August 10, 2013

வேலைக்குப் போகும் பெண்கள் அவசியம் கருத்தில் கொள்ளவேண்டியது !!


1. நேரத்தை நிர்வகிக்கும் திறமை

2. பிள்ளைகளோடு தினமும் நேரம் செலவழிப்பது

3. நம் டென்ஷனை பிள்ளைகளிடம் காட்டாமல் இருப்பது

4. அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்ப்பது.

5. அலுவலக நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாமல் இருப்பது.

6. சம்பாதிக்கின்ற காரணத்தால் அளவுக்கு மீறிய பொருளாதார சுதந்திரம் கொடுப்பது.

7. கணவருடன் கலந்தாலோசித்து வேலைகளை பங்கிட்டுகொள்வது

8. வாரத்தில் ஒருநாள் உங்களுக்கென்று சிறப்பு நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை செய்வது

9. அண்டை வீட்டுக்காரர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வது

10. பிள்ளைகள் ஏதாவது சாதிக்கும்போது தட்டிக்கொடுத்து பாராட்டுவது

11. தங்கள் வாழ்க்கை முறையும் நம் வரலாற்றையும் கற்றுத்தருவது .

12.தான் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களிடம் நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுவது

தொடக்க பள்ளிக்கு முந்தைய காலகட்டத்தில் – 75 சதவீதம் தாயாகவும், 25 சதவீதம் ஆசானாகவும்.
தொடக்க பள்ளிக்கு காலகட்டத்தில் – 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் ஆசானாகவும்.

தொடக்க பள்ளிக்கு பிந்தைய காலகட்டத்தில் – 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் தோழியாகவும்.

மேலே சொன்னதுபோல நமது பங்கு, பிள்ளைகள் வளர்ப்பில் இருந்தால் நாமும் சவால்களை சமாளித்து நம் பிள்ளைகளை சாதனையாளனாக உருவாக்க முடியும்

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !


சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன. வெற்றியை விரும்பும் இளைஞர்கள் எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இலக்கு இல்லாமல் யாரும் பயணிப்பதில்லை. ஆனால் பள்ளங்களை கடக்காமல் யாரும் மேட்டுக்கு செல்லமுடியாது. உயரம் எவ்வளவு அதிகமோ அதே அளவு பள்ளம் உயரத்தின் இருபுறமும் இருக்கிறது. உயரத்துக்குசெல்லவும் சவால்களைச் சந்திக்க வேண்டும். அதே உயரத்தை நிலைநிறுத்தவும் சோதனைகளை எதிர்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உயரத்தில் இருந்து அதலபாதாளத்தில் விழ நேரிடும். எனவே எப்போதும்சவால்களுடன் போராடுவதே வாழ்க்கை.

இங்கு ஒரு கதை மூலம் விளக்குவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறன் சிலருக்கு

விவசாயி ஒருவர் வான்கோழி வளர்த்து வந்தார். அவரது மகளும் வான்கோழியிடம் பாசமாயிருந்தார்.தானியங்கள் மற்றும் உணவை அளித்து செல்லமாக கவனித்துக் கொண்டனர்.

மூன்று ஆண்டுகளில் அந்த வான்கோழி கொழுகொழுவென வளர்ந்துவிட்டது. இதனால் வான் கோழியின் மனதில் இருந்து பயம் போய்விட்டது. நமது எதிர்காலம் முதலாளியால் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்என்று வான்கோழி நினைத்தது. உண்மையிலேயே அவ்வளவு செல்லமாகவே வான்கோழியை விவசாயியின்குடும்பத்தினர் பராமரித்து வந்தனர்.

அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு விசித்திர வழக்கம். அதாவது ஏதாவது ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள்மற்ற அனைத்து குடும்பத்தினருக்கும் விருந்து அளிக்க வேண்டும் என்பதுதான் அது. இந்தமுறை வான்கோழியைவளர்த்த விவசாயி குடும்பத்தார், பிறருக்கு விருந்தளிக்க வேண்டிய நிலை. வேறு வழியின்றி விவசாயி தான்வளர்த்த வான்கோழியை விருந்தாக்க முடிவு செய்தார்.

கதையில் வரும் வான்கோழியின் எண்ணத்தில் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். வாழ்க்கையின் சிக்கல்களைஎப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தங்களை யாராவது பாதுகாப்பார்கள் என்று கருதி இருந்தால் முடிவுஎதிர்மறையாகவே அமைந்துவிடும்.

மாணவர்களாக இருக்கும்போதும் சரி, வேலை உலகில் காலடி எடுத்து வைக்கும்போதும் சரி ஒவ்வொருவரும் சவால்களை எதிர்கொள்ள தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சவால்கள் குறித்த பாடங்களை ஆசிரியர்கள் கருத்தாக கூறுவதோடு மட்டுமல்லாமல் அனுபவ ரீதியாகவும் அறிந்து கொள்ளச் செய்யவேண்டும்.

சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்ட சிலரைப் பற்றி கூறுவது நிச்சயமாக இளைஞர்களுக்கு நம்பிக்கைஊட்டுவதாக அமையும். வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததாக ஆகும்போது சவால்களே வாழ்க்கை ஆகிவிடுவதை காணலாம். பிரச்சினைகள் தான் சிலரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இவ்வாறு சிறப்பாகசெயல்படுபவர்கள் தங்களது தனித்திறமையாலோ, உடல் வலிமையாலோ இத்தகைய சிறப்பை வெளிப்படுத்தமுடியாது. அவர்களது மனோபாவமும், அணுகு முறையுமே இத்தகைய தயார் நிலையை உருவாக்குகிறது.

நேருவின் வாழ்க்கையில்…

நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கைப் பயணத்தில் சில…

நேரு சுதந்திர போராட்ட காலத்தில் சுமார் பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசம் செய்தார். பல்வேறு குற்றங்கள்புரிந்து சிறைவாசம் இருந்தவர்களுடன் அவர் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விஷ ஜந்துக்களானதேள், பாம்பு போன்றவையும் அந்தச் சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை சிறைக்கூடம் நிரம்பிவழிந்தபோது கால்நடைகளை பராமரிக்கும் கூடம் சிறையாக பயன்படுத்தப்பட்டது. அதிலும் நேரு தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

வசதியான குடும்பச் சூழலில் வளர்ந்த நேரு இவற்றையெல்லாம் பெரிதாக கருதவில்லை. அதற்கு மாறாகசிறைவாசத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி புத்தகங்களை எழுதினார். அவரது மனோபாவமும்,எதிர்காலத்தை எதிர்கொண்ட திறனுமே அவருக்கு ஏற்பட்ட பல்வேறு இடர்களை சமாளிக்கும் ஆற்றலைஅளித்தது. இத்தகைய தலைமைப் பண்பு என்பது அவரவருக்குள் இருந்தே வெளிப்பட வேண்டும்.

வறுமை வார்த்த தொழில் அதிபர்

இதேபோல் ஜப்பானைச் சேர்ந்தவர் கொனசுகே மட்சுசிதா. மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். 8பேருடன் பிறந்த அவர் உடல் ஆரோக்கியம் குன்றியவராகவும் இருந்தார். அவருடன் பிறந்தவர்களில் ஐந்துபேர்பரிதாபமாக இறந்துபோனார்கள். குடும்பச்சூழல் காரணமாக மட்சுசிதா தனது ஒன்பதாவது வயதில் படிப்பைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மரத்துண்டுகளை சேகரித்து விற்பனை செய்தார். பின்னர் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும்கடையில் பணியாற்றினார். நாளடைவில் அங்கிருந்து வெளியேறி எலக்ட்ரீசியன் பணி மேற்கொண்டார். தனதுஓயாத உழைப்பின் காரணமாக தனது வீட்டிலேயே எலக்ட்ரிக் ஜாக்கெட்டை உருவாக்கினார். தனது மனைவிக்குசொந்தமான பொருட்களை அடகு வைத்து இந்த தொழிலை அபிவிருத்தி செய்தார்.

பின்னாளில் சுமார் 30 மணி நேரம் செயல்படும் வகையிலான இருசக்கர வாகன விளக்கை கண்டுபிடித்தார்.மட்சுசிதா என்ற பெயரில் இவர் நடத்தி வந்த எலக்ட்ரிக் தொழில் நிறுவனம் பின்னர் உலகளவில் புகழ்பெற்றநிறுவனமாக வளர்ந்தது. ஆசியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட அவர் பானாசோனிக், நேஷனல் போன்றநிறுவனங்களின் உற்பத்தியிலும், வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகித்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் சிறந்த நாவலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் பள்ளியில் சேர்ந்து ஒரு சில ஆண்டுகள்தான் பயின்றார். அவரது அப்பா கடன் தொல்லை காரணமாக சிறை செல்ல நேர்ந்ததால், குடும்ப பொறுப்புஅவரது தலையில் விழுந்ததே இதற்கு காரணம். இதனால் பாட்டில்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையைச்செய்தார்.

பின்னர் ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக சேர்ந்தார். ஆர்வம் காரணமாக தானாகவே சுருக்கெழுத்து பயின்றார்.இது அவருக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தந்தது. அப்போது அவர் சந்தித்த மனிதர்களைகதாபாத்திரங்களாக சித்தரித்து நாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

தனது அதீத தன்னம்பிக்கையால் இருபத்து நான்காவது வயதில் துணிச்சலாக முடிவெடுத்து முழுநேரஎழுத்தாளராக மாறினார். பின்னர் அவர் உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியராக புகழ்பெற்றார். இடர்பாடுகளையும்,வறுமையையும் சவாலாக எடுத்துக் கொண்டு துணிச்சலாக செயல்பட்டதே அவரது இந்த வெற்றிக்கு காரணம்.முதன்முதலில் பத்திரிகைகளில் தொடர்கதையை எழுதும் பழக்கத்தை அறிமுகம் செய்தவரும் இவர்தான்.அவரது நாவல்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை இன்றும் விரும்பி வாசிக்கப்பட்டு வருகிறது.

துவண்டு விடாத மனமே துணை

பால் விட்ஜென்ஸ்டெய்ன் என்பவர் பியானோ வாசிப்பதில் ஆர்வம் உடையவர். முதல் உலகப்போரில் தனதுவலது கையை இழந்தார். சாதாரணமாக ஒருவிரலில் காயம் ஏற்பட்டால் கூட இசைக்கருவியை கையாளுவதுகடினம். ஆனால் அவர் வலது கையை இழந்த பின்பும் மனம் தளராமல், எஞ்சி உள்ள இடது கையால் எவ்வாறுஇசைப்பது என்பதை கற்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பிரபலமான பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் இதுதொடர்பாக கேட்டார். அப்போதைய பிரபல இசைஅமைப்பாளரான ரோவெல் அவருக்கு உதவினார். அவர் இசை ஆர்வம் கொண்ட பால் விட்ஜென்ஸ்டெய்னுக்குஏற்றவாறு இசை அமைத்துக் கொடுத்தார். பின்னாட்களில் பிறர் தனது குறையை அறியா வண்ணம் இசைத்துகச்சேரிகளிலும் கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார் பால் விட்ஜென்ஸ்டெய்ன். இது அவரது மனஉறுதியையும், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் நமக்கு உணர்த்துகிறது.

பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்பவரும் பல சவால்களை எதிர்கொண்டவர்தான்.பேசுவது, நடப்பது, சுவாசிப்பது என அனைத்திற்கும் அவர் எந்திரங்களின் உதவியையே நாடவேண்டியஅளவிற்கு உடல்திறன் குன்றி இருந்தார். இதை அவர் தனது சாதனைக்கு தடையாக ஒருபோதும் கருதியதுஇல்லை. அவரது அறிவியல் கொள்கைகள் இன்று விஞ்ஞான உலகில் அனைவரின் கவனத்தையும்கவர்ந்துள்ளது.

பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்து அவர் எழுதிய “காலத்தை பற்றிய வரலாறு” என்ற நூல் மிகவும் பிரசித்திபெற்ற புத்தகம் ஆகும். பல்வேறு விருதுகளை பெற்ற அவர் கூறும்போது, “ஒவ்வொருவரும் எந்தச்சூழ்நிலையிலும் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவே வெற்றிப்பாதைக்குஅவர்களை அழைத்துச் செல்லும்” என்கிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சூழ்நிலைகளையும் இடர்பாடுகளையும் குறை கூறுவதில்லை. தங்களதுசுயமுயற்சியால் எவ்வாறு தடைகளை எதிர்கொள்வது என்ற சிந்தனையிலேயே செயல்படுவார்கள். தங்கள்மேல் நம்பிக்கை இல்லாதவர்களே வெவ்வேறு காரணங்களை கூறி தங்களது தோல்விக்கு நியாயம் கற்பிக்கமுயல்வார்கள். ஆகவே இளைஞர்களே, எப்போதும் சவால்களை எதிர் கொள்ள தயாராக இருங்கள். சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். சாதனைகள் எல்லாமே உங்கள் தோள்களைத் தழுவி நிற்கும்.


நெல்லிக்காயின் மகத்துவம்..!



ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். கருநெல்லி (கிடைப்பது அரிது), அருநெல்லி (எளிதில் கிடைக்கும்) என இரு வகைப்படும்.

நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர்.

இதனை நெல்லி வற்றல் என்றும் அழைப்பர். நெல்லி முச்சுவை உடையது; முதல் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். நெல்லியை சுவைத்த பின்னர் தண்ணீர் அருந்தியவுடன், இனிப்புச் சுவையான நீர்போல் சுவைப்பதன் காரணம் இதுதான்.

* நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

* நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

* நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

* நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

* நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

* நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

* நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

* நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து…. சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.

* நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.
நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.

5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.

7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.

8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

February 3, 2013

மாற்றி சிந்தித்து வெற்றி அடைவது எப்படி?


உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால்
உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின்
மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி
என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள்
அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று
உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் "ஆம்"
அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.

இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள்
ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான்
என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும்.

ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை
அனைத்திற்கும் காரணம்.

எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்
நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்த
நல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும்
நல்லவையாக இருக்கும்.

கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள்
ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும்
கெட்டவையாக  இருக்கும்.

மனது என்பது ஒளி  நாடாவை போன்றது.
எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து
திருப்பி சொல்லும்.

ஆழ்மனது  என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது.
உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும்.

ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.
எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும்.

அதனால் தோல்வி
கரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம்
கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள்
ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும்.

இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது
என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும்.
அதாவது எல்லாமே எதிர் மறையாகத்தான் நடக்கும்.

இதையே மாற்றி நினைத்து பார்த்தால் என்னால் அந்த செயலை
செய்ய முடியும், என்னால் அங்கு போக முடியும், என்று
நினைத்தால் நல்ல பலனையே எதிர்பார்க்கலாம்.
எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.

நீங்கள் தடை என்று நினைக்கும் எந்த காரியமும்
உங்களுடைய நினைப்பில்தான் உள்ளது. அந்த தடையை
தகர்த்து எறியலாம் என்று நினைத்தீர்கள் என்றால்
அந்த தடையை தகர்த்து எறிந்து  விடுவீர்கள்.

விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள்.
எப்படி அவர்களால புதிய சாதனைகளை படைக்க முடிகின்றது.
சாதனைகளை படைக்க முடியாது என்று அவர்கள்
நினைத்தால் அவர்களால் புதிய சாதனைகளை
உண்டாக்க முடியுமா?

எனவே எந்த தடையையும் மாற்று சிந்தனை மூலம் தகர்த்து
எறிந்து விடலாம்.

ஒரு செயலில் நீங்கள் தோல்வியை சந்திக்கிறீர்கள் என்றால்
அதற்க்கு என்ன காரணம். பல நாட்களாக பல வாரங்களாக
பல வருடங்களாக தோற்று விடுவீர்கள் என்று உங்களுக்குள்
சொன்னதின் விளைவாகத்தான் இருக்கும்.

தோல்வியை நான் நம்புவதில்லை என்று மாற்றி
நினைத்து உங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு
இருங்கள். வெற்றி நிச்சயம்.

மாற்றி சிந்திப்பதற்கு உங்களுடைய மனம் ஒரு
முக்கிய கருவியாகும். அந்த மனதை உங்களுக்கு சாதகமாக
மாற்றி நினைப்பதற்கு  ஒரு கருவி தேவை.
அந்த கருவிதான் தியானம்.

தியானம் என்ற கருவியின் மூலமாகத்தான் உங்கள் மனதை
மாற்றி நினைக்க வைத்து உங்கள் வெற்றியை
அடையலாம்.

துன்பங்களை எப்படி சமாளிப்பது?


துன்பங்கள் என்பது நிரந்திரம் அல்ல. ஒருவர் காலம்
முழுவதும் துன்பகரமான வாழ்க்கையை மட்டுமே
அனுபவித்து கொண்டு இருக்க மாட்டார்.
சற்று சிந்தித்து பார்த்தல் தெரியும்.


இந்த உலகத்தில் உள்ள எல்லா செயல்களுமே
இரட்டை இரட்டையாகத்தான் இருக்கும்.
உலகத்தில் படைக்கப்பட்ட அணைத்து பொருட்களுமே
இந்த விதியின் அடிப்படையில்தான் இருக்கும்.

மின்சாரத்தில் positive negative என்ற இரண்டும் இருந்தால்தான்
ஒளியை நாம் பெற முடியும். அது போன்று வாழ்க்கையில்
இன்பமும் துன்பமும் இருந்தால்தான் வாழ்க்கை என்ற ஒளி
விளக்கு எரிய முடியும்.

ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் நல்ல தொரு சமுதாயத்தை
உருவாக்க முடியும்.

பூஜயமும் ஒன்று என்ற இரண்டும் இல்லை என்றால்
கணிபொறி இயங்க முடியாது.

முடியாது என்ற சொல் இருந்தால்தான் முடியும் என்ற
வைராக்கியமே பிறக்கும்.

இந்த உலகத்தில் உள்ள பெரும்பால பணக்காரர்களின்
ஆரம்ப கால வாழ்க்கையை நினைத்து பார்க்க வேண்டும்.
அவர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாக பிறக்க வில்லை.

உண்ணும் உணவுக்கும் உடுக்கும் உடைக்கும் இருக்கும்
இருப்பிடத்திற்கும் கண்டிப்பாக
மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்கள் .

மிக பெரிய பிரபலங்களாக வலம் வந்து மறைந்த அம்பானி, MGR,
சிவாஜி கணேசன் போன்றவர்களின் சுய சரிதையை படித்தீர்கள்
என்றால் இந்த உண்மை புரியும்.    

அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும்
நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற
நம்பிக்கையின் காரணமாகத்தான் பணக்காரர்களாகவும்
பிரபலமாகவும் வாழ்ந்து மறைந்தனர்.

January 26, 2013

புதுமை படைப்பதும் மனஅமைதியும்

ஓவருவருக்கும் அவர்களுக்கு என்று புதுமை படைக்கும் ஆற்றல் உண்டு. அதை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்த பழகி இருக்கிறோமோ அதை பொறுத்து நம் வாழ்வில் சந்தோசமும் மனஅமைதியும் ஏற்படும். புதுமை படைப்பது அதாவது creativity என்பது ஆங்கிலத்தில், நம் பேச்சில் இருந்து, நாம் செய்யும் ஓவரு செயல்களிலும் நம்முடைய creative ஆற்றலை பயன்படுத்தி அங்கே ஒரு புது தன்மையை, புது பரிமாணத்தை ஏற்படுத்தும் பொழுது நமக்கு என்று ஒரு அங்கீகாரத்துடன் ஒருவித சந்தோசத்தையும் நாம் பெறமுடியும். . இப்படியாக ஓவரு நாளிலும், பல இடங்களில், அவரவருக்கே உரித்தான புதுமையான சிந்தனைகளை செயல்படுத்த ஆரம்பித்தால், ஒருவித தன்னம்பிக்கையுடன் கூடிய மனஅமைதியை உணர முடியம். 

புதுமையை படைப்பது என்பது ஒரு தனித்திறமை. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஓவருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். ஆனால் புதுமை படைப்பது என்பது எல்லோருக்குமே இருக்கிற ஒரு திறமை, அதை நாம் கண்டுபிடித்து பயிற்சியின் மற்றும் பழக்கத்தின் அடிப்படையில் அதை வளர்த்துக்கொள்ளலாம். அப்படி நீங்கள் வளர்த்து கொண்டபின் அது ஒரு தனித்திறமையாக கருதப்படிகிறது. 

எடுத்துக்காட்டாக, எனது நண்பர் ஒருவர் அவருக்கு வரும் forward message யை, அப்படியே திருப்பி புதுமையாக சிலதை சேர்த்து அனுப்பியவருக்கே அனுப்புவார். இதுவும் கூட ஒருவித creativity தான். இப்படியாக நம் வாழ்வில், பல சந்தோசங்களை நாம் அனுபவிப்பதோடு, நம்முடன் சேர்ந்தோரையும், நம்முடைய புதுமை படைக்கும் திறமையினால், அவர்களை சந்தோசபடுத்தி ஒருவித மனஅமைதியை அவர்களுக்கும் ஏற்படுத்தி கொடுக்கலாம். 

பேச்சில், எழுத்தில், நடவடிக்கையில், செயல்களில், மற்றவர்களுடன் உறவை மேம்படுத்துவதில், நம் வாழ்க்கை முன்னேற்றத்தில், நம் சமூகத்தை வழிநடத்துவதில், என்று பல இடங்களில் நாம் மாற்றத்தை ஏற்படுத்தி, பழையன இல்லாமல், புதுமையான கண்ணோட்டத்தில் உலகை பார்வையிட நமக்கே உரித்தான புதுமை படைக்கும் ஆற்றலை வளர்ப்போம், மனித வாழ்வில் புதுமை படைத்தவர்கள் தான் தனியாக அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதை யாவரும் அறிவோம். அதனால் அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து, மனதில் இருக்கும் மற்ற கஷ்டத்தையும், கவலையையும் பின்னுக்கு தள்ளி, எப்போதும் மனஅமைதியை பெற்றிடுவோம்.

November 18, 2012

ஒரு வாழைப்பழம் 4 ஆப்பிளுக்கு சமம் : இளமை, ஆரோக்கியம் நிச்சயம்!


தினசரி ஒரு ஆப்பிள்;டாக்டர் வேண்டாம் என்பது ஆங்கில அறிவுரை.அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான்.எனினும்,இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:

வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.

ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...