December 18, 2009

உயர்வின் முதல் படி இப்பொழுதே


வேகமாகச் செல். வேகமாகச் செல். உன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாகச் செல். இந்த எழுத்துக்கள் எட்டாம் ஹென்றியின் காலத்தில் தபால் உறையின் மீது எழுதப்பட்டிருந்தது.
தபால் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் அரசாங்கத் தூதுவர்களே கூடி தங்களைச் சுமந்து செல்வார்கள். அவர்கள் வழியில் தாமதித்தால் என்ன தண்டனை
தெரியுமா?

மரண தண்டனை!
நாம் சில மணி நேரத்தில் கடந்து செல்ல வேண்டிய தூரத்தை மாதக் கணக்கில் நடந்து செல்ல வேண்டியிருந்த அந்தக் காலத்திலும் கூட அனாவசிய தாமதமானது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.
அந்தக் காலத்திலுள்ளவர்கள் ஒரு வாரத்தில் செய்யக்கூடிய காரியத்தை இன்று ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கும் வகையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது-
அன்று அனாவசியத் தாமதத்திற்கு மரண தண்டனை என்றால் இன்று அவ்விதக் குற்றத்திற்கு என்ன தண்டனை அளிக்கப்பட வேண்டும்?
சோம்பேறித்தனத்தின் காரணமாக ஏற்பட்ட அனாவசியத் தாமதத்தால் உலகில் ஏற்பட்ட அழிவுகள் அளவிட முடியாதவை. எத்தனை பேரரசுகள் சரிந்திருக்கின்றன! எத்தனை முடியரசுகள் கவிழ்ந்திருக்கின்றன!!
எனவேதான் நெப்போலியன் கூறினார் “இழந்து விட்ட ஒவ்வொரு நிமிடமும் துன்பத்திற்கும் துயரத்திற்கும் சந்தர்ப்பம் அளிக்கிறது”.
உடனுக்கு உடன் காரியங்களை ஒழுங்காகச் செய்வது போன்று நமக்கு வெற்றி மாலை சூட்டக் கூடியது வேறு ஒன்றும் இல்லை.
இதே போன்று செய்ய வேண்டியதை ஒத்திப் போட்டுக் கொண்டே போவது துன்பப் படுகுழியில் தள்ளக் கூடியதும் வேறு ஒன்றும் இல்லை.
காலம் என்னும் கடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் “இப்பொழுதே” என்பது தான். இதுவே வெற்றி வீரனின் தாரக மந்திரமாகும்.
பின்பு என்பது தோல்வியின் தோழமைச் சொல். அன்றாடம் செய்யப்பட்டிருக்க வேண்டிய வேலைகள், ஒத்திப் போடப் பட்டதன் காரணமாக மலைபோல் குவிந்து மலைக்க வைத்துவிடும். இவ்வாறு நம்முடைய வாழ்வில் ஒழுங்கீனம் தன்னுடைய கொடிய உருவத்தைக் காட்டத் தொடங்குகிறது. அதனால் நம்முடைய வாழ்வு சிறப்பு இன்றி சீதனம் குன்றி அமைந்து விடுகிறது.
செய்ய வேண்டிய வேலையை உடனுக்கு உடன் செய்யாமலும் வரக்கூடிய மடலுக்கும் பதில் எழுதாமலும் இருப்பது, வாழ்க்கைச் சக்கரத்தை ஓடச் செய்யாமல் செய்து விடும்.
ஒரு வேலையை ஒத்திப் போடுவது என்றால் என்ன? அதைப் புதைகுழியில் போட்டு மூடி விடுவது என்பதுதான். பின்பு பார்ப்போம் என்றால் பின்பு ஒரு போதும் அதனை விட்டுப் பார்ப்பது இல்லை என்பதுதான்.
ஒரு வேலையைச் செய்வது, ஒரு விதையை விதைப்பது போலாகும். அது உரிய காலத்தில் நடத்தப்படவில்லை என்றால் அது காலம் தவறிய நடவுதானே. காலம் தவறின நடவின் பலன் அதற்கு ஏற்றாற் போலத் தான் இருக்கும். எனவே இப்பொழுது என்பது நமக்கு அருளப்பட்டிருக்கும் மாணிக்கம். தோசையைச் சுடச்சுடச் சாப்பிடும் சுவை அது ஆறிய பின்பு இருக்குமா?
இது போன்றுதான் ஒத்திப் போடப் பட்டிருக்கும் வேலையும் இருக்கும். இதனால் நமக்கும் உற்சாகம் குறைந்து விடுவதோடு அதனுடைய சிறப்புத்தன்மையும் இழந்து விடுகிறது.
நான் வெற்றி அடைந்ததற்குக் காரணம் நான் எப்பொழுதும் தயாராக இருந்தது தான் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன்.
பத்து மணிக்கு வேலை செய்வதாயிருந் தால்தான் நான் ஒன்பது மணிக்கே தயாராகிவிடுவேன். எனக்காக வேண்டி நான் யாரையும் ஒரு நிமிடம் கூட காத்திருக்க விடுவதில்லை என்று அவர் விளக்கம் தந்தார். இவ்வளவு குறுகிய நேரத்தில் அதிகமாக வேலையைத் தங்களால் எவ்விதம் செய்ய முடிகிறது என்று சர் வால்ட்டர் ரேலேயிடம் கேட்ட போது…
“நான் எதையும் செய்ய வேண்டி யிருந்தால் அதனை உடனே செய்து முடித்து விடுவேன். இன்றைய வேலையை நான் ஒரு போதும் நாளைக்கு என்று தள்ளிப் போட்டது இல்லை” என்று கூறினார்.
வாழ்க்கையில் முன்னேறியவர்களைப் பார்த்தால் அவர்கள் நேரத்தைச் செலவிடுவதில் சிக்கனக்காரர்களாக இருந்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் கோடீஸ்வரர் கார்னீஜி தன்னைப் பார்க்க விரும்புகிறவர்களை வரவேற்கும் விதமும் தன்னுடைய நேரத்தைச் சிக்கனமாக செலவிடும் முறையும் வியப்பானது. எப்படி என்றால் தன்னைப் பார்க்க வந்தவரைப் புன்முறுவலுடன் வரவேற்பார். பிறகு உடனே வந்த விஷயத்தை விசாரித்து விடுவார். அதற்கு ஆவன செய்வதாகவும் சொல்லுவார். தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்து அவருடன் அதிக நேரம் பேச முடியாமைக்கு வருந்துவதாகக் கூறி அவரை திருப்தியுடன் அனுப்பி வைப்பார். தொழில்துறை அதிபர்களும், சாதனை யாளர்களும் தங்களுடைய நேரத்தைச் சிக்கனமாக செலவிட்டு இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
நேரம் ஒரு மூலதனம் என்பதை அவர்கள் ஒரு நாளும் மறந்தது கிடையாது. இதனையே நாமும் பின்பற்றவேண்டும். அப்பொழுதுதான் நாமும் அவர்களைப் போல ஆக முடியும்.

இளைய சக்தி இளைத்த சக்தியா?


இளைஞனே
“சூரியனையே சுட்டுவிடும்
நெருபன்றோ உன் விழிகள்!
இமயத்தைவிடவும்
உயர்ந்ததன்றோ உன் தன்னம்பிக்”கை”;
இரும்பையும் விடவும்
வலிமையானதல்லவா உன் இதயம்”
நீ ஏன் தோழனே தோல்விகளைக் கண்டு
கலங்கி விடுகிறாய்?
கனவுகள் ஆயிரம் கண்களில் சுமந்து கல்லூரி வாசல் கடந்து வந்தாய்;  வேலை தேடியா ஓய்ந்து விட்டாய்; சூழ்நிலையும், சுற்றமும் ஏளனப் பேச்சால் புண்படுத்தியதோ, புரிந்து கொள் தோழனே!
“புண்பட்ட மனமே
பண்பட்ட மனமடா”
தன்னம்பிக்கையால் உன் தோல்வித் தழும்புகளை ஒரு நொடியில் அழித்துவிடு.
“ஒன்பது முறையும் கீழேவிழுதவனைப் பார்த்து
இந்தப் பூமித்தாய் சொன்னாளாம்;
எட்டுமுறையும் நீ எழுந்தவன் தானே
இம்முறையும் எழுந்துவிடு பூமகனே” என்று…
தோல்வியின் வலி தெரியாவிட்டால் உனக்கு வெற்றி மலரின் வாசனை நிச்சயமாக உணர முடியாது. உன்னுள் இருக்கும் “தன்னம்பிக்கை கத்தியை” தோல்வி என்ற சாணைக்கல் மட்டுமே கூர்மையாக்க முடியும்.
அற்புதமேதை “அரிஸ்டாடிலின்” கொள்கைகளையும் கருத்துக்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த ஓர் இளைஞனான “அலெக்சாண்டர் ஒருவனால் தானே முடிந்தது.
இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீக தத்துவத்தை அகிலம் முழுவதும் “வெளிச்சம் போட்டுக் காட்ட ஒரு விவேகானந்தர்” என்ற மெழுகுவர்த்தியால் அல்லவா முடிந்தது.
புரிந்துகொள் தோழனே!
இதுவரை கடந்த டிசம்பர் 31ல் நீ கவலையுடன் கடந்திருப்பாய்!  ஆனால் இனிமேல் உன்னை கடக்க விருக்கும் ஒவ்வொரு டிசம்பர 31 -ம் உன்போன்ற ஒருவரை விட்டு கடப்பதற்காக அந்த நாளே கவலைப்படட்டும்.
“தெளிவுபடு இன்றே!
திறமுடன் நன்றே!!
உன்னையே நீ நிலமாக்கு!
உன் முயற்சிகளையே உழவாக்கு!
தோல்விகள் யாவையும் விதையாக்கு!
வியர்வைத் துளிகளை மழையாக்கு
வெற்றி மலரை மட்டுமே பயிராக்கு”
உன் வாழ்வின் சூத்திரம் வரைய வருகின்ற புதுவருடம் ஏட்டுடன் எழுதுகோல் எடுக்கட்டும்;  இனி யாவும் இளையசக்தி முரசு கொட்டி ஒலிக்கட்டும்.



வாழும் கலை


திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்னே நகரில் ஆற்றிய உரையிலிருந்து...
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஏனெனில், இவற்றுக்குதான் நம் வாழ்வில் குறைபாடு உள்ளது. நாம் அனைவரும் அவ்வப்பொழுது மனக்கலக்கம், எரிச்சல், இணக்கமின்மை, துயரம் ஆகியவற்றை அனுபவிக்கிறோம். அவ்வாறு நாம் நிலையின்றி தவிக்கும்பொழுது, நாம் படும் துயரத்தை நம்மிடம் மட்டும் வைத்துக்கொள்ளாது அவற்றைப் பரப்பவும் செய்கிறோம். துயரப்படுபவரை சுற்றி எங்கும் சமநிலையின்மை சூழ்கிறது. அவரைச் சுற்றி இருப்பவர்களும் கலக்கம் அடைகிறார்கள்; சினம் அடைகிறார்கள். கண்டிப்பாக இது வாழ்வதற்கான சரியான முறை அன்று.
ஒருவர் தனக்குள்ளே மன அமைதியுடன் வாழ வேண்டும்; மற்றவரோடும் இணங்கி வாழ வேண்டும். என்ன இருந்தாலும் மனிதன் ஒரு சமூக வாழ்வினன். அவன் சமுதாயத்தில் வாழவேண்டி உள்ளது; பலருடன் பலவிதமாக தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது. இவ்வாறு இருக்கையில், நாம் நம் உள்ளேயும் நம்மைச் சுற்றியும் எங்ஙனம் அமைதி காத்து அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வழி செய்வது?
ஒருவர் தம் மனக்கலக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் என்றால் முதலில் அந்த கலக்கத்திற்கான அடிப்படை காரணத்தை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால், ஒருவர் மனதில் எப்பொழுதெல்லாம் தீய எண்ணங்கள் அல்லது எதிர்மறை கருத்துகள் தோன்றுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவர் கலக்கம் அடைகிறார் என்பது புரியும். அமைதியும் தீய எதிர்மறை எண்ணங்களும் மனதினுள் ஒன்றாக உறைய வாய்ப்பே இல்லை.
ஒருவர் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எப்போது உருவாகின்றன? மீண்டும் ஆராய்ந்தால் இதுவும் தெளிவாகிறது. நமக்குப் பிடிக்காத வகையில் ஏதாவது நிகழ்ந்தால் அல்லது நமக்குப் பிடிக்காத வகையில் எவரேனும் நடந்துகொண்டால் நாம் மகிழ்ச்சியை இழக்கிறோம். நாம் வேண்டுவது நடக்காவிட்டாலும், நமக்கு வேண்டாதது எதுவும் நடந்தாலும் மனம் இறுக்கம் அடைகிறது. நம்முள்ளே நாம் பல முடிச்சுகள் போட்டுக்கொள்கிறோம். இம்மாதிரி வேண்டுவன நிகழாமல் போவதும், வேண்டாதன நிகழ்வதும் நம் வாழ்வில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. நாமும் சுலபத்தில் அவிழ்க்க இயலாத முடிச்சுகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏற்றிக்கொண்டே போகின்றோம். நம் மனமும் உடலும் முழுவதுமாக இறுக்கத்தாலும் எதிர்மறை உணர்வுகளாலும் நிறைகின்றன. நம் வாழ்க்கை துன்பமயமாகிறது.
இந்த பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நாம் விரும்பியபடியே அனைத்தும் நடக்கவும், நாம் விரும்பாதது எதுவும் நடக்காமல் இருக்கவும் ஏதாவது ஏற்பாடு செய்வது ஒரு தீர்வு. ஆனால், அவ்வாறு இருக்கவேண்டுமானால் ஒன்று நம்மிடம் ஏதாவது அதிசய சக்தி இருக்கவேண்டும்; அல்லது அத்தகைய சக்தி கொண்ட ஒருவர் நாம் வேண்டும் பொழுதெல்லாம் நம் உதவிக்கு வரவேண்டும்! அது இயலாத செயல். 'நான் விரும்பியதெல்லாம் நிறைவேறும்; நான் வேண்டுவன எல்லாம் நிகழும்; எனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது' என்று சொல்லிக்கொள்ளக்கூடியவர் இந்த உலகிலேயே யாரும் கிடையாது. நம் விருப்பத்திற்கு மாறான விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. எனவே, நாம் நமக்கு பிடிக்காதன நிகழும்போது கண்மூடித்தனமாக எதிர்மறை பின்வினைகள் ஏற்படுத்தாமல் இருப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. மன இறுக்கத்தைத் தவிர்ப்பது எப்படி? மன அமைதியுடனும் நல்லிணக்கத்தினுடனும் வாழ்வது எப்படி?
இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் இருந்த ஞானிகள் மனிதனின் இந்த துயரப்படும் நிலையை ஆராய்ந்து அதைத் தவிர்க்க ஒரு வழிவகை கூறியிருக்கிறார்கள்: ஒருவர் விரும்பத்தகாதது ஏதும் நடந்து அவர் மனதில் சினம், பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏதும் தோன்ற ஆரம்பித்தால், உடனே அவர் தம் கவனத்தை வேறு ஏதாவது ஒன்றின் மீது செலுத்த வேண்டும். உதாரணமாக, எழுந்து சென்று கொஞ்சம் நீர் அருந்தலாம். அல்லது மனதிற்குள் ஒன்று-இரண்டு-மூன்று-நான்கு என்று எண்ண ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ, ஏதேனும் ஒரு மந்திரத்தையோ, தங்கள் இஷ்ட தெய்வம் அல்லது தங்களுக்கு பிடித்த புனிதர் ஒருவரின் பெயரையோ திரும்பத் திரும்பக் கூறலாம். மனம் திசைத் திரும்பி எதிர்மறை எண்ணங்களிலிருந்து கொஞ்சம் வெளிவரும். ஓரளவு சினம் தணியும்.
இந்த முறை அனைவர்க்கும் உதவியது; நன்றே செயல்பட்டது. இன்றும் செயல்படுகிறது. ஆனால் இந்த முறை மனதின் மேல் மட்டத்திலேயே செயல்படுகிறது. சொல்லப்போனால் மனதைத் திசைத் திருப்புவதால் எதிர்மறை உணர்ச்சிகள் ஆழ்மனதை நோக்கி அழுத்தப்படுகின்றன. அங்கே சினம் பல்கிப் பெருகுகிறது. மேலோட்டமாக அமைதி நிலவினாலும் மனதின் ஆழத்தில் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் ஒரு எரிமலையென கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்த எரிமலை வெடித்துச் சிதறுவது தவிர்க்கமுடியாதது.
பேருண்மைகளைத் தேடிச் சென்ற வேறு சில ஞானிகள் இன்னும் முன்னேறி, தம் உள்ளத்தின் உள்ளே மனம்-பொருள் பற்றிய சத்தியங்களை அனுபவித்து உணர்ந்து, மனதைத் திசைத் திருப்புவது சரியான முறை அன்று என்பதைக் கண்டறிந்தனர். அது பிரச்சினையைக் கண்டு ஓடி ஒளிவதைப் போன்றது. தப்பித்துச் செல்வதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுவதில்லை. அவற்றை எதிர்கொண்டு சந்திக்க வேண்டும். மனதில் ஏதேனும் எதிர்மறை எண்ணம் தோன்றினால் அதைக் கூர்ந்து கவனியுங்கள். ஒருவர் தம் மன-மாசுகளை கவனிக்க ஆரம்பித்த உடனேயே அவை தம் ஆற்றலை இழக்க ஆரம்பிக்கின்றன. அவை கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ந்து சருகாகி பின் வேரோடு சாய்கின்றன.
இது ஒரு நல்ல தீர்வு. மனதை கட்டியும் போடாமல், அதைத் தன் போக்கில் அலையவும் விடாமல், இடைப்பட்ட இந்த கவனிக்கும் முறையே சிறந்த பலன் அளிக்க வல்லது. எதிர்மறை உணர்வுகளை ஆழ்மனதில் தேக்கி வைப்பதால் அவை அழிந்து போவதில்லை. அவ்வுணர்வுகளைச் சொற்கள் மூலமோ செயல் மூலமோ வெளியேற்றினாலோ, அவை மேலும் தீமையே விளைவிக்கின்றன. ஆனால் அவற்றை வெறுமனே கவனித்து வந்தால் அவை வெளியேறி அழிந்து போகின்றன; நாம் அவற்றின் தளையிலிருந்து மீள்கிறோம்.
இது ஒரு அருமையான தீர்வாகவே தோன்றுகிறது; என்றாலும், அன்றாட வாழ்வில் இது பயன்படுமா? சாதாரண மனிதர்களால் இவ்வாறு எதிர்மறை உணர்வுகளை எதிர்கொள்ள இயலுமா? சினம் எழும்போது, நாம் அதை அறியும் முன்னரே அது நம்மை ஆட்கொள்கிறது. சினத்தின் வசப்பட்டு நாம் நமக்குள்ளும், பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை சொல்லாலோ, உடலாலோ இழைத்துவிடுகிறோம். பின்னர், சினம் தணிந்த பின், அதற்காக அழுது, வேதனைப்பட்டு, பிறரிடமோ, கடவுளிடமோ மன்னிப்புக் கேட்கிறோம். இவ்வாறு தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாலும், அடுத்த முறை அதே போன்றதொரு நிலை வரும்போது மீண்டும் அதைப்போன்றே சினத்துடன் செயல்படுகிறோம். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதெல்லாம் வீணாகின்றனவேயன்றி நம் உதவிக்கு வருவதில்லை.
எதிர்மறை எண்ணங்கள் எப்போது ஆரம்பம் ஆகின்றன என்பதை அறிந்துகொள்வதே நமக்குக் கடினமாக உள்ளது. அது நம் உள்மனதின் ஆழத்தில் ஆரம்பம் ஆகிறது. மனதின் மேல் மட்டத்தை எட்டும்போது, அது மிகுந்த ஆற்றல் பெற்றதாகி நாம் கவனிக்கும் முன்னர் நம்மை வீழ்த்திவிடுகின்றன.
பின், எப்போது சினம் ஆரம்பித்தாலும் 'ஐயா, இதோ உங்களுக்கு கோபம் வருகிறது' என்று நமக்கு அதை சுட்டிக்காட்ட ஒரு தனிச்செயலாளர் வைத்துக்கொள்ள வேண்டும்! எப்போது வேண்டுமானாலும் சினம் துவங்கலாம் ஆகையால் நாள் முழுதும் வேலையைப் பகிர்ந்துகொள்ள மூன்று செயலாளர்கள் தேவைப்படலாம். அப்படியே மூவர் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அதில் ஒருவர் சினம் எழுவதை சுட்டிக்காட்டும்போது என்ன நடக்கும்? முதலில் அவரையே நாம் தாக்கி, 'எனக்கே புத்திமதி கூறவா உன்னை சம்பளம் கொடுத்து அமர்த்தியுள்ளேன்?' என்று கோபமாகக் கத்துவோம். சினம் நம்மை ஆட்கொண்டுள்ளபோது எந்த அறிவுரையும் நமக்கு பயனளிக்காது.
அவ்வாறு நமக்கு அவர்மேல் கோபம் வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் 'மிக்க நன்றி. இப்போது நான் அந்த கோபத்தை கவனிக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டு அமர்ந்தாலும் கவனிப்பது இயலுமா என்ன? கண்ணை மூடிய உடனேயே யார் அல்லது எதனால் அந்த சினம் எழுந்ததோ அந்த நபர் அல்லது நிகழ்ச்சி நம் மனக்கண்முன் தோன்றும். அப்போது நாம் அந்த சினத்தை அப்படியே கவனிப்பதில்லை; அந்த உணர்ச்சி தோன்றக் காரணமான வெளிப்பாடுகளையே கவனிக்கிறோம். இதனால் சினம் இன்னும் பெருகுமே தவிர அதற்கு தீர்வாக அமையாது. வெறும் உணர்ச்சிகளையோ, வெறும் எதிர்மறை எண்ணங்களையோ அவற்றைத் தோற்றுவித்த வெளிப்பாடுகளை அப்புறப்படுத்தித் தனியாக கவனித்தல் மிகவும் கடினம்.
எனினும், பேருண்மையைக் கண்டறிந்த ஒருவர் உண்மையிலேயே பயனளிக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். மனதில் எதிர்மறை உணர்வு தோன்றும் போதெல்லாம் உடலளவில் இரு மாறுதல்கள் நிகழ்வதை அவர் கண்டார். முதலில் நம் மூச்சுக்காற்றின் போக்கில் மாறுதல் ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போதெல்லாம் மூச்சு சற்றே மென்மை இழந்து கனமாகிறது. இதை கவனித்தல் சுலபம். இன்னும் ஆழ்ந்து நோக்கினால், உடலுக்குள் ஏதோ ஒரு விதமான வேதியல் மாற்றம் தொடங்குவதை உடலின் மீது தோன்றும் மெல்லிய உணர்ச்சிகளைக்கொண்டு அறியலாம். ஒவ்வொரு எதிர்மறை உணர்வும் ஏதேனும் ஒரு விதமான உணர்ச்சியை உடலின் ஏதோ ஒரு பகுதியில் கண்டிப்பாகத் தோற்றுவிக்கும்.
இது ஒரு நடைமுறைத் தீர்வு. சாதாரண மனிதர்களால் மனதின் மாசுகளை -- பயம், சினம், பேராசை போன்ற உணர்வுகளை -- உள்ளதை உள்ளவாறே வெறுமனே கவனித்தல் இயலாது. ஆனால், மன மாசுகளுடன் சம்பந்தப்பட்ட மூச்சுக்காற்றின் போக்கினையும், உடல்மீது தோன்றும் சிறு உணர்ச்சிகளையும் சரியான பயிற்சியால் யாவரும் கவனிக்க இயலும்.
மூச்சும், உடல் உணர்ச்சியும் இரு வகைகளில் பயனளிக்கும். முதலாவதாக, அவை நம் தனிச்செயலாளர்களாக செயல்படும். உள்ளத்தில் எதிர்மறை எண்ணம் ஏதும் தோன்றும்போதே மூச்சு தன்னிலை மாறி, 'இங்கே கவனி, ஏதோ தவறு நடக்கிறது' என்று நமக்குச் சுட்டிக்காட்டும். மூச்சின்மீது கோபம்கொண்டு நாம் அதை தாக்க முடியாது; அது சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப்போன்றே, உடல் உணர்ச்சிகளும் ஏதேனும் தவறு நடக்கையில் நமக்கு எடுத்துச்சொல்லும். முன்னெச்சரிக்கை வந்தவுடனே நாம் மூச்சையும் உடல் உணர்ச்சியையும் கவனிக்க ஆரம்பித்தால் விரைவிலேயே அந்த எதிர்மறை எண்ணம் மறைந்துவிடும்.
இந்த மனம்-உடல் தொடர்பு இரு பக்கங்கள் கொண்ட ஒரு நாணயத்தைப் போன்றது. மனதில் எழும் எண்ணங்களும், உணர்வுகளும் ஒரு புறம். மூச்சுக்காற்றும், உடலில் புலனாகும் உணர்ச்சிகளும் மறுபுறம். மனதில் தோன்றும் எந்த ஒரு எண்ணமும், எதிர்மறை உணர்வும் அதே நொடியில் மூச்சுக்காற்றிலும் உடலின் மீது உணர்ச்சிகளாகவும் வெளிப்படுகிறது. எனவே, மூச்சையும் உடல் உணர்ச்சிகளையும் கவனிப்பது மனதின் எதிர்மறை எண்ணங்களைக் கவனிப்பதே ஆகும். இவ்வாறு நாம் பிரச்சினையிலிருந்து ஓடி ஒளியாமல் அவற்றை எதிர்கொண்டு சந்திக்கும்போது, எதிர்மறை எண்ணங்கள் வலிமை இழக்கின்றன. முன்போல் அவற்றால் நம்மை ஆட்கொண்டு வீழ்த்த இயலாது. தொடர்ந்து முயற்சி செய்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் முற்றிலுமாய் மறைந்துபோய், நம்முள்ளே அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகிறது.
இவ்வாறு இந்த சுய-கவனிப்பு முறை நமக்கு உள்ளும் புறமும் உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகின்றன. இதற்கு முன் நாம் கண்களைத் திறந்து மட்டுமே நோக்கி வந்தோம். அதனால் நம்முள் இருக்கும் உண்மை நமக்குப் புலப்படவில்லை. நம் துன்பங்களின் காரணங்களை நாம் வெளியிலேயே தேடி வந்தோம். நாம் எப்போதும் வெளிப்புற உண்மைகளின் மீதே பழி சுமத்தி அவற்றையே மாற்ற முயன்று வந்துள்ளோம். நம் உள்ளே உறையும் உண்மைகளைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவில்லை. நம் துன்பத்துக்கான காரணங்கள் நம் உடலில் தோன்றும் அனுபவிக்கத்தக்க அல்லது அவ்வாறற்ற உணர்ச்சிகளுக்கு நாம் கண்மூடித்தனமாகத் தோற்றுவிக்கும் எதிர்வினைகளே ஆகும் என்பது நமக்குப் புரிந்திருக்கவில்லை.
பயிற்சி பெற்ற பின், நாணயத்தின் மறுபுறத்தை நம்மால் பார்க்க இயலுகிறது. மூச்சின் போக்கினையும் நம் உள்ளே நடப்பதையும் ஒரே சமயத்தில் கவனிக்க முடிகிறது. மூச்சோ, உடல் உணர்ச்சியோ எதுவாயினும் மனதின் தன்னிலை இழக்காமல் அதை வெறுமனே கவனிக்கக் கற்றுக்கொள்கிறோம். எதிர்வினைகளை தோற்றுவிக்காமல் இருந்து, நம் துன்பம் பல்கிப் பெருகாமல் அவை வெளிப்பட்டு மறைந்து போகச் செய்கிறோம்.
எவ்வளவுக்கு எவ்வளவு இந்த தியான முறையைப் பயிற்சி செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக ஒருவர் தம் துன்பங்களிலிருந்து வெளிவர இயலும். கொஞ்சம், கொஞ்சமாக மனம் மாசுகளிலிருந்து விடுபட்டுத் தூய்மையடைகிறது. தூய உள்ளம் எப்போதும் சுயநலமற்ற அன்பினால் நிறைந்து விளங்குகிறது; பிறரின் குறைபாடுகள் மற்றும் துன்பங்களின்பால் பரிவிரக்கம் கொண்டு நிலவுகிறது; பிறரது வெற்றியையும் சந்தோஷத்தையும் கண்டு மகிழ்ச்சியால் நிறைகிறது; எந்த கட்டத்திலும் தடுமாறாமல் சமநோக்குடன் விளங்குகிறது.
ஒருவர் இந்த நிலையை அடைந்தவுடன், அவர் வாழ்க்கையின் வடிவம் முற்றிலுமாக மாற ஆரம்பிக்கிறது. பிறரது அமைதியையும் மகிழ்ச்சியையும் குலைக்கும் எந்தவொரு செயலையும் பேச்சாலோ உடலாலோ அவரால் இழைக்க இயலாது. மாறாக, நிலைப்பட்ட அவர் மனம் தனக்குள்ளே அமைதியடைவதுடன் பிறரும் அமைதியடைய உதவுகிறது. அவரைச்சுற்றி எங்கும் அமைதியும் நல்லிணக்கமும் சூழ்ந்து சுற்றியுள்ளோர் மீதும் நல்பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தன்னுள்ளே எது தோன்றினாலும் தன்னிலை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதால் ஒருவர் வெளிவாழ்விலும் சந்திக்க நேரும் எதையும் விருப்பு-வெறுப்பு அகற்றி உணர்ச்சிவசப்படாமல் கவனிக்க இயலுகிறது. என்றாலும், இது பிரச்சினைகளிலிருந்து தப்பித்து ஓடுவதோ அல்லது அவற்றின் மேல் ஈடுபாடு இன்றி இருப்பதோ ஆகாது. விபஸ்ஸனா தியானம் செய்யும் ஒருவர் பிறரது துன்பத்தை மிகுதியாகவே உணர்கிறார். என்றாலும் அவர் கலக்கமுறாமல் அத்துன்பத்தைத் தணிக்க தன்னால் இயன்றது அனைத்தையும் மனப்போராட்டம் எதுவுமின்றி பேரன்போடும், பரிவிரக்கத்தோடும், சமநோக்கோடும் செய்கிறார். முழு உறுதியுடன், பிறருக்கு உதவி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் அதே சமயம் அவர் தன் மனதின் சமநிலை இழந்துவிடாமல் இருக்கக் கற்றுக்கொள்கிறார். இம்முறையில் அவர் தானும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்; பிறரின் அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் உழைக்கிறார்.
இதுதான் புத்தர் கற்பித்த 'வாழும் கலை' ஆகும். அவர் எந்த மதத்தையும் நிறுவவில்லை. எந்த சித்தாந்தத்தையும் போதிக்கவில்லை. எந்த ஒரு மூடநம்பிக்கையையோ, கண்மூடித்தனமான வழிபாட்டு முறைகளையோ பின்பற்றும்படி அவர் சீடர்களுக்கு அறிவுறுத்தவில்லை. மாறாக, நம்முள்ளே இயல்பாக நடப்பதை உள்ளதை உள்ளவாறே கவனித்து இயற்கையின் பேருண்மைகளை புரிந்துகொள்ளவே அவர் கற்றுத் தந்தார். அறியாமையால்தான் நாம் நமக்கும் பிறருக்கும் துன்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறோம். உள்ளதை உள்ளபடி பார்க்கும் ஞானம் நம்முள்ளே உதித்துவிட்டால் நாம் இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டுவிடலாம். கண்மூடித்தனமாக எதிர்வினைகளை தோற்றுவிப்பதை நிறுத்திவிட்டால், நாம் உண்மையான செயல் வீரர் ஆகலாம். உண்மைகளை அறிந்து புரிந்துகொள்ளும் சமநிலை தவறா மனத்திலிருந்து தோன்றும் செயல்கள் யாவும் புதுமைச்செறிவுடன் தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் நல்ல செயல்களாகவே இருக்கும்.
ஒவ்வொரு ஞானியும் அறிவுறுத்தியதைப் போன்று, நம்மை நாம் அறிந்துகொள்வதே தலையாய தேவை ஆகும். கொள்கைகளும், விளக்கங்களும் நிறைந்த அறிவு மட்டத்தில் மட்டும் நம்மை அறிந்துகொள்வது போதாது. அல்லது, நாம் படித்த அல்லது கேள்விப்பட்டவற்றை அப்படியே நம்பும் உணர்ச்சிப்பூர்வமான பக்தி மட்டத்தில் நம்மை நாமே அறிந்துகொள்வோம் என்றும் பொருள்கொள்ளக் கூடாது. இவ்வாறு தோன்றும் ஞானத்தோடு நில்லாமல் ஒருவர் மனம்-உடல் ரீதியிலான உண்மைகளை நேரடியாக அனுபவித்து உணர வேண்டும். அது மட்டுமே நாம் நம் துன்பங்களிலிருந்தும், மன மாசுகளிலிருந்தும் விடுபட உதவும்.
இவ்வாறு, நமக்கே உரித்தான உண்மைகளை சுய-கவன முறை மூலம் நேரடியாக உணர்வதே 'விபஸ்ஸனா' தியான முறையாகும். புத்தர் காலத்தில் இந்தியாவில் வழங்கி வந்த மொழியில் 'பஸ்ஸனா' என்றால் சாதாரண முறையில் திறந்த கண்களோடு பார்ப்பதைக் குறிக்கும். 'விபஸ்ஸனா' என்றால் எதையும் அவற்றின் வெளித்தோற்றத்தைக் கொண்டு பார்க்காமல், உள்ளதை உள்ளவாறே பார்த்தல் என்று பொருள்படும். வெளிப்படும் உண்மைகளில் தொடங்கி மனம்-உடல் வடிவத்தின் இறுதி உண்மையை அடையும்வரை ஒருவர் உள்ளத்தை ஊடுருவிச் செல்ல வேண்டும். இந்த பேருண்மையை அனுபவித்த உடனேயே ஒருவர் கண்மூடித்தனமாக எதிர்மறை எண்ணங்கள் தோற்றுவிப்பதை நிறுத்திவிடுகிறார். அதுவரை சேர்ந்திருந்த மன மாசுகள் இயல்பாகவே அழிந்து போகின்றன. ஒருவர் தம் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று பெருமகிழ்ச்சியை அனுபவிக்கிறார்.
விபஸ்ஸனா தியான முகாம்களில் மூன்று நிலையினாலான பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன்மையாக, ஒருவர் பிறரது அமைதியையோ இணக்கத்தையோ குலைக்கும் எதையும் சொல்லாலோ செயலாலோ விளைவிக்கக்கூடாது. மனதின் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுதலை பெற பயிற்சி பெறும் சமயம், அதே தீய எண்ணங்களை மேலும் பெருக்கிக் கொள்வது ஆகாது. எனவே, ஒழுக்க நெறியே இந்த பயிற்சியின் முதல் படி. 'எந்த உயிரையும் கொல்லமாட்டேன், எதையும் திருடமாட்டேன், தவறான பாலியல் தொடர்புகளில் ஈடுபடமாட்டேன், பொய் உரைக்கமாட்டேன், போதை தரும் எந்த பொருளையும் உட்கொள்ளமாட்டேன்' என்று பயிற்சி பெறுவோர் உறுதி அளிக்கவேண்டும். தீய செயல்களை நிறுத்தி விடுவதால் பயிற்சியைத் தொடங்கப் போதுமான அளவிற்கு மனம் அமைதியுறுகிறது.
மூச்சின் மீது கவனத்தை நிறுத்தி அலைபாயும் மனதை சற்றே வசப்படுத்துவது அடுத்த கட்ட நடவடிக்கை ஆகும். ஒருவர் தன்னால் இயன்ற வரை தன் முழு கவனத்தையும் தன் மூச்சின் மேல் நிறுத்த முயல்கிறார். இது மூச்சைக் கட்டுப்படுத்தும் பயிற்சி அன்று. மாறாக, இயல்பாகவே உட்சென்று வெளிவரும் மூச்சை கூர்ந்து கவனிக்கும் முறையே ஆகும். இவ்வாறு பயிற்சி செய்யும்போது, மனம் பெரிதும் அமைதியுற்று, தீவிர எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளிவருகிறது. அதே சமயம் ஒருவர் மனதை ஒருநிலைப்படுத்தி அதை கூரியதாய், ஊடுருவ வல்லதாய் ஆக்குகிறார்.
ஒழுக்க நெறியும், மனக்கட்டுப்பாடும் தம்மில் தாமே தேவையானதும் மிக்க பயனளிப்பதும் ஆகும். ஆனால் அதோடு நின்றுவிட்டால் அவை சுய-அடக்குமுறை ஆகிவிடும். ஒருவர் தம் இயல்பை புரிந்துகொண்டு எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனதை தூய்மைப்படுத்துவதே மூன்றாவது நிலை ஆகும். மனம்-உடல் ஆகியவற்றில் தொடர்ந்து நிகழும் மாற்றங்கள் நம் உடல் உணர்ச்சிகளாக வெளிப்படுவதை விருப்பு-வெறுப்பின்றி முறைப்படி கவனித்து, அதன் மூலம் ஒருவர் தனக்கே உரிய இயல்பைப் புரிந்து கொள்வதே இந்த விபஸ்ஸனா முறை. சுய-கவனத்தின் மூலம் சுய-தூய்மையாக்கம் என்பதே புத்தரின் போதனைகளின் சாரம்.
இந்தப் பயிற்சியை யாவரும் செய்யலாம். துயரத்தில் உழல்வது என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு நோய். இதற்கான மருந்தும் எந்த இனப்பிரிவையும் சாராது பொதுவானதாகவே இருக்க வேண்டும். ஒருவர் சினம் கொள்ளும்பொழுது அது புத்த மதத்தினரின் சினமாகவோ, இந்து மதத்தினரின் சினமாகவோ, கிறித்துவ மதத்தின் சினமாகவோ இருப்பதில்லை. உணர்ச்சிகளுக்கு மதம் கிடையாது. ஒருவர் கலக்கமுறும்போது அந்த கலக்கம் கிறித்துவ, இந்து, புத்த மதம் எதையும் சார்ந்த்தாக இருக்காது. நோய் பொதுவானதாக இருக்கையில் அதை தீர்க்கும் மருந்தும் பொதுவானதாகவே இருக்க வேண்டும்.
விபஸ்ஸனா அத்தகைய ஒரு அருமருந்து. பிறரின் அமைதியையும், இணக்கத்தையும் மதிக்கும் ஒரு நெறியை எவரும் எதிர்க்கமாட்டர். மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது. ஒருவர் தம் மன மாசுகளை நீக்கும் வண்ணம் தமக்கே உரித்தான இயல்பை புரிந்து கொள்வதை யார்தான் எதிர்க்கக்கூடும்? விபஸ்ஸனா உலகனைத்திற்கும் பொதுவான ஒரு வழி.
உள்ளே உறையும் உண்மைகளை உணர்வது என்பது ஒருவர் தம்மைத் தாமே நேரிடையாக அனுபவித்து அறிதல் ஆகும். பயிற்சி செய்யச் செய்ய ஒருவர் தம் மன- மாசுகளிலிருந்து வெளிவருகிறார். மொத்தமான, வெளிப்படையான, வெற்று உண்மையிலிருந்து ஒருவர் மனம்-பொருள் இணையின் இறுதி பேருண்மை வரை ஊடுருவுகிறார். பின் அதையும் கடந்து, மனம்-பொருள் ஆகியவற்றைத் தாண்டி, காலம்-இடம் ஆகியவையும் கடந்து அனைத்து மாசுகள், எதிர்மறை எண்ணங்கள், துயரங்கள் எல்லாவற்றிலிருந்தும் முற்றிலுமாக விடுதலை அடைந்து மோட்சத்தை எட்டுகிறார். அந்த நிலையை என்ன பெயரிட்டு அழைக்கிறோம் என்பது முக்கியமல்ல; அதுவே அனைவரின் இறுதி இலக்கு ஆகும்.
நீங்கள் அனைவரும் அந்த பேருண்மையை அனுபவிப்பீர்களாக! அனைத்து மக்களும் தம் மன- மாசுகளிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுபடுவார்களாக! அனைவரும் உண்மையான மகிழ்ச்சியையும், நிஜமான அமைதியையும், நல்லிணக்கத்தையும் அனுபவிப்பீர்களாக!
அனைத்து உயிரினமும் மகிழ்வுடன் இருக்கட்டும்!
(மேற்கண்ட உரை திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்னே நகரில் ஆற்றிய சொற்பொழிவின் மூலம் ஆகும்).

December 15, 2009

மெலிந்த உடல் பருமனாக



மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம்.
ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.
பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும்.
கடுமையான உட‌ற்ப‌யி‌‌ற்‌சிக‌ள் செ‌ய்து உடலை க‌ட்டு‌க்கோ‌ப்பாக வை‌த்‌திரு‌க்கு‌ம் ஆ‌ண்களு‌ம் இதனை சா‌ப்‌பிடுவது ந‌ல்லது.
எண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
உட‌ல் மெ‌‌லி‌ந்தவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் பா‌லி‌ல் தே‌ன் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வர உட‌ல் வாகு ‌சீராகு‌ம்.

ஹீமோகுளோபின் உடலில் அதிகரிக்க எளிய வழி


உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும்பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மைஎதிலும் ஆர்வமின்மைஉண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமேஎன்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்புதூங்கவேண்டும் போல் இருக்கும்,ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலிஅதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்கமருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரைமருந்து வாங்கி சாப்பிடலாம் என்று,மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்துஅந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால்,உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை,மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும்மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி,அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்துஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிரமறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால்எவ்வளவு தாமதம் ஆகுமோஎவ்வளவு தடங்கல் ஏற்படுமோஅதே தடங்கலும்தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்
ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களைநாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள்எந்தெந்த சத்துக்கள் தேவையோஅந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு,மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும்அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும்பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுதுஇரத்த சோகை என்ற நோயும்மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுதுஉடல் மெலிந்துகளைப்பு,இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும்உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போதுஅந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுதுதன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி,நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டுஉடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி,அவைகளை நன்கு இயக்கிஉடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டுஅதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டுகாலை ஒரு பழத்தை தின்றுவிட்டுசிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டுசிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டுபழம் ஊறிய நீரை குடியுங்கள்.

நாட்கள் காலை 6 மணி மதியம் 12 மணி மாலை 6 மணி மொத்தம் பழங்கள் 1வது நாள் 1 1 1 3 2வது நாள் 2 2 2 6 3வது நாள் 3 3 3 9 4வது நாள் 4 4 4 12 5வது நாள் 4 4 4 12 6வது நாள் 4 4 4 12 7வது நாள் 3 3 3 98வது நாள் 2 2 2 6 9வது நாள் 1 1 1 3

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகுரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளாபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளாபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும்,வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும். செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும்உற்சாகத்தையும் நாம் பெறலாம்.

December 11, 2009

வாரம் இருமுறை எண்ணெய் குளியல்


ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும்,  பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் செய்ய வேண்டும்.  திருமணமான தம்பதிகள்  இம்முறையை கடைப்பிடிக்க இல்லற இன்பம் சிறக்கும்.  சளி,தலைவலி,  உள்ளோர் தோல் சீவிய இஞ்சியை எண்ணையில் நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்த எண்ணையை பயன்படுத்த வேண்டும். 

கண்கள்மூளைக்கு பலமூட்டும் கரிசலாங்கண்ணிக் கீரை மதிய உணவில் பயன்படுத்த வேண்டும். 

மாலைக் கண் நோயில் நீலியும்,  சர்க்கரை நோய் அதிக ரத்தக் கொதிப்பில் நெல்லிக் காயோ அல்லது நெல்லி முள்ளிவற்றலோ சேர்த்து பயன்படுத்த கண்ணாடியின்றி கண் பார்வை பெறலாம். 


தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க.

உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.



இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.



வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.



தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.
ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.



அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.



சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.



ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.



இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.



சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.






December 8, 2009

மேல்மருவத்தூர் -சக்திமாலை


சக்திமாலை
சக்திமாலையைச் சிறுபிள்ளைகள் உட்பட ஆண், பெண் அனைவரும் வயது வரம்பு இன்றி அணியலாம் சக்திமாலையை அணிந்த பக்தர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே ஐந்து அல்லது மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டு மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை அடைய வேண்டும்.
ஆடவருக்கு ஆண்குருவும், மகளிர்க்குப் பெண் குருவும் தான் மாலை அணிவிக்க வேண்டும்.
மாலை அணிபவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள வார வழிபாட்டு மன்றத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள மன்றத்திலோ தான் மாலை அணிய வேண்டும்.
மாலை அணிந்து விரதமிருந்து சித்தர்பீடம் வந்து திரும்பப் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு தடையல்ல.

நன்மைகள்
அருள்மிகு அன்னை ஆதிபராசக்தி தன் அருள்வாக்கில், "அன்னையை, மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி, சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து, மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை வலம் வந்து அன்னையிடம் சரணமடைந்தால், நினைத்தபலன் அத்தனையும் நிறைவேறும்" என்று அருளி உள்ளாள்.
உடல் நலமின்றி வாடுபவர்கள்நோய் நீங்கி நலம் பெறுவார்கள்.அன்னை ஊழ்வினையை வேரறுத்து மன உறுதியையும், அமைதியையும் தருவாள்.
திருமணம் ஆகாதவர்களுக்குக் குறை நீங்கி விரைவில் திருமணம் நடைபெரும்.
மகப்பேறின்றி வேதனைப் படும் குடும்பத்தில் குழந்தைச் செல்வம் பெருகும்.
கல்வி, அறிவு மேன்மையோடு பெருகும்.
பணிபுரிவோர்க்கு நற்பதவி, உயர்வு தந்து மேன்மை அடையச் செய்வாள்.
வியாபாரம் வளர்ந்து நியாயமான இலாபம் கிடைக்கும்.
குடும்பத் தொல்லைகளைத் தீர்த்து மன அமைதியையும், செல்வச் செழிப்பினையும் தருவாள்.
வேலையின்றி வேதனைப் படுவோர்க்கு வேலை வாய்ப்புக்கிட்டும்.
விவசாயத்தில் வளம் பெருகும். பக்தியிலே இணைந்து ஆன்மிகத்தில்; ஈடுபாடு உண்டாகும்.
நம்மைத் தீயவரிடம் இருந்து விலக்கி, நாம் நல்ல ஒழுக்கத்தோடு வாழ அன்னை வழி வகுப்பாள்.

விரத நாட்களில் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

மாலை அணிபவர்களும், அணிந்தவர்களும் (பணிக்குச் செல்பவர்கள் உட்பட) சிவப்பு நிற உடைகள் மட்டுமே அணியவேண்டும். ஒரு வேளை உணவை தவிர்க்க வேண்டும். விரத நாட்களில் ஐம்புலன்களை அடக்கி, மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச்செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி இறைவியை வழிபடுதல் வேண்டும். உறங்கும்போது செவ்வாடையின் மீதே படுத்து உறங்க வேண்டும். காலையில் தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருப் படத்தின்முன், அவளுடைய திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம். மாலை வேளைகளில் தவறாமல் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்திற்கு சென்று கூட்டுவழிபாடு செய்தல் வேண்டும். மாலை அணிந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது முதலில் "ஓம் சக்தி" என்று சொல்லுதல் வேண்டும்.
மேலும் விரங்களுக்கு அருகாமையில் உள்ள மன்றத்திலோ அல்லது சக்தி பீடத்திலோ நாடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

The Meaning of Om




Before the beginning, the Brahman (absolute reality) was one and non-dual. It thought, "I am only one -- may I become many." This caused a vibration which eventually became sound, and this sound was Om. Creation itself was set in motion by the vibration of Om. The closest approach to Brahman is that first sound, Om. Thus, this sacred symbol has become emblematic of Brahman just as images are emblematic of material objects.

The vibration produced by chanting Om in the physical universe corresponds to the original vibration that first arose at the time of creation. The sound of Om is also called Pranava, meaning that it sustains life and runs through Prana or breath. Om also represents the four states of the Supreme Being. The three sounds in Om (AUM) represent the waking, dream and deep sleep states and the silence which surrounds Om represents the "Turiya" state.

Because the first of the three states of consciousness is the waking state, it is represented by the sound "A" pronounced like "A" in accounting. Because the dream state of consciousness lies between the waking and the deep sleep states, it is represented by the letter "U" which lies between the "A" and "M". This "U" is pronounced like the "U" in would. The last state of consciousness is the deep sleep state and is represented by "M" pronounced as in "sum." This closes the pronunciation of Om just as deep sleep is the final stage of the mind at rest. Whenever Om is recited in succession there is an inevitable period of silence between two successive Oms. This silence represents the "fourth state" known as "Turiya" which is the state of perfect bliss when the individual self recognizes his identity with the supreme.


The Symbol Om






Just as the sound of Om represents the four states of Brahman, the symbol Om written in Sanskrit also represents everything. The material world of the waking state is symbolized by the large lower curve. The deep sleep state is represented by the upper left curve. The dream state, lying between the waking state below and the deep sleep state above, emanates from the confluence of the two. The point and semicircle are separate from the rest and rule the whole. The point represents the turiya state of absolute consciousness. The open semicircle is symbolic of the infinite and the fact that the meaning of the point can not be grasped if one limits oneself to finite thinking.


The Power of Chanting Om

  1. The chanting of Om drives away all worldly thoughts and removes distraction and infuses new vigour in the body.
  2. When you feel depressed, chant Om fifty times and you will be filled with new vigour and strength. The chanting of Om is a powerful tonic. When you chant Om, you feel you are the pure, all pervading light and consciousness.
  3. Those who chant Om will have a powerful, sweet voice. Whenever you take a stroll, you can chant Om. You can also sing Om in a beautiful way. The rythmic pronunciation of Om makes the mind serene and pointed, and infuses the spiritual qualifications which ensure self-realization.
  4. Those who do meditation of Om daily will get tremendous power. They will have lustre in their eyes and faces.

Meditation on Om

Retire to a quite place, sit down, close your eyes and completely relax your muscles and nerves. Concentrate on the space between your eyebrows and quieten and silence the conscious mind. Begin to repeat "Om" mentally while associating the ideas of infinity, eternity, immortality, etc. You must repeat Om with the feeling that you are the infinite and all-pervading. Mere repetition of Om will not bring the desired result. Keep the meaning of Om always at heart. Feal Om. Feel that you are the pure, perfect, all-knowing, eternal, free, Brahman. Feel that you are absolute consciousness and the infinite, unchanging existance. Every part of your body should powerfully vibrate with these ideas. This feeling should be kept up all day long. Practice regularly and steadily with sincerity, faith, perseverance and enthusiasm in the morning, midday and evening.

Mantras

There are many mantras used in worship. The first is always the Moola Manthirum. This mantra forms the foundation which supports all the others. It was not written by a person but was given to us directly from Amma Herself in Her oracle. This mantra has enormous power. Some of the benefits conferred by reciting the Moola Mantra are:
  1. The Divine energy freely flows from the feet of Amma to the different systems of the body. The holy vibrations penetrate all the cells and revitalize the entire system.
  2. Eradication of one's Karma.
  3. Gives you what you rightfully deserve.
  4. Helps solve ailments and genuine problems.
  5. Confers blessings leading to prosperity and a happy life.
  6. Helps one to reach the highest spiritual pedestal (Mukti).
  7. Prevents fatal accidents.

Each type of pooja or velvi has specific mantras which are recited at a certain time during the ritual. The long mantras have either 108 or 1008 lines and are concluded with a short mantra of three lines and three om's. The mantras recited during mandram pooja in America are shown below. Amma has given us permission to omit the 1008 line mantra which is normally recited because She says we are so busy and have little time. All mandrams in India, however, recite the 1008 as is normally required.
The number 108 has been considered sacred for thousands of years in India. The origin of this number probably lies in astronomy. The average distance from the sun and moon to the earth is 108 times each of their respective diameters. This is true to an accuracy of 0.5% for the Sun and 2% for the Moon. The thought that this was known so long ago is amazing. Like all tantric mantras each line is preceded by om and concluded with om. These characteristics give the mantras great potency.

Melmaruvathur Adhiparasakthi

Maruvathur Amma Unathu Arputhangal

December 7, 2009

Tips For A Happier Life

Mind your own business.
Don't interfere in other people's personal matters unless they request you... it keeps you
free from extra tension.

Help yourself
Always do your work yourself, try not to use help unless you actually need it. It keeps you busy and secondly it saves you the hassle of another's carelessness.

Recognize small achievements
Don't aim too high as small goals are equally important. Always remember little droplets makeup the ocean. Your small achievements and virtues will also prove your worth.

Help other people
You get a lot of pleasure by helping the needy. Always be ready to lend a helpful hand.Thanks and warm wishes will make your journey, life, happy and safe

Give thanks and say sorry
Never hesitate to say thank you and sorry. It shows your kind and caring nature. It also
compels other to respect you and advise you.

Remember God
Always remember God, the Almighty. Pray for success and satisfaction in this life and after death.

Play and have fun
Don’t take life too seriously.Although we all have responsibilities there’s no reason.why we
can’t approach much of our lives in a playful manner. In fact, those who do so will
undoubtedly be happier.

Identify where your strengths lie
Know where your faults and weaknesses are to avoid problems. Know where your strengths lie to be really happy and to succeed in life.

December 6, 2009

December 5, 2009

வாழ்க்கையின் உண்மையான வழிகாட்டி

அன்னையே, ஒரு மனிதனின் வாழ்க்கைப்போக்கு அந்தராத்மாவால் வழிகாட்டி இயக்கப்படுகிறதா?

ஆம். ஆனால் மிகப் பெரும்பாலும் அவன் அதைச் சிறிதும் உணர்வதில்லை; அந்தராத்மாதான் அவனுடைய இருப்பை ஒழுங்கமைக்கிறது - ஆனால் முதன்மையான போக்குகளில்தான; ஏனெனில் சிறு விவரங்களிலும் தலையிட வேண்டுமானால் புற ஜீவனுக்கும், அதாவது பிராணமய ஜீவனுக்கும் தூல ஜீவனுக்கும், சைத்திய புருஷனுக்குமிடையே உணர்வுள்ள ஐக்கியம் இருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த ஐக்கியம் இருப்பதில்லை. உதாரணமாக, ஒருவர் பெரிய மனக் குழப்பத்தில் என்னிடம், "சைத்திய புருஷனே, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அந்தராத்மாவிலுள்ள இறைவனே நமது வாழ்க்கையை இயக்குகிறான் என்றால் என்னுடைய தேநீரில் எவ்வளவு சர்க்கரை போட வேண்டும் என்பதை நிர்ணயிப்பது அவன் தானா?" என்று கேட்டார், இதே வார்த்தைகள். அதற்கு நான் அளித்த பதில், "இல்லை, இப்படிச் சிறு சிறு விவரங்களிலும் தலையிடுவதில்லை."

... நீ உன்னுள்ளே சென்று உனது சைத்திய புருஷனைக் கேட்டு அதையே நீ செய்ய வேண்டியதை முடிவு செய்ய அனுமதித்தால்தான் நீ அதைத் தயக்கமின்றி, நிச்சயத்துடன், சந்தேகங்கள் எழாதபடி செய்ய முடியும். அப்பொழுது நீ செய்ய வேண்டியது இதுதான் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வாய், சந்தேகத்திற்கே இடமிராது; அப்படிச் செய்யும்போதுதான் அந்தத் தெளிவும் உறுதியும் இருக்கும். ஆகவே, உன்னுடைய சைத்திய புருஷன் உணர்வுடனும், எப்போதும் உன்னை வழி நடத்த நீ அனுமதிக்கும்போதுதான் உன்னால் உணர்வுடனும் எப்போதும் சரியான காரியத்தைச் செய்ய முடியும்; அப்பொழுது மட்டுந்தான்.

...உன்னுள் அறியக் கூடியது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது, அது உன்னுடைய சைத்தியபுருஷன்தான்; அது தவறு செய்யாது, அது உடனடியாக, கணப்பொழுதில் சொல்லிவிடும்; மறு பேச்சு இன்றி, உன்னுடைய கருத்துக்களையும் விவாதங்களையும் கொண்டு வராமல் அதன் சொல்லைக் கேட்டால் அது உன்னை எது சரியோ அதைச் செய்யச் செய்யும்.

நீ எதைப் படிக்க வேண்டும் எதைப் படிக்கக் கூடாது, எந்த வேலையைச் செய்ய வேண்டும், எந்த வழியில் செல்ல வேண்டும்? எல்லாச் சாத்தியக் கூறுகளும், நீ கற்றவை அல்லது வாழ்க்கையில் கண்டவை, எல்லாப் பக்கங்களிலுமிருந்தும் வரும் யோசனைகள், இவை எல்லாம் உன்னைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும். எதைக் கொண்டு நீ முடிவு செய்வாய்? நான் பேசிக் கொண்டிருப்பது முழு நேர்மை உடையவர்களைப் பற்றி, தப்பான எண்ணங்கள், ஆராய்ந்து பார்க்காத கருத்துடையவர்கள், உண்மையைக் காண முயலாமல் கண்ணை மூடிக் கொண்டு வழக்கத்திலுள்ள விதிகளின்படி நடக்கிறவர்கள் இவர்களைப் பற்றி அல்ல, அவர்களுக்கு அவர்களுடைய மனக் கட்டுமானங்களே உண்மை. அவர்கள் விஷயம் எளிது. அவர்கள் நேரே தங்கள் வழியில் போக வேண்டியதுதான், சுவரில் போய் மோதிக் கொள்வார்கள். ஆனால் மூக்கு நன்றாக நசுங்கும் வரை அதை உணரமாட்டார்கள். மற்றபடி இது மிகக் கடினமானது.

சாதாரணமாக மனிதன் எப்போதும் அஞ்ஞானத்திலேயே வாழ்கிறான். மனம் இருக்கும் இடத்தை ஒளிமனம் (mind of light) பெற்றாலன்றி ஒருவனால் உண்மையான பாதையில் செல்ல முடியாது, முழுமையான உருமாற்றம் ஏற்படுவதற்கு முன் இது இன்றியமையாத ஆயத்தமாகும் என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்வதன் பொருள் இதுதான்.

உங்களால் ஆகாத செயலும் உண்டோ?

தீர நெஞ்சுடையோராலேதான் துன்பத்தைக் கண்டு சிரிக்க முடியும், எப்பொழுதும் புன்முறுவலோடு இருக்க முடியும்; மனமார்ந்த மகிழ்ச்சிக் குரலைவிட இதமானது (Cordial) வேறொன்றும் இல்லை. ஆங்கில மொழியில் Cordial என்ற சொல்லும் Courage என்ற சொல்லும் ஒரே வேரிலிருந்து தோன்றியவை. உள்ளத்திலிருந்து எழும் மகிழ்ச்சிக்குரல் இக்கட்டான வேளைகளில் ஒருவகைத் துணிவைத் தரும்.

எப்பொழுதும் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் மலர்ச்சியும் அமைதியும் கூடிய மனநிலை, உள்ளத்திலே ஓர் உவகை இவை எப்பொழுதும் விரும்பத்தக்கவைகளே. இக்குணங்களால் எத்தனை அரிய தொண்டுகளெல்லாம் நிறைவேறுகின்றன!

இக்குணங்களால்தான் ஒரு தாய் தன் வீட்டை குழந்தைகளுக்கு ஓர் இன்பப் பூங்காவாக ஆக்குகிறாள், மருத்துவமனைகளிலே தாதிகள் நோயாளிகளை விரைவில் குணமடையுமாறு செய்கின்றனர், ஒரு முதலாளி தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அவர்கள் செய்யும் வேலை பெரும் பாரமாகத் தெரியாதபடி செய்கிறார், தொழிலாளிகள் பணி நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுகின்றனர், தொலைத்தூரப் பயணி கடினமான பாதை வழியே தனது சகாக்களைக் அழைத்துச் செல்கிறான், தேசபக்தன் தேசமக்களின் உள்ளத்தில் நம்பிக்கை அணைந்துபோகாமல் காக்கிறான்.

இன்பக் குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியுடனிருந்தால் உங்களால் ஆகாத செயலும் உண்டோ?

அன்னையின் ஒரு பிரார்த்தனை

எம்பெருமாளே, நீ அன்பே உருவானவன், நின் அன்பு ஒவ்வொரு சிந்தனையின் ஆழங்களிலும், ஒவ்வொரு இதயத்தின் ஆழத்திலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. நினது திருவுருமாற்ற வேலையை நிறைவேற்று, எங்களை ஒளியுறுத்து, இன்னும் மூடிக்கிடக்கும் கதவுகளைத் திற, காட்சி எல்லையை விரிவாக்கு, வலிமையை நாட்டு, எங்களுடைய ஜீவன்களை ஒருமைப்படுத்து, எல்லா மனிதர்களையும் அதில் பங்கு பெறச் செய்.

எங்களை நினது திவ்விய பேரின்பத்தில் பங்குகொள்ளச் செய். நாங்கள் எங்கள் உள்ளும் புறமும் உள்ள கடைசித் தடைகளையும் இறுதி கஷ்டங்களையும் வெல்ல அருள். நின்னை நோக்கி எழுந்த தீவிரமான இதயபூர்வமான பிரார்த்தனை எதுவும் வீண்போனதில்லை. எப்பொழுதும் நினது உதார குணத்தினால்ர எல்லா அழைப்பிற்கும் பதிலளிக்கிறாய். நின் கருணைக்கு எல்லை இல்லை.

தெய்வத் தலைவனே, இக்குழப்பத்தினுள் நினது ஒளி புகுந்து அதிலிருந்து ஒரு புதிய உலகைத் தோற்றுவிக்கட்டும், இப்பொழுது ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை நிறைவு பெறச் செய், நினது புதிய உன்னதமான தர்மத்தின் பூரண விளக்கமாக இருக்கக்கூடிய புதிய மனித இனத்தைப் படைத்தருள்.

எங்கள் உத்வேகத்தை எதனாலும் நிறுத்த முடியாது; எதுவும் எங்கள் முயற்சியை அயரச் செய்யாது; எங்கள் நம்பிக்கைகளையும் செயல்களையும் நின்மீது வைத்து, நினது பரம சங்கல்பத்திற்குப் பூரண சரணாகதி செய்துள்ள வலிமையில், நினது வெளிப்பாட்டை எதிர்க்கும் அனைத்தையும் வெல்வோம் என்ற அமைதியான நிச்சயத்தில் நினது முழுமையான வெளிப்பாட்டின் வெற்றி நோக்கி வீரநடை போடுவோம்

உலகநாதனே போற்றி! எல்லா இருளையும் வெல்பவனே போற்றி!

மனிதன் அடைய வேண்டிய உண்மையான இலக்கு

வாழ்வில் இறைவனை வெளிப்படுத்துவதே மனிதனுக்கு விதிக்கப்பட்ட மகத்தான வேலை. விலங்கிற்குரிய உயிர்த் தத்துவமும் செயல்களும் அவன் தொடக்கம், ஆனால் அவன் அடைய வேண்டிய இலக்கோ முழு தெய்வத்தன்மையாகும்.

நம் உள்ளேயே மெய்ப்பொருளைக் காண வேண்டும். அவ்வாறே பூரண வாழ்வின் மூலத்தையும் அடித்தளத்தையும் நம் உள்ளேயே காணவேண்டும். புற அமைப்புகள் எதுவும் அதைத் தரமுடியாது. உலகிலும் இயற்கையிலும் உண்மையான வாழ்வைப் பெறவேண்டுமானால் உள்ளே உண்மையான ஆன்மாவை அடைய வேண்டும்.

இயற்கையைத் திருவுருமாற்றம் (transformation) செய்து தெய்வீக வாழ்க்கை வாழ்வதற்கு முதல் தேவை நம்முள்ளே உற்று நோக்கி, உள் உண்மைகளைக் கண்டு, உள்ளே ஆழ்ந்து சென்று அந்த ஆழத்தில் வாழ்வதே ஆகும்.

வாழ்வுப் பிரச்சனைக்கு ஆன்மீகம் கூறும் விடை புறச்சாதனங்களால் தீர்வு காண்பதல்ல. புறச்சாதனங்களையும் பயன்படுத்தலாம், ஆனால் உண்மையான தீர்வு உணர்வும் இயல்பும் ஓர் அகமாற்றம், ஒரு திருவுருமாற்றம் அடைவதன் மூலமே கிடைக்கும்.

நம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகப் பாதையில் முன்செல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையை ஒருவன் மீது திணிக்கக்கூடாது. அது சுயமாக உணர்ந்து வரவேண்டும் அல்லது அந்தராத்மாவின் மறுக்க முடியாத வழிகாட்டுதலாக வரவேண்டும்.

"எல்லா அறங்களையும் விதிகளையும் செயல்களையும் துறந்துவிட்டு என்னை மட்டுமே சரணடை", இதையே ஆர்வங்கொண்ட மனிதனுக்கு மிக உயரிய ஆன்மீக நிலையில் வாழ்வதற்கான மிக உயர்ந்த விதியாகக் கடவுள் காட்டுகிறான்.

விதியை எதிர்த்துப் போரிட முடியும்

ஸ்ரீ அரவிந்தர்

எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சியடைந்து முடிவுற்றாலும்
இதயம் தோல்வியுற்றாலும்,
மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்,
விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே என்றிருக்கும் போதும்,
எந்த மனித வலிமையும் தடுக்கவோ, உதவவோ முடியாதென்றாலும்,
கடவுளால் கொடுக்கப்பட்ட அவளுடைய வலிமை
விதியை எதிர்த்துப் போரிட முடியும்.

Melmaruvathur Adhiparasakthi - Moola Manthiram



Moola Manthiram

Ohm Saktheeyei! Paraa Saktheeyei!
Ohm Saktheeyei! Aadhi Paraa Saktheeyei!
Ohm Saktheeyei! Maruvoor Araseeyei!
Ohm Saktheeyei! Ohm Veenaayagaa!
Ohm Saktheeyei! Ohm Kaamaatcheeyei!
Ohm Saktheeyei! Ohm Bangaaru Kaamaatcheeyei!
Ohm Sakthi!

Mangayar Ulakam: தாழ்வுமனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்

Mangayar Ulakam: தாழ்வுமனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்

November 28, 2009

தோல்வியில் நீ துவளாதே!

இன்றைய தேதியில் உலகம் கொண்டாடும் ஒரு பிரபலம் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் தான். ஒருமுறைஹாக்கிங் சிறு சாலை விபத்தில் சிக்கி லேசான காயமடைந்தார். இது நடந்து சுமார் பத்துமணி நேரத்துக்குள் அமெரிக்காவின் அத்தனை டி.வி. சேனல்களும் அந்த நிகழ்ச்சியைப் பற்றி செய்தி சேகரிக்க அவரது வீட்டின் முன் குவிந்துவிட்டன.

இத்தனை புகழ் பெற்றவராக ஸ்டீவன் ஹாக்கிங் மாறிடக்காரணம் என்ன? அவரது “காலத்தின் சுருக்கமான வரலாறு’ (A Brief History of Time) என்ற புத்தகமா, பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தைப் பற்றிய அவரது ஆராய்ச்சி களா, பிரபஞ்சத்தின் தோற்றம், கருநிறைகள் (Block holes) போன்றவை பற்றிய அவரது கருத்துக்களா?

ஒரு வகையில் பார்க்கப்போனால் இவையெல்லாமே ஸ்டீவன் ஹாக்கிங்கின் புகழுக்குக் காரணம்தான். குறிப்பாக, சிக்கலான விஞ்ஞான உண்மைகளை உள்ளடக்கிய அவரது புத்தகம் ஜெஃப்ரி ஆர்ச்சர், ராபர்ட் லட்லம் போன்ற நாவலாசிரியர்களின் “பெஸ்ட்செல்லர்’களோடு போட்டி போட்டுக் கொண்டு கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது; ஸ்டீவன் ஹாக்கிங்கிற்கு கோடி கோடியாய் பணத்தைக் கொட்ட வைத்தது.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி சாதித்தது, ஸ்டீவன் ஹாக்கிங்கின் தன்னம்பிக்கை தான் என்பது ஹாக்கிங்கின் மருத்துவர், மனைவி, நண்பர்கள், பதிப்பகத்தார் ஆகிய எல்லோருமே தெரிந்த ஒரு உண்மைதான். ஹாக்கிங்கின் தளராத தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நவீன விஞ்ஞானத்தைக் கூட வாசகர்கள் விரும்பும் வகையில் ஜனரஞ்சகமாகத் தரமுடியும் என்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் மற்றும் உறுதி ஆகியவையே அவரைச் சாதனையாளர் ஆக்கின.

இருபத்தொரு வயதில் ‘Amyotrophic Lateral Sclerosis (ALS)’ என்னும் இயக்க நரம்புசெல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்டீவன் ஹாக்கிங். இது மிகவும் கொடுமையான நோய், நாளுக்கு நாள் உடலின் பாகங்கள் படிப் படியாக செயலிழந்துகொண்டே வரும். ஆனாலும், மனம் தளர்ந்துவிடாமல் மிகுந்த மன வலிமையோடு, தன்னம்பிக்கையோடு, விடா முயற்சியுடன் அயராது உழைத்தார். ஸ்டீவன் ஹாக்கிங். இரண்டே வருடங்களில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கெடு விதித்ததை யும் மீறி இன்றைக்கும் தனது 66 வயதில் விஞ்ஞான உலகின் இரண்டாவது ஐன்ஸ்டீன் என்ற புகழோடு ஸ்டீவன் ஹாக்கிங் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் இதற்குக் காரணம் அவரது தன்னம்பிக்கையன்றி வேறு என்ன?

உலகில் எல்லா விலங்குகளின் வளர்ச்சியும் கிடைமட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால், மனிதன் மட்டும் தான் உயரே வளர்கிறான். தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து நிற்பவனும் அவனே. வளர்ச்சி, முன்னேற்றம், சாதனை இவையெல்லாம் மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். அளப்பரிய ஆற்றல் நம்மிடம் மட்டுமே இருக்கிறது.

நம் மனதில் கோடிக்கணக்கான சூரியன் களின் ஆற்றல் அழியாத ஜீவ சைதன்யமாக உறைந்திருக்கிறது. ஆனால் நாமோ நமது ஆற்றலை மறந்துவிட்டு, சக்திகளை ஒதுக்கி விட்டு பலவீனர்களாக நம்மைக் கருதிக்கொண்டு ஒருவகை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறோம்; பிரச்சனைகளால் சூழ்ந்து கிடக்கிறோம்; பயம், கவலை, சந்தேகம், வேதனை, விரக்தி போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கிறோம்.

ஒரு கதை உண்டு. பிறந்து கண்கூட விழித்திராத ஒரு சிறிய சிங்கக்குட்டி தன் தாயிடமிருந்து எப்படியோ வழிதவறிவிட்டது. அந்த வழியாக வந்த ஆட்டுமந்தையிடமிருந்து ஒரு ஆடு அந்தச் சிங்கக்குட்டியை எடுத்துவந்து பாலூட்டி வளர்த்தது. நாளடைவில் ஆட்டு மந்தையுடன் வளர்ந்த சிங்கக்குட்டி ஆடு போலவே புல் மேய்ந்து மே! மே! என்று கத்தவும் ஆரம்பித்தது. பெரிய சிங்கமாக அது வளர்ந்து விட்ட போதிலும்கூட, அது அப்படியே தான் ஆட்டு மந்தையோடு மந்தையாக வலம் வந்தது.

சிலகாலம் கழித்து அந்த வழியாக வந்த வேறு ஒரு சிங்கம் தன்னைப் போன்றஒரு சிங்கம் ஆட்டுமந்தையிலுள்ள ஆடுகளுடன் ஒன்றாகப் புல் மேய்வதையும் “மே! மே!’ என்று கத்துவதை யும் பார்த்து அதிசயித்துப் போனது. உடனே அந்த சிங்கத்துடன் பேச விரும்பியது. ஆனால், ஆட்டு மந்தைச் சிங்கமோ இந்த சிங்கத்தைப் பார்த்து ஆடுகளைப் போலவே பயந்து ஓடியது. எனவே இரண்டாவது சிங்கத்தால் ஆட்டு மந்தைச் சிங்கத்துடன் பேசமுடியாமல் போனது.

ஒருநாள் இரண்டாவது சிங்கத்துக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சிங்கம் ஆட்டுமந்தைச் சிங்கத்தைப் பார்த்து, “நீ ஒரு சிங்கம். ஆட்டு மந்தையுடன் ஏன் சுற்றித் திரிகிறாய்?’ என்று கேட்டது. ஆனால், முதல் சிங்கமோ, “இல்லை, நான் ஆடு தான்’ என்ற படியே “மே! மே!’ என்று கத்தியது. உடனே இரண்டாவது சிங்கம் “அப்படியா என்னுடன் வா’ என்று கூறியபடியே முதல் சிங்கத்தை இழுத்துச் சென்று சற்றுத் தொலைவிலிருந்த ஒரு நீர்நிலைக்கு அழைத்துச் சென்று தத்தம் உருவப் பிரதிபலிப்புகளைக் காட்டி “என்னுடைய உருவம், உன்னுடைய உருவம் இரண்டையும் தண்ணீருக்குள் பார்’ என்றது. ஆட்டுமந்தைச் சிங்கமும் தண்ணீருக்குள் பார்த்தபோது தானும் ஒரு சிங்கம் தான் என்று உணர்ந்தது. அத்துடன் அந்த சிங்கத்தின் கத்தல் அகன்றதோடு கம்பீரமான முழக்கம் அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது.

மனிதர்களும் இப்படித்தான்! தத்தம் சிறுவயதிலிருந்தே தவறான கருத்துக்கள் திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். நாம் பலவீனர்கள், ஆற்றல் குறைந்தவர்கள் என்றெல்லாம் நம்மை நாமே நினைத்திடும் நிலைக்கு ஆளாகிக் கொள்கிறோம். வழிதவறிய சிங்கம் போலவே நமது ஆற்றலை நாமே குறைத்து மதிப்பிட்டு ஆடுகளைப் போல் கதறிப் பதறித் தவிக்கிறோம்.

நம்மிடம் பலவீனம் இருப்பதாக நாம் ஏன் நினைக்க வேண்டும்? நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் இந்த உலகமும் தோற்றமளிக்கும். இருட்டில் ஒரு வெட்டப்பட்ட மரம் நிற்கிறது. அதைப் பார்க்கும் திருடன் அதைப் போலீஸ்காரர் என்று நினைத்து பயப்படுகிறான். காதலியைத் தேடிவரும் காதலனோ அவள்தான் அங்கு நிற்கிறாள் என்று எண்ணி ஆசையுடன் அதை நோக்கி விரைகிறான். பேய்க்கதைகள் கேட்ட ஒரு சிறுவனோ அதை ஆவி என்று கருதி ஓடி ஒளிகிறான். ஆனால், இத்தனைக்கும் அந்த மரம் மரமாகவே தான் இருக்கிறது.

நாம் ஆற்றல் நிறைந்தவர்கள்; நமது மனம் ஆற்றலின் இருப்பிடம். “நான் ஆற்றலின் உறைவிடம், சக்தி சொரூபம் ஆகிய ஆன்மா, இறைவனின் செல்லக்குழந்தை’ என்றபலம் மிக்க எண்ணங்கள் நமது மனங்களில் உதயமாகட்டும். அப்போது தொடர்ச்சியாக எண்ணப்படும் இந்த எண்ணங்களின் வலு நம்மைத் தூக்கி நிறுத்தி சாதனையாளர்களாக்கும்.

இப்போது நாம் எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. மனதின் மகத்தான ஆற்றலை மானிட குலம் புரிந்து கொள்ளும் தருணம் வாய்த்துவிட்டது. “எழுமின்! விழிமின்!’ என்ற விவேகானந்தரின் வீரவார்த்தைகள் காற்றில் பறக்கும் பஞ்சுக்கே, விடுபட்ட துப்பாக்கிக் குண்டின் வேகத்தைத் தரும்போது நமக்குத் தராதா என்ன? எனவே இனியும் வேண்டாம் உறக்கம். அறியாமையும், சோம்பலும், கவன மின்மையும் நமது தேசிய சொத்துக்களாக இருந்தது போதும். இனி விழித்திடுவோம்; எழுந்திடுவோம்; வெற்றிப்பாதையில் வீரநடை போட்டிடுவோம்!

தளராத தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடவேண்டியது நாம் மட்டுமல்ல. நமது அருமைக் குழந்தைகளின் மனதிலும் “நாம் ஆற்றல் வாய்ந்தவர்கள்; சாதிக்கப் பிறந்தவர்கள்’ என்ற நம்பிக்கையூட்டும் நேர்மறை எண்ணங் களையே, வீறுகொண்டு எழவைக்கும் வெற்றிச் சிந்தனைகளையே விதைப்போம்.

உன்னத சிந்தனைகளால் உள்ளங்களை நிரப்புவோம்; உயரங்களைத் தொடும் உரம்வாய்ந்த உறுதிமனிதர்கள் நிறைந்த ஏற்றமிகு எதிர்காலத்தை எளிதாய்ப் படைத்திடுவோம்.

சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...