இவ்வளவு பிரமாண்டமான கை குலுக்கலை சந்தித்திருக்கவே மாட்டார் ஹி பிங்பிங். இவ்வளவு கீழே குனிந்திருக்கவே மாட்டார் சுல்தான் கோஷன். வேறு ஒன்றுமில்லைங்க…உலகின் உயரமான மனிதரான, துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோஷனும் உலகின் குள்ளமான மனிதரான, சீனாவைச் சேர்ந்த ஹி பிங்பிங்கும் துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் சந்தித்துக் கொண்டனர்.
விவசாயக் கூலியான 27 வயது கோஷன் 8 அடி 1 அங்குல உயரத்துடன் உலகின் உயரமான மனிதராக கின்னஸ் சாதனை நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டவர். 10 செண்டிமீட்டர் வித்தியாசத்தில் சீனத்து பாவோ இஸ்கானை தோற்கடித்தவர் இவர். ஹி பிங்பிங் தன்னுடைய 21 வயதுக்கு ஏற்ற உயரமில்லாமல் 2 அடி 5 அங்குல உயரமே வளர்ந்ததால், உலகின் குள்ளமான மனிதராக அதே கின்னஸ் சாதனை நிறுவனத்தால் சான்றிதழ் தரப்பட்டவர். இவரோ சீனாவைச் சேர்ந்த வூ கேங் என்ற பொடியரால் (2 அடி 3 அங்குலம்) போட்டிக்கு உள்ளாகியிருப்பவர்.துருக்கியில் கின்னஸ் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியையொட்டி, இவ்விருவரின் அரிய சந்திப்பு நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment