January 19, 2010

தண்ணீர் நல்ல மருந்து

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்.தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும். முகம் பளபளக்க செய்யும்.
தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும் போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்துவிடுகிறது. அதனை குடிக்கும் போது நோய் ஏற்படுகிறது.

தினமும் காலையில் வெறுவயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்பதுத்தலாம்.

தண்ணீர் குடித்தால் காது வலி வருமா?
கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளக்காடாகச் சூழ்ந்து விடுகின்ற மழைத்தண்ணீர் சலிப்பை உண்டாக்கியிருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் அன்றாடம் இரண்டு லிட்டர் குடிக்க வேண்டும் என்பது அவசியம். அதைப் பருகும் விதம் எப்படி என்பது இதோ இங்கே கூறப்படுவது சரிதானோ என்று யோசிக்க வைக்கின்றது.

டம்ளர் கணக்கில் தண்ணீர் குடியுங்கள் என்று கூறப்படுகிறது. எப்படிக் குடிக்க வேண்டும் ?

தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.

தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.

ஒருவர் குடித்த டம்ளரில் மற்றொருவர் குடிப்பது சுகாதாரக் கேடு என நீங்கள் கூறலாம்.

இதற்கும் மாற்று வழி உண்டு. ஒவ்வொருவருக்கும் டூத் பிரஷ் இருப்பதுபோல தனித்தனியே டம்ளர் வைத்துக் கொள்ள வேண்டும்.விருந்தினர்க்குக் கொடுக்கப்பட்ட டம்ளரை உடனுக்குடன் அலசிக் கழுவி வைத்துக் கொள்ளலாமே !
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.  உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.  நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது.

No comments:

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...