1. விரும்பித் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொண்ட தொழில்
2. வந்து அமைந்த தொழில்
3. “பிடிக்காத தொழில்தான், இப்போதைக்கு வேறு வழியில்லை. இது தற்காலிகத் தொழில், படிப்படியாக முயற்சி செய்து எனக்கு பிடித்த தொழிலுக்குச் சென்று விடுவேன். It is temporary landing. பணி செய்து கொண்டுள்ளேன்” என்றுள்ள தொழில்.
மேற்கண்டபடி எவ்வகையான தொழில் செய்வோராக இருந்தாலும், செய்து கொண்டுள்ள பணியை எப்படி முழுமையாகப் பிடித்ததாக மாற்றிக்கொள்வது?” செய்யும் தொழிலில் சந்தோஷம் - நிம்மதி (Job Satisfaction) பெறுவது எப்படி? அதற்கான கருத்துக்கள் - பயிற்சிகள் என்ன? அர்ப்பணிப்பு உணர்வுகளை உருவாக்கி அப்பணியை எப்படிச் சிறப்பாகச் செய்வது?
விபரங்களைக் காண்போம்.
கடமை எது?
வேதாத்திரி மகரிஷி அவர்கள் கடமையைப் பற்றி ஓர் அற்புதமான விளக்கம் அளித்துள்ளார்கள். அவர்கள் கூறும்போது “நாம் அணிந்திருக்கின்ற சட்டை - விவசாயிகள் பருத்தி உற்பத்தி நூல், துணி ஆக்கினர். வியாபார நண்பர்கள் அதை வாங்கி, விற்று, டெய்லர் என்ற தொழிலாளர் சட்டை உருவாக்கினார். அப்படியாயின் நாம் அணிந்திருக்கின்ற உடைகளுக்குப் பின்னால் பலர் உழைப்பு உள்ளது. இதன்படி நம் உணவு உபயோகப்படுத்தும் பொருட்கள், கல்வி, மருத்துவம்…. இப்படி சமுதாயம் நமக்குப் பலவற்றைக் கொடுத்துள்ளது. பெற்றவற்றை நம் தொழிலின் மூலம் உழைத்துத் திருப்பிக்கொடுத்திருக்கிறோம். கடன் + மை = கடமை. பெற்ற கடன்களைத் திருப்பி அளிக்கிறோம் - நம் உழைப்பின் மூலம்”.
பெற்றது அதிகமாகவும், திருப்பிக் கொடுத்தது குறைவாகவும் இருக்கும்போது, நாம் இறக்கும்போது கடன்காரர்களாகத்தான் செல்ல வேண்டும். சந்தோஷம் பெற நினைக்கிற எந்த மனிதரும் கடன் சுமையை இறக்கித்தான் வைப்பார். நம் மனசாட்சி தராசு வைத்து எடைபோடும்.
காந்தியடிகள் சொல்கிறார், “உழைக்காமல் உண்பவன் திருடன்”.
வாழ்வு முழுவதும் ஏதேனும் ஒர் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிற மனிதர்கள் - இந்த உலகத்துக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வின் இறுதிக்காலத்தில் மனிதனாக இந்த உலகுக்கு வந்து - முழுமயாகப் பணி செய்தேன். தொடர்ந்து கொடுத்தேன்” என மன நிறைவுடன் ஆத்ம திருப்தி அடையலாம்.
ஏற்றுக்கொள்க
நமக்கு அமைந்திருக்கிற தொழில் - ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்கலாம் - அல்லது சொந்தமாக வியாபாரம் அல்லது தொழில் செய்யலாம். அது எதுவாக இருந்தாலும், எந்த ஊர், எந்த நிறுவனம், எந்த நாடு….. எப்படியிருந்தாலும் - அதை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். எப்படியிருந்தாலும் - அதை முழுமையாக ஏற்றுக் கொள்வோம். “செய்யும் தொழிலே தெய்வம்”.
பொருளாதாரம், அங்கீகாரம், பாதுகாப்பு, எதிர்கால வளர்ச்சி… எல்லாமே கொடுப்பது நம் தொழில்.
அதை ஓர் தவமாய் - தியானமாய் - முழு ஈடுபாட்டுடன் - அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வோம்.
தொழில் என்பது நம் அறிவை - திறமையை உலகுக்குக் காட்டக் கிடைத்த வாய்ப்பு. நம்மிடம் மறைந்துள்ள மாபெரும் மனித ஆற்றல் வெளிவரத் தொழில் துணைபுரியும்.
ஆகவே, நாம் செய்யும் தொழிலை - முழுமையாய் - முழு மனதுடன் - ஆத்மபூர்வமாக - ஏற்றுக் கொள்வோம். நேசிப்போம்.
விருப்பத்தை ஏற்படுத்த
இதற்கு ஓர் பயிற்சி உள்மனக் கட்டளைப்பயிற்சி (Auto Suggestion).
“என் தொழிலை நான்
விரும்புகிறேன்!
என் தொழிலை நான்
மதிக்கிறேன்!
என் நிறுவனத்தை நான்
விரும்புகிறேன்!
என் நிறுவனத்தை நான்
மதிக்கிறேன்!
கண்களை மூடி அமர்ந்து கொண்டு, மேற்கண்ட வார்த்தைகளை காலையில் ஒருமுறை - மாலையில் ஒருமுறைகூறுக. அப்போது மனத்தை - ஓய்வாக வைத்த நிலையில் மனதளவில் ஓர் ஈடுபாட்டுப் பாவனையை ஏற்படுத்திக் கொண்டு செல்க.
இவ்வாறு செய்யச் செய்ய இவ்வார்த்தைகள் உள்மனதில் பதிந்து - விருப்ப உணர்வுகளை - ஈடுபாட்டுணர்வை ஏற்படுத்தும்.
பணிக்குக் கிளம்பும்போது அது சம்பந்தமான பொருட்களை எடுக்கும்போது - இவ்வார்த்தைகள் மனதில் தோன்றும்படி செய்துவிட்டால் - மனதில் தொழில் பற்றிய ஓர் இலயம் ஏற்படும்.
நாம் செய்கிற தொழிலால் - மானிட சமுதாயத்துக்குக் கிடைக்கிற நன்மையை நினைத்துப் பார்க்க வேண்டும். நம் வாழ்க்கைக்கு நம் தொழிலால் ஏற்படுகிற வெற்றி - வளர்ச்சியை உணர்தல் வேண்டும்.
உணர, உணர தொழில்மேல் ஓர் மதிப்பு ஏற்படும்.
எது சிறந்த தொழில்?
தொழில் - இஷ்டப்பட்டுச் செய்வதற்கும், கஷ்டப்பட்டுச் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?
No comments:
Post a Comment