்னும்
மாயைகளை வெல்லும் மகாவீரனும் நீயே. எப்பொழுதும்
நீ இறைவனின் கழுத்து மாலையின் களங்கமற்ற
மணியாய்த் திகழ்கிறாய்.
- பிரம்மா பாபா
“நீ உருப்படவே மாட்டாய், ஐன்ஸ்டீன்!
அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி என்று உலகமே கொண்டாடிய வரும், நவீன விஞ்ஞானத்தின் தந்தை எனக் கருதப்படு பவரும், சார்பியல் தத்துவம், அணுநிறை .ஆற்றல் சமானக்கொள்கை, குவாண்டம் கொள்கை போன்ற வற்றை உலகுக்குத் தந்தவருமாகிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அவர் சிறுவராய் இருந்தபோது அவரது வகுப்பாசிரியர் இப்படித்தான் திட்டுவாராம்.
பிற்காலத்தில் ஐசக் நியூட்டனையே தன் சட்டைப்பையில் போட்டுக் கொள்ளும் பிரபஞ்ச விஞ்ஞானியாக ஐன்ஸ்டீன் உருவாகப் போகிறார் என்று அந்த அப்பாவி ஆசிரியருக்கு மட்டுமல்ல, அவரது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. காரணம், சிறு வயதில் ஐன்ஸ்டீன் அப்படியொன்றும் பிரமாதமாகப் படிக்கவில்லை. உருவ அமைப்பிலும் நோஞ்சானாகவே விளங்கினார். அவருடைய பௌதிக் கோட்டுபாடுகள் வெறுமைகளை உள்ளடக்கியனவாகக்கூட இருந்தன. ஆனாலும், விண்வெளி-கால ஒருமையை (Space - time continuum) கண்டறிந்த ஐன்ஸ்டீன் மனிதகுலத்தின் பெருமை தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்கு விண்ணளவு விஸ்வரூம் எடுத்து சரித்திரம் போற்றிய சாதனைச்சிகரமாக உயர்ந்து நின்றார் ஐன்ஸ்டீன். இதற்கு பல்வேறு வகையான தாழ்வு மனப்பான்மை சூழல்களை அவர் வெற்றி கொள்ள வேண்டியிருந்தது.
பொதுவாக, மிகவும் கண்டிப்பான பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவயிருக்குத் தங்களையுமறியாமல் ஒரு வித தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும். ஐன்ஸ்டீன் சந்தித்த முதல் தாழ்வு மனப்பான்மை இது தான். 1889-ல் முதன்முதலாக லூய்ட்போல்ட் ஜிம்னாசியம் என்ற கண்டிப்பு மிகுந்த பள்ளியில் ஐன்ஸ்டீன் நுழைந்தார். படிப்பில் கொஞ்சம் பின்தங்கியவராகவும், எப்பொழுதும் உள்நோக்கு முகமானவராகவும், இந்த உலகைப் பற்றிய சில கொள்கை இழைகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்தவராகவும் காணப்பட்ட ஐன்ஸ்டீன் சாதாரண குழந்தைகளிலிருந்து வேறுபட்டவராக எப்பொழுதும் இருக்கவில்லை. அப்பள்ளியின் கண்டிப்பு ஐன்ஸ்டீனுக்கு அடியோடு பிடிக்கவில்லை என்பது மட்டும் நிஜம். கண்டிப்பு எந்தக் குழந்தைக்குத் தான் பிடிக்கும்?
ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தின் 72-ஆம் பட்ட மளிப்பு விழாவில் பேசும்போது ஐன்ஸ்டீன், “பயம், கட்டாயம், செயற்கை அதிகாரம் ஆகிய வழிமுறைகள் வாயிலாக செயல்படுவது என்பது ஒரு பள்ளிக்கு மிகவும் மோசமான விஷயம். இது போன்றதொரு கையாளல் மாணவர்களின் ஆரோக்கியமான உணர்வுகள், நேர்மை மற்றும் தன்னம்பிக்கையை சாகடித்துவிடுகிறது. இந்தப் பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது வெறும் அடிமை பயந்தாங்கொள்ளிகளைத்தான்,” என்றார்.
இதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறுமிக்கு எழுதிய கடிததத்தில் “உன்னுடைய கையெழுத்துப் பிரதியை உன் மகன்கள், மகள்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துக் கொள். ஏனெனில், அவர்களும் அதைப் பார்த்து ஆறுதல் அடைவார்கள். அப்போது அவர் களைப் பற்றி அவர்களது ஆசிரியர்கள் என்ன அபிப்ராயப்பட்டார்கள் என்பதைப் பற்றி யெல்லாம் அவர்கள் கொஞ்சம் கூட கவலைப் படவே மாட்டார்கள்,” என்று ஐன்ஸ்டீன் எழுதினார்.
“லூய்ட்போல்ட் ஜிம்னாசியம்” மாணவர் களுக்கு வேப்பங்காயாகக் கசந்தாலும் ஒரு நல்ல விஷயத்தை ஐன்ஸ்டீனுக்குத் தந்தது. எதையும் எப்பொழுதும் நம்பாமல் கேள்வி கேட்பவராக ஐன்ஸ்டீனை அது மாற்றியது.
அல்ல. அந்தப் பள்ளி அவரை மாற்ற வில்லை, அப்படி பள்ளிக்கூடம் அவரை மாற்றியது என்றால், அவருடன் படித்த, அவருக்கு முன்பும் பின்பும் படித்த அத்தனை மாணவ மாணவிகளையும் அப்பள்ளி மரபு பௌதிகத்தின் அஸ்திவாரத்தை அசைத்துப் போடும் அசகாயசூரர்களாக மாற்றியிருக்க வேண்டுமே! ஐன்ஸ்டீன் தன் பள்ளிப் பருவ தாழ்வுமனப்பான்மையை வென்று, எப்பொழுதும் எதிலும் எதிரும் புதிருமாகச் சிந்தித்தல் என்ற அற்புதத் திறமையை வளர்த்துக் கொண்டார் என்பது தான் சரி. இந்தத் தன்மையால் தான், சில நூற்றாண்டுகளாக பல மனிதர்கள் வேதவாக்காக ஏற்றுக்கொண்ட விஷயங்களைக் கேள்வி கேட்டார் ஐன்ஸ்டீன்.
பதினாறு வயதில் ஐன்ஸ்டீன் தனது மாமாவான சீசர் கோக்குக்கு சிறப்பு சார்பியல் தத்துவமாகத் தான் பிற்காலத்தில் உருவாக்கிய கருத்துக்களைக் கடிதங்களாக வரைந்திட ஆதாரமாக அமைந்தது ஐன்ஸ்டீனின் “ஏன், எதற்கு, எப்படி” என்றெல்லாம் கேட்கவைத்த தன்னம்பிக்கை தான். தலைக்குமேலே வானத்தில் பறந்து சென்ற ஒரு பறவைக் கூட்டத்தைப் பார்த்து சிறுவயதிலேயே ஐன்ஸ்டீன் அடித்த காமெண்ட்: “நமக்குத் தெரியாத சில கதிர்வீச்சுக்களை அவை பின்பற்றுகின்றனவோ என்னவோ.”
ஐன்ஸ்டீனுக்கு பன்னிரண்டு வயது ஆகியபோதே அவரது அசாத்திய தன்னம்பிக்கை அவருக்கு ஒரு ஆழமான ஆன்மீகத்தன்மையை உருவாக்கியதாக அவரே பின்னாளில் கூறியுள்ளார். “மனிதர்களைச் சாராமல் தனித்திருக்கும் இந்தப் பெரிய உலகம் நம் கண்முன்னே, குறைந்த பட்சம் நமது ஆய்வுக்கும் சிந்தனைக்கும் ஓரளவாவது விடைகான முடியும் ஒரு சாசுவதமான புதிர்போல நிற்கிறது. இந்த உலகைப் பற்றிய சிந்தனை ஒரு முதிர்ச்சியைத் தருகிறது. நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்த பல மனிதர்கள் இந்த உலகின் மீதான தங்கள் ஈடுபாடு காரணமாக ஒரு வகை உள் விடுதலையையும், பாதுகாப்பையும் அடைந்திருந்தார்கள்,” என்று பிற்பாடு ஐன்ஸ்டீன் கூறுவதற்கு அடிப்படையாக அமைந்ததும் இந்த ஆன்மீகத் தன்மை தான்.
“விதிகளுக்குள்ளே இருந்த விதியை” ஊடுருவ முடியும் என்ற அவரது நம்பிக்கை தான் பிற்பாடு ஆன்மீகம் விட்டுச் சென்றஇடத்திலிருந்து விஞ்ஞானத்தை எடுத்துச் செல்ல ஐன்ஸ்டீனுக்கு தூண்டுதலாக அமைந்தது. ஒளி எப்படி துகளாகவும், அலையாகவும் இருக்கிறதோ அதே போன்றே முயல்பவர்கள் அந்த இரு நாணப் பக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முதிர்ச்சியை அவர் பெற்றதற்கும் இதுவே காரணம்.
சாமான்ய மனிதர்கள், ஏன் விஞ்ஞானிகள், நம்பிய வழக்கமான விஷயங்களை ஐன்ஸ்டின் நம்பவில்லை, அவரது நம்பிக்கை தனிரகம், அஹ்ர் “ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இயற்கையின் சீர்மையை” (pre established harmony) நம்பினார், அதனால் தான் அற்ரைப் பொறுத்த வரை “கடவுள் இயற்கையுடன் பகடை விளையாடுவதில்லை.”
தன்னம்பிக்கையில் விளைந்த அவரது மன ஒருமுகப்பாடும் மிக அபாரமானதே. ஐன்ஸ்டீன் உடை, உணவு, கேளிக்கை போன்றவற்றில் ஈடுபாடு செலுத் தாமல் இருந்ததற்கு இது தான் காரணம். மேலும். ஒரு முறை பெர்லின் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண் விஞ்ஞானியுடன் நடந்து கொண்டிருந்த போது, “நான் மனிதர்களிடம் அதிகமாக வெற்றி பெறவில்லை. நான் ஒரு குடும்பம் சார்ந்த மனிதனும் அல்ல. என் அமைதியை நான் விரும்புகிறேன். கடவுள் இந்த உலகை எப்படி உருவாக்கினார் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அல்லது அந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கடவுளின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், மற்றவை யெல்லாம் விவரணங்கள் தானே,” என்று அவர் குறிப்பிட்டார். படைப்பின் ரகசியத்தை அறிவதையே தனது வாழ்வின் தாரக மந்திரமாக அவர் கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து புலப்படுகிறதல்லவா?
இவையெல்லாம் அவரது பள்ளிப் பருவத் துக்குப் பல ஆண்டுகள் பின்னர் நிகழ்ந்தவை. லூய்ட்போல்ட் பள்ளியில் ஐன்ஸ்டீன் கல்வியை முழுமையாக முடிக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால், அவருக்கு என்னவோ அந்தப் பள்ளியை விட்டு வெளியேறியது இனிப்பாக இருந்திருக்கலாம். நரம்பியல் பிரச்சனை அவருக்கு இருந்தது என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் தருவதற்கு முன்பே, அவர் மற்ற மாணவர்களையும் கெடுக்கிறார் என்று சொல்லி அவரைப் பள்ளியிலிருந்து விலக்கிவிட்டார்கள்.
ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலியில் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, ஐன்ஸ்டீன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ஏறக்குறைய இந்தக் கால கட்டத்தில், அதாவது தனது பதினாறாவது வயதில், ஒருவர் ஒளியின் வேகத்தில் மற்றொரு ஒளிக்கதிரைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று சிந்தித்து ஒரு வெளியில் அலைவுறும் அதே நேரத்தில் ஓய்வு நிலையில் இருக்கும் மின்காந்தப் புலமாக (”a spatially oscillating electromagnetic field at rest”) அது இருக்கும் என்று தான் கண்டுணர்ந்ததாக பின்னாளில் ஐன்ஸ்டீனே சொல்லியிருக்கிறார்.
பள்ளிக்கூட பாடத்திட்டங்களையும் தாண்டி கிர்ச்சாஃப், ஹெல்மோல்ட்ஸ், ஹெர்ட்ஸ், மேக்ஸ்வெல், பாய்ன்கேர் போன்றோரின் பௌதிகப்புத்தகங்களையும், கணித முறை களையும் ஒரு புரட்சியாளனின் தன்னம்பிக்கை யோடு கற்றார் ஐன்ஸ்டீன், இவ்வளவு முயன்றும் புதிய பள்ளிக்கூடத்திலும் ஐன்ஸ்டீனுக்கு ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. யாரும் அவரை கெட்டிக்கார மாணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு சட்டென்று வாழ்க்கையின் நுழைவாசலில் அனாதையாக நின்று கொண்டிருந்ததைப் போல் தான் உணர்ந்ததாக ஐன்ஸ்டீன் நண்பர் மார்சல் கிராஸ்மேனின் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார். படித்துப்பட்டம் வாங்கிய பிறகு கூட ஐன்ஸ்டீனுக்கு அவர் விரும்பிய ஆசிரியப் பணி கிடைக்கவில்லை
!

உன் எண்ணம் உன் வாழ்க்கை!

எண்ணங்கள் வானை நோக்கி!
எழுத்துக்கள் உயர்வை நோக்கி!
கண்ணிமைக்கும் காலம் கூட
எடுத்து "வை" இலக்கை நோக்கி!
நாளை என்று நாளைத் தள்ளி
வைக்காதே உயர்வைத் தள்ளி!
"இன்று" ஒன்றே உண்மை தம்பி
உயர்வாய் நீ உன்னை நம்பி!
தடுமாற்றம் வந்து உன்னை
தடம் மாறச்செய்யக் கூடும்!
கொள்கையில் உறுதிகொண்டால்
தடையது திரும்பி ஓடும்!
கண்களில் தெளிவு கொண்டு
எண்ணத்தில் வலிமை கொண்டு!
உழைப்பினில் மகிழ்வு கொண்டு!
வென்றிடு வாழ்க்கை நன்று!
எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை. திருவள்ளுவர், புத்தர் முதல் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் வரை அடித்துச் சொல்லும் இந்த விஷயம் எந்த அளவு உண்மை? சமீபத்தில் சில வகை எண்ணங்கள் நம் மூளையை சுருங்க வைக்கின்றன என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன என்கிற அளவுக்கு உண்மை.

மாண்ட்ரீல்(Montreal) நகரத்தின் புகழ் பெற்ற மெக்கில் (McGill) பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகளாக மூளை ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் எஸ்.லூபியன் (Dr.S.Lupien) சிலவகை எண்ணங்கள் மனித மூளையை கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை சுருங்கச் செய்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளார். தொடர்ந்து தாழ்வு மனப்பான்மை எண்ணங்களைக் கொண்டவர்கள் மூளை காலப்போக்கில் 20 சதவீதம் வரை சுருங்குகிறது என்றும் புதியன கற்றுக் கொள்வதிலும், நினைவாற்றலிலும் இத்தகைய மனிதர்கள் மிகவும் பின் தங்கி விடுகிறார்கள் என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

அது மட்டுமல்ல, தங்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதவர்கள் தீய பழக்கங்களுக்கு சீக்கிரமாக அடிமையாகிறார்கள், அந்தப் பழக்கங்களில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுகிறார்கள், கான்சர், இருதய நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு அதிகமாக ஆளாகிறார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே உங்களைப் பற்றிக் குறைவாக எண்ணுவதை நிறுத்துங்கள். தாழ்வு மனப்பான்மையைப் போல உங்களை வேறெதுவும் முடங்கச் செய்ய முடியாது. தாழ்வு மனப்பான்மை ஒரு விதத்தில் தெய்வத்தையே குறைத்து மதிப்பிடுவதைப் போலத்தான். கடவுள் பயனில்லாத மனிதர்களைப் படைத்திருக்கிறார் என்பதே அவரை இழிவுபடுத்துவது போலத்தானே.

உங்கள் தாழ்வு மனப்பான்மை சிலரை உங்களுடன் ஒப்பிட்டு உருவான ஆதாரபூர்வமான உண்மையாக நீங்கள் ஒருவேளை கருதலாம். அதையும் மேலும் ஆழமாக சிந்தித்தால் உண்மை அல்ல என்று நீங்கள் உணரலாம்.

ஒரு கோடீஸ்வரன் தன் பிள்ளைகளுக்கு நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அறிந்து அதைத் தனக்கு வேண்டியபடி பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்பவன் தன்னம்பிக்கை உடையவன், சாதனையாளன். தனக்கு சொத்து இருப்பதே தெரியாமல், சொத்து கிணற்றில் போட்ட கல்லாக எங்கோ இருக்க, வறுமையில் உழல்பவன் தன்னம்பிக்கை அற்றவன், தோல்வியாளன். எனவே உண்மையில் இருவரும் செல்வந்தர்களே என்றாலும் அறிந்தவன், அறியாதவன் என்பதில் தான் வித்தியாசம் உள்ளது.

உங்கள் சொத்து உங்களுக்குள் உறங்கிக் கிடக்கின்றது. அதை அறியாமல் உங்களிடம் ஒன்றும் இல்லை என்று முடிவுக்கு வருவது அறியாமையே. கடவுள் வெறுமைகளைப் படைப்பதில்லை. அப்படி நினைத்து அவரையும் உங்களையும் அவமதித்துக் கொள்ளாதீர்கள். தாழ்வு மனப்பான்மையால் உங்கள் மூளையைச் சுருக்கி, திறமையைச் சுருக்கி, வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடாதீர்கள். உங்களுக்கென இறைவன் உள்ளே வைத்திருக்கும் தனித் திறமையைக் கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பியுங்கள். தாழ்வு மனப்பான்மையும், தேக்க நிலையும் சூரியன் முன் பனி போல காணாமல் போவதைக் காண்பீர்கள்

மன நலன் பெருக சக்கர தியானம்

எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அறிவாளியாக இருந்தாலும், புகழோடு இருந்தாலும், விரும்பியது எல்லாவற்றையும் அடைந்தாலும் மனதில் ஏதோ ஒரு வெறுமை குடி கொண்டிருப்பதை எல்லாருமே உணருவார்கள். வெறுமை மனதில் குடியேறும் போது வெறுப்பும், விரக்தியும் வந்து விடுகின்றன.
மனநிலையில் மாறுதல் ஏற்படும்போது அதையொட்டி நடத்தையிலும் மாறுபாடுகள் வந்து விடுகின்றன. . பிறகு கவலை, துக்கம், மன இறுக்கம், டென்ஷன் இப்படி ஒவ்வொரு பிரச்சினைகளாக உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டு நம்மை நாமே நோயாளி களாக்கிக் கொள்கிறோம் . இதைத் தவிர்ப்பதற்காக யோகா, தியானம் என்பன போன்ற மனவளக்கலை முறைகளை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறhர்கள். அவற்றுள் ஒன்றுதான் சக்கர தியானம்.
இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். .
நமது உடலில் புலன்மறை சக்திகள் உள்ளன. இவற்றை எனர்ஜிஎன்கிறார்கள்.
அக்குபஞ்சரில் இந்த எனர்ஜியை யின்-யாங் என்பார்கள்.
நம் முன்னோர்கள் பிராணமய கோசம் அல்லது சக்திகோசம் என்றார்கள். இந்த சக்தி கடக்கும் பல வழிகள் உள்ளன. அக்கு பஞ்சரில் இது போன்ற சக்தியை மெரிடியன்கள் என்பார்கள். அதேபோல இந்த சக்திகள் எல்லாம் பல வழியாகத் திரண்டு, உள்ள{றும் ஆற்றலைத் தூண்டியெழுப்புகிறது. இந்த உள்ளான ஆற்றலுக்கு குண்டலினி என்று பெயர்.
குண்டலினி விழிப்புடன் இருக்கும் நிலையில் எல்லா கோசங்களுக்கும் சீரான ஆற்றல் பாய்வதால், அவை பாயும் உறுப்புகள் மற்றும் மனம், ஒட்டுமொத்த உடல் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கிறது.. இந்த ஆற்றலை நாம் ஏன் எளிதில் அடைய முடிவதில்லை? நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் வெளியே கொண்டு வரத் தெரிந்து வைத்திருப்பது இல்லை, அல்லது அதற்காக முயற்சிப்பது கிடையாது. மேலும் முறைகேடான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், எதிர்மறையான செயல்கள் ஆகியவற்றினால் இந்த ஆற்றலை நாம்
வெளியே கொண்டு வர இயலுவதில்லை. மனதை ஒருமுகப்படுத்தி இந்த ஆற்றல்களை வெளியே கொண்டு வர வேண்டும். அப்போது ஆழமான மன நலன் கிடைக்கும்.
சக்கர தியானத்தில் மூன்று படிகள் உள்ளன. உள்ளத்தோடு உச்சரிக்கும் வார்த்தைகள் இவை மனதை ஒருமுகப்படுத்தும், அமரும் விதம், இவை உடலைத் திடப் படுத்தி மனதை ஒருமைப்படுத்த உதவும். அடுத்தது ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடிப்பாகத்தில் வைப்பது போன்ற முத்திரை நிலைகள், இவற்றை முறையாகச்செய்யும் போது மூளையின் பல பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதால் மனதில் உழன்று கொண்டிருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக மறைந்து, டிப்ரெஷ்ஷன் போன்ற எண்ணங்கள் அகன்று மனம் ஒரு நிலைப்படும்.
சக்கர தியானத்திலுள்ள ஏழு சக்தி நாளங்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.;
*மூலாதாரம் *
பிறப்புறுப்புக்கும், ஆசன வாய்க்கும் இடையில் செல்லும் சக்திப்பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால் உயிர் ஆற்றல் அதிகரிக்கும்.
இச்சக்தி தொடர்பான உறுப்புகள்„ சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை.
அடையாளம் நான்கு இதழ் சிவப்புத் தாமரை, கறு;ப்பு நிற லிங்கம் கயிரால்
கட்டப்பட்ட குண்டலினி சர்ப்பம். .
*சுவாதிஷ்டானம்*
பிறப்புறுப்புக்கு மேல் செல்லும் சக்திப் பாதை. இந்தச் சக்தி அதிகரித்தால்
சுயக் கட்டுப்பாடு, நுண்ணுணர்வு அதிகரிக்கும்.
தொடர்பான உறுப்புகள்„ கருப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல். அடையாளம்„ ஆரஞ்சு நிறத்தில் ஆறு தாமரை, உள்ளே நீல பிறைச்சந்திரன்
*மணி பூரகம்*
தொப்புள் வழியாகச் செல்லும் பாதை. இது உடலின் சக்திiயும், ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தி விழிப்படையச் செய்கிறது.
இது தொடர்பான உறுப்புகள் கல்லீரல், வயிறு, சிறுகுடல், மண்ணீரல். அடையாளம் பத்து இதழ் கொண்ட மஞ்சள் நிறத் தாமரை, மையத்தில் அக்னி சுவாலை உடையது.
*அனாஹதம்*
மார்பு நடுவில் செல்லும் இச்சக்திப் பாதையால் உணர்வுகள் பலப்படும். அன்பு,
இரக்கம் போன்றவை மேலோங்கும். இது தொடர்பான உறுப்பு இதயம்..
அடையாளம் பச்சை நிறத்தில் 12 தாமரை இதழ்கள் கொண்டது. மையத்தில் அறுகோணச் சக்கரமும், ஜோதியும் கொண்டது.
*விஷுத்தி*
தொண்டைப் பகுதியில் செல்லும் சக்திப்பாதையிது. மறைவான ஆன்ம சக்தியை வெளிப்படுத்தும், புனிதத் துவத்தை வளர்க்கும். இச்சக்தி தொடர்பான உறுப்புகள் தொண்டை மற்றும் நுரையீரல்.
அடையாளம்„ பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட, உள்ளே நீல நிறத்தையுடைய அடர்நீலச் சக்கரம்
*ஆக்ஞேயம் *
புருவ மத்தியில் செல்லும் பாதையிது. நினைவாற்றலை, விழிப்புணர்வை,
ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாக்கும். கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதியை உள்ளடக்கியது இந்தப் பாதை.
அடையாளம்„ இரண்டு தாமரை கொண்ட கருநீல நிறத்தையும். இடப்பக்கம் சந்திரனையும்., வலப்பக்கம் சூரியனையும், நடுவே லிங்கத்தையும் அடையாளமாகக் கொண்டது.
*சகஸ்ராரம்*
உச்சந்தலையில் செல்லும் சக்தி. இது மலர்ந்தால் பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலை வரும்.
இது தொடர்பான உறுப்பு மூளை. அடையாளம்„ ஆயிரம் தாமரை இதழ்கள் ஊதா நிறத்திலும், அடர் பொன்னிறம்
கொண்ட ஜோதிர் லிங்கத்தை மையத்திலும் கொண்டது.
ம்பிக்கை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலும் தாண்டலாம்! கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்!
நம்பிக்கை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலும் தாண்டலாம்! கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்!

March 13, 2010

சிவரா‌த்‌தி‌ரி ‌விரத முறைக‌ள்

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 


வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம். 

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். 

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். 

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். 

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். 

சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்காபொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்தது பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம். 


இர‌வி‌ல் ‌சிவனு‌க்ககு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளதது.அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கஅ‌ளி‌க்கலா‌ம்.


முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.

இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம். 

மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம். 

நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம். 

அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். 

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். 

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். 

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். 

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.

March 11, 2010

தியானம்

உடலுக்கு உடற்பயிற்சி –உயிருக்குத் தியானப் பயிற்சி 
தியானம் :                         தி         =   பேரறிவு
                                          யானம் = பயணம். 



 தியானம் என்றால் பேரறிவை நோக்கிய பயணம். 
            இறைவனாகிய பேரறிவு, பெரும்சக்தி நம் இதயத்தில் வாழ்கிறது.அந்தப் பேரறிவை, பேராற்றலை, தியானப் பயிற்சியால் வெளிக் கொணர்ந்து,
பெருக்கி பெரும் வல்லமை பெற்று, பேரானந்தம் (Eternal Bliss) பெறவேண்டும். 

தியானம் என்பது ஒரு 
·        ஒரு முகப் பயணம் (CONCENTRATION) 
·        உள் முகப் பயணம் (KNOW THYSELF) 
·        விழிப்புணர்வுப் பயணம் (AWARENESS) 


தியானம் : பலன்கள் 
புத்தி கூர்மை கூடுகிறது (INTELLIGENCE ++)
முடிவு எடுக்கும் திறமை வளர்கிறது (DECISION MAKING ++)
மனம் நிம்மதி பெறுகிறது (PEACE OF MIND ++)
மனம் நிறைவு பெறுகிறது (SENSE OF SATISFACTION)
இரத்தக் கொதிப்பு குறைகிறது (REDUCES HIGH BLOOD PRESSURE)
நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது (IMMUNITY ++)
புதுச் சிந்தனை, புதிய ஆற்றல், புதிய கலைத்திறன் வளர்கிறது (DISCOVERY
AND INVENTION ++)
அகப்பொலிவு (தேஜஸ்) பெருகுகிறது (ENLIGHTENMENT OF BODY)
மன நோய்கள் அகல்கிறது (CURES PSYCHOSTS)
இறைநிலை கைகூடுகிறது (ACHIEVE DIVINE STATUS)


அறிவியல் தியானம் செய்முறை. 

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்
உணவுவயிறு காலியாக இருக்க வேண்டும்
உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை
உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்
ஆசனம்சுகாசனம் அல்லது பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்
முத்திரைசேஷ்டா முத்திரை அல்லது சின் முத்திரை
யோகம்சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல் (RELAXED POSTURE)
உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க
வேண்டும். முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.
திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்
வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்
கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள் 

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்மஒளி
ஜோதியாகத் தெரியும்.) 

மனநிலைஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்
எண்ணக் குவிப்புஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு
நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்
எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும். கவலை
வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம். மனம் அலைந்தால்
நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு, பிறகு தியானத்தை தொடருங்கள். எண்ணங்கள்
தானே திரும்பி வரும்.
மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்
தியான காலம்ஆரம்பத்தில் தியான நேரத்தை 5 நிமிடங்கள், பின் 10 நிமிடங்கள்,
பின் 15,பின் 30 நிமிடங்கள் எனப் படிப்படியாகக் கூட்டுங்கள். ஒருமாத
காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால் ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி,மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல் எல்லாவற்றையும் விட ஒரு புது மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையில் தியானம் ஒரு மறுபிறப்பு. வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும், தியானத்தின் பின் அர்த்தம் உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும். 



“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்
கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே” 

 ( வள்ளலார் ) 

பிராணயாமம்.
ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம் 
பிராணாயமம் = பிராணன் + அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்) 
                                      மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும். 
 குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவன்களுக்கு ஆயுட்காலம்  அதிகம். 
                முயல் 1 நிமிடத்திற்கு 38 தடவை மூச்சு விடுகிறது. அதன்
ஆயுட்காலம் 8 ஆண்டுகள்தான். ஆமை 1 நிமிடத்திற்கு 5 தடவை மூச்சு
விடுகிறது. அதன் ஆயுட்காலம் 155 ஆண்டுகள். மனிதன் 1 நிமிடத்திற்கு 18

தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம்
இரட்டிப்பாகும். கோபம், தாபம், மன அழுத்தம் அதிக உணர்ச்சிகள் உடைய மனிதன் மிகவும் வேகமாக சுவாசிக்கின்றான். இதனால் அவன் நோய்வாய்ப்படுகிறான்.
மூச்சுப் பயிற்சியால் நோய் நொடி அகலும். ஆயுள் நீட்டிக்கும். பொதுவாக
நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான்
நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால்,
பிராணவாயு அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி
மிகும். படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம். 

மூச்சை உள்ளிழுத்தல்பூரகம்4 செகண்டுகள்
மூச்சை தக்கவைத்தல்கும்பகம்16 செகண்டுகள்
மூச்சை வெளியே விடல்ரேசகம்8 செகண்டுகள் 

            இந்த மூன்று பயிற்சியினுடைய விகிதம் 1 : 4 : 2 இருத்தல்
சாலச் சிறந்தது. 

            இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை. 
            வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவது பிங்கலை. 

            இடது மூக்குத் துவாரத்தின் வழி மூச்சை உள்ளிழுத்து, வலது
மூக்குத் துவாரத்தின் வழி வெளிவிடுவது சுழுமுனை. 

            இடகலை = குளிர்ச்சி ; பிங்கலை = சூடானது. சுழுமுனை
பிராணவாயுவை அதிகம் நுரையீரலில் தக்க வைக்கும். காரணம் இடது
நாசியிலிருந்து சுவாசப் பையின் தூரம் 16 அங்குலம். வலது நாசியிலிருந்து
சுவாசப்பையின் தூரம் 12 அங்குலம். இடது நாசியால் இழுத்து வலது நாசியால்
வெளிவிடும் பொழுது 4 அங்குலம் மூச்சு (பிராணவாயு அதிகம் உள்ள மூச்சு)
நுரையீரலில் உள் தங்குகிறது. இது இரத்தத்தை சுத்தி செய்யும். பிராண
சக்தியை அதிகரிக்கும். 

            பிராணாயாமம் அட்டாங்க யோகத்தின் நான்காம் யோகமாகும். 
(1) பஸ்திரிகா பிராணயாமம் ; செய்முறை. 
தியானம் போல் இடம், ஆசனம், மற்றைய நியதிகள் இருக்கட்டும்.
பிராணயாமம் செய்யும் பொழுது மூச்சோடு மனம் ஒன்ற வேண்டும்.
மூச்சை வெளிவிடும் பொழுது வயிறு மட்டும் சுருங்க வேண்டும்.
மூடிய கண்கள் மூக்கின் நுனியைப் பார்த்தபடி இருக்கட்டும்.
மூச்சை இயல்பாக விட வேண்டும்.
             வலது கைப் பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால்
மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும். பின் வலது நாசி வழியாக மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல், வலது நாசியை அடைத்துக் கொண்டு மூச்சை இடது நாசி வழியாக வெளிவிடவும். இப் பயிற்சியை 5-10 தடவைகள் செய்தால் போதுமானது. 

(2) கபாலபதி பிராணயாமம் ; செய்முறை. 
            இரண்டு மூக்குத்துவாரங்களிலும் மூச்சை வேகமாக உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் உடனே அதிவேகமாக வெளிவிடவும். இப் பயிற்சியை
5-10 தடவைகள் செய்யவும். 

(3) உஜ்ஜயி பிராணயாமம். 
            இரண்டு மூக்குத் துவாரங்களிலும் ஒரே நேரத்தில் மூச்சை
முடிந்தவரை உள்ளுக்கிழுத்து (4 செகண்டுகள்) பின் அப்படியே மூச்சை உள்
நிறுத்தி (16 செகண்டுகள்) பின் நிதானமாக மெதுவாக வெளிவிடுதல் வேண்டும் (8
செகண்டுகள்). 

    ஆசிபா (ABS) பயிற்சி 
            ஆசனவாய், சிறுநீர்ப்பை, பாலியல் உறுப்புகள் அனைத்தும் ஒரே
நரம்பினால் எஸ் – 2 (S 2 Segment) இயக்கப்படுகிறது. ஆசனவாயை சுருக்கி,
விரிவடையச் செய்யும் பயிற்சியால் அந்த நரம்பு வலுவடைகிறது. பயிற்சியால் பெண்கள் பாலியல் உறுப்புகள் கட்டுப்பாடும், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் (Uterine Prolapse) தடுப்பும் பெறுகிறார்கள். சிறுநீரை அடக்குதல் சுலபமாக சாத்தியமாகிறது. ஆண்களுக்கு நீர்த்தாரை கட்டியால் (Prostate) ஏற்படும். முதுமைக்கால நீர்க்கசிவு, கட்டுப்பாடின்மை குறைகிறது. விந்துக் கசிவும் கட்டுப்படுத்தப்படுகிறது. 



ஆசிபா செய்முறை : 
 கால்களை கொஞ்சம் அகல விரித்து, நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ ஆசனவாயை மெதுவாகச் சுருக்கி, பின் விரித்து 10 தடவை
பயிற்சி செய்யவும். இப் பயிற்சி செய்யும் பொழுது, மனம் பயிற்சியில் கவனம்
செலுத்த வேண்டும். பயிற்சி கஷ்டப்படாமல் இயல்பாக செய்யப்பட வேண்டும்.
பயிற்சி முடிவில் உஜ்ஜயி பிராணயாமம் செய்யவும். கைகளைக் கும்பிடுவது போல் மேல் தூக்கி மூச்சை இரண்டு நாசிகளாலும் நாலு செகண்டுகள் உள்ளிழுத்து பதினாறு செகண்டுகள் நிறுத்தி பின் எட்டு செகண்டுகள் மெதுவாக வெளிவிடவும். ஆசிபா பயிற்சியை ஐந்து முறையும் மாலையில் ஐந்து முறையும் செய்யவும்.

ஆ : ஆசனவாய். சி : சிறு நீர்ப்பை:  ப : பாலியல் உறுப்புகள் 
   A : Anus, B : Bladder, S : Sexual organs. 


எல்லாப் பயிற்சிகளுக்கும் பொது நியதிகள்: 
1.     பயிற்சிக்காலம் முழுதும் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
2.     காற்றோட்டமான இடத்தில் பயிற்சி செய்தல் நலம்.
3.     பயிற்சியில் மனம் லயிக்க வேண்டும். (ஒருமை உணர்வு)
4.     முக மலர்ச்சியுடன் பற்றுவைத்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
5.     மூச்சை இயல்பாக விட வேண்டும்.
6.     இரண்டு பயிற்சிகளுக்கு நடுவில் குறைந்தது 5 நிமிட இடைவெளி தர வேண்டும்.
7.     பயிற்சி தொடங்குமுன் தசைகளை தளர்த்தி இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
8.     மூச்சுப் பயிற்சியின்போது இருதய, நுரையீரல் நோயாளிகள் அதிக நேரம்
மூச்சை இழுத்து, உள்நிறுத்தி ‘தம்’ கட்டுவது தவறு. ஆபத்தாகும்.
9.     பயிற்சி முடிந்ததும் உடனே எழுந்து வேறு வேலை செய்வது நல்லதல்ல.
குறைந்தது பத்து நிமிடம் ஓய்வு தேவை. விரும்பினால் சாந்தி யோகம்
செய்யலாம்.
10.பயிற்சிகள் முடிந்த பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
11.இளைஞர்கள் விளையாடுவதற்கு முன் இப் பயிற்சிகளை ஒரு ஆரம்ப
     தயார் நிலை (Warm up) பயிற்சியாக செய்வது சிறந்த பலனைத் தரும். 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 
--
அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா! 

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...