கற்பனையில் மனிதர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை மனச்சித்திரங்களாக திரும்பத் திரும்பப் பார்க்கத் தொடங்கிவிட்டால் போதும் இலட்சியங்களை அடையலாம்; ஆசையை நிறைவேற்றலாம்; எண்ணியதைப் பெறலாம்.
இந்த உலகத்தில் உங்களுக்கு எது தேவையோ, எதை அடைய விரும்புகிறீர்களோ, அதை அடைந்து விட்டதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை உங்களால் அடைய முடியும். பெற முடியும். இதை விட எளிமையான வழி வேறெதுவும் இல்லை. சோதித்துப் பாருங்களேன்!
சின்னச் சின்ன செயல்பாடுகளில் இந்த உத்தியை பயன்படுத்திப் பாருங்கள். சோதிக்கப்படாமல் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ள இயலாத பொய்யாகிப் போகும். சோதித்துப் பார்ப்போமா?
உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின் - குறள்
இந்தக் குறளை வாசிக்கின்றபொழுது “மறக்காமல் மறந்துவிடாமல் வேண்டியவற்றைக் குறித்து எண்ணிக்கொண்டேயிருந்தால நினைத்ததை அடைவது எளிது” என்கிற கருத்து நம்மை வியப்படையச் செய்கிறது.
ஏனெனில்,
வள்ளுவர் பொய் சொல்லமாட்டார். அவர் பொய்யா மொழிப்புலவர்.
வள்ளுவர் புனைந்துரைப்பவர் அல்லர். ஏனெனில் குறள் கற்பனைக் காவியம் அல்ல.
திருக்குறள் உலகப் பொதுமறை.
வள்ளுவம் அனைவருக்கும் பொதுவான வேதம். காலத்தால் அழியாத, மாறாத, சத்திய வாசகங்கள்.
உலகம் உள்ளவரை, மனிதம் உள்ளவரை மாறாத உண்மைகள் வாழ்வியல் இலக்கியங்கள், சூட்சுமங்கள்.
நினைத்ததை அடைய மறக்காமல் நினைத்துக் கொண்டே இரு.
நினைத்தாலே போதும். நீ நினைத்ததை அடைவாய். மிக எளிமையாய் இருக்கிறதே. இதில் ஏதேனும் உண்மை இருக்குமா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது அல்லவா?
இயற்கையில், நீர் நிலைகளில் மீன்கள் முட்டையிட்டுவிட்டு கண்களால் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். அவைகளிலிருந்து மீன் குஞ்சுகள் உருவாவதற்கு நயன தீட்சை தேவை எனலாம்.
கடல் ஆமைகள் கடற்கரைகளில் வந்து குழுபறித்து முட்டையிட்டுவிட்டு மணலால் மூடி வைத்துவிடு கடல் சேருமாம். முட்டைகளைக் குறித்து மறந்துவிடமால் நினைத்துக் கொண்டே இருந்தால்தான் முட்டைகள் பொறித்து ஆமைக் குஞ்சுகள் வெளிவருமாம். தாய் ஆமை இறந்து விட்டால் முட்டைகள குஞ்சு பொறிப்பதிலையாம். மானச தீட்சை தேவை போலும்.
நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பறவைக் முட்டையிட்டு விட்டு அடைகாக்க வேண்டுமென்று அப்பொழுதுதான் குஞ்சுகள் உருவாகும். ஸ்பரிச தீட்சை நிச்சயம் தேவை.
அத போலத்தான் நாமும் கூட வேண்டியவைகளைக் குறித்து பார்க்கவும், எண்ணவும், செய்யவும் வேண்டிய நிலையிலிருக்கிறோம்.
“பார்க்காத பயிர் பாழ்” என்றுதானே பகர்ந்திருக்கிறார்கள்.
நினைத்தல் என்றால் என்ன? வார்த்தைகளாக நாம் நினைக்கிறோமா அல்லது படங்களாக, வார்த்தைகளின் வடிவங்களாக நாம் நினைக்கிறோமா? ஆமாம். நாம் படங்களாகத்தான் மனதில் பார்க்கிறோம். அதுதான் நமது எண்ணம். அதுதான் நமது சிந்தனை. எத்தகைய படங்களை நாம் கற்பனையில் நம் அனுபவத்ததின், நம் அறிவாற்றலின் அடிப்படையில் பார்க்கிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். இது நம்மையறியாமேலேயே நம் வாழ்வில் நடைபெறுகின்ற, இயற்கை நிகழ்த்துகின்ற அற்புதங்கள்.
மனப்படங்கள் எப்படியோ அப்படியே வாழ்க்கை அமைகிறது.
அதனால்தான் நீங்கள் நினைப்பதையெல்லாம் பெரிதாக வளமாக, வசதிமிக்கதாக பெருமைக்குரியதாக, போற்றத்தக்கதாக மிகத் துல்லியமாக கற்பனை செய்யுங்கள். (Creative Visualization). ஒரு வேளை அதை அடைய காலதாமதம் மேற்பட்டாலும் கற்பனையை மட்டும் கை விட்டுவிடாதீர்கள். மீண்டும் நாம் வள்ளுவரின் வார்த்தைகளையே பார்ப்போமே.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினம தள்ளாமை நீர்த்து - குறள்
மேற்கண்ட திருக்குறள்களை அவற்றின் பொருளை சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்காமல் இவைகள் பிரபஞ்ச இரகசியத்தின் வெளிப்பாடுகள் என்ற கோணத்தில் பார்த்தால் இதுவரை இந்த குறட்பாக்களை நாம் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு நம்மால் உணரப்படும்.
கற்பனை என்பது வெறும் கற்பனையாக இல்லாமல் உணர்ச்சியைக் கலந்து (Emotion) செய்கிறபோது கற்பனையின் சக்தி பல மடங்கு பெருகி நினைத்ததை அடைவதற்கான காலத்தை குறைத்துவிடுகிறது. விரைவில் நிறைவேறும் உடனே நடக்கும்.
இலட்சியக் கற்பனை, கனவுக் கற்பனை, ஆசைக் கற்பனை தேவைக்கற்பனை இவைகள் உணர்ச்சிப் பூர்வமானதாக இருக்கட்டும். உணர்ச்சியற்ற எண்ணங்களும், வார்த்தைகளும் அர்த்தமற்ற சப்தங்களன்றி வேறில்லை. அவைகள் அடைய முடியா வெறுமைகளால் ஆனவைகள்.
No comments:
Post a Comment